என் மனைவி ரொம்ப பெருமையாக ”நான் 9 கிளாஸ் படிக்கும் போதே ஸ்ரீலங்கா போயிருக்கேன்.
பிரெஸிடண்ட் பிரேமதாசா அவருடைய பங்களாவிலே டீபார்டி கொடுத்தார். நான் +1 படிக்கும்
போது அமிர்தரஸ், டெல்லி, காஷ்மீர் எல்லா எடத்துக்கும் ஸ்கூல் எக்ஸ்கர்ஸ்ஷன் போயிருக்கேன்.
ரொம்ப நல்லா அரேஞ்ச் பண்ணுவா ஸ்கூல்ல. அப்போ இவ்வளவு மொபைல் போன் வசதி இல்லேன்னாலும்
கரெக்டா நீயூஸ் வீட்டுக்கு போய்விடும், எங்கேயிருக்கோம், என்ன பண்றோம்னு. ரொம்ப அழகா
சமையல், தங்கற இடம் எல்லாம் அவ்வளவு பெர்பெக்டா
இருக்கும்” என்று கல்யாணம் ஆன புதிதில் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். முதலில் கொஞ்சம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த
எனக்கு சிறிது காலம் கழித்து ஒரு பொறிதட்டியது. ” எல்லா ஊரையும், நீ போனதுக்கு அப்புறம்
பல காலம் யாராலயுமே போக முடியாதபடி பண்ணிட்டே. ஸ்ரீலங்கா சீரழிஞ்சு போச்சு. பஞ்சாப்
பத்திண்டுது. காஷ்மீர் காணாமலே போச்சு. இந்தி சினிமாக்காரன் கூட காஷ்மீர் போக முடியாம
ஊட்டிக்கு வந்துட்டான். இதை போய் பெருமையா சொல்றயே” என்றேன். பாவம்! அந்த மாதிரி பதிலை
அவள் எதிர்பார்த்திருக்க வில்லை. ஆனாலும் நான் சொன்னது ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே
என்பதைப் புரிந்து கொண் எங்கள் குடும்பத்துடன் அவளும் சேர்ந்தே சிரித்தாள்.
நான் பள்ளியில் சுற்றுலா சென்றதை விட தினப்படி வாழ்க்கையே சுற்றுலா மாதிரிதான்
கழித்திருக்கின்றேன். வீட்டிலேருந்து ஸ்கூலுக்கு போவதிலிருந்து திரும்பி வரவரைக்கும்
தினமுமே எக்ஸ்கர்ஷந்தான். நான் ஸ்கூலில் படிக்கும்
போது கொளுத்தும் வேலூர் வெய்யிலில் வெங்கடேஸ்வரா ஸ்கூலிருந்து நடத்தியே அழைத்துக் கொண்டு
கோட்டைக்கு போனதுதான் முதல் சுற்றுலா. அப்போது என் சொந்தகாரனும் என் கிளாஸ்மெட்டுமான
சிவக்குமார் எனும் அப்புக் குட்டியும் வந்திருந்தான். வேலூர் கோட்டையை எத்தனையோ தடவை
பார்த்திருந்தாலும், போனதற்கு காரணமே அவன் வந்ததுதான்.

திருவண்ணாமலையிலிருந்த போது ஒரு முறை சாத்தனூர் அணை இன்னொரு முறை செஞ்சிக் கோட்டை
சென்றோம். சாத்தனூரில் டாம் கட்டப்படும் போது அப்பா அந்த பிராஜக்டுக்காகத்தான் திருவண்ணாமலை
வந்தார். அம்மனியம்மன் கோபுரம் பக்கத்தில் வீடு. அப்போது அப்பா செக்ஷன் ஆபிஸர். ஏஇ
ஆன பிறகு மறுபடியும் திருவண்ணாமலை. இந்த தடவை அப்பா அப்போது சாத்தனூர் அணைக்காகக் கட்டிய
பிராஜக்ட் ஹவுசிலே வீடு, நல்ல பெரிய பெரிய தூண்களுடன் ஏகப் பட்ட ஜன்னல்களுடன் கூடியது
மெயின் ரோட்டை கடந்தால் ரமணாஸ்ரமம். ரமணாஸ்ரமத்தில் மயில் கூட்டம் கூட்டமாகவிருக்கும்.
மயில் சில சமயம் பறந்து வீட்டிற்கும் வரும். பிராஜக்ட் ஹவுஸ் முழுக்க ஏகப்பட்ட மரங்கள்.
கொய்யாவில் பல வகை, சப்போட்டா, மாமரத்தில் அல்போன்சா தவிர மீதி அனைத்து வகைகளும் இருக்கும்.
இது தவிர புளிய வேப்ப மரங்கள். ஒரு பெரிய ஆலமரமும் இருந்தது.
அம்மா ரொம்ப ஆசைப்பட்டாள் என்பதனால் அப்பா பசுமாடு வாங்கி வைத்திருந்தார். அதற்கு
நாங்கள் வைத்த பெயர் “லக்ஷ்மி”. பால் கறக்கும் பிச்சாண்டியும் பிராஜகட் ஹவுசில் குவார்டர்ஸில்
இருந்தார். பிராஜக்ட் ஹவுசில் தங்குபவர்களுக்கு வெஜிடேரியன் சாப்பாடு செய்வதற்கு ஒரு
ஐயங்கார் மாமா. அப்பாவின் ஆபிசில் பணிபுரியும் தெலுங்கு பிராமணர் ”வெங்காச்சு” ஜீப்
டிரைவர் சண்முகம், இவர்களுக்கும் அதே வளாகத்தில் குடியிருப்புகள் உண்டு. எங்கள் வீட்டிற்கு
எதிரில் அப்பாவின் செக்ஷ்ன் ஆபிஸர் வீடு. வீட்டின் வெளியே வந்து மெயின் ரோடு போகும்
வழியில் இடது புறம் நீளமான ஆறு அறைகளுடன் கூடிய செக்ஷன் ஆபீஸ். அப்பாவினுடைய ஆபீஸ்
ஊருக்குள் ரயில்வே கேட்டுக்கு முன்னால் இருந்தது. நான் படித்த டேனிஷ் மிஷன் ஸ்கூல்
காம்பௌண்ட் சுவரை ஒட்டியிருக்கும். என் அண்ணன் கணேசன் சைக்கிளில் ஸ்கூலுக்கு சென்றுவிடுவான்.
காலையும் மாலையும் என்னை வெங்காச்சுவும் தம்பி ரவியை சண்முகமும் ஸ்கூலுக்கு கொண்டு
விட்டு கூட்டிவர வேண்டும். நாங்கள் இருந்த இடத்திலிருந்து ஸ்கூல் 5 கிமீ. தூரம். லக்ஷ்மிக்கு சினை பிடிப்பதற்காக பிச்சாண்டி போன போது
நானும் அடம் பிடித்து போனேன். கொஞ்ச நாளில் அழகான கன்றுக் குட்டி ஒன்று பிறந்தது. அதற்கு
நான் வைத்த பெயர் ”குட்டி லக்ஷ்மி”. அதன் மூக்கை சுற்றி கழுத்தில் ஒரு கயிரை கட்டி கொண்டு
லீவு நாட்களில் அதனைத் துரத்தி பிடிப்பதில் என்னுடைய பெரும் பொழுதுகள் கழிந்தன.
விட்டை சுற்றிலும் கலக்காய்(மணிலாகொட்டை) இல்லை காய்கறி பயிர்கள் விளையும் நிலம்.
கொஞ்சம் தூரத்தில் பெரிய ஏரி. ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஏரிக்குத்தான் நானும் பிச்சாண்டியும்
மாட்டையும் கன்னுக் குட்டியையும் குளிப்பாட்டுவதற்கு அழைத்து வருவோம். தேங்காய் மட்டையைப்
போட்டு நன்றாக தேய்த்து குளித்து முடித்தவுடன் முகத்தில் மஞ்சள் பூசி பெரிய குங்குமப்பொட்டு
வைத்து என்று பார்ப்பதற்கு லக்ஷ்மியும் குட்டி லக்ஷ்மியும் மிக அழகாகவிருக்கும்.
பள்ளியில் சென்றதை விட, குடும்பத்துடன் நான் தமிழ் நாட்டில் இருக்கும் எல்லா
பெரிய கோவில்களுக்கும் நிறைய தடவை அப்பாவுடன் சென்றிருக்கின்றேன். திருச்சியிலிருக்கும்
போது விராலி மலை, பழனி மற்றும் மதுரை. கடலூரிலிருக்கும் போது பல தடவை நாகூர் தர்கா,
நாகப்பட்டினம் (கணபதி அய்யர் கபேயில் டிபன். இங்கு காபியில் கஞ்சா கலப்பதாக ஒரு வதந்தி
இருந்தது) நீலதாட்சாயணி அம்மன் கோவில், வேளங்கன்னி மாதா கோவில் என்று முதல் நாள் கிளம்பி
அடுத்த நாள் வந்து விடுவோம். அம்பாசிடர் காரில் 13 பேருக்கு மேலும் சென்றிருக்கின்றோம்.
விழுப்புரத்திலிருக்கும் போது அறுபடை வீடுகளுக்கும் ஒரே தடவையில் சென்று வந்திருக்கின்றோம்
முதல் தடவை எல்லாம் அன்ரிஸர்வ்ட் ரயில் இல்லை பஸ்சின் மூலமாக மட்டுமே சென்று திருசெந்தூர்
முருகனை பார்த்து விட்டு இராமேஸ்வரம் போவதற்காக மண்டபம் ரயில் நிலையத்தில் பிளாட்பார்மில்
படுத்து உறங்கியிருக்கின்றோம். அதற்கு பிறகு சென்றப் போதெல்லாம் நல்ல காரில் எல்லாவிடங்களிலும்
அப்பாவின் இன்ஸ்பெக்ஷன் பங்களா இல்லை டிராவலர்ஸ் பங்காளவில் தங்குவதற்கு ஏற்பாடு, கோவிலை
சுற்றிக் காண்பிப்பதற்கு ஒரு ஆள் என்று கண்யாக்குமரி, வரை நிறைய தடவை போயிருக்கின்றோம்.
ஒரே ஒரு தடவை குருவாயூர் மற்றும் மருதமலை சென்றோம்.
அப்பாவிற்கு ஊர்களுக்கு அழைத்துச் செல்வது ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி கும்பகோணம்
மாயவரம் திருச்சி என்று பல ஊர்களிலிருக்கும் கோவில்களுக்கு கூட்டிக் கொண்டு போவார்.
போகவேண்டும் என்று தோன்றியவுடன் கிளம்பிவிடுவார். செலவை பற்றி யோசனை பண்ண மாட்டார்.
சிறு திண்டி மட்டும் நிறைய எடுத்துக் கொண்டு செல்வோம். என்னைத் தவிர வீட்டில் அனைவருமே
சிறுதிண்டி பிரியர்கள்.
எனக்கோ எல்லா இடத்திற்கும் நிறைய பேருடன் போக வேண்டும். பெரும்பாலும் நான் சொந்தக்காரர்கள்
மற்றும் நண்பர்களுடன் தான் சென்றிருக்கின்றேன். சமீபத்தில் அஜந்தா எல்லோரா போகும் போது
நானும் மனைவியும் மட்டுமில்லாமல். என் அக்கா, என் மாமனார் மாமியார், என் மனைவியின்
மாமி என்று அனைவருடன் தான் சென்றேன். என் மனைவிக்கோ
நாங்கள் மூவர் மட்டும் போக வேண்டும் என்பதில் ஆசை. அப்படி நாங்கள் மூவர் மட்டும் ஒரேயொரு
முறை சிங்கப்பூர் மலேஷியா சென்று வந்தோம்.
கல்யாணம் ஆனவுடன் எல்லோரும் ஹனிமூன் போவது போல் நாங்கள் போகவில்லை. தனிக்குடித்தனம்,
எல்லாப் பொறுப்பும் எங்களுடையதே என்பது மட்டுமில்லாமல் வந்த 2500 ரூபாயில், 750 ரூபாய்
அண்ணாநகரில் அண்ணாவின் வீட்டிற்கருகேயேவிருக்க வேண்டும், என்று செலவிட்டதால் பணமில்லை
என்பதே பிரதான காரணம் என்றாலும், பெரும்பாலான நாட்கள் சனி ஞாயிறுகளில் உறவினர்களை நாங்கள்
வீட்டிற்கு அழைத்திருந்தோம் அல்லது அவர்கள் வீட்டிற்கு நாங்கள் சென்றோம். கல்யாணம்
ஆகி ஒரு வருடம் கழித்துதான் நான் விடுமுறைக்கு கொடைக்கானல் சென்றேன். அதுவும் கூட என்
பார்டனர் ஜேவியும் அவன் மனைவி உஷாவுடனும். ஹனி மூன் போகவில்லை என்பது என் மனைவிக்கு
மிக்க வருத்தம்தான் இன்றளவும். ஆனால் நான் என்ன செய்ய?
இராமனுக்கும் சீதைக்கும் கல்யாணம் ஆகி அயோத்தி வந்தவுடன் தனி மாளிகையில் வாசம்.
அந்த அரண்மனைக்கு தசரதன் மிகுந்த வயதானவர்களைத்தான் வேலைக்கு அமர்த்துவானாம் காரணம்
அவர்களால் தான் சிறுவயதினரான இராமனுக்கும் சீதைக்கும் இடைஞ்சல் இருக்காது.. சீதையின்
வாக்குப்படியே அயோத்தியில் அவள் 12 வருடம் மகிழ்ச்சியாக இருந்திருக்கின்றாள். இப்போதுதான்
முதல் முறையாக அயோத்தியை விட்டு கணவன் மணைவியாக அவர்கள் வெளியில் வந்திருக்கின்றனர்.
அப்போதும் கூட இலக்குவனுடன்..
மூவரும் நடந்து காட்டிற்குள் புகுவதை கம்பன்
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய,
பொய்யோ எனும் இடையாளொடும், இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் அழியா அழகு உடையான்.
பொய்யோ எனும் இடையாளொடும், இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் அழியா அழகு உடையான்.

மாட்டாமையாகிய இரக்கமும் தோன்றி ‘ஐயோ’ என முடித்தார். ஆயினும்,
அதுவே இராமபிரானது பேரழகை அவர் சொல்லி முடித்ததாக ஆயிற்று -
“அச்சோ ஐயோ என்னே எற்று எவன்எனுஞ்சொல் அதிசயம் உற இரங்கல்” என்பது சூடாமணி நிகண்டு. திருக்கோவையாரில் (384.) பேராசிரியர்,
ஐயோ என்னும் சொல்லைக் குறித்து இஃது உவமைக்கண் வந்தது’ என்று
கூறியுள்ளமைகொண்டு ஈண்டும் உவமைக்கண் வந்ததாகக் கொள்ளலாம். நீலநிறம் தன்னுள் கொண்ட எதனையும்வெளிவிடாது தன்னையே காட்டி நிற்கும் ஆதலின், நீலமேனியனாகிய
இராமனிடத்திலிருந்து வெளிப்படும் ஒளியில் சூரியனது ஒளி மறைந்துவிட்டது
என்றார். ‘அழியா அழகு’ என்பது என்றும் மாயாத தூய அழகு எனப்பெறும்.
அழித்தல் - பிறிதொன்றால் இல்லை என்றாக்கப்படும்.இவ்வழகினும்
சிறந்ததோர் அழகு வந்தால் இது அழகில்லை யென்று அழிக்கப்பெறும்.
அவ்வாறு ஒன்றுஇல்லவே இல்லை ஆதலின், இவன் அழகு ‘அழியா அழகு’
ஆயிற்று. ‘ஓ’ காரம் நான்கும் ஐயப்பொருளின்கண் வந்தன.

கம்பன் ஒரு சிறந்த, தேர்ந்த, நேர்த்தியான திறமையுள்ளவன். அவன்
வார்த்தைகளை எடுக்கும் விதத்திலும் சரி, சரம் கோர்க்கும் விதத்திலும் சரி மிக்க தேர்ச்சியும்
திறமையும் பெற்றவன். 13வது சீராக இந்த வார்த்தை
வர வேண்டும் என்பதை முதலிலேயேத் தீர்மானம் செய்து கொண்டுதான் அவன் சில பாடலையே ஆரம்பிக்கின்றான்
உதாரணத்திற்கு
‘மசரதம் அனையவர் வரமும். வாழ்வும். ஓர்
நிசரத கணைகளால் நீறுசெய்ய. யாம்.
கச ரத துரக மாக் கடல்கொள் காவலன்.
தசரதன். மதலைவாய் வருதும் தாரணி.
நிசரத கணைகளால் நீறுசெய்ய. யாம்.
கச ரத துரக மாக் கடல்கொள் காவலன்.
தசரதன். மதலைவாய் வருதும் தாரணி.
இங்கு நான்காவது அடியில் முதல் சீராக வருவது தசரதன் என்பது. இது பால
காண்டத்தில் திருமால் சொல்வதாக வரும் பாடல். மசரதம் எனும் முதலடியின் முதல்
சீர் தசரதன் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிடுகின்றது. பிறகு வரும் நிசரத, கசரத என்று வரும் எதுகைகள் அந்த எதிர்பார்ப்பை
மேலும் அதிகரிக்கும். அதற்கேற்றார் போல் நான்காம் அடியின் முதல் சீராக வருவது தசரதன்.
இது கவிஞனின் முன் தீர்மானத்தை குறிக்கின்றது.
அதேபோல் சுந்தர காண்டத்தில் அனுமன் சீதையிடம் இராமன் குறித்த காலத்தில் வந்துவிடுவான் என்ற பாடலிலும்
இந்த சொல் ஆட்சியிருக்கும்.
'குரா வரும் குழலி ! நீ
குறித்த நாளினே,விராவு அரு நெடுஞ்சிறை மீட்கிலான்எனின்,
பரா வரும்பழியொடும் பாவம் பற்றுதற்கு,
இராவணன் அவன்;இவன் இராமன்' என்றனன்.
இதிலும் நாண்காம் அடியில் முதல் சீராக ராவணன் என்று வரரவேண்டும் என்பதற்ககாவே குராவரும், விராவரும் பராவரும் என்று எதுகைகளை அடுக்குகின்றான். பாடல்களை வாய்விட்டு படிக்கும் போதுதான் அந்த சந்த இனிமையை ரசித்து அனுபவிக்க முடியும்.
ஆனாலும் சில சமயம் இவனே எதிர்பாராமல் சிலவிடங்களில் சொல் ஆட்சி நடப்பதற்கு பதில் சொல் வீழ்ச்சி நடைபெருகின்றது. அப்படி பட்ட கம்பனின் ஓரிடம்தான் தான் வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியைல் மறைய என்ற பாடல்.
கம்பனுக்கு மூவரும் நடந்து செல்வது தோன்றுகின்றது. ஆயினும் அவன்
பார்வை முழுவதும் இராமன் பேரில் மட்டுமே. இராமனுடைய மேனியின் ஒளியில் சூரியனின் ஒளி
மறைந்துவிடுவதாகத் தோன்றுகின்றது கவிக்கு. நமக்கு ஒளி என்றால்
தோன்றுவது காட்சி கிட்டும், ஒளி உண்டாகும் வரையியில் இருட்டால் மறைந்து காணமுடியாத
பொருளெல்லாம் காணப்பெறும் என்பதுதான். ஓளியால் ஒளி மறையும் என்று கவிஞனுக்கு தோன்றுகின்றது.
இரவில் ஒளிவிட்டு பிரகாசிக்கும் வின்மீன்கள் எல்லாம் ஞாயிறு வந்தவுடன் காணப்படாமல்
மறைந்துவிடுகின்றனவே. இதைதான் பாரதி
ஞாயிறே, இருளை என்ன செய்து
விட்டாய்?
ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கி விட்டாயா?
கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா?
இருள் நினக்குப் பகையா?
இருள் நின் உணவுப்பொருளா?
அது நின் காதலியா?
இரவெல்லாம் நின்னைக் காணாத மயக்கத்தால் இருண்டு
இருந்ததா?நின்னைக் கண்டவுடன் நின்னொளி
தானுங் கொண்டு நின்னைக் கலந்துவிட்டதா?
என்று கேட்கின்றான்.

அவை எங்கும் போகவில்லையல்லவா. அவற்றை மறைப்பது கதிரவனின் கரங்கள் தானே? எப்படி
வின்மீன்களையெல்லாம் ஒருவிநாடியில் சூரியன் தன் கதிர்கற்றைகளால் அளாவி, பரவி, சூறையாடி
மறைத்துவிடுகின்றானோ அப்படி சூரியனின் ஒளி, இரகுகுல சூரியனாகிய இராமனின் விரிசோதியில்
மறைந்துவிடுகின்றது.
கம்பனின் முழு ஈடுபாடும் இராமனின் பேரிலேயே இருக்கின்றது. குறைந்தது 10 பாடல்களாவது
எடுத்து கொண்டு பிராட்டியின் அழகை வருணிக்கும் கம்பன், ”பொய்யோ எனும் இடையாளாடோடும்”
என்று நிறுத்தி விடுகின்றான். இலக்குவனுக்கு எந்த அடைமொழியிம் இல்லாமல் “ இளையானோடு”
என்று தாண்டி இராமனிடத்து வருகின்றான். இவன் மனதை முழுக்க ஆக்ரமித்திருப்பது ஒளியை
மறைத்து ஒளியாக நடப்பவனுடைய மேனி வண்ணம் தான்.
வண்ணம் என்ற சொல்லை வைத்து வார்த்தை சிலம்பம் புரிந்த கம்பன், இங்கு இராமனை
எந்த வண்ணம் என்று சொல்லமுடியாமல் திகைத்துவிடுகின்றான். கருப்பு, கரியவன் என்று சொல்வதா
என்று முதலில் யோசிக்கின்றான். மனம் கேட்கவில்லை. பச்சை நிறம் என்று சொல்லி பார்க்கின்றான்.
மனம் திருப்தியடையவில்லை. கடல் நீலம் என்று அடுத்து ஒர் வண்ணத்தை சேர்த்து பார்க்கின்றான்.
மனமோ கேட்க மாட்டேன் என்கின்றது. மழை முகிலோ என்று சொல்லவா என்றவன் அடுத்து மைக்கரி
அல்லாத அடர்ந்த கருமையுள்ள பொருளை யோசிக்கின்றான். கடைசியில் எதுவுமே தோன்றவில்லை.
“ஐயோ” என்று நிற்கின்றான். மற்ற பாடல்களில் எல்லாம் நான்காவது அடியின் முதல் சீராக
இதுதான் வரவேண்டும் என்று தீர்மானித்து அதற்கு தகுந்த மாதிரி பாடலை கட்டமைத்து கொண்ட
கவி, இப்பாடலின் மூன்றாவது அடி எழுதி முடிக்கும் வரை கூட “ஐயோ” இவன் உள்ளத்தில் எழவாய்ப்பில்லை.
பேசப்படும் பொருளோ இராமன். அவனை பேசும் போது, அரிதிலும் அரிதாக, தன்னை மட்டுமே குறிக்க
கவிஞர்கள் பயன்படுத்தும் இந்த சொல்லை, அதுவும் இராமனை நோக்கி பயன்படுத்த அவன் மனம்
முதலில் திட்டமிட்டிருக்காது. இது நழுவி வீழ்ந்த சொல். இது சொல் வீழ்ச்சி. எவ்வளவோ
வண்ணங்களை யோசித்தும் இவன் அழகை வருணிக்க முடிய வில்லை, இவன் ”அழகு என்று ஓர் அழியாவடிவுடையான்”
என்று சொல்லி பெருமிதத்துடன் தன் இயலாமையை ஒப்புகொள்கின்றான்.

பாகம் தரும் நுதலாளொடு, பவளம் தரும் இதழான்,
மேகம் தனி வருகின்றது மின்னொடு என, மிளிர் பூண்
நாகம் தனி வருகின்றது பிடியோடு என, நடவா. நறுமணப் பொடிகளையும் மலர்களில் உள்ள மகரந்தங்களையும் கூந்தலுக்கு இட்டு மணம் ஊட்டல் வழக்கு. கூந்தலின் கீழ் உள்ள நெற்றியை ‘அளகம் தரும் மதியின் பாகம்’ என்றார். பிறை நுதலால் சீதையுடன், பவளம் போன்ற இதழில் செம்மையுடைய இராமன், மேகம் மின்னலோடு தனித்து வருவது போலவும் அழகிய ஆண் யானை தன் பிடியோடு தனித்து வருவது போலவும் நடந்தான். கம்பன் பார்வையில் இந்த இருவர் நடப்பது மட்டுமே தோன்றுகின்றது.
தொளை கட்டிய கிளை முட்டிய சுருதிச் சுவை அமுதின்,
கிளை கட்டிய கருவிக் கிளர் இசையின், பசை நறவின்,
விளை கட்டியின், மதுரித்து எழு கிளவிக் கிளி விழிபோல்,
களை கட்டவர் தளை விட்டு எறி குவளைத் தொகை கண்டான்.
கிளை கட்டிய கருவிக் கிளர் இசையின், பசை நறவின்,
விளை கட்டியின், மதுரித்து எழு கிளவிக் கிளி விழிபோல்,
களை கட்டவர் தளை விட்டு எறி குவளைத் தொகை கண்டான்.
தொளைபொருந்திய புல்லாங்குழலிருந்து, தாக்கி எழுப்பிய கேட்கும்
தன்மையுடைய இசை அமுதம் போலவும், நரம்புகள் கட்டப்பெற்ற யாழின் இன்னிசை சாரமுள்ள தேனைப்
போலவும், நன்றாக விளைந்த பாகு கட்டி இனிமையுடையனவாகிய பேச்சினையுடைய , கிளி போன்ற சீதையினது
கண்களைப் போல், களைப்பறிப்பவர் வயலிருந்து எறிகின்ற குவளை மலர் கூட்டம் கண்டான் இராமன்.
சீதையின்
சொல்லினிமைக்குக் குழலிசை, யாழிசை, தேன், கட்டி என
இவை உவமையாம்.களை பிடுங்குவார் எறிந்த கருங்குவளை மலர்கள்
சீதையின் கண்போலத் தோன்றியதாம் இராமனுக்கு.
இவை உவமையாம்.களை பிடுங்குவார் எறிந்த கருங்குவளை மலர்கள்
சீதையின் கண்போலத் தோன்றியதாம் இராமனுக்கு.
‘அருப்பு ஏந்திய கலசத் துணை, அழுது ஏந்திய மத மா
மருப்பு ஏந்திய’ எனல் ஆம் முலை, மழை ஏந்திய குழலாள்,
கருப்பு ஏந்திரம் முதலாயின கண்டாள்; இடர் காணாள்;
பொருப்பு ஏந்திய தோளானொடு விளையாடினள், போனாள்.
மருப்பு ஏந்திய’ எனல் ஆம் முலை, மழை ஏந்திய குழலாள்,
கருப்பு ஏந்திரம் முதலாயின கண்டாள்; இடர் காணாள்;
பொருப்பு ஏந்திய தோளானொடு விளையாடினள், போனாள்.

அரும்பு என்றது முலைக்காம்புகளை. அருப்பு - வலித்தல்
விகாரம்.
எந்திரம் எனும் சொல்செய்யுளிசை நோக்கி ஏந்திரம் என நீண்டது.
வழியிடைக் காட்சிகள் கண்டு சீதை வேதனைதெரியாமல் மகிழ்ந்து
சென்றாள் என்பதாம். ஏந்திய.....சொற்பொருட் பின்வரு நிலையணி
எந்திரம் எனும் சொல்செய்யுளிசை நோக்கி ஏந்திரம் என நீண்டது.
வழியிடைக் காட்சிகள் கண்டு சீதை வேதனைதெரியாமல் மகிழ்ந்து
சென்றாள் என்பதாம். ஏந்திய.....சொற்பொருட் பின்வரு நிலையணி
கால் பாய்வன முது மேதிகள், கதில் மேய்வன, கடைவாய்
பால் பாய்வன; நறை பாய்வன மலர்வாய் அளி படரச்
சேல் பாய்வன; கயல் பாய்வன; செங் கால் மட அன்னம்
போல், பாய் புனல், மடவார் படி நெடு நாடு அவை போனார். கோசல நாட்டின் நீர்வளம் குறித்ததாம். நெற்கதிர் முற்றாப் பசுங்கதிர் ஆதலின், அதனை உண்ட மேதிகளின் வாயில் பால் சோர்ந்தது. அத்துடன் அம்மேதிகள் நீர்நிலைகளிற்பாய்கின்றன. வண்டுகள் மேல் எழுந்து செல்லும்படி மலர்களின் மேல் கயலும் மீனும் துள்ளுவன.அன்னப் பறவைகள் போல் பெண்கள் நீரி்ல் மூழ்குகிறார்கள் என்று கோசல நாடு நீர்வளத்தால்மிக்குள்ளமையைப் புலப்படுத்தினார் என்க.

இவர்கள் மூவரும் கங்கை கரையடைய அங்கு வந்த் முனிவர்கள்
பெண்ணின் நோக்கும் சுவையை, பிறர்
பிறர்க்கு
எண்ணி நோக்கி இயம்ப அரும் இன்பத்தை,
பண்ணின் நோக்கும் பரா அமுதை, பசுங்
கண்ணின் நோக்கினர், உள்ளம் களிக்கின்றார். கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும், ஒண்டொடி கண்ணே உள” என்கின்றது குறள். 1101.) நோக்கியது பெண்ணின் நோக்கும் சுவை என்பது. “ கண்டு கேட்டு உற்றுமோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்......கண்ட சதிர் கண்டொழிந்தேன், அடைந்தேன் உண் திருவடியே” (திவ்ய.
3328) என்னும்நம்மாழ்வார், பாசுரமும் காண்க. “ஐம்புலன்கள் ஆர வந்து
என்னுள்ளே புகுந்த விசைமாலமுதப்பெருங்கடல்” என்றார் இறைவனை
மணிவாசகரும் (திருவா. திருச்சதகம் - 26) “எவ்வாறொருவர்க்கு
இசைவிப்பது (கந்தர் அநுபூதி 30) என்று அருணகிரியாரும், “இயம்பு அரும்
இன்பத்தை”என்பதனோடு ஒப்பு நோக்கத்தக்கன. பண் என்பது இசையாம்,
இங்கு இசை வடிவானவேதம். முனிவர்கள் பிரானையும் பிராட்டியையும் பார்த்துஅகமகிழந்தனர்.

முனிஸ்ரேஷ்டர்கள், அவர்கள் மூவரையும் கங்கையில் நீராடிவிட்டு
வந்து ஆஸ்ரமத்தில் உணவருந்த வருமாறு
அழைத்தனை.
மங்கையர்க்கு விளக்கு அன்ன மானையும்,
செங் கை பற்றினன், தேவரும் துன்பு அற,
பங்கயத்து அயன், பண்டு, தன் பாதத்தின்,
அம் கையின் தரும் கங்கையின் ஆடினான்.
செங் கை பற்றினன், தேவரும் துன்பு அற,
பங்கயத்து அயன், பண்டு, தன் பாதத்தின்,
அம் கையின் தரும் கங்கையின் ஆடினான்.
கன்னி நீக்க அருங் கங்கையும் கைதொழா,
‘பன்னி நீக்க அரும் பாதகம், பாருளோர்,
என்னின் நீக்குவர்; யானும், இன்று என் - தந்த
உன்னின் நீக்கினென்; உய்ந்தனென் யான்’ என்றாள். பிறர் செய்த பாவங்களைப் போக்கும் கங்கை இன்று தன்னைத் தந்த இறைவனாகிய இராமனே முழுகியதால் தன் பாவங்களைப் போக்கிக் கொண்டு மகிழ்ந்தாளாகக்கூறினாள்.

வஞ்சி நாண இடைக்கு, மட நடைக்கு
அஞ்சி அன்னம் ஒதுங்க, அடி அன்ன
கஞ்சம் நீரில் ஒளிப்ப, கயல் உக,
பஞ்சி மெல் அடிப் பாவையும் ஆடினாள்.
அஞ்சி அன்னம் ஒதுங்க, அடி அன்ன
கஞ்சம் நீரில் ஒளிப்ப, கயல் உக,
பஞ்சி மெல் அடிப் பாவையும் ஆடினாள்.
வஞ்சி, அன்னம், தாமரை, கயல் ஆகியவை நீரில்
உள்ளவை. நீராடும் சீதையின்உறுப்புநலன் கண்டு அவை தோற்றதாகக் கற்பனை செய்தார். கயல் என்பதனால் கண்ணுக்குத் தோற்றுஎன்பது வருவிக்கப் பெற்றது
துறை நறும் புனல் ஆடி, கருதியோர்
உறையுள் எய்தி, உணர்வுடையோர் உணர்
இறைவற் கைதொழுது, ஏந்து எரி ஓம்பி, பின்
அறிஞர் காதற்கு அமை விருந்து ஆயினான். இராமனும் பரம்பொருளை வழிபட்டான் என்பது தான் எடுத்துக்கொண்ட அவதாரத்துக்கு ஏற்ப, தன்னை மனிதனாகவே கருதிப் பரம்பொருளை வழிபட்டான் என்க.

வருந்தித் தான் தர வந்த அமுதையும்,
‘அருந்தும் நீர்’ என்று, அமரரை ஊட்டினான்,
விருந்து மெல் அடகு உண்டு விளங்கினான் -
திருந்தினார் வயின் செய்தன தேயுமோ? தேவர் அமுதத்தையும் உண்ணாது தேவர்களை உண்பித்த இராமன், முனிவர்கள் இட்ட கீரை உணவை விரும்பி உண்டது எவ்வாறு என்பதை இறுதி அடி விளக்குகிறது. மனம் செம்மைப்பட்டவர்கள் பொருளின் உயர்வு தாழ்வு கருத மாட்டார்கள். பொருளைக் கொடுத்தவர்களின் அன்பையே கருதி உயர்வாக ஏற்றுக் கொள்வார்கள். இராமன் முனிவர்களின் அன்பைக் கருதி அவர்கள் கொடுத்த கீரை உணவை அமுதிலும் சிறந்ததாக ஏற்றுக்கொண்டார்.

தொடரும்