Saturday, June 9, 2012

ஆசை.

ஆசை.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொருவிதமான ஆசைகள் இருக்கும்.  நகை, புடவை, சாப்பாடு, பக்தி, சினிமா என்று ஏதோ ஒன்றின் மீது அதீத ஆசையிருக்கும். என் மனைவியின் குடும்பத்தில் அவர்களுக்கு நகை மற்றும் புடவைகளின் மீது அதீத ஆசை.  என் மாமியார் முப்பது வருடம் முன்பு நடந்த கல்யாணத்தில் கூட யார் யார் என்ன புடவை நகை அணிந்து வந்தார்கள் என்பது மட்டுமின்றி அவர்கள் அதே புடவையை இல்லை நகையை எவ்வளவு குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அணிந்து வந்தார்கள் என்று மறக்காமல் தவறில்லாமல் கூறுவார். அப்படி தெரியாமல் ஏதேனும் பிழை நடந்து விட்டால் உடனேயே திருத்தி விடுவாள் என் மனைவி. கடந்த பதினெட்டு வருட வெளிநாடு வாழக்கையில் என் மனைவி அதிக்மாக இழந்தது உறவினர்களின் திருமணத்திற்கு செல்வதுதான். நான் அதிகம் இழந்த்து திருமணங்களில் மாறி வரும் உனவு பழக்கங்களை கவனிக்க முடியால் போனது. இதற்கெல்லலாம் ஈடுகட்ட 2011ஆம் வருடம் டிசம்பரில் என் மனைவி தன்னுடைய மாமா மகன் கல்யாணத்திற்கு  சென்று தான் வாங்கிய புடவைகள் மற்றும் நகைகளை அணிந்து பார்த்து/பார்க்கவைத்து  அகமகிழ்ந்து போனாள்.

எங்கள் குடும்பத்தில் என் அம்மாவிற்கோ மன்னிகளுக்கோ இல்லை அக்காக்களுக்கோ புடவை வாங்க வேண்டுமென்றால் என் மாமியாரிடம் சொல்லிவிட்டு பட்ஜட் சொன்னால் போதுமானது. அவர்  தன்னிடம் மட்டுமில்லாது தான் பார்த்தவரிடத்தும் எந்த கலரில் எந்த வகையான புடவைகள் வைத்திருக்கின்றனர் என்ற மிகப் பெரிய நடமாடும் டேட்டா பேஸ். என் மனைவிக்கும் இதேயளவு ஈடுபாடுவுண்டு என்றாலும் ஒரு மாற்றுக்  குறைவு. இவர்களின் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல், கவனித்ததை மூளையின் எங்கோ ஒரு மூலையில் சேமித்து, தேவைபடும்போது கணினியை விட வேகமாக தேடி எடுத்து சொல்லும் ஆற்றல் உண்மையிலேயே என்னை வியப்படைய வைக்கின்றது.  இவர்களிருவரும் அவர்கள் தாத்தாவின் பட்டுச் சேலை வியாபாரத்தைத் தொடர்ந்து செய்திருந்தால் நல்லி,  குமரன் , சுந்தரி சில்க்ஸ் எல்லாம் இருக்குமிடம் தெரியாமல் போயிருந்திருக்குமே என்ற ஆதங்கம் எனக்குண்டு. 

என் மனைவியின் குடும்பத்தில் எல்லாமே சீக்ரெடிவ்வாகத்தான் நடக்கும். அவர்கள் வீட்டு விஷயமே வெளியேத் தெரியாது. என் திருமணம் ஆ புதிதில் அவர்கள் உறவினர்களை நெருக்கமாக அறிந்து கொள்ளும் ஆசையில், மாசம் ஒருமுறை யார் வீட்டிலாவது சேர்ந்து விருந்துண்ணலாம் என்று நான் முனைந்து ஆரம்பித்திருந்த நேரம். அந்த முறை அந்நிகழ்வு என் மாமனார் வீட்டில். அலுவலக வேலையாக மாமனார் துருக்கி நாட்டிற்குச் சென்றிருந்தார்.

வந்திருந்த உறவினர்கள் எல்லாம் சாப்பிடும் சமயம் “அண்ணா வந்துடுட்டும். பிறகு சாப்பிடலாம் என்றார்கள். என் மாமியார் அவர் ஊர்லே இல்லை. வெளியூர் போயிருக்கார்  என் மனைவியோ அதை பற்றி வாயேத் திறக்கவில்லை. எதோ புடவையை பற்றி வந்திருந்த இன்னொருத்தரிடம் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தாள். உறவினர்களில் ஒருவர் “ டெல்லிக்கா போயிருக்கார்? . மாமியாரோ உண்மையை சொல்லுவதாகத் தெரியவில்லை, அவரோ விடுவதாகத் தெரியவில்லை. அடுத்த கேள்வி “பாம்பேயா?. மாமியார் அளித்த பதில் “இல்லை . எனக்கோ இந்தியாவில் உள்ள அத்தனை பெரிய நகரங்களின் பெயரையும் ஒவ்வொன்றாக கூறப்போகின்றாரே என்ற பயம். எங்கள் வீட்டில் டாய்லெட் போவதை “அவன் லண்டனுக்கு போயிருக்கான் என்று கூறும் வழக்கம் உண்டு. இவர்கள் வீட்டிலோ லண்டனுக்கு போனால் கூட டாய்லெட் போயிருக்கின்றார் என்று தான் சொல்வார்கள் என்ற சந்தேகம் எனக்கு ஆரம்பித்தது. கடைசியில் என் மாமியார் சொல்லாமல் விடமாட்டார் என்று புரிந்து கொண்டு “ இல்லை டர்க்கிக்கு போயிருக்கின்றார் . கேட்டவருக்கு ஒரு நிமிடம் வாயடைத்து போய் விட்டது. உடனேயே சுதாரித்துக் கொண்டு “ வெளியூர் இல்லம்மா. வெளிநாடு போயிருக்கார்னு சொல்லணும் என்றார். 

2005 வருடம் எக்கு Cervical Spine இல் ர்ஜரி நடந்தது. என்னுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்து எலும்பு முறிவு மருத்தவம் படித்து, அது மட்டுமில்லாமல் என் மாமனார் வீட்டிற்கு எதிரிலேயே வசித்துவரும் ரமேஷ்பாபு தான் டாக்டர். இவனுடைய மருத்துவமனை அம்பேத்கார் தெருவில் அப்போதுதான் புதிதாகத் திறந்திருந்தான். என் நெருங்கிய சொந்தங்கள் எல்லோருக்கும் சொல்லி அவர்கள் அனைவரும் ஹாஸ்பத்திரிக்கு வந்து பார்த்தனர். அதுவுமில்லாமல் அனைவருமே சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருப்போம். எங்கள் சொந்தக்காரர்கள் யாரேனும் கேட்டால் கூட குழந்தைல கழுதை பாலை அம்மா ஜாஸ்தி குடுத்துட்டா. இப்ப என்ன பண்ணமுடியும்?என்று கேள்வி கேட்டுவிடுவோம். நோயாளியின் அறை மாதிரியே இருக்காது. மற்றவர்களுடனும் கலகலப்பாக பழகி பேசுவோம். மருத்துவமனையிலிருந்த அனைத்து நர்ஸகளுக்கும் மற்றும் உதவிப் பணியாளர்களுக்கும் எங்கள் குடும்பத்தையே ரொமப் நன்றாகத் தெரியவும் பிடித்தும் போய்விட்டது.

என் மனைவி அப்போது ஹாங்காங்கில் இருந்தார். அவர்கள் வீட்டில் அவர்கள் சொந்தக்காரர்கள் யாருக்குமே அவர்கள் தெரியப்படுத்தவில்லை. அதே தெருவில வசித்து வந்த மாமியாரின் சொந்த தம்பிக்கும் பெரியப்பா மகனையும் தவிர வேறு யாருக்குமே ஒன்றும் தெரியாது. அதே போன்று அவர்கள் சொந்தக்காரர்களுக்கு ஏதேனும் உடம்பு என்றாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லி கொள்ளவும் மாட்டார்கள். யாரேனும் கேட்டாலும் கூட இவர்களுக்கும் பிடிக்காது, அதே போல் இவர்களும் யாரையுமே கேட்கத் தயங்குவார்கள்.

எங்கள் வீடு இதற்கு நேர் எதிர். எல்லாவற்றையுமே எல்லாருக்கும் தெரிவிப்போம். யாருக்கும் தெரியாமல் எந்த விஷயத்தையும் பேசவோ செய்யவோ தெரியாது. சிலர் ஒரே அறையிலிருக்கும்போதேக் கூட அடுத்தவருக்கு அரவச்செவியாகவிருந்தாலும் கேட்காமல் பேசும் அப்பூர்வ சக்திபடைத்தவர்கள். இவரிடம் இதை கேட்கக் கூடாது இதை பேசக்கூடாது என்ற விதிமுறைகளும் எங்கள் குடும்பத்தில் இல்லை. நாங்கள் எங்கள் சகோதர சகோதரிகள் சித்தி சித்தப்பாவின் பசங்கள் என்று எல்லோரிடமும நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ பகிர்ந்து கொள்வோம். எல்லோரும் வந்து பார்த்து விசாரித்து அவரக்ளுக்கு தெரிந்தையும் சொல்லிவிட்டுத்தான் செல்வர். பத்துப் பேரைக் கேட்டால் தான் எது நல்லது எது கெட்டது என்பது தெரியும் என்பது எங்கள் நம்பிக்கை. அதே போல் சுதந்திரமாகவும் உரிமையுடனும் என் மனைவி குடும்பத்தில் யாரிடமும் பேசவும் மாட்டார்கள். 

அப்பாவிற்கு ஒட்டலில் சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். வேலூரில் சி எம் சி ஹாஸ்பத்திரி எதிரிலிருக்கும் பாலஸ் கபே புகழ் பெற்றது. ஹாஸ்பத்திரியருகில் என்பதால் எப்போதும் கூட்டமிருக்கும். அவர்களிடம் கிடைக்கும் சாம்பாரின் ருசியும் மணமும் அலாதியானது. அடுத்த நாள் கையை முகர்ந்தாலும் சாம்பாரின் வாசனையிருக்கும். நான் சிஏ படிக்கும் போது என் நண்பன் திருவல்லிகேணியில் இருந்தான். அங்கு ரத்னா கபேயில் டிபன் சாப்பிட்ட போது வேலூர் பாலஸ் கபே சாம்பாரின் ருசியை மறுபடி முகர்ந்து அருந்தினேன். அந்த மேனேஜரைக் கேட்டபோது தான் தெரிந்தது ரத்னா கபேவும்  வேலூர் பாலஸ் கபேவும் ஒருவருடையதே என்று. அந்த ஒட்டலில் ஒரு  சௌகரியம். சரவண பவனில் குடுப்பது போல் குட்டிக் கிண்ணத்தில் சாம்பார் குடுக்க மாட்டார்கள். ஒவ்வொரு டேபிளின் மேலும் பெரிய பக்கெட்டேயிருக்கும். மேலே ஏசி ஹாலில் சட்டினி உண்டு. அப்போதெல்லாம் கீழே சட்னி கிடையாது, வெறும் சாம்பார்தான். நான் பூரிக்குக் கூட மசாலாயில்லாமல் சாம்பார் தொட்டுக் கொள்வேன். (இரண்டு பூரிக்கு பதில் மூன்று பூரி கிடைக்கும்).

ங்கள் வீட்டில் சினிமா பார்ப்பதற்கு ஒன்றும் சொல்ல மாட்டர்கள் என்பதால் வேலூரில் சற்று தள்ளி வசித்து வந்த அம்மாவின் மாமா மகள் வசந்தாவின் பிள்ளைகள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். பெரிய அண்ணனை விட ஒரு வயது பெரியவன் சந்துரு. பெரியண்ணன் வயதே ஆன கிரிஜா. இரண்டாவது அண்ணனின் ஈடு ஸ்ரீதர். என் ஈடு “அப்புக்குட்டி எனும் சிவக்குமார். இங்கு இவர்கள் வந்துவிட நாங்கள் எல்லோரும் சேர்ந்து 43 பைசா டிக்கெட்டில் சினிமா பார்க்கச் சென்று விடுவோம். பெரும்பாலும் போவது வேலூர் தினகரன் தியேட்டர். தமிழ் படங்கள் என்றால் தாஜ் மற்றும் அப்ஸரா.  வேலூரில் அப்போது கோட்டைக்கு அருகில் அண்ணா கலையரங்கு என்று சிறுவர்களுக்கான திரையரங்கு இருந்தது..அங்குதான் சார்லி சாப்ளின், லாரால் ஹார்டி அவர்களின் திரைப்படங்கள் பலவும் பார்த்தேன்.



வேலூரில் எனக்கு சினிமாவைவிட இடைவேளையின் போது எல்லா தியேட்டரிலும் கிடைக்கும் சூடான மசால் வடை ரொம்ப பிடிக்கும். சின்ன ஒரு ரூபாய் நாணயத்தளவு இருக்கும் மசால் வடை. 10 பைசாவிற்கு முன்று. நாங்கள் மூன்று சகோதரர்களும் சினிமா போனால் மசால் வடைக்கு மட்டும் ஒரு ரூபாய் தனியாக அம்மாவிடம் வாங்கிக் கொண்டு செல்வோம். அப்பாவுடன் போனால் தியேட்டர்காரர்களே காபியுடன் கொண்டு வந்து குடுத்துவிடுவார்கள். அப்பாவும் எல்லாத் திரைப்படங்களையும் பார்ப்பார். என் தாத்தா (அம்மா வழி) அவரும் எல்லா சினிமாவையும் பார்ப்பார். அது மட்டுமில்லாமல் அதில் வரும் பாடல்கள் மற்றும் வசனத்தையெல்லாம் மனப்பாடமாக சொல்லுவார். நாங்களும் அதே போல் நடித்துக் காட்டினால் ஊருக்கு போகும் அன்று நிச்சயம் 5 ரூபாய் உண்டு.

நாங்கள் இருந்த அனைத்து ஊர்களிலும் ஊரைவிட்டுயிருக்கும் ஒரு தியேட்டரில் எப்போதும் பழையப் படம் ஒடிக் கொண்டிருக்கும். அதனால் மிக அரதப் பழசான படங்களையும் ஏற்கனவே பார்த்த படங்கள் மறாக்காதிருக்கும் பொருட்டு மீண்டும் பார்த்திருகின்றோம். அப்பாவும் அவ்வளவு கண்டிப்பாக பார்த்தப் படத்தையே ஏன் பார்க்க வேண்டும் என்று கேட்க மாட்டார். சித்தூரில் ஒரு சமயம் என் தம்பியையும் சித்தப்பா மகன் ஆனந்தையும் நாகேஸ்வர ராவ் நடித்த “பக்த துக்காராம் கூட்டி கொண்டு போகும்படி சொன்னார்கள். ஏற்கனவே பாட்டியிடம் பக்த துக்காராம் கதையை கேட்டும், பாட்டியுடன் சித்தூர் V நாகையா நடித்திருந்த பழைய படத்தை பார்த்துமிருந்தேன். இவ்விருவருக்கும் அந்தக் கதையை சொல்லிவிட்டு ரிஷிகபூர் நடித்திருந்த பாபி படத்திற்கு அழைத்து சென்று விட்டேன்.  பாட்டியும் வந்தவுடன் கதையை கேட்க  வர்களும் நான் சொன்ன கதையை தடுமாற்றமில்லாமல் திருப்பிக் கூறவே தப்பித்தேன்.

எனக்கு எப்பவுமே இருவேடப் படங்கள் பிடிக்கும். ஏனெனில் இரண்டு காரெக்டருக்கும் வித்தியாசம் பாடி லாங்வேஜிலிருந்து குரல் மாடுலேஷன் வரைக்கும் வித்தியாசம் காண்பித்து நடிகன் மெனக்கெட வேண்டும். பல வேறு வேடங்களில் சிவாஜியின் நவராத்திரி மறக்க முடியாத படம். அதே போல கமலஹாசனின் மைக்கேல் மதன காமராஜனும், அபூர்வ சகோதரர்களும்.  பத்து வேடத்தில் நடித்த தசாவதாரம் பலராம் நாயுடுவைத் தவிர்த்து படமே எக்கு முகமுடிகளின் ஊர்வலமாகத் தான் தெரிந்தது.

தமிழ்ப் படங்களில் நிகழ்கால வரலாற்றின் பதிவுகளேக் கிடையாது. நான் பார்த்த இரு படங்கள் “நாயகன்  மற்றும் இருவர். நாயகன் வர்தா பாயையும்(வரதராஜ முதலியார்) இருவர் எம்ஜியார்/கருணாநிதி பற்றியதுமான பதிவுகள். நம்மூரில் தலைவராகிவிட்ட ஒருவர் அதுவும் அவர் இறந்து போய்விட்டிருந்தால் பின்னால் ஒரு ஒளிவட்டத்தை ஏற்றிவிட்டு அவர்களின் மீது கறாரன நடுநிலையான விமர்சனம் எதையும் வைக்க முடிவதில்லை. அப்படியும் இவையிரண்டும். அதிலும் இருவர் ஒரு படி சிறந்தது என்பது என் அபிப்பிராயம்.

பாட்டி கதை சொல்லும் போதெல்லாம் “அது எப்படி ஒரே சமயத்திலே இராமரும் பரசுராமரும் அதே மாதிரி கிருஷ்ணரும் பலராமரும் பகவானின் அவதாரமாவார்கள்? என்று கேட்பேன். அதற்கு பாட்டி ஏண்டா எவ்வளவு சினிமா பாக்கிறே. டபுள் ஆக்‌ஷன் மாதிரி தான் இதுவும். இரட்டைக் குழந்தைப் பிறக்கறதில்லையா என்ன? ஆனாலும் இராமரை போலவோ கிருஷ்ணரைப் போலவோ மற்ற இருவரும் அனைத்திந்தியாவிலும் அறியப் படவில்லையே? அவர்களுக்கு இவர்களுக்கு இருப்பது போல் கோவிலும் இல்லையே? என்ற எனது அடுத்த கேள்விக்கு “தசாவதாரத்திலே மற்றது எல்லாமே எதோ ஒரு விஷயத்தையோ அல்லது ஒரு காரணத்திற்காகவோ நடந்த அவதாரங்கள். நரசிம்ம அவதாரம் ஹிரன்யகசிபுவை கொல்றதுக்கு மட்டும் நடந்தது. அது கூட அவர் கொன்னு அந்த இரத்தத்தை குடிச்சதனால நரசிம்மரருக்கே கூட அசுர குணம் வந்து உலகை அழிக்க ஆரம்பிச்சுட்டார். லக்ஷ்மி கூட பயந்து போய் சிவனை வேண்டிண்டா.  அப்போ சிவன் கழுகு மூக்கு யாளி முகம் கொண்ட பாதி பறவை பாதி மிருக உருவம் எடுத்து நரசிம்மரோட சண்டை போட்டார். அவரை அப்படியே ஆகாசத்திலே தூக்கிண்டு போய் அவருடைய ரத்தம் குடிச்சதனாலே ஏறின விஷத்தை எறக்கி நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதே மாதிரிதான் பரசுராம அவதாரம். ரௌத்திர அவதாரம்.  இராமரும் கிருஷ்ணரும் தான் பரிபூரண அவதாரம். அதுமட்டுமில்லாம ஒரே குடும்பத்திலே எல்லா பசங்களும் ஒரே மாதிரியாவா இருக்கா. நீ கிஷ்கிந்தா ஜாதி. அதே இராகவனைப் பார் எப்படியிருக்கான்? என்று தலையில் ஒரு குட்டும் விழும்.  

திருமணம் முடிந்து சில நாள் மிதிலையில் தங்கியிருந்த தசரதன் அயோத்தியை நோக்கி புறப்பட்டான். அப்போது  அபசகுனங்களும் சுப சகுனங்களும் தோன்ற ஒரிடத்தில் நின்றுவிடுகின்றான். நிமித்திகனை அழைத்து வினவ இன்றே வரும் இடையூறு அது நன்றாய்விடும் என்றான் நிமித்திகன்.

இராமன் வில் முறித்த ஓசை இமயமலையிலிருந்த பரசுராமனுக்கு கேட்டவுடன் சிவனின் வில்லை ஒருவன் இறுப்பதா என்று கடுங்கோபம் கொண்டு எதிரில் வருகின்றான்.  

இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென்; இனி. யான் உன்
பொன் தோள் வலி நிலை சோதனை    புரிவான் நசை உடையேன்;
செற்று ஓடிய திரள் தோள் உறு    தினவும் சிறிது உடையேன்;மற்று ஓர் பொருள் இலை; இங்கு இது    என் வரவுஎன்றனன் உரவோன்.
சிவ  பெருமான் வில் முன்பே முறிந்தவில்;அதனை முறித்ததற்காகக் கர்வங் கொள்ளாதே எனக் குற்றம்கூறும் பரசுராமன்தான் மிகப்பெருங் கர்வத்தோடு பேசுகிறான்; கர்வங் கொள்பவர்  தன்  குற்றம் அறியார் என்பது குறித்தார்.  உன் தோள் லிவைச்  சோதனையிடவும் என் தோள் தினவைச் சிறிது டக்கிக் கொள்ளவும் ஆகிய இரு செயல்களுக்காகவே இங்கு வந்தேன்;  வேறோர்  காரியமில்லை என்கிறான் பரசுராமன்.          

 நனி மாதவம் உடையாய்! இது    பிடி நீஎன நல்கும்
தனி நாயகம். உலகு ஏழையும்    உடையாய்! இது தவிராய்;பனி வார் கடல் புடைசூழ் படி    நரபாலரை அருளா.
முனிவு ஆறினை; முனிகின்றது    முறையோ?’ என மொழிவான்.*
தசரதன் பரசுரமனிடம் நீ மன்னரை  வென்று  கொண்ட  நாடுகள்  அனைத்தையும் துச்சமாக மதித்த காசிபருக்கு இந்தா பிடி நீஎனக் கொடுத்த கொடையால் வந்த புகழால் ஏழ் உலகிலும்  ன்  புகழ் தனியாட்சி செலுத்துகின்றது. காசிபருக்குத் தரணியைத் தானமாக ஈந்து இனி மன்னரைக் கொல்லேன்எனத் தவஞ் செய்யச் சைய மலைக்குச் சென்றவன் சொன்ன சொல்லைக் கடந்து சினம்  புரிந்து வருவது நீதியாகாது  என்றான்.

சலத்தோடு இயைவு இலன். என் மகன்;    அனையான் உயிர் தபுமேல்.
உலத்தோடு எதிர் தோளாய்! எனது    உறவோடு. உயிர் உகுவேன்;நிலத்தோடு உயர் கதிர் வான் உற    நெடியாய்! உனது அடியேன்;குலத்தோடு அற முடியேல்; இது    குறை கொண்டனென்என்றான்.
பகைவரையும் மன்னிப்பது தெய்வப்பண்புபகைவரை  அழிக்க நினைப்பது மானுடப் பண்புபகையாதவரையும்  அழிக்க  நினைப்பது மிகத் தாழ்ந்த அசுரப்பண்பு தலின் அதனை  நினைவூட்டுவான் போல சலத்தோடு இயைவிலன் என்மகன்  என்றான். சலம்: பகைமை. இவனை மட்டும் அழித்தல் உன்னால் இயலாது இவன்ழிவோடு ன்ழிவும்.என்  நாட்டு  மக்கள்  அழிவும்  பின்னிப்பிணைந்துள்ளது.  குலத்தோடு அற முடியேல்என நெஞ்சுருக வேண்டினான். சினத்தோடு நிமிர்ந்து நிற்கும்  பரசுராமன் பாதங்களின் மேல் தசரதன் கவலையால் சுருங்கி வீழ்ந்து கிடப்பதை “நெடியாய்! உனது  அடியேன்”  எனச்  சொல் ஓவியமாக்கிக்  காட்டுகிறார்.  உலம்: திரண்ட கல். தபுத்தல்: அழித்தல்.

பெற்றோர்களுக்கு பசங்கள் வளருவதே தெரிவதில்லை. என் அம்மா 50 வயதுக்கு மேலானாலும் சாப்பிடும்போது கட்டாயம் என்னை குழந்தைப் போலத்தான் நடுத்துவார். முதல் சாதம் கம்மியாகத்தான் போடுவார். அளவு தெரியாமல் சாப்பிட்டால் மீதி சாப்பிடுவதற்கு இடமிருக்காது என்று காரம் வேறு சொல்லுவார். தசரதனுக்கு இராமனிடம் வைத்த பாசத்தின் காரணமாக அவன் வலிமையோ அவன் யார் என்பதையேக் கூட சரியாகப் புரிந்து கொள்ளமுடியவில்லை. அவன் தாடகையை கொன்றதும் விசுவாமித்திரனின் வேள்வி காக்கும்போது அசுரர்களை அழித்ததையும் சிவதனுசுவை நாணேற்றி முறித்ததையும் கட்டாயம் கேள்விப்பட்டிருக்க வேண்டும் என்றாலும் அவனை பொறுத்த வரையில் இராமன் ஒரு அறியா சிறுவனாக மட்டுமே இருக்கின்றான். அதுவிமில்லாமல் அவன் இனி நடக்கப்போகும் நிகழ்வுகளையும் பார்க்காமல் மூர்ச்சையாகிவிடுகின்றான்.        

என்னா அடி விழுவானையும்    இகழா. எரி விழியா.
பொன் ஆர் கலை அணிவான் எதிர்    புகுவான் நிலை உணரா.
தன்னால் ஒரு செயல் இன்மையை    நினையா. உயிர் தளரா.
மின்னால் அயர்வுறும் வாள் அரவு    என. வெய்துறல் உற்றான். என்னா.     இகழா.  விழியா.  உணரா.  நினையா.  தளரா என்னும் செய்யா என்னும் எச்சங்கள் உடன்பாட்டுப் பொருளைத் தந்து உற்றான் எனும் வினை முடிபு.  கொண்டன.  அடிவிழுவானையும் என்பதில் உள்ள உம்மை அடிவிழுவானைப் புறக்கணிக்கவும்  ஒரு முனிவனால் எப்படி முடிந்தது எனும்  வியப்புத் தோன்றுமாறு  நின்றது. சம்பராசுரனை வென்ற தோளாற்றல் வாய்ந்த தசரதன் தவத்தின் ஆற்றலின் முன் ஒன்றும் செய்ய  இயலாமல் தவித்தான் என்பது தோன்ற தன்னால் ஒரு செயலின்மையை  நினையாஎன்றார். மின்னலின் ஒளி பாம்புகளை மிகப் பாதிக்கும் என்பது மரபு.


கீழே விழுந்துகிடந்த தசரதனை மதியாமல் மிகுந்த கர்வத்துடன் இராமனை நோக்கி நடக்கும் பரசுராமன் அவன் தன்னிடமிருக்கும் வில்லைப் பற்றி கூறலானான்.
ஒரு கால் வரு கதிர் ஆம் என    ஒளி கால்வன. உலையா
வரு கார் தவழ் வட மேருவின்    வலி சால்வன. வையம்
அருகா வினை புரிவான் உளன்     அவனால் அமைவனதாம் இரு
கார்முகம் உள; யாவையும்    ஏலாதன. மேல் நாள்;
முன்பு விசுவகர்மாவினால் ஒப்புவுமையில்லாத இரு விற்கள் படைக்கப்பட்டன . ஒன்று சிவபெருமானிடமும் மற்றது திருமாலிடமும் இருந்தன. வானவர்கள் இந்த இரண்டு வில்லில் எது சீரியது என பிரம்மனிடம் வினவ அவன் இவர்களிருவருக்குமிடையே  

சீரிது தேவர் தங்கள்    சிந்தனைஎன்பது உன்னி.
வேரி அம் கமலத்தோனும்.    இயைவது ஓர் வினயம்தன்னால்
யாரினும் உயர்ந்த மூலத்து    ஒருவர் ஆம் இருவர்தம்மை.
மூரி வெஞ் சிலை மேல் இட்டு.    மொய் அமர் மூட்டிவிட்டான்;
கம்பர் பெருமானின் கடவுட்  கோட்பாடு  தெளிவுற  விளங்கும் இடங்களில் இப்பாடல் சிறந்தவற்றுள் சிறந்த ஒன்றாகும்.ஒரே மூலப் பரம்பொருள். காரியப்படும்போது அளிக்கும் செயலுக்குத்  திருமால் எனவும் அழிக்கும் செயலுக்குச் சிவபெருமான் எனவும்  பெயரளவில் இரண்டாக வேறுபடுகிறது. மூன்று கவடாய்  முளைத்தெழுந்த மூலம் (கம்ப. 3682) என்பதனை இங்குத் தெளிவுபட விளக்கியுள்ள திறம் காண்க. பரம்பொருள் என்பதனை  “யாரினும் சிறந்த மூலம்என அழகுற மொழிப்படுத்தினார்.  “அரன்  அதிகன். உலகளந்த  அரி அதிகன் என்று உரைக்கும்  அறிவிலோர்க்குப்  பரகதி சென்று அடைதல் அரிது” (கம்ப. 4470)  என்பது  கவிஞர்பிரானின் கருத்தாலின் அதனை உணராது நான்முகன்  இப்போரினைத் தொடங்கியது தக்கது அன்று என்பார். யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவராம் இருவர் தம்மை மூரி வஞ்சிலை மேலிட்டு மொய்யமர் மூ0ட்டிவிட்டான்”  என்றார். மூட்டுதல் எனும் சொல்  வழக்கு.  இன்றும் உயர் வழக்காகாமை யுணரலாம்.      

போரில் சிவபெருமானின் வில் முறிந்து போக கோபத்தீ மனதில் எழுந்து மீண்டும் போர் தொடங்கும் வேளை விண்ணவர்கள் விக்கிட முக்கண்ணன் அவ்வில்லை தேவேந்திரனுக்கு வழங்க அவன் மிதிலை மன்னனாகிய தேவராதனுக்கு அளித்துவிட்டான். வெற்றியடைந்த திருமாலும் தன் கையிலிருந்த ஒடியாத வில்லை பாரினில் மிக்க தவத்தை செய்த என் தந்தையாகிய இரசிகனுக்கு கொடுக்க அவன் என் தந்தையாகிய ஜமதக்னி முனிவனுக்குக் கொடுத்தான். அப்படிபட்ட இவ்விலை வாங்கி நீ வளைத்தால் உன்னை போல் வலிமையுள்ள மன்னவன் இவ்வுலகில் இல்லை என்து நிச்சயம். என்றான்.

இரிசிகன் எந்தைக்கு ஈய.    எந்தையும் எனக்குத் தந்த
வரி சிலை இது. நீ நொய்தின்    வாங்குதிஆயின். மைந்த!
குரிசில்கள் நின்னொடு ஒப்பார்    இல்லை; யான் குறித்த போரும்
புரிகிலென். நின்னொடு; இன்னம்    புகல்வது கேட்டிஎன்றான்.   பரசுராமன்    21  தலைமுறை மன்னர் குலத்தை வேர் அறுத்தவன். ஆதலால்.இந்த வில்லை நீ வளைத்துவிட்டாய் ஆனால் உன்னை வெல்லும் மன்னர் உலகம் முழுதிலும் இல்லையென்று  மன்னர் வலியநுபவமும்  தன்  வில் அநுபவமும் படக் கூறினான். இவ்வில்லை வளைப்பது அவன் வலிமையை வளைப்பதாகும். ஆதலின் வாங்குதியாயின் குறித்த போரும் புரிகிலென்என்றான். நொய்தின்  -  வாங்குதி  ஆயின். என்பது ளிதாகக் கையில் வாங்குவாய் யின் என்றும் பொருள்படும் பரசுராமன்  குறித்தமட்டில் வ்வில் அவனைத் தவிர மற்றையரால் கைக்கொள்ளவும் அரிது என்பதாம்.
ஊன வில் இறுத்த மொய்ம்பை    நோக்குவது ஊக்கம் அன்றால்;மானவ! மற்றும் கேளாய்;  வழிப் பகை உடையன் நும்பால்;

உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன்.    உறு பகை ஒடுக்கிப் போந்தேன்.
அலகு இல் மா தவங்கள் செய்து. ஓர்    அருவரை இருந்தேன்; ஆண்டை
சிலையை நீ இறுத்த ஓசை    செவி உற. சீறி வந்தேன்;மலைகுவென்; வல்லை ஆகின். வாங்குதி. தனுவை!என்றான்.

என்றனன் என்ன நின்ற  இராமனும் முறுவல் எய்தி.
நன்று ஒளிர் முகத்தன் ஆகி. நாரணன் வலியின் ஆண்ட
வென்றி வில் தருக!என்ன.கொடுத்தனன்; வீரன் கொண்டு. அத்
துன்று இருஞ் சடையோன் அஞ்ச.    தோளுற வாங்கி. சொல்லும்:
இராமன்   திருமுகம் அழகியது. அது புன்னகை பூக்குங்கால் மேலும் பேரழகு பெறும்  என்பார். முறுவல்  எய்தி ன்றுஒளிர்  முகத்தன் ஆகிஎன்றார். உள்ளிருந்த வீரம் முகத்தில் பொங்கியதால் நன்று ஒளிர்ந்தது முகம். நகை  எள்ளல் அடியாகப் பிறந்தது. திருமால் கையாண்ட வில் தனக்கு வரவேண்டியதே தருக  என்பார்.  “நாரணன் வலியின்  ஆண்ட  வென்றிவில்”   என்றார்.  வென்றி வில் -  என்றும் தோல்வியடையாத வெற்றியையே யுடைய வில்.

தொடர்ந்து இராமன் போரின் போது வில்லை வளைக்கும் போது எல்லாம்  புன்முறுவல் மேலிடவே அதை செய்கின்றான் என்று காப்பியும் முழுவதிலும் சொல்கின்றான் கம்பன். இராமனின் பாத்திரப்படைப்பில் முறுவல் ஒரு மானரிசமாகவே மாறிவிடுகின்றது.
பூதலத்து அரசை எல்லாம்    பொன்றுவித்தனை; என்றாலும்
வேத வித்து ஆய மேலோன்    மைந்தன் நீ; விரதம் பூண்டாய்; ஆதலின் கொல்லல் ஆகாது;    அம்பு இது பிழைப்பது அன்றால். யாது இதற்கு இலக்கம் ஆவது?    இயம்புதி விரைவின்!என்றான். பூதலத்தைக்     காக்கப்  பிறந்த  அரசையெல்லாம்   நீ  அழிக்கப் பிறந்தாய் என்பார். பூதலத்து அரசையெல்லாம்  பொன்றுவித்தனை என்றார். ஓரிருவர் கூடத் தப்பாமல்  கொன்றமை தோன்ற.  அரசையெல்லாம்என்றார். சத்திரியர்களைக்  கொன்ற உன்னைச் சத்திரியனாயுள்ள நான் கொல்வது சத்திரிய  தருமமேஉன்னைக் கொல்வது அறமே; ஆயினும் கொல்லவில்லை என்னும்கருத்தை என்றாலும்என்பதில் உள்ள உம்மை குறித்து நின்றது. கொல்லாமல் விடுவதற்குக் காரணங்கள் இரண்டுள. வேத வித்தாய மேலோன் மைந்தன் நீ என்பது ஒன்று தவ  வேடம் பூண்டது மற்றொன்று என்கிறான் பெருமான். உனக்காக உன்னை  நான் கொல்லாமல் விடவில்லை. உன் தந்தைக்காகவும் நீ பூண்டுள்ள வேடத்துக்காகவுமே உன்னை கொல்லாமல்  விடுகிறேன்  என்கிறான். வேடம் கூடப் போற்றத்தக்கது என்பதனை “மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்  (பெரியபு.  மெய்ப். 15) என்ற மெய்ப்பொருள்நாயனார் வாழ்வு உணர்த்தும். மால் அற நேயமும் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரன்   எனத் தொழுமே” (சிவஞா. போ. 12)  என்பார் மெய்கண்ட தேவரும்.  இராம பாணம் தொடங்கிய செயல் முடிக்காது  மீளாது.  வெறும் வாயோடு  மீளும் வழக்கம் இல்லாதது எனும்  மரபு பற்றி. அம்பு இது பிழைப்பது அன்றுஎன்றார். கொலைத் தொழிலில் சிறத்தல்  தவமாதல் இல்லை யென்க. உற்ற நோய் நோன்றல்உயிர்க்கு உறுகண் செய்யாமை  (திருக்.   261) இரண்டுமே தவத்தின் அடையாளங்கள் என்பது வள்ளுவர் வாய்மொழி.               

எய்த அம்பு இடை பழுது எய்திடாமல். என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே!என.
கை அவண் நெகிழ்தலும். கணையும் சென்று. அவன்
மை அறு தவம் எலாம் வாரி. மீண்டதே.
 எய்யவிருக்கிற    அம்பு விரைவு கருதி. எய்த அம்புஎனப்பட்டது கால வழுவமைதி. இராமன் அம்பு பூட்டிய  பிறகு.  இலக்கையடையாமல்
திரும்பியதில்லை என்னும் மரபு  இடையே என்னால் பழுதடைய வேண்டா என்பான்.  இடை  பழுது  எய்திடாமல்”  என்றான்.  தவம்: தவத்தின் பயனைக் குறித்து நின்றது. இராமன் அம்பு பரசுராமன் தவத்தின்  பயனையெல்லாம் கவர்ந்தது என்பதனால் உருவற்ற அருவத்தையும் அது இலக்காகக்  கொள்ளும் வன்மையது என்பது உணர்த்தியவாறு.    
பரசுராமன் இராமன் திருமாலின் அவதாரம் என்று முழுமையாக உணர்ந்து

எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக!
மண்ணிய மணி நிற வண்ண! வண் துழாய்க்
கண்ணிய! யாவர்க்கும் களைகண் ஆகிய
புண்ணிய! விடைஎனத் தொழுது போயினான். இராமனை வாழ்த்தி விடை பெற்றான்.
இராமன் மயக்கத்திலிருந்த தசரதனை மயக்கம் தெளிவித்து நடந்தவற்றைக் கூற தசரதன் பரசுராமனையே இராமன் வென்றுவிட்டானே என்று மகிழந்தான்.

 பூ மழை பொழிந்தனர் புகுந்த தேவருள்
வாம வேல் வருணனை.மான வெஞ் சிலை
சேமிஎன்று உதவி. தன் சேனை ஆர்த்து எழ.
நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான்.
 இங்கு   வருணனிடம்  ஒப்படைக்கப்பட்ட  வில்  இராமன் கரனிடம் போரிடும் போது பெறப்படுகிறது. அண்டர் நாதன் தடக்கையின் அத்துணைப் பண்டுபோர் மழு வாளியைப்  பண்பினால் கொண்ட வில்லை வருணன்  கொடுத்தனன்” (கம்ப. 3052) என்று பின்னர் மறவாமல் குறிப்பார். பொழிந்தனர் -  முற்றெச்சம்.  வாமம்:  அழகு. நாமம்: புகழ். அச்சமெனக் கொண்டு பகைவர் அஞ்சும் அகழிகளையுடைய அயோத்தி எனினுமாம். வருணனிடம் தந்தது அவன் அவதாரப் பணியில் (சேதுசமைக்க)  பின்னர்  உதவ  உள்ளான் என்னும் திருவுளக் குறிப்பையும் உட் கொண்டது.   

தசரதன் பரதனிடம் ஆணையின் நினது மூதாதை. ஐய! நிற்
காணிய விழைவது ஓர் கருத்தன்; ஆதலால்.
கேணியில் வளை முரல் கேகயம் புக.
பூண் இயல் மொய்ம்பினாய்! போதி என்றனன். பரதனின்     தாய் மாமன் யுதாசித்து. தன் தந்தை தான் பரதனைக் காண அழைத்து வருமாறு இட்ட கட்டளைப்படி  அயோத்தி வர. அவர்கள் திருமணத்திற்காக மிதிலை  சென்றிருப்பதையறிந்து மிதிலைக்குச்  சென்று. அவர்களோடேயே அயோத்தி  வந்து.  பரதனை அழைத்துச் செல்லக் காத்திருந்தனன் எனும் முதல்  நூற்  கதைப்பகுதி இங்கு  விளக்கம்  பெற  உதவும்.  மூதாதை - பாட்டன்மாதா மகன். மொய்ம்பு  -  வலிமை.  ஆகுபெயராய் மார்பினைக் குறித்தது. மங்கல நாதமாகிய சங்கொலி நீர்நிலைகள் எல்லாம்  ஒலித்துக்  கொண்டிருக்கும் மங்கல நாடு கேகயம் என்பதாம்.  

அப்போதுதான் திருமணம் ஆகி வந்திருக்கும் பரதனை (சத்ருக்கனனுடன் சேர்ந்து)  அயோத்தியைவிட்டு  அதுவும் மனைவியையும் பிரிந்து தசரதன் ஏன் அனுப்பவேண்டும்? சீதையின் கூற்றுப் படி அவள் 12 வருடங்கள் அயோத்தியில் இருந்திருக்கின்றாள். அதற்குப்பிறகுதான் பட்டாபிஷேகம், நகர் நீக்கம் எல்லாம் நடை பெறுகின்றது. கைகேயியின் மனதை கலைத்துக் கெடுப்பதற்கு, மந்தரைக்கு அருமையான சந்தர்ப்த்தை தசரதன் ஏற்படுத்திக் கொடுக்கின்றான்.


கம்ப இராமாயணத்தை கம்பசித்திரம் என்றும் கம்ப நாடகம் என்று பெரியோர் வருணிப்பர். நாடகம் ஐவகைச் சந்திகளைக் கொண்டு அமையும். இதனைக் கதைக்கோப்பு, கட்டுக்கோப்பு, கதைப்பின்னல் என்றும் குறிப்பிடுவர்.
1.                                முகம் - தோற்றம் ( Introduction)
2.                                பிரதிமுகம் - வளர்ச்சி  (Raising Action)
3.                                கருப்பம் - உச்சநிலை (climax)
4.                                விளைவு - வீழ்ச்சி  (falling action)
5.                                துய்த்தல் - முடிவு (Resolution)
கம்ப ராமாயணத்தைப் படிக்கும் போது, காவியத்துக்கேற்ப, நிகழ்வுகள் அல்லாத இடங்களில், கம்பன் வருணனைகளில் மூழ்கித் திளைக்கிறான். ஆனால் நிகழ்வுகள் என்று வரும்போது, கம்பனின் சொல் வண்ணங்களில் அவை நாடகச் சித்திரங்களாகவே, அற்புதமான சொற் சிக்கனத்தில் நம் கண் முன் விரிகின்றன. இவ்விடங்களில், கம்பனின் சொற் சிக்கனத்தை- அதாவது, காட்சிப் பரிமாணத்தை வற்புறுத்துவதற்கென்றே மேற்கொள்கின்ற சொற்சிக்கனம்- நம்மால் காண முடிகின்றது.'எடுத்தது கண்டிலர், இற்றது கேட்டனர்'.. ‘தொடுத்தது கண்டிலர், துண்டங்கள் கண்டார்' போன்றவை.  அற்புதமாக படலங்களை அமைத்து  சீதாக் கல்யாணம்   உச்சநிலைக்கு அழைத்துச் செல்வதுதான் பால காண்டத்தின் நோக்கம. அந்த உச்ச நிலையை தொடர்ந்து ஒரு falling action தான் பரசுராமப் படலம். இவர்கள் அயோத்தியடைந்டவுடன் பால காண்டம் முழுமை அடைகின்றது என்றாலும், இது ஆறு காண்டங்களைக் கொண்டது. அதனால் தசரதன் பரதனை பாட்டனை பார்க்கச் செல்லுமாறு பணிக்கின்றான். இதே நாடக வடிவக் கூறுகளை ஒவ்வொரு படலத்திலுமே அவன் பயன்படுத்துகின்றான்.

கவியின் கூற்றாக வரும் இப்பாடல் மூலம் மிக அழகாக அடுத்த காண்டத்திற்கு தோற்றுவாய் வரவழைக்கின்றான்.  
ஆனவன் போனபின். அரசர் கோமகன்
ஊனம் இல் பேர் அரசு உய்க்கும் நாளிடை.
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால்.
மேல் நிகழ் பொருள் இனி விளம்புவாம்அரோ.