காஞ்சிபுரம் தாத்தா ஜாதி வித்தியாசம் எல்லாம் பார்க்க மாட்டார். அதே போல் பழைய
ஆசாரத்திலிருந்து எப்போதோ தன்னை மாற்றிக் கொண்டுவிட்டவர். குடுமி,
வேட்டி கடுக்கனை விட்டு, கிராப் பாண்ட் கார் என்று மாறியவர். அதே போல் ஓட்டல்களில்
போய் சாப்பிடும் வழக்கமும் உடையவர். சித்தூர் தாத்தா இதற்கு நேர் எதிர். அவர் வெளியே
சாப்பிடுவது என்றால் சித்தூரில் இருந்த விஜயா பால் பண்ணை யில் கிடைக்கும் பால்கோவாவையும்
பாஸந்தியையும்தான் சாப்பிடுவார். சித்தூரிலிருந்து சென்னைக்கு போகும் போது சுங்குவார்
சத்திரத்தில் ஒரு ஒட்டலில் இரண்டு இட்லி ஒரு வடை சாம்பார் என்று சாப்பிடுவார். இவர்
வருடத்திற்கு ஒரு முறை சென்னை போவதே அபூர்வம். இவர் குடுமி, தலையில் தலைப்பாகை வெளியில்
கிளம்பினால் கோட் வாக்கிங் ஸ்டிக் என்று அலங்கார பூஷனாகத்தான் கிளம்புவார்.
காஞ்சிபுரம் தாத்தா சித்தூர் வரும் போது தன் காண்ட்ராக்டர் நண்பர்களான கோவிந்தசாமி
நாயுடு, குப்புசாமி ரெட்டியார் என்று நண்பர்களையும் அழைத்து கொண்டுதான் வருவார். சித்தூர்
தாத்தா இவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடமாட்டார். காஞ்சிபுரம் தாத்தா அவர்களில்லாமால்
சாப்பிட மாட்டார். இவர்களுக்கு வராந்தாவிலும் சித்தூர் தாத்தாவிற்கு டைனிங் ஹாலிலும்
சாப்பாடு பரிமாறப்படும் என்று அம்மா சொல்லுவார். “எங்க அப்பா அதை ஒரு பெரிய விஷயமாக
எடுத்துக் கொள்ள மாட்டார்.எங்கப்பாவைக் கேட்டா ”நான் மாறிட்டேன். மாமா இன்னும் மாறாம
இருக்கார்னா அது அவருடைய நம்பிக்கை. நான் அதை மதிக்கறேன். ஆனா நான்
என்னை மாத்திக்க மாட்டேன்.” சொல்வார் என்று தன் அப்பாவைப் பற்றி ரொம்ப பெருமையாக சொல்லிக்
கொள்வார்.
என் அப்பாவும் காஞ்சிபுரம் தாத்தாவைப் போல்தான். அவர் ஜாதி என்றில்லாமல் மதம்
என்ற வித்தியாசத்தையும் பார்த்ததில்லை. அப்பாவின் நண்பர்களில் பெரும்பாலோனோர் முதலியார்கள்
இல்லை முஸ்லீம். பாட்டி, தாத்தா இறந்த போது ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டிய மாசியம்,
சோதகும்பம் எனும் பிண்டம் வைக்கும் சடங்குகளையும் ஒரு தடவை கூட தவறமால் பக்தி சிரத்தியுடன்
அப்பா செய்வார். திவசத்திற்கு எங்கள் வீட்டில் மிளகு போட்டுத்தான்
சமையல். அதே போல் துவரம் பருப்பு உபயோகிக்க மாட்டார்கள். எதோ ஒருவகை காய்கறிகள் தான்
சமைக்கப்படும். அம்மா தான் அனைத்து சமையல் வேலைகளையும் செய்வார். கூட உதவிக்கு என்
சித்தியும் பாட்டியும். வெளி வேளைகளுக்கு சாமு மாமா. பிராமணர்கள் சாப்பிட்டு முடிந்து அவர்களுக்கு தக்ஷினை
கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு பிறகுதான் எங்களுக்கு சாப்பாடு. நாங்கள் சாப்பிட உட்காரும்
போ அப்பாவின் பக்கத்தில் காக்கி அரை டிராயர் போட்டு கொண்டு பட்டையாக் நெற்றியில் நாமம்
போட்டுக் கொண்டிருக்கும் டிரைவர் அண்ணாமலை.
அப்பாவை பார்க்க வந்த JE மொகீந்தர் இல்லை விஸ்வநாதன் என்று கூட இன்னொருத்தருடன்
உட்கார்ந்து கொண்டுதான் சாப்பிடுவார். எப்போதும் யாரிடத்திலும் எந்த வேற்றுமையுமே பாரட்டாமல்
இருந்தார் அப்பா. அதனால் தானோ என்னவோ அக்காலத்தில் CE( General) ஆக இருந்த வெளிப்படையாகவே பிராமணர்களை துவேஷிக்கும் அதிகாரிகளுக்கும்
கூட, அப்பாவை கட்டாயம் பிடித்தது.

இவ்வளவு வருடங்களாக எங்கள் குடும்பத்தில்
நாங்கள் அனைவரும் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் அவரிடம் கலந்து ஆலோசித்து அவர் என்ன
சொல்கின்றாரோ அதன் படிதான் நடக்கின்றோம். அவரும் வீட்டிற்கு வந்தால் சாமி பூஜையறையின்
முன்னால் உட்கார்ந்து ஓதி மந்திரிப்பார்.
என் அம்மாவும் அதே போல் யாரிடத்தும் எந்த வித்தியாசமும் பார்க்காமல் இருப்பார்கள்.
அவர் வீட்டு வேலைக்கு வருபவர்களுக்குக் கூட சூடாக தோசை வார்த்து கொடுப்பது வீட்டில்
இருக்கும் பழங்கள் காய்கறிகள் என்று இல்லை எந்த பொருளாகவிருந்தாலும் அது கெட்டுப் போகும்வரை
காத்திருக்காமல் அவர்களுக்கு பயனளிக்கும் விதத்தில் எடுத்துக் கொடுத்து விடுவார். அதே
போல் அவர்கள் குழந்தைகள் படிப்பதற்கு, பள்ளிக்கு போவதற்கு சைக்கிள், புத்தகம் உடை என்று
கணக்குப் பார்க்காமல் செலவழிப்பார். “நல்லா படிச்சாக்கா இவாளும் மேலே வந்துடுவா. நமக்கு
தேவைக்கு மேலே இருக்கறத மத்தாவாளுக்கு கொடுத்துடணும். அதுவும்
சாப்பாடு மட்டும் எல்லாருருக்கும் யாரு, ஏன்னு கேக்காம போடணும் எல்லோரும்
வாழறதே இந்த சாப்பாட்டுக்காகத்தான்” என்று எங்களையும் அதே போல் வளர்த்தார்.
நான் கல்லூரியில் படிக்கும் போது எனக்கு நெருங்கிய நண்பன் அன்பழகன் என்பவன்.
இவன் இராசயனத்தை தமிழ் வழிக் கல்வியில் பயின்றான். நான் ஆங்கில வழிக்கல்வியில் பயின்றேன். அபோது
organic chemistryக்கு “I.L. Finar” என்பவரின் ELBS புத்த்கம் பரிந்துரைக்கப்பட்டது.
மூன்று வருடத்திற்கும் அது ஒரே புத்தகம்தான். அது தமிழ் வழிக் கல்வி படிப்பவர்களுக்கு
இலவசமாக வழங்கப்பட்டது. இவனுடைய வீடு பாண்டி ரோடிலிருக்கும் ஒரு குறுக்குத் தெருவிலிருக்கும்.
கூரை வீடு. இவனுக்கு ஆங்கிலம் மற்றும் Organic chemistry சொல்லி கொடுக்க நான் அவன்
வீட்டிற்கு வாரம் இருமுறை போவேன். அவனுடைய வீட்டை ஒட்டி மேலும் நான்கைந்து குடிசைகள்
இருக்கும். நடுவில் ஒரு பெரிய புளியமரம். அங்குள்ளவர்கள் எல்லோருமே இவனின் சொந்தக்காரர்கள்.
நான் போனால் “அய்யர் வூட்டு பிள்ளை வந்திருக்கு” என்று சொல்லாமல் என்னை வரவேற்றதேயில்லை..
அன்பழகனும் ஆங்கிலத்திலும் organic chemistryயிலும் பெயிலாகமால் பாஸ் பண்ணினான். இவன்தான்
அவர்கள் குடும்பத்தில் முதல் தலைமுறையாக கல்லூரியின் வாசலில் அடியெடுத்தவன். அவன் பாஸ்
பண்ணிண்யவுடன் அவன் அம்மா “அய்யர் வூட்டு பையனுக்கு ஒரு நாள் கூட சாப்பாடு போடலை.
நீயும் ஒரு வழியா முடிச்சுட்டே.. இந்த வாரம் விருந்து வெச்சு போடலாம் என்ன தம்பி நீங்க
எங்க வீட்டிலே சாப்பிடுவீங்க இல்ல. அப்படி சாப்டா உங்க வூட்லே உள்ள சேத்துகுவாங்தானே.
உங்க அப்பார் ஒண்ணும் சொல்லாதில்ல” என்று வினவ நான் ”சைவம் மட்டும்தான் சாப்பிடுவேன் அதுலேயும்
பூண்டு அதிகமா இருந்தா எனக்கு பிடிக்கது. எங்க வீட்லே இதுக்கெல்லாம் ஒண்ணும் சொல்லமாட்டங்க.
இதுக்காக என்னை தொரத்திட மாட்டாங்க” என்று சொல்லி அவன் பரிட்சையில் தேர்வானதை அவனின்
சொந்த்க்காரர்கள் அனைவருடனும் கொண்டாடினேன்.
எங்கள் குடும்பத்தில் அனைவருமே எங்கள் பெற்றோரைப் போலவேதான் எந்த வித்தியாசமும்
பார்க்காமல் இருக்கின்றோம். நான் இது வரையில் யாரையும் “நீ என்னப் படித்திருக்கிறாய்?
எங்கு இருக்கின்றாய்? எங்கு வேலையில் இருக்கின்றாய்” என்று கேட்பதில்லை. என்னை பொறுத்த
வரை நாம் படிப்பினால், பார்க்கும் உத்தியோகத்தினால் வசிக்கும் இடத்தினால் ஒருவரை சட்டென்று
எடை போட்டு விடுகின்றோம். அதே போல் வீட்டு வேலைக்கு வருபவர்களிடத்தும் அவர்களையும்
என் குடும்பத்தில் ஒருவர்போலத்தான் நடத்துகின்றேன். எங்கள் குடும்பத்தில் வேலைக்கு
வரும் டிரைவர்களுக்கும், ஏன் நான் சென்னையில் வைத்துக் கொண்டு போகும் வாடகை கார்களின்
டிரைவரை கூட நாங்கள் எங்காவாது ஓட்டலில் சாப்பிட்டால் அங்கேநன்றாக சாப்பிடவைப்பதுடன்
மட்டுமில்லமால் வெளியூர் போனால் அவர்கள் தங்குவதற்கும் ஏற்பாடு செய்துவிட்டு தான் மறுவேலை
பார்ப்போம்.
என் தந்தையிறந்த போது விசாரிக்க வந்திருந்த அப்பாவின் 50 வருட நண்பர் ஸ்ரீதரன்
“சீனா எதைப் பத்தியும் கவலைப் படமாட்டான். சாப்பிடற நேரத்துலே யார் வந்தாலும் வீட்டிலே
என்ன இருக்கு இல்லைன்னு பாக்காம சாப்பிட கூப்பிடுவான். வந்துதான் உங்க அம்மாவை அதை
பண்ணு இதை பண்ணுன்னு சொல்லுவான். நான் கூட மங்களம் என்ன ஓட்டலா
நடததறான்னு கேட்டிருக்கேன். உங்க வீட்டிலேந்து சாப்பாடு வந்தா சாப்பிடாத ஆபிஸரே இருக்க
முடியாது. சீனாவோட உபசரிப்பு என்னைக்கும் மறக்க முடியாதது. உங்க அம்மாதான் அன்னதான
பிரபு” என்று பல பழங்கதைகளைப் பேசி அப்பாவின் உயர்ந்த குணத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவர் தொடர்ந்து” ஆத்தங்கரையோரமா பெரும்பாலும் சேரி மக்கள் இருக்கும் குடிசையாகத்தான்
இருக்கும். வெள்ளம் வந்தா முதலில் பாதிக்கப்படுவது அவங்கதான். அதனாலே சீனாதான் வறட்சி
காலத்திலேயே ரூரல் வொர்க்ஸ் திட்டத்தின் மூலம் ஊரிலே இருக்கறவங்களைக் கொண்டே ஆற்றினுடைய கரையெல்லாம்
பலமாக்கி அடுத்த வெள்ளம் ஊருக்குள்ள வராம பண்ணான். அது ஒரு outstanding model in
the history of PWD. அதனாலேதான் அவனுக்கு கோல்ட் மெடல் கொடுத்தா. சும்மா ஒன்னும் தூக்கி
கொடுக்கலை” என்று சொல்ல அப்பாவை நினைத்து அனைவரின் கண்களிலும் தண்ணீர். அப்பா
ரிடையாராகி 15 வருடம் கழித்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் இருக்கும் சோழவந்தபுரத்திலும்
சரி, திருத்தணி அருகிலிருக்கும் நெமிலி கிராமத்திலும் சரி அப்பா வந்ததையறிந்த ஊரார்
அவரை வந்து பார்த்து நன்றி சொன்னதை நானே நேரில் பார்த்திருக்கின்றேன்.
அப்பா அடிக்கடி சொல்வது “படித்தவன்தான் சூதும் வாதும் பண்ணுவான் கிராமத்திலே
இருக்கிற படிப்பறிவில்லாதவனுக்கு இது எதுவுமே தெரியாது. இந்த மாதிரி அப்பாவிங்களாலதான்
நம்ம நாடு இவ்வளவு அயோக்கியனுங்க இருக்கும் போதும் தாக்கு பிடிக்கறது”.
கம்பன் நமக்கு குகனை அறிமுகப்படுத்தும்போதே மிக ஆற்புதமாக அவனுடைய கள்ளம் கபடமற்ற
தூயவுள்ளத்தை பிரதிபலிப்பது போலவே அறிமுகப் படுத்துகின்றான்.
ஆயிரம்நாவாய்களுக்குத் தலைவனும் தூய்மையானகங்கைத்
கரையில் நெடுங்காலமாகப் படகு விடும் தன்மை உடையவனும் பகைவரைச் சீறி அழிக்கும் வில்லுடையவனும் மலை போல் திரண்ட தோளை உடையவனும் ஆகிய போர்த் தொழிலில் வல்லவனும், கங்கையின்
ஆழம் கண்டவனுமான குகன் என்ற பெயரை
உடையவன் இராமனை பார்ப்பத்ற்காக வந்தான்.
சுற்றம் அப் புறம் நிற்க, சுடு
கணை
வில் துறந்து, அரை வீக்கிய வாள் ஒழித்து,
அற்றம் நீத்த மனத்தினன், அன்பினன்,
நல் தவப் பள்ளி வாயிலை நண்ணினான்.
வில் துறந்து, அரை வீக்கிய வாள் ஒழித்து,
அற்றம் நீத்த மனத்தினன், அன்பினன்,
நல் தவப் பள்ளி வாயிலை நண்ணினான்.
முனிவர் வாழும்
இடத்துக்கு அருகில் உள்ளவன் ஆதலின், குகன் முனிவரது தவச்சாலையை அணுகும்போது எவ்வாறு
அணுகல் வேண்டும் என்பது
அறிந்தவன். அன்றியும்
இராமபக்தியுடன் செல்கின்றவன் வேட்டைக்குச் செல்வான் போல வில், அம்பு, வாள் ஆகியவற்றுடனும், சேனையுடனும் செல்லல் ஆகாதன்றோ? ஆதலின், அவற்றையெல்லாம் ஒழித்து அடக்க ஒடுக்கத்துடன் சென்றான் என்றார்
கூவாமுன்னம், இளையோன் குறுகி, ‘நீ
ஆவான் யார்?’ என, அன்பின் இறைஞ்சினான்;
‘தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்’ என்றான். குகன் அழைப்பதற்கும் இலக்குவன் அங்கே வருதற்கும் இடையே கால இடைவெறியின்மையைஅறிவிக்கக ‘கூவா முன்னம்’ என்றார். இராமனைச் சேவிக்க வந்த குகன் இலக்குவனையே இராமனாக நினைத்துத் ‘தேவா! நின் கழல் சேவிக்க வந்தனன்’ என்பது குழந்தைத் தன்மையான மாசற்ற குகனது அன்பின் பொலிவை எடுத்துக் காட்டும்.

‘நிற்றி ஈண்டு’ என்று, புக்கு நெடியவன் - தொழுது, தம்பி,
‘கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன், நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்;
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன் ஒருவன்’ என்றான்.
‘கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன், நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்;
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன் ஒருவன்’ என்றான்.
அரசரைக் காணச்
செவ்வியறிந்து செல்லல் முறை ஆதலின், குகனை வெளியே நிற்கச்செய்து,
இராமன்பால் தெரிவிக்கச் சென்றான் இலக்குவன். பார்த்த அளவில் தன்னையே இராமனாக எண்ணும் குகனது வெள்ளை உள்ளத்தை அறிந்தபடியால் ‘உள்ளம் தூயவன்’
என்று முதலிற் கூறினான். உண்ணுதற்குரிய பொருள்களை என்றும் எடுத்துவருதல் தாயின் தன்மையாதலின் ‘தேனும்மீனும் கொண்டணுகிய குகனது தாயன்பைக் கருதித் ‘தாயின் நல்லான்’ என்றான். நாம் கங்கையைக் கடத்தல் வேண்டும் ஆதலின், இவனது தோழமை நமக்கு மிகவும் இன்றியமையாதது என்பதைப் புலப்படுத்த ‘நாவாய்க்கு
இறை’ என்றான். இங்ஙனம் இராமன் ஏற்றுக்கொள்ளும் முன்னரேஇலக்குவன் குகனது தோழமையை ஏற்று அங்கீகரித்தான் என்னும்படி இவ்வறிமுகம் அமைந்துள்ளது.

அருந்தியன், ‘தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திருஉளம்?’ என்ன, வீரன்
விருத்த மாதவரை நோக்கி முறுவலன், விளம்பலுற்றான்;
தவத்தோர் உண்ணத்தகாத
தேனையும் மீனையும் அன்போடு குகன்
கொடுக்கின்றான். அருகே முனிவர்கள் இராமன் என்செய்வானோ என்று
கருதும் அகக்குறிப்பு உடையவராக ஆயினமை கண்டு,அவர்களுக்கும்
குகனது அன்பின் பெருக்கை உணர்த்துமுகத்தான் இளநகை செய்து
கூறுவானாயினன் என்க.
கொடுக்கின்றான். அருகே முனிவர்கள் இராமன் என்செய்வானோ என்று
கருதும் அகக்குறிப்பு உடையவராக ஆயினமை கண்டு,அவர்களுக்கும்
குகனது அன்பின் பெருக்கை உணர்த்துமுகத்தான் இளநகை செய்து
கூறுவானாயினன் என்க.
‘அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே?
தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்; எம்மனோர்க்கும்
உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ?’ என்றான்.
உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ?’ என்றான்.
கையுறைப் பொருள்கள்
யாதாயினும் கிடைத்தற்கரியதாக,
கொணர்வார்
தம் மகிழ்ச்சிக்குரியதாக இருப்பினும் அன்பின் முதிர்வால் பக்தி புலப்பட
அளிக்கப் பெறுமானால் அவை அமுதினும்மேலானவை. தூய்மையும்
தூய்மையின்மையும் அன்பினைப் பொறுத்ததே ஆகும். அன்பினால் குகன்
கொடுத்த பொருள்கள் தவத்தோர்க்காகாத தேனும் மீனும் ஆயினும் அன்பு
கலத்தலால்தூய்மையுடையதாய் ஏற்றுக்கொளற்பாலவே யாகும் - என்றான்
இராமன். முனிவர்களையும் நிறைவு செய்துகுகனையும் முழுமையான
மனநிறைவுக்கு உரியவனாக ஆகும் வகையில் இராமனது உரை அமைந்தது.
வாயால் உண்பதைவிட மனத்தால் ஏற்றுக்கோடல் அன்புடையாரிடத்து உயர்ந்துவிடுகிறது.

இங்கு உறைந்து, எறி நீர்க் கங்கை ஏறுதும் நாளை; யாணர்ப்
பொங்கும் நின் சுற்றத்தோடும் போய் உவந்து, இனிது உன் ஊரில்
தங்கி, நீ நாவாயோடும் சாருதி விடியல்’ என்றான்.
குகனைத் தொடர்ந்து புதிய புதிய உறவினர்கள் மேலும் மேலும் வந்த வண்ணம் இருத்தலின்,‘யாணர்ப் பொங்கும் நின் சுற்றம்’ என்றான். புதியராய் வந்தாரைக் காணப் பலரும் வருதல்உலகியல்பு.
கோதை வில் குரிசில், அன்னான் கூறிய கொள்கை கேட்டான்;
சீதையை நோக்கி, தம்பி திருமுகம் நோக்கி, ‘தீராக்
காதலன் ஆகும்’ என்ற, கருணையின் மலர்ந்த கண்ணன்.
‘யாதினும் இனிய நண்ப! இருத்தி ஈண்டு, எம்மொடு’ என்றான். தம்பி முன்னரே குகனை அறிமுகப்படுத்தும்போதே இராமன்பால் தன் உள்ளக்கிடக்கையைப்புலப்படுத்தினன் ஆதலின், இங்கே வேண்டப்படுவது சீதையின் உடன்பாடே ஆதலின், அதனைமுதற்கண் கூறினார் - ‘யாரினும் இனிய நண்ப’ என்னாது, ‘யாதினும்’ என அஃறிணை வாசகத்தாற்‘சொல்லி மக்களே அன்றி அன்பு செய்தற்குரிய மற்றப் பொருள்களும் அடங்கக் கூறிய நயம் கம்பனுக்கு மட்டும் கைவந்த கலையாகும்.
தும்பியின் குழாத்தின் சுற்றும் சுற்றத்தன், தொடுத்த வில்லன்,
வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன், விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கி, தலைமகன் தன்மை நோக்கி,
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான்
வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன், விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கி, தலைமகன் தன்மை நோக்கி,
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான்
இலக்குவனைச்
சந்தேகித்துக் குகனும், குகனை
ஐயுற்று அவனது
சுற்றமும் கண்ணுறங்காது காவல் செய்ததாகப் பொருள் உரைத்து நயர்
காண்பாருளர் ஆயினும், குகனாகிய தலைவனையே ஐயுற்று அவனையும்
சேர அழிக்கத் தயாராக அவனது சுற்றமாகிய சேனை இருந்ததாகக் கூறல்
குகனது நாயகத் தன்மைக்குப் பேரிழப்பாக முடியும். அன்றியும் குகனையே
இராமன்பால் அறிமுகப்படுத்தியவன் இலக்குவன் என்பது குகனும்
அறிந்ததே. குகனது வேண்டுகோளை ஏற்கும் இராமன் சீதையை நோக்கித்
தம்பி திருமுகம் நோக்கியதை’ ஆண்டிருந்த குகனும் அறியாதிரானன்றே?
திருநகர் தீர்ந்த வண்ணத்தைப் பருவரல் தம்பி கூறக் கேட்டான் அன்றே?
அவ்வாறு பல்வேறமயங்களில் இலக்குவனது தொண்டுள்ளமும், அன்பும்
நன்கு காணக்கிடைத்த குகன் இலக்குவனை ஐயுற்றான் எனல் சற்றும்
பொருந்தாது. கங்கை காண் படலத்தே பரதன்பால் இலக்குவனைப்
பற்றிச் சொல்ல நேரும்பொழுது அழகனும் அவளும் துஞ்ச, வில்லை
ஊன்றிய கையோடும் வெய்துயிர்ப் போடும்... கண்கள் நீர்பொழிய...
நின்றான்.... இமைப்பிலன் நயனம்’ (2344) என்று சொல்வான் எனில்,
முன்னர் அவ்வாறு அவனை உணர்ந்ததனால் அன்றோ பின்னர் அவ்வாறு
கூறமுடிந்தது! எனவே, இலக்குவன் இராமன் பாற்கொண்ட அன்பின்
செறிவையும், இலக்குவனது தொண்டுள்ளத்தையும் அறிந்த குகன்
இலக்குவனை ஐயுற்று வில்லும் அம்புமாய்த் தான் காவல் செய்தான் எனல்
சிறிதும் பொருந்தாமையும், குகனுக்குப் பெருமையாகாமையும் அறிக.
அன்றியும் ‘தம்பி நின்றானை நோக்கி....கண்ணீர் அருவி சோர்குன்றின்
நின்றான்’ எனச் சொல்லப்படுவதிலிருந்தே அரசகுமாரர்கள் இவ்வாறு
இருக்கும்படி ஆயிற்றே என்கிற அவலமே குகன்பால் மேலோங்கி
நின்றமையைச் கம்பர் புலப்படுத்தினார் ஆதல் காண்க.

இராமனைப் பார்த்து குகன் தாங்கள் இவ்விடத்திலேயே தங்க வேண்டும்
என்று சொல்லி அதற்கான காரணங்களைக் கூறுகின்றான்.
தேன் உள; தினை உண்டால்; தேவரும் நுகர்தற்கு ஆம்
ஊன் உள; துணை நாயேம் உயிர் உள; விளையாடக்
கான் உள; புனல் ஆடக் கங்கையும் உளது அன்றோ?
நான் உளதனையும் நீ இனிது இரு; நட, எம்பால்; தேன் உள தினை உண்டால் என்பதனைத் தனியே பிரித்து, தேவரும் நுகர்தற்கு ஆம் ஊன் உள என்று உரைப்பதும் உண்டு. வேள்வியில் அவியாகச்சொரியப்படுதலின் தேவரும் உண்ணுதற்குரிய ஊன் எனக் கூறியதாகக் கொள்ளலாம். முன்பு ‘தேனும்மீனும் அமுதினுக் கமைவதாகத் திருத்தினன்; திருவுளம் என்கொல்’ (1966.) என்று குகன்வினாவிய பொழுது. இராமன் விருத்த மாதவரை நோக்கி, முறுவலனாய் ‘பரிவினில் தழீஇய என்னில்பவித்திரம்’ என்று தர்மசங்கடத்தைத் தவிர்க்கும் நிலையில் கூறியமைந்ததையும் அதனை உண்ணாது உளத்தால் ஏற்றுக் கொண்டதையும் அறிந்த குகன் மீண்டும் அதே பொருள்களைக் கூறுவதாக அமையாமல் மீனைத் தள்ளி, இராமன் முதலியவர்கள் உண்ணுதற்கேற்ற தேனும், தினையும் மட்டுமே கூறினான். குகனது பண்பு முதிர்ச்சியைக்
காட்டிக் கம்பருக்கும் ஏற்றம் தருவது உணரத் தக்கது. பின்னரும் “கனி
காயும் நறவு இவை தரவல்லேன்” என்று குகன் கூறுதல் (1990.) காண்க.
உயிர் இராமனது உடைமையாயினும் உடம்பு உள்ளவரைதான் பணி செய்ய
இயலுமாதலின் ‘ஊன் உள துணை நாயேன்உயிர் உள’ எனக் குகன்
கூறியதாகக் கொள்வதும் பொருந்துவதே.

நெறி, இடு நெறி வல்லேன்; நேடினேன், வழுவாமல்,
நறியன கனி காயும், நறவு, இவை தர வல்லேன்;
உறைவிடம் அமைவிப்பேன்; ஒரு நொடி வரை உம்மைப்
பிறிகிலேன், உடன் ஏகப் பெறுகுவென் எனில் நாயேன்; தான் உடன் வருவதால் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகளைச் சொல்லி, தன்னை உடன்கொண்டு செல்ல வேண்டினான் குகன் என்க. குகனது பண்பு முதிர்ச்சியை இங்கே கூனி, காய், நறவு, என்றுமட்டுமே கூறி, மீனைக் கூறாது விட்டதிலும் காண்க. ‘நொடி’ என்பது ஒரு கால அளவு கண்ணிமைப் பொழுது அதற்குச் சமம். “கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை, நுண்ணிதின்உணர்ந்தோர் கண்ட வாறே” என்பது (தொல். எழுத். நூன்.) காண்க. நெறி - பெருவழி, இடுநெறி -
ஒற்றையடிப்பாதை, குறுக்குப்பாதை எனவும் கொள்ளலாம். விலங்கு, பறவை, மரம், செடி, கொடி முதலியவற்றுள் ஊறிழைக்கும் எப்பொருளும் அடங்கத்‘தீயன வகையாவும்’ என்றும். தூயன அனைத்தும் அடங்க, ‘தூயன உறைகானம்’ என்றும் கூறினான். காட்டில் பழகியவன் ஆகலின் இருளிடையிலும் செல்லுதல் தனக்கு எளிது என்றானாம்

அன்னவன் உரை கேளா, அமலனும் உரைநேர்வான்;
‘என் உயிர் அனையாய் நீ’ இளவல் உன் இளையான்; இந்
நன்னுதலவள் நின் கேள்; நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்.’ குகனைத் தனது சகோதரன் என்ற இராமன் அவ் உறவை மேலும் இக் கூற்றால் பலப்படுத்தினான் எனலாம். “ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து, மாழைமான் மடநோக்கு இன்தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை உகந்து, தோழன் நீ எனக்கு இங்கொழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்தி “என்று இந்நிகழ்ச்சியைத் திருமங்கையாழ்வார் கூறிய பாசுரம் கொண்டு (திவ்ய. 1418) அறிக. இதனையே பின்னர்ச் சீதை அசோகவனத்தில் ‘ஏழை வேடனுக்கு’ எம்பி நின் தம்பி, நீ, தோழன்; மங்கை கொழுந்தி, எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி மயங்குவாள் ஆயினன் (5091.) என்று கம்பர் கூறியதும் காண்க. தானாளும் உலகம் எல்லாம் தன் சகோதரனுக்கும் அப்படியே உரியது என்று கருதுபவன் அண்ணல் இராமன் ஆதலின் இப்போது நான் வனவாசம் செய்யவேண்டி இருத்தலின் நீயே உலகம் ஆள்பவனாகவும் நின் ஏவல் தொழில் உரிமையில் நான் உள்ளேனாகவும் ஆயிற்று என்றானாம். பகவான் - பாகவதரிடையே சாதி ஏற்றத் தாழ்வுகள் பாராட்டப்படுவன அல்ல. குகனைக் குகப்பெருமாள் எனப்போற்றும் வைணவ மரபு நினைக

துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; “இடை, மன்னும் பிரிவு உளது” என, உன்னேல்;
முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; தன்னோடும் தம்பியோடும் சீதையோடும் குகனைப் பணித்ததோடன்றிப் பரதசத்துருக்கனர்களோடும் குகனைப் பணித்த தோழமை அறிந்து இன்புறத்தக்கது. துன்பத்திற்குப்பின்னர் இன்பம்; இப்பிரிவின் பின் ஓர் இன்பம் உண்டு ஆதலின் அவ் இன்பத்தைத் தருவதாகஇதனை நினைய வேண்டுமே அன்றித் துன்பமாக நினைத்தல் ஆகாது என்றானாம் - அன்பிற்கு முடிவுஇல்லை. அது மேலும் வளர்ந்து கொண்டே போகும்; எனவே, இச் சகோதரத்துவத்துக்கும் முடிவில்லைஎன்றானாம்.

அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன். உம்பி;
இங்கு உள கிளை காவற்கு யார் உளர்? உரை செய்யாய்;
உன் கிளை எனது அன்றோ? உறு துயர் உறல் ஆமோ?
என் கிளை இது கா, என் ஏவலின் இனிது’ என்றான். உன் ஏவலின் நான் இருக்கின்றேன் என்று கூறிய இராமன் அதனையும் மனம் கொள்ளாது குகன்படும் அவதி கண்டு, ‘நானே தலைவன் நீ என் ஏவல் வழி என் சுற்றமாகிய இவ்வேடுவர்களைக் காப்பாற்றி ஆட்சி செய்து இங்கே தங்குவாயாக’ என்றான்; அவன் மறுக்கமாட்டாமைக்கு எடுத்துக்காட்டாகப் பரதனைக் கூறினான்.

கம்பன் இக்கவ்வியம் இயற்றுவதற்கு அதிலும் இராமகதை இயற்றுவதற்கு
பலகாரணங்களும் குறிக்கோளும் இருந்தாலும் அதில் அதி முக்கியமானதான ஒன்று சகோதரத்துவம்.
இது மானிடப் பிறவி, ஜாதிகளைக் கடந்து வானரமாகிய சுக்ரீவன்,
ராக்க்ஷசனான வீடணன் என்று ஜாதி, இனம் பார்க்காமல் அனைவரையும் சகோதரனாகவும் பறவையான
ஜாடாயுவை தன் பெரியதகப்பன் உறவு முறையிலே வைத்து அவருக்கு ஈமச்சடங்கையும் தன் கையாலோயே
செய்தவன் இராமன் என்று “ மானிடம் வென்றதம்மா” என்று கூறவே இராமனுடைய பாத்திரப்படைப்பிலே
உலகளாவிய அன்பும் கருணையும் உடைய தெய்வ நிலையிலிருந்து இறங்கி வந்த மானிடனாக அவனைப்
படைத்தான் கம்பன் என்றால் மிகையாகாது. அவ்வகையில் இராமனுக்கு முன்னோடியாக விளங்கியவன்
அவன் தந்தை தசரதன். அவன் பக்ஷிராஜனான ஜடாயுவின் நெருங்கிய நண்பனாக விளங்கியவன்.
குகனைப் பற்றி வால்மீகி இராமயணத்தில் இவ்வளவு விரிவாகவோ அற்புதமாகவோ
காட்டப்படவில்லை.. ஏற்கனெவே இராமனுக்கு தெரிந்தவன் குகன். அவன் கங்கை கரையை வரும் போது
குகன் விசாரித்து அவர்கள் கங்கை கரை கடக்க உதவியவன் என்ற வகையில் தான் அவன் பாத்திரப்படைப்புக்
காட்டப்படுகின்றது. அதுமட்டுமின்றி அவன் வரும் போது இலக்குவனும் அவனை எழுந்து நின்று
வரவேற்பதாகக் காட்டப்படவில்லை.
ஆனால் இங்கோ அவன் இராமனைப் பார்த்தது கூட கிடையாது. அவனுக்கு
இராமன் யார் என்றே தெரியாது. ஆயினும் அவன் இராமனுக்கு தன் உடல் பொருள் ஆவி அனைத்தயும்
அற்பணித்தவன். மனிதன் என்பவன் தெய்வமாகி மூலப்பரமபொருளுக்கும் அவனுக்கும் வித்தியாசமில்லாமல்
இருக்கமுடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியவன்.
அதனால் அவனை இன்னொரு வேடனான கண்ணப்ப நாயானாரை சிந்தை கூறும் வகையிலாகவே கம்பன் படைக்கின்றான்.
‘இப் பார் குலாம் செல்வ!
நின்னை,
இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வனேன் யான், உன்னை இந்த கோலத்தில் பார்த்த நான் என் கண்களை இன்னும் பிடுங்கி எரியாமல் இருக்கின்ற திருடன் நான் என்று குகன் கூறுவதாகப் படைக்கின்றான் கம்பன்.
இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வனேன் யான், உன்னை இந்த கோலத்தில் பார்த்த நான் என் கண்களை இன்னும் பிடுங்கி எரியாமல் இருக்கின்ற திருடன் நான் என்று குகன் கூறுவதாகப் படைக்கின்றான் கம்பன்.
சுக்கீரவன், வீடணன் மற்றும் பரத சத்துருக்கனன் எல்லோருமே ஆழ்வார்களாக,
இராமனின் பக்தியிலே ஆழ்ந்தவர்களாக இருந்த போதும்
அவர்கள் தங்கள் தனித்தன்மையை இழக்காதவர்களாகவிருந்தார்கள். ஆனால் இலக்குவன் குகனும்
அனுமனும் மட்டும் பெருமாளாகவே கருதபடுகின்றனர். உப்பால் ஆன பொம்மையை கடலில்
கரைத்தால் அதற்கும் கடலுக்கும் வித்தியாசமே இல்லாமலிருப்பது போல் இவர்கள் பரமபொருளுடனேயே இரண்டறக் கலந்தவர்கள்.