கோவில்களில் நடைபெறும் விழாக்களில் முன்பெல்லாம் பல பேர் சேர்ந்து ஒரு உணவை
பகிர்ந்து கொண்டு (பொங்கல், இட்லி,
தயிர்சாதம், சாம்பார் சாதம், உருளைகிழங்கு கறி என்று ஐந்து ஆறு பேருக்கு ஒரே உணவு வகை)
அதுவும் ஒரே நிறத்தில் மட்டுமில்லாமல் பக்குவத்திலும்
(அப்போதுதான் கலந்து பரிமாறும் போது ஒரே மாதிரியாக இருக்கும்) செய்து கொண்டு வருவதோடல்லாமல்,
அதை முறையாக பரிமாறவும் செய்து எல்லாருக்கும் திருப்தியளிக்கும் வகையில் வீணாகமாலும்
எப்படி செய்கின்றார்கள் என்று யோசித்தால் மலைக்க வைக்கும். அப்பொதெல்லாம். குறைந்தது
150லிருந்து 200 பேர் கட்டாயம் வருவார்கள். உண்மையிலே இந்த விழாக்களையெல்லாம் அத்துனை
சிரமங்களுக்கு நடுவிலும், எந்த விதமான விமர்சனத்தை பற்றியும் துளியும் கவலைப்படாமல்,
தொடர்ந்துச் செய்து கொண்டு வருவதால் தான், இவ்விடம் தொடர்ந்து வசிக்க கூடியதாக இருக்கின்றது.
எண்ணிக்கையில் என்னமோ தமிழர்கள் மற்ற தென்னிந்தியர்களை விட அதிகமானவர்கள். ஆனாலும்
கண்ணடிகா அசோசியேஷன் மற்றும் இங்கு இருக்கும் மலையாளிகள் எல்லோரும் ஒன்றாகக் கூடி ஒற்றுமையாக
அவர்கள் விழாவை நடத்துகின்றார்கள். ஒணம் விழாவிற்கு ஜாதி மத பாகுபாடு இல்லாமல் அனைத்து
மலையாளிகளும் ஒன்றாக சேருகின்றனர். இத்தனைக்கும் கொடுக்க வேண்டிய தொகையும் அதிகம்.
ஒரு நபருக்கு 200 டாலரும் குழந்தைகளுக்கு 150 டாலரும் வைத்ததாலும் அவர்கள் எல்லோரும்
(ஊரில்லாதவர்களைத் தவிர) வந்து விடுகின்றனர். ஒரு தடவை கேரளாவிலிருந்தே அனைத்து பொருட்களையும்
வரவழைத்து, இங்கு ஹோட்டலில் இருக்கும் கேரள சமையல்காரனை அமர்த்தி, இண்டியன் ரெக்ரியேஷன்
கிளப்பில் மொத்த கிச்சனையும் அவர்கள் கட்டுபாட்டுக்குள் வைத்து கொண்டு அவர்களுடைய பாரம்பரிய
உணவு வகைகள் அனைத்தையும் செய்து, பூக்கோலம், ஒணத்துள்ளு மற்றும் மஹாபலி வருகை முதலியவற்றை
நிகழ்த்தி அசத்தினார்கள்.
தமிழ்ச் சங்கத்தில் ஆண்டிற்கு குறைந்தது 5 விழாக்கள், கட்டாயம் அதில் ஒன்று
குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சி வைத்து ஆண்டிற்கு 150 சந்தாத் தொகையை வசூலிப்பதற்குள்,
சங்கத்தின் கமிட்டி நண்பர்களுக்கு, சுமக்க முடியாமல் பாரம் ஏற்றி மேம்பாலத்தில் ஏறும்
மாட்டிற்கு எப்படி வாயில் நுரை தள்ளுமோ, அம்மாதிரி ஆகிவிடும்.
நல்ல இசைக்கலைஞர்கள் வந்தாலும் சரி, புகழ் பெற்ற எழுத்தாளர்கள் வந்தாலும் சரி,
சினிமா இல்லை சின்னத்திரை தொடர்பில்லாமல் இருந்தால் 40 தமிழர்களை கூட வரவழைக்க முடியாது.
அப்படியே யாரேனும் சினிமாக்காரர் வருவது தெரிந்தால், தான் மட்டும் பார்த்தால் போதும், தமிழ்சங்கத்திற்கு
அழைத்து அதன் மூலமாகவாவது அங்கத்தினரின் எண்ணிக்கையும் சங்கத்தின் வருமானத்தையும் பெருக்குவோம்
என்று நினைப்பதேயில்லை. இங்கு வராத நட்சத்திரப் பிரபலங்களே இல்லை எனலாம். பல வருடங்களுக்குப்
பிறகு சினிமா திரையிட்டும் கூட தமிழ் சங்கம் கையை சுட்டுக் கொண்டதுதான் மிச்சம். ஒரு
வாரம் கழித்து இங்கு சினிமா வந்தால், அதற்குள்ளாகவே அதை நெட்டில் டவுன்லோடு செய்து
பார்த்துவிட்டு, போன் பண்ணி டிக்கெட் வாங்க சொல்லி கூப்பிட்டால் போனையே எடுக்காமல்,
தமிழ்ச் சங்கம் சினிமாவையும் கைவிடச் செய்து விட்ட மஹானுபாவர்கள் பலர். தமிழில் கூட
நல்லத் திரைப்படங்கள் விதிவிலக்காக வருகின்றன. அதை வரவழைத்து திரையிடலாம் என்றால் அந்த
நினைப்பே கூட எழாமல் செய்துவிட்டனர்.
எனக்கு நினைவு தெரிந்து நான் இருந்த ஊர்களின் பட்டியல் இது. இராணிப்பேட்டை,
வேலூர், சென்னை, திருச்சி, மீண்டும் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், திருத்தணி, விழுப்புரம்,
நாக்பூர், திண்டிவனம், டெல்லி, சென்னை, பெங்கலூர். கடந்த 18 வருடங்களாக ஹாங்காங். இங்கும்
இரண்டு வருடத்திற்கு ஒரு முறை வீடு மாற வேண்டிய அவசியம். இருந்த போதும் என் நல்ல காலம்
மொத்தம் நான்கு வீடுகள்தான் மாறியிருக்கின்றேன். அதில் ஒன்று என் மகனின் பள்ளிக்கூடத்திற்கு
அருகில் வசிக்கவேண்டும் என்ற என் விருப்பத்தினால் ஏற்பட்ட மாற்றம். புதுவிடத்தில் மெட்ரோ
ரயில் வசதியால் எந்தவிடத்துக்கும் விரைந்து பயணம் செய்யும் வசதியுமிருந்தது. என் மனைவிக்கு
அலுவலகம் செல்வதற்கு மிகுந்த சிரம்முண்டானாலும், என் மகனுக்கு புதிய இடம் சுத்தமாக
பிடிக்காவிட்டாலும், குழந்தைகள் பள்ளிக்கு போய் வருவதில் ஒரு நாளில் இரண்டு மணி நேரம் வீணடிப்பதை நான் விரும்பவில்லை.
செகண்டரி ஸ்கூல் வந்தவுடன் தான், என் மகனுக்கு இந்த அருகாமையின் மஹிமை புரிந்தது. அவன்
யூனிவர்சிட்டிக்கும் இந்த இடம் வசதியானதாகவே இருந்தது.
ஒவ்வொரு தடவை ஊரை விட்டு போகும் போதும் அப்பாவிற்கு பிரிவு உபசார விழா நடை பெறும்.
மாலை வேலைகளில் அலுவலகத்தில் அந்த டிவிஷனில் இருக்கும் அனைவரும் வந்து சேர, அப்பாவிற்கு
மாலையணிவித்து யாரேனும் ஒருவர் அப்பா செய்த இன்றியமையாத
வேலை பற்றிப் பேசி அதன் பிறகு அப்பா பேசி முடித்த பிறகு இரவு உணவு ஆரம்பிக்கும். திருச்சியில்
வெறும் பத்து மாதம் மட்டுமே இருந்து அப்பா புறப்பட்டபோது அவருக்கும் அவரின் EEயான சிவராமன்
என்பவருக்கும் சேர்ந்து பிரிவு உபசார விழா ஒரு பெரிய கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
அதற்கு மட்டும் தான் அப்பா குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு போனது.
ஹாங்காங்கில் தான் நான் நிறைய பிரிவு உபசார விழா நடை பெற்று பார்த்திருக்கின்றேன்.
பணி நிமித்தமாக வரும் வங்கி அலுவலர்கள் மாற்றலாகிப் போகும் போது அல்லது பலகாலம் இங்கு
வசித்து ஊருக்கு திரும்பும் போது என்று இது பெரும்பாலும் இரண்டு வகைப்படும். இங்கு
வசித்து வந்த திரு. விசு, திருமதி சகுந்தலா அவர்கள் இருந்த வரையிலும் அவர் வீட்டில்
தான் இது நடைபெறும். முதலில் ஒரு நெருங்கிய வட்டத்திலுள்ளவர்கள் அவர்களுக்குள் சாப்பிடுவதற்கான
உணவு வகைகளைத் தீர்மானித்துக் கொண்டு தயார் செய்து கொண்டு வருவார்கள். பெரும்பாலும்
இது சனிக்கிழமைகளில் தான் நடைபெறும். அனைவரும் விளையாடக் கூடிய விளையாட்டுகள் (பாட்டுக்குப்
பாட்டு அல்லது தம் ஷராத்) விளையாடி உணவு அருந்தி,
ஊரைவிட்டுப் போகும் குடும்பத்தின் அங்கத்தினர்களுக்கு ஏதாவது நினைவுப் பரிசுகள் வழங்கி
அவர்களை வாழ்த்தி விடைபெற்றுச் செல்வோம். திரு.விசு அவர்களின் குடும்பம் இந்த ஊரை விட்டுக்
கிளம்பியவுடன் திரு. அருணாச்சலம் / திருமதி அபிராமி அருணாச்சலம் அவர்களின் உதவியால்
அவர்கள் வசித்து வந்த குடியிருப்பின் கிளப் ஹவுஸில் நடக்க ஆரம்பித்து. திரு/திருமதி
விசு அவர்களின் பிரிவு உபசாரவிழாவும் இங்குதான் நடந்தது.
சிறிது நாட்களுக்கு பிறகு பங்கேற்பவர்கள் எல்லோரும் ஒரு குறிப்பிட்டத் தொகையை
கொடுத்து விட உணவு பதார்த்தங்கள் வெளியாரிடமிருந்து வாங்குவது எனும் வழக்கம் ஆரம்பித்தது.
இங்கு தீபாவளி சமயத்தில் பல விதமான தீபாவாளி ”பால்” (Ball) நடக்கும். தமிழர்கள் பெரும்பாலும் ஒன்றாக கூடி நடத்தும்
வழக்கம் சில ஆண்டுகள் முன்பு வரை கூட நடைபெற்று வந்தது. இதற்கு பெரும் காரணகர்த்தா நாராயணமூர்த்தி. ஒரு இரண்டு மாதம் முன்பாகவே இடம்
தேடி அலைந்து, உணவு வகைகள் மற்றும் செலவையும் தீர்மானித்து, கேளிக்கை. லக்கி டிரா,
மற்றும் பொழுது போக்குவதற்கும் ஏற்பாடு செய்து என்று ரொம்பவே மெனக்கெட்டிருக்கின்றான்.
வந்து சாப்பிட்டு விட்டு போவதே கூட ஏதோ பெரிய பேவர் பண்ணுவது போல் நினைக்கும் பலரிடம்
தொடர்ந்து இது சில ஆண்டுகள் முன் வரை நடைப்பெற்றது என்பது நாராயணமூர்த்தியின் முயற்சிக்குச்
சான்று. இதில் என்று மட்டுமில்லாமல், கோவில் விழாவிலாகட்டும், இங்கு தமிழ் சங்க விழாக்களாகட்டும்
உற்சாகமாக கைகோர்த்து ஒத்துழைப்பையளிக்கும், ரவிசந்திரன், நாராயணண், சாம், மணி மற்றும்
ராம் இவர்கள் இல்லாமல் இதையெல்லம் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது.
நான் ஒரே ஒரு தடவைதான் ஒரு பிரிவு உபசார விழாவிற்கு ஏற்பாடு செய்திருக்கின்றேன்.
ஐயப்பன் இங்கிருந்து சென்னைக்கு திரும்பி போகும் போது நானும் என் நெருங்கிய நண்பன்
குமாரும் சேர்ந்து அவருக்கு பிரிவு உபசாரவிழா ஏற்பாடு செய்தோம். அதற்கு நல்ல வேளையாக
அப்போது புதிதாகத் தொடங்கியிருந்த பாம்பே டீரீம்ஸ் என்ற இந்திய உணவுவகை விடுதி வசதியாக
மதிய வேளைகளில் கிடைத்தது. உணவு வகையிலிருந்து,
பரிசுப் பொருள் மற்றும் அழைப்பவர்களின் மின்னஞ்சல், பணத்தை வாங்குவது என்று நாங்கள்
இருவர் மட்டுமே செய்தோம். எங்களின் நல்ல காலம் சாப்பாடும் மிக அருமையாக அமைந்து எங்களின்
பெயர் கெட்டுபோகாமல் நல்ல பெயரும் அமைய காரணமாகியது.
இங்கு எங்களால் ஆசையோடு “தமிழ்தாத்தா” என்றழைக்கப்படும் திரு யூனூஸ் பாய் ஒவ்வொரு
பிரிவூபசாரத்தின் போதும் “இது தவறான வார்த்தைப் பிரயோகம். இது முடிந்த பிறகு நாம் என்ன
அவரை மறந்துவிடப் போகிறோமா? நாம் தொடர்பற்றவர்களாகி போய்விடுவோமா? ஆகவே இதை பயணோபசார
விழா என்றழைக்க வேண்டுமே தவிர பிரிவு உபசாரவிழா என்றழைக்க கூடாது. அவர்கள் பயணம் போகின்றார்கள்.
அவர்களின் பயணம் இனிதாக இருக்கட்டும்” என்று தான் கூறுவார். ஆயினும் தொடர்ந்து நாங்களும்
பிரிவு உபசாரவிழா என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.
இராமன் அயோத்தியைவிட்டு பிரியப்போகின்றான் என்று கேள்விப்பட்டவுடன் நகர மாந்தார்கள்
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரிவை எண்ணி
வேதனைபட்டு அழுது மனம் வருந்துகின்றனர். அதை கவி பலவிடங்களில் தொடர்ந்து கூறுகின்றான்.
வசிட்டன் அவையோருக்கு அறிவித்தவுடன், இராமன் கௌசல்யையிடம் விடை பெற்றுத் திரும்பும்
போது, இலக்குவனுடன் சுமத்திரையின் வீட்டில் இருந்து நீங்கி, சீதையின் இருப்பிடம் போகும்
போது என்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூறுகின்றான்.
நல் நெடு நளிர் முடி சூட, நல்
மணிப்
பொன் நெடுந் தேரொடும் பவனி போனவன்,
துள் நெடுஞ் சீரையும் சுற்றி, மீண்டும், அப்
பொன் நெடுந் தெருவிடைப் போதல் மேயினான் தேரோடு சென்றவன், சீரையொடு கொண்டு வந்தான் என்பது ஒரு சொல் நயம். இரண்டையும் இணைத்துக் காட்டி அவலத்தை மேலும் அதிகமாக்கினார் கம்பர். இது ‘கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன், மேற்றிசை வாயில் வறியேன் பெயர்க்கு’ (சிலப். 23:182 - 3) என்ற கண்ணகியின் நிலையை நினைவுக்குக் கொண்டுவருகின்றது.

‘திரு அரை சுற்றிய சீரை ஆடையன்,
பொரு அருந் துயரினன், தொடர்ந்து போகின்றான்
பொரு அருந் துயரினன், தொடர்ந்து போகின்றான்
இருவரைப் பயந்தவள் ஈன்ற
கான்முளை
ஒருவனோ, இவற்கு இவ் ஊர் உறவு?’ என்றார் - சிலர் தாம் இவ்வளவு பேர் இருக்கவும் இலக்குவன் மட்டுமே பின் தொடர்ந்து, செல்வது கண்டு தம்மைத் தாமே நொந்துகொண்டவர் பேசிய பேச்சு இது.
ஒருவனோ, இவற்கு இவ் ஊர் உறவு?’ என்றார் - சிலர் தாம் இவ்வளவு பேர் இருக்கவும் இலக்குவன் மட்டுமே பின் தொடர்ந்து, செல்வது கண்டு தம்மைத் தாமே நொந்துகொண்டவர் பேசிய பேச்சு இது.
சீதையின் இருப்பிடத்தை இவர்கள் அடைகின்றனர்.
எழுந்த நங்கையை, மாமியர் தழுவினர்; ஏங்கிப்
பொழிந்த உண் கண் நீர்ப் புதுப் புனல் ஆட்டினர்; புலம்ப,
அழிந்த சிந்தையள் அன்னம், ‘ஈது இன்னது’ என்று அறியாள்;
வழிந்த நீர் நெடுங் கண்ணினள், வள்ளலை நோக்கி,
பொழிந்த உண் கண் நீர்ப் புதுப் புனல் ஆட்டினர்; புலம்ப,
அழிந்த சிந்தையள் அன்னம், ‘ஈது இன்னது’ என்று அறியாள்;
வழிந்த நீர் நெடுங் கண்ணினள், வள்ளலை நோக்கி,
மரவுரியுடன் வரும் இராம இலக்குவர் கோலம் மற்றும் மாமியாரின் கண்களிலிருந்து
கண்ணீரைப் பார்த்த சீதை தசரதனுக்கு எதோ ஆபத்து நேர்ந்துவிட்டது என்று ஐயப்பட்டு இராமனை
”என்ன நடந்தது? என்று வினவினாள் கம்பன் இதுகாறும் அழுகையை அறியாதவர் அழுத கண்ணீராதலினனால் ‘புதுப்புனல்’
என்றார்.
பொரு இல் எம்பி புவி புரப்பான்; புகழ்
இருவர் ஆணையும் ஏந்தினென்; இன்று போய்,
கருவி மா மழைக் கல் - கடம் கண்டு, நான்
வருவென் ஈண்டு; வருந்தலை நீ என்றான்.
இருவர் ஆணையும் ஏந்தினென்; இன்று போய்,
கருவி மா மழைக் கல் - கடம் கண்டு, நான்
வருவென் ஈண்டு; வருந்தலை நீ என்றான்.
இராமன் “ என் தம்பி பரதன் அரசாள்வான். நான் என் தாய் தந்தையின் ஆணைப்படி இன்றே
வனம் போகின்றேன். திரும்பி வருவேன். நீ வருந்த வேண்டாம்” என்றான். எப்போதுமே பெண்களுக்கு
அவர்கள் எதை தெரிந்து
கொள்ள ஆசைப்டுகின்றார்காளோ அதை தவிர மீதி விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வம்
காட்டுவதில்லை. ஏன் இராமன் இவளிடம் தான் 14 வருடங்கள் காட்டில்
இருக்கவேண்டும் என்பதை தெரியப்படுத்தவில்லை. கௌசல்யையிடமும்
சரி சுமத்திரையிடமும் சரி 14 வருடங்கள் என்று சொன்னவன் ஏன் மனைவியிடம் சொல்லவில்லை?
ஏதோ ஒரு சுற்றுலா போகப் போவது போல் அதுவும் உடனேயே திரும்பிவிடுவது போல் ஏன் சொல்ல
வேண்டும். சுமத்திரை சரியாக இலக்குவனிடம் ”நீயும் உடன் போ. சீதையை நானாக நினைத்துக்
கொள்” என்று கூறிவிட்டாள். அதற்கேற்ப இலக்குவனும் வர இவன் சம்மதித்து விட்டான். அப்போது
மறுத்தபோது இலக்குவன் ”நானும் சீதையும் நீ இல்லாமல் உயிர் வாழ முடியாது” என்றும் தெளிவாகக்
கூறினான். ஆகவே சீதையையாவது தடுக்கும் நோக்கத்திலேதான் எத்தனை காலம் காட்டிலிருக்க
வேண்டும் என்பதை சீதையிடம் கூறவில்லை போலும்.
நாம் என்னதான் சொன்னாலும் ஒரு பெண் ஒரு காரியத்தில் மனது வைத்து விட்டால் அவளை
மாற்றுவது ரொம்பக் கடினம். எங்கள் வீடுகளில் குழந்தைகளில் ஆண் குழந்தைகளை ரொம்ப எளிதாக
அவர்களின் கவனத்தைத் திசைத் திருப்பி மாற்றிவிடமுடியும் அதே பெண் குழந்தைகள் மஹா கஷ்டம்.
அவர்கள் நினைத்தை அடையும் வரையில் அவர்கள் ஓய்வதே இல்லை. என் அக்கா மகள் “பாப்பு”.
இவளுக்கு 6 அல்லது 7 வயது இருக்கும் போது இவளை விட்டு விட்டு அப்பா, அம்மா. அக்கா,
மாமா ஏதோ சினிமாவிற்கு போய்விட்டார்கள். இவளோ அழுது கொண்டே ஜீப்பின் பின்னால் வீதியில்
ஓட முற்பட, தடுத்த மன்னிக்கு செம அடி, உதை. மன்னியின் அம்மாவே கூட மன்னியை அடித்திருக்க
மாட்டார்கள். வீட்டில் வந்தவுடன் ஆரம்பித்த ஒப்பாரி. சினிமா பார்த்தவர்கள் வீடு வந்து,
என் அப்பாவையும் இவள் ஒரு அடி போட்டவுடன் தான் நின்றது, எங்கள் எல்லோருக்கும் அடுத்த
நாளும் கூட அழுகை சத்தத்தினால் தலைவலி தொடர்ந்தது.
நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்,
மேய மண் இழந்தான் என்றும், விம்மலள்;
‘நீ வருந்தலை; நீங்கவென் யான்’ என்ற
தீய வெஞ் சொல் செவி சுடத் தேம்புவாள் அவன் இழப்புக்கு வருந்தாமல், அவனைத் தான் பிரியும் பிரிவுக்கும், அதனால் வருந்தாதே என்று சொல்லிய சொல்லுக்குமே வருந்தினாள் என்பதாம். எந்நிலையிலும் அவனைப் பிரியாமையே அவள் கருத்தாம். தன்னைப் பிரிவதில் அவன் கவலை உறவில்லையே என்பதும் அவள் ஏக்கமாகும்.

வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து,
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர்க்
கல் அரக்கும் கடுமைய அல்லல - நின்
சில் அரக்குண்ட சேவடிப் போது’ என்றான்.
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர்க்
கல் அரக்கும் கடுமைய அல்லல - நின்
சில் அரக்குண்ட சேவடிப் போது’ என்றான்.
மலைவழி, காட்டுவழி, இரவிலும் வெப்பம் செய்யும் வழி, கூரிய கற்கள்
உற்ற வழி எனவே வெப்பமான – கூரானா கற்கள்
உராய்வதனால் ஏற்படும்
வலியைத் தாங்கும் கடுமையுடைய பாதம் அல்ல உன்
பாதம்; குளிர்ந்த செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய மெல்லிய
மலரனைய பாதம். அதனால்தான் ‘இருத்தி’ என்றேனே அன்றி உன்னைப் பிரிதல்
வல்லமையால் சொன்னேன் என்று கருதாதே என்பது போல இராமன்
கூறினான். அப்படியும் சீதை என்னை விட்டு பிரிந்திருந்தாள் தான் உங்களுக்கு நிம்மதி போல் என்று சீற்றத்துடன் கூறிவிட்டு உள்ளே அந்தப்புரம் புகுந்தவள்
வல்லமையால் சொன்னேன் என்று கருதாதே என்பது போல இராமன்
கூறினான். அப்படியும் சீதை என்னை விட்டு பிரிந்திருந்தாள் தான் உங்களுக்கு நிம்மதி போல் என்று சீற்றத்துடன் கூறிவிட்டு உள்ளே அந்தப்புரம் புகுந்தவள்
அனைய வேலை, அக மனை எய்தினள்;
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;
நினைவின், வள்ளல் பின் வந்து, அயல் நின்றனள்-
பனையின் நீள் கரம் பற்றிய கையினாள்.
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;
நினைவின், வள்ளல் பின் வந்து, அயல் நின்றனள்-
பனையின் நீள் கரம் பற்றிய கையினாள்.
தானும் மரவுரி கட்டிக் கொண்டு வந்து நின்றாள்; இராமனும் வேறு ஏதும் சொல்லமுடியாமல்
‘முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும்,
வெல்லும் வெண் நகையாய்! விளைவு உன்னுவாய்
வெல்லும் வெண் நகையாய்! விளைவு உன்னுவாய்
அல்லை; போத அமைந்தனை ஆதலின்,
எல்லை அற்ற இடர் தருவாய்’ என்றான்
எல்லை அற்ற இடர் தருவாய்’ என்றான்
எதிரது நோக்கிக் கூறியது.
உன் கால்கள் மென்மையானவை என்று
கூறிமுன் மறுத்தவன் இப்போது ‘நீ காட்டிற்கு வருதலால் கணக்கற்ற தீங்கு
விளையும்’ என்று கூறி மறுக்கலானான். பெண்டிர் உடன்வரின் அவர்களைக்
காத்தல் முதலிய முயற்சிகளில் பல தீமைகளைச் சந்திக்க நேரும் என்பது
இராமன் கணிப்பு.

சீரை சுற்றித் திருமகள் பின் செல,
மூரி விற் கை இளையவன் முன் செல,
காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ்
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ?
மூரி விற் கை இளையவன் முன் செல,
காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ்
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ?
சீதை
முன்செல, இளையவன்
பின்செல என்று ஒரு
பாடமும் உண்டு.
மனைவி முன்போகப் போதலேபெண்டிரைக் காத்துச் செல்வார்க் குரிய
தாகலின் அப்பாடமே கொள்வாரும் உளர்.
மனைவி முன்போகப் போதலேபெண்டிரைக் காத்துச் செல்வார்க் குரிய
தாகலின் அப்பாடமே கொள்வாரும் உளர்.
ஏத்தினார், தம் மகனை, மருகியை;
வாழ்த்தினார், இளையோனை; வழுத்தினார்,
‘காத்து நல்குமின், தெய்வதங்காள்!’ என்றார்- நாத் தழும்ப அரற்றி நடுங்குவார்.
‘காத்து நல்குமின், தெய்வதங்காள்!’ என்றார்- நாத் தழும்ப அரற்றி நடுங்குவார்.
மீண்டும்
தாயார்களையும் தேவியர்களையும் வணங்க அவர்கள் மூவரையும் வாழ்த்தினர்
என இயைக்க - தெய்வங்களை வழுத்தினார் என இயைக்க. தானாக முன்வந்து வனம் செல்லும் இளையோனை வழுத்தினர் அல்லது ஏத்தினர் எனல் சிறப்பு
ஏவிய
குரிசில்பின் யாவர் ஏகிலார்?
மா இயல் தானை அம் மன்னனை நீங்கலாத்
தேவியர் ஒழிந்தனர்; தெய்வ மா நகர்
ஓவியம் ஒழிந்தன, உயிர் இலாமையால்
மா இயல் தானை அம் மன்னனை நீங்கலாத்
தேவியர் ஒழிந்தனர்; தெய்வ மா நகர்
ஓவியம் ஒழிந்தன, உயிர் இலாமையால்
தேவிமாரும், ஒவியமும் தவிர மற்ற
அனைவரும் இராமன்
பின் சென்றனர் எனச் சுருங்கச் சொல்லி இராமன் உடன் சென்ற நகரமாந்தரை விளங்க வைத்தார்.
பகுத்த
வான் மதி கொடு பதுமத்து அண்ணலே
வகுத்த வாள் நுதலியர் வதன ராசிபோல்,
உகுத்த கண்ணீரினின் ஒளியும் நீங்கின,
முகிழ்த்து, அழகு இழந்தன, முளரி ஈட்டமே
வகுத்த வாள் நுதலியர் வதன ராசிபோல்,
உகுத்த கண்ணீரினின் ஒளியும் நீங்கின,
முகிழ்த்து, அழகு இழந்தன, முளரி ஈட்டமே
பிரமன் படைக்கும்போது சந்திரனை இரண்டாகப் பிளந்து அமைத்தது போல உள்ளது பெண்கள் நெற்றி என்றார். சில மகளிரது நெற்றியைப் பிறை
‘எனச் சொல்வர்.
சிலரது நுதலைப்‘பாதிமதி’ எனக் கூறுவது புலவர் கற்பனை மரபு. “மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப்
பசுவெண்திங்கள் தோன்றியாங்குக்,
கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல்”
(குறுந். 129.) என்பது காண்க.. அட்டமிச் சந்திரன் என்பது ‘அரை நிலவு’ அன்றோ. அயோத்தி
நகர மகளிர்
முகம் இராமன்
வனம் புகுந்தபடியால் அழுது அழுது
கண்ணீரோடு ஒளியிழந்து சாம்பி அழகு கெட்டுள்ளது
போல, தாமரையும்
உள்ளது. கண்ணீர்
என்பதனை மகளிர்க்குக் கொள்ளுங்கால் ஒன்றாகவும்,
தாமரைக்குக்கொள்ளுங்கால் ‘கள்+ நீர் எனப் பிரித்தும்
கொள்க. இது பிரிமொழிச் சிலேடை. ஒளிநீங்கல், முகிழ்த்தல், அழகு இழத்தல் ஆகியவை செம்மொழிச் சிலேடை. இது சிலேடை உவமையணி.
கொள்க. இது பிரிமொழிச் சிலேடை. ஒளிநீங்கல், முகிழ்த்தல், அழகு இழத்தல் ஆகியவை செம்மொழிச் சிலேடை. இது சிலேடை உவமையணி.
வாவி விரி தாமரையின் மா மலரின்
வாசக்
காவி விரி நாள் மலர் முகிழ்த்தனைய கண்ணார்,
ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக,
நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார்
காவி விரி நாள் மலர் முகிழ்த்தனைய கண்ணார்,
ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக,
நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார்
இள
நவ்வியர் என்பதால் இவர்கள் சிறுமிகள் என்பதும், ‘கண்ணார்’ என்பவர்அச்சிறுமியரது தாய்மாரும்.
அவரனைய பெண்டிரும்
என்பதும் போதரும். சிறுமியர் ஆதலின் தாயரது ஆடை அணையாகக்
கொண்டு அவர்களிடமே. போல என்று என்க. தாமரைப் பூவிற்குள் நீலோற்பலம் (கருங்குவளை) போல என்று முகத்தில்
கிடந்த கண்களைக் கூறினார். இவர்களும் உறக்க அவசத்தில் கண்களை மூடினர் ஆதலின் ‘கருங்குவளை முகிழ்த்து’ என்றார்.
முகிழ்த்து’ என்பது மலரும் பருவத்து
அரும்பாதுல் அறிக.
பெரும் பகல் வருந்தினர் பிறங்கு
முலை
தெங்கின்
குரும்பைகள் பொரும் செவிலி மங்கையர் குறங்கில்
குரும்பைகள் பொரும் செவிலி மங்கையர் குறங்கில்
அரும்பு அனைய கொங்கை, அயில் அம்பு அனைய உண் கண்,
கரும்பு அனைய செங்சொல் நவில், கண்ணியர் துயின்றார்.
கரும்பு அனைய செங்சொல் நவில், கண்ணியர் துயின்றார்.
செவில் மங்கையர் வயதின்
மிக்கோர் என்பதைத் தென்னங் குரும்பை போலும் முலை என்பதனால்
அறிவுறுத்தி; அவர் துடையில் துயிலும் கன்னியர் இளவயதினர் என்பதனை அரும்பை ஒத்த முலை என்பதனாற் கூறிய திறம் அறிந்து மகிழத் தக்கது. அரும்பு - தாமரை அரும்பு ஆம் ‘பூவெனப்படுவது பொறி வாழ் பூவே’
(நால்வர் நான்மணி. 40) என்பவாதலின் யாண்டும் இன்னமலர் என்னாது மலர் என்றவழி
இடம்நோக்கித் தாமரையே சொல்லப்படும்.
இடம்நோக்கித் தாமரையே சொல்லப்படும்.
தூங்கி கொண்டிருக்கும் நகர மாந்தர்கள் பார்த்து, அமைச்சனான சுமந்திரனை அழைத்து
தனியிடத்தில் இராமன்
‘பூண்ட பேர் அன்பினாரைப் போக்குவது அரிது; போக்காது,
ஈண்டுநின்று ஏகல் பொல்லாது; எந்தை! நீ இரதம் இன்னே
தூண்டினை மீள்வது ஆக்கின், சுவட்டை ஒர்ந்து, என்னை, ” அங்கே
மீண்டனன்’ என்ன மீள்வர்; இது நின்னை வேண்டிற்று’ என்றான் நகர மாந்தர் அனைவரும் வனவாசம் செய்தல் ஆனது, ஆதலின் சுமந்திரன் தேரைத் திருப்பி ஊர் சென்றால், தேர்ச்சுவடு அயோத்தி போவது கண்டு இராமன் திரும்பி ஊர் சென்றுவிட்டான் எனக் கருதி நகர மாந்தரும் அயோத்திக்கு திரும்புவராதலின் அதனைச் செய்க என்று வேண்டினன்.

செவ்விய குரிசில் கூற, தேல்
வலான்
செப்புவான், ‘அவ்
வெவ்விய தாயின், தீய விதியினின் மேலன் போலாம்;
இவ் வயின் நின்னை நீக்கி, இன் உயிர் தீர்ந்து இன்று ஏகி,
அவ் வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன்’ என்றான். இன் உயிர் தீர்ந்து’ உயிர் போகப் பெற்று வெற்றுடலோடு அயோத்திக்கு இன்றே சென்று இதுபோலவே வெற்றுடல் காட்சிகளையே அங்கும் காண என்று பொருள் செய்தலே பொருந்தும்.

இராமன் தசரதனுக்கு நான் சீக்கிரம் வருவேன் என்று சொல்லிவிட்டு
பரதனுக்கு
“வெவ்வியது, அன்னையால் விளைந்தது, ஈண்டு ஒரு
கவ்வை என்று இறையும் தன் கருத்தின் நோக்கலன்,
எவ் அருள் என்வயின் வைத்தது, இன் சொலால்,
அவ் அருள் அவன்வயின் அருளுக!” என்றியால். கூறுங்கள் என்று சுமந்திரனிடன் வேண்டிக் கொண்டான். கைகேயிமாட்டும், தயரதன்மாட்டும் என்னிடம் உள்ள அன்பிற்சிறிதும் குறையாது அன்போடு நடந்துகொள்ளுமாறு பரதன்பால் கூறவும் என்றான். “ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால், தாய் எனும் பெயர் எனைத் தடுக்கற்பாலதோ” என்று பரதன் கூறுவதை இங்கே கருதுக.

சீதையிடம் சுமந்திரன் ஏதாவது சொல்ல வேண்டுமா என வினவ சீதை
அன்னவள் கூறுவாள், ‘அரசர்க்கு, அத்தையர்க்கு,
என்னுடைய வணக்கம் முன் இயம்பி, யானுடைப்
பொன் நிறப் பூவையும், கிளியும், போற்றுக என்று
உன்னும் என் தங்கையர்க்கு உணர்த்துவாய்’ என்றாள் சீதையின் பேதைமைத் தன்மையை இவ் வார்த்தைகள் விளக்கி நின்று இத்தகைய குழந்தைத் தன்மையுடையாள் பின் வனம் புகுந்து எவ்வளவு உயர்ந்த மனவளர்ச்சியும் குண வளர்ச்சியும் பெற்றுத் திகழ்கிறாள் என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது. தங்கையர் - ஊர்மிளை, மாண்டவி, சுருத கீர்த்தி ஆகியோர் - இவர் ஜனகன் புதல்வியர். இலக்குவன், பரதன், சத்துருக்கனன் மனைவியர் ஆவர்.

பெண்களுக்கு எப்போதுமே அவர்கள் வளர்க்கும் செடிகள் அல்லது அவர்கள் புழங்கும்
சமையல் அறை மீது அவர்கள் ஏகத்திற்கும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவர். நாங்கள் இங்கு வந்த சிலவருடங்களுக்கு வீட்டோடு உதவுவதற்கு ஆள்
யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. என் மனைவி விடுமுறைக்கு ஊருக்கு போகும் போது எனக்கு ஆயிரத்தெட்டு கட்டளைகள்
இடப்படும். ”பாத்ருமை வாரத்துக்கு ஒரு தடவை கீளீன் பண்ணு. கிச்சன்லே பாத்திரத்தை அப்படியே போட்டு வைக்காதே. கரப்பு வந்துட
போறது. ,மறக்காம செண்பகச் செடிக்கும் மத்த செடிக்கும் டெய்லி தண்ணிவுடு” அவள் ஊருக்குத்
திரும்பிவருவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக எல்லாவற்றையும் நன்றாக செய்து சுத்தமாக
வைத்திருப்பேன். என் நல்ல காலம் எல்லா செடிகளும் நான் தண்ணிர் ஊற்றாமலேயே உயிரோடு இருந்தன.
என் நண்பன் ஒருவனுக்கு பாவம், அவன் மனைவி ஆசையாக வைத்திருந்த அத்தனை செடிகளும் அவள்
லீவிற்கு போய் வருவதற்குள் இறந்து வேறு போய் விட்டது. என் மனைவி வீடு திரும்புவதற்கு இரண்டு நாள் முன்பு கையில் துடைப்பம் மற்றும்
சுமத்திரன் இலக்குவனை ஏதாவது செய்தியிருக்கின்றதா என வினவ
உரைசெய்து எம் கோமகற்கு உறுதி ஆக்கிய
தரைகெழு செல்வத்தைத் தவிர, மற்று ஒரு
விரை செறி குழலிமாட்டு அளித்த மெய்யனை
அரைசன் என்று இன்னம் ஒன்று அறையற் பாலதோ? அரசவையில் உறுதி செய்ததை அந்தப்புரத்தில் மாற்றியவன் சத்திய சந்தனா, அரசனா என்று வெகுட்சியாகக் கேட்கிறான் இலக்குவன், ‘மெய்யனை’ என்பது இகழ்ந்துரைத்த வார்த்தை.‘அவன் அரசனாதற்குத் தகுதியுடையவன் அல்லன்; அவனுக்கென்ன நான் செய்தி சொல்லியனுப்புவது’ என்கின்ற சினவெறுப்புப் புலனாதல் காண்க. முன்கோபியுடம் எது ஒன்றுமே கேட்பது ஆபத்தாகிவிடும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. அதன் பிறகும் பரதனுக்கு சொல் என

‘மின்னுடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு, “என்
மன்னுடன் பிறந்திலென்; மண்கொண்டு ஆள்கின்றான் -
தன்னுடன் பிறந்திலென்; தம்பி முன் அலென்;
என்னுடன் பிறந்த யான் வலியென்” என்றியால்.
மன்னுடன் பிறந்திலென்; மண்கொண்டு ஆள்கின்றான் -
தன்னுடன் பிறந்திலென்; தம்பி முன் அலென்;
என்னுடன் பிறந்த யான் வலியென்” என்றியால்.
சத்ருக்கனன் எப்போதும் பரதனுடனே இருப்பதால் நான்
அவனை என் தம்பி என்று எண்ண மாட்டேன். நான்
தனியாகவே பிறந்தவன். நான் இன்னும் அதே வலிமைமிக்கவனாகவே உள்ளேன் என்று சீற்றத்துடன்
கூறுகின்றான். கோபம் வந்தால் சிந்திக்கும் திறமை போய்விடும். இவனுக்கு பரதன் மேல் ஏன்
இந்த கோபம். கோபம் கைகேயியிடம் இருக்கலாம். ஆனால் இராமன் பரதனை புரிந்து கொண்ட அளவு
தசரதனோ, கைகேயியோ இல்லை இலக்குவனோ இல்லை கௌசள்யைக் கூட சரியாக புரிந்து கொள்ளவில்லை. அது மட்டுமின்றி இவ்வளவு கோபமுள்ள இலக்குவன் காப்பிய
வளர்ச்சியில் எப்படி பண்பட்ட இராமனுக்குக் கூட
அறிவுறை கூறி ஆறுதல் சொல்லக்கூடிய வளர்ச்சியடைகின்றான்
என்று கம்பன் மிக அழகாக காட்டுகின்றான். அவனின் இந்த் வளர்ச்சியில் பெரும் பங்கு பரதனால்
ஏற்பட்டது என்பதை பிறகு பார்ப்போம்.
இராமன் இலக்குவனை “‘ஐய! நீ சீரிய அல்லன செப்பல்’ என்று அடக்க,
சுமந்திரன் தேரை எடுத்துக் கொண்டு அயோத்தி திரும்பினான். இராமன், இலக்குவன் மற்றும்
ஜானகி மூவரும் தென் திசையில் பயணித்தனர். விழிதெழுந்த மக்கள் இராமன் ஊர் திரும்பிவிட்டான்
என்ற நினைத்து மீண்டும் அயோத்தி நோக்கிச் சென்றனர்.
In this article you metioned about Iyappan and Kumar. Is the real name of Kumar is Ranganath? If so please let me know.
ReplyDeleteRegards
Prakash