Friday, April 27, 2012

பெங்களூர்

பெரியண்ணன் ராகவனின் கல்யாணம் பெங்களூரில். எங்கள் குடும்பம் தவிர எங்கள் சித்தி சித்தப்பா அவர்கள் குழந்தைகள் மூவர், அம்மாவின் மாமா(சாமு), மாமாவின் மகன்(நாரயணன்), பாட்டி என மொத்தம் 20 பேர். விழுப்புரத்திலிருந்து சித்தூருக்கு மீனாக்‌ஷி எகஸ்பிரசில் ஏறி திருவண்ணாமலை வேலூர் வழியாக சித்தூர் சென்றோம். எல்லா சாமான்களையும் ஏற்றியிறக்குவது என்பது சாமு மாமா, நாராயணன் மற்றும் அண்ணன் கணேசனுடைய பொறுப்பு. என் தம்பி சித்தி பசங்கள் இவர்களை ஒழுங்காக ஏற்றி இறக்கவேண்டியது என் பொறுப்பு. ராகவனுக்கு பாட்டி அம்மா இவர்களை ஏற்றி சீட்டில் உட்காரவைக்க வேண்டிய பொறுப்பு. அக்காக்கள் இருவருக்கும் எல்லோருக்கும் உணவளிக்கும் பொறுப்பு என பலவாறாகப் பிரித்து நன்றாகாவே இணைந்து பணியாற்றினோம்.

சித்தூர் வீட்டில் பந்தக்கால் நட்டு வாழை மரம் கட்டப்பட்டு பந்தல் போடப்பட்டிருந்தது. வீட்டிற்குள் நுழைவதற்கு முன் அப்பா அம்மா மற்றும் அண்ணனுக்கு மட்டும் ஆரத்தி எடுத்தனர். மதராசிலிருந்து மாமா, அத்தைகள், அத்திம்பேர்கள்,  அவர்கள் பசங்கள் என மொத்தம் 65 பேருக்கும் மேல். சிலருக்கு ரெகுலர் பஸ்ஸில் டிக்கெட் வாங்கியிருந்தனர். சித்தூரிலிருந்து பெரிய பஸ் ஒன்று ஏற்பாடு செய்திருந்தார் அப்பா. சுமங்களி பிரார்த்தனை மற்றும்  சுவாமி சமாராதனையெல்லாம் வீட்டிலேயே. சமையலுக்குக் கூட வெளியிருந்து ஆட்கள் வரவில்லை.. காமாட்சி அத்தை, பத்து அத்தை, ஞயானா அத்தை, அம்மா மற்றும் பிரேமா மாமி இவர்களே ஹெட் குக். சுத்து வேலைக்கு சித்திகள் (சாந்தி, நித்தாய்), என் அக்காக்கள் இருவர். எச்சலிட பரிமாற என தங்கைகள். எல்லா வேலைகளுமே வீட்டிலுள்ளோர் மட்டுமே அவர்களுக்குள்ளேயே பேசி பங்கிட்டுக் கொண்டனர்.

அருமையான கலந்த சாத சாப்பாடு எல்லாம் தயார் செய்து கொண்டு, பஸ் வீட்டிற்கு முன் வர முதல் ஆளாக நான் பஸ்சின் மேலே ஏறி நின்று கொண்டேன். ரொம்ப நாளக மனதிலிருந்த ஆசை அன்று நிறைவேறியது. சமான்களையெல்லாம் மேலே ஏற்றி தார்பாலின் போட்டு கட்டிவிட்டு சூரக்காய் உடைத்து விட்டு  கிளம்பினோம். சித்தூர் வீட்டைப் பார்த்துக் கொள்வதற்காக கீரிம்பேட்டையிலிருந்து ராதாபாய் மாமியும் அவர் மகனும் வந்திருந்தனர். வழியில் ஒரிடத்தில் பெரிய கிணற்றுடன் கூடிய வெளியில் அமர்ந்து சாப்பிட்டோம். அந்த கிணற்றில் நம்மூர் கிணறுககளிலிருப்பது போல் ஏற்றமோ இல்லை மாடு இழுப்பது போலிருக்கும் மாதிரியான அமைப்போ இல்லை. நடுவில் பெரிய சக்கரத்தில் பல வாளிகள் சாய்மான கோணத்தில் கொண்டிருந்த்து. சகக்ர்ம கீக்ஷே போகும் தண்ணிரை முகர்வதற்கும் மேலே வர வர கட்டப்ட்டிருக்கும் கால்வாயில் நீரை விடுவதுமாக பார்பதற்கு புதுமையாகவிருந்தது.

தியம் போய் பெங்களூர் அடைந்தோம். அன்று இரவு தான் நிச்சயதார்த்தம் மற்றும் ஜானவாசம். அடுத்த நாள் காலையில்  கல்யாணம். கல்யாணம் முடிந்தவுடன் ஊர் சுற்றிப் பார்க்க அவரவர் வயது துணையுடன் கிளம்பினோம். எனக்கு பெரிய அண்ணன் பணம் கொடுத்திருந்தான். நான் மற்றும் என் அத்தை மகன்கள் இருவரும் விஸ்வேஸ்வரய்யா மூயூஸியம்  பார்த்தோம். இரண்டு மணி நேரம் கழிந்த்து.  சுமாராக இருந்த ஒரு பாரில் ஆளுக்கு இரண்டு பாட்டில் பீர் மட்டுமே குடிப்பது எனத்  தீர்மானித்து(அதில் ஒருவன் குடிக்கவில்லை என்றான். குடிக்கலேன்னா பரவாயில்லை. ஆனா பைசா மட்டும் குடுத்திடணும். உன் பேரை சொல்லி நாங்க குடித்துக் கொள்கின்றோம். முடிக்கும் போது மணி மாலை 4.30. வாசனை தெரியாமல் இருக்க ரோஜா பாக்குப் போட்டும் சத்திரம் வந்த உடனேயே குளித்து விட்டே ரிசப் னுக்கு தயாரானேன். அடுத்த நாள் காலை டிபன் சாப்பிட்டு விட்டு கட்டு சாதம் கட்டி கொண்டு சித்தூர் நோக்கி பயணம், மன்னியடனும் மேலும் சில பெட்டிகளுடனும். சென்றது போலவே அதே ரயிலேறி மீண்டும் விழுப்புரம் வந்தடைந்தோம்.

அப்போதெல்லாம் எல்லோருமே சத்திரத்தில்தான் தங்குவோம். தலையணை நிச்சயமாகப் பத்தாது. இரவில் சினிமா பார்த்து விட்டு வருபவர்கள் கட்டாயம் சிறுவர்களிடமிருந்து தலையனைகளை உருவிவிடுவர். அதே போல் இரவெல்லாம் நடக்கும் சீட்டாட்டம். காசு வைத்துதான் விளையாடுவார்கள். அதனால் நாங்கள் பங்கேற்க முடியாது என்றாலும் ஒவ்வொருத்தருக்கு ஆலோசகர்களாகயிருப்போம். நான் எப்பவும் எங்கள் கடைசி சித்தப்பாவிற்கு ஆலோசகன். அவர் அவசரமாக எழுந்து போகவேண்டியிருந்தால் அவர் வரும் வரை நானே ஆடுவேன். ஆடுவது முழுவதும் அப்பா, சித்தப்பா, மாமா, அத்தைமகன்கள் என்பதால் குடும்ப பழங்கதைகள் மற்றும் அவரவர் உத்தியோக ரீதியில் வரும் சங்கடங்கள் மற்றும் மறக்கமுடியாத சம்பவங்கள் என்று பொழுது விடிவதே தெரியாது.

ஒரு சமுயம் என் கடைசி சித்தப்பா ரொம்ப பெருமையாகஇந்த வருஷம் காந்தி ஜெயந்தி அன்னிக்கு சித்தூர் வீட்டிலிருந்த காந்தி படத்துக்கு மாலையணிவித்தேன் என்று சொல்லிக் கொண்டிருந்த போதே இரண்டாவது சித்தப்பா பிராந்தியடிகள் காந்தியடிகளுக்கு மாலையிட்டார்எனறார். சிரித்து முடிப்பற்குள்ளே இன்னும் கொஞ்சம் போடுவான்” (இட்லி பஞ்சு போல் வருவதற்காக ஒரு கைப்பிடி உளுந்து அதிகமாகப்  போட்டு ஊறவைத்து அரைப்பது வழக்கம். அந்த ஒரு கைப்பிடி உளுந்தை எங்கள் குடும்பத்தில் “போடுவான்என்பர்) சேர்த்து பல வகையாக மாற்றி விட்டோம்.

ஒலையுடன் மிதிலையிலிருந்து புறப்பட்டவர்கள் அயோத்தியைடைந்து  திருமண விஷயத்தை  தசரதனிடம்  சொல்ல அவனும் மிக்க மகிழ்ந்து அவர்களுக்கு பரிசும் கொடுத்து, மறுவோலையையும் கொடுத்து, இராமனின் திருமண செய்தியையையும் மக்களையும் சேனையையும் புறப்படச் சொல்லவும்  முரசரைவதற்கு ஏற்பாடு செய்தான். .
தசரத ன்னனின் ஆணைப் படி இரானின் கல்யா வைபவம் அறிவிக்கப்பட்டவுடன் அவனுடைய சேனைகள், மக்கள் அனைவரும் புறப்படுகின்றனர். அவன் இன்னும் அவையை விட்டே எழுந்திருக்கவில்லை. ஆனால் அவன் சேனையின் மிகுதியால் அது மிதிலை புறவாசாலையடைந்தது.
உழுந்து இட இடம் இல்லை உலக எங்கணும்
அழுந்திய உயிர்கு எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து படரும் சேனையின்
கொழுந்து போய் கொடி மதில் மிதிலை கூடிற்றே!

அயோத்தியினின்று மிதிலை வரையில் கூடிய ஒரு படர் கொடி போலும் எனும் குறிப்புத்தோன்ற “ படரும் சேனையின் கொழுந்து போய்என்றார். சீதாராம கல்யாத்தின் பொருட்டு நிகழும் எழுச்சியாதலின் “எள்ளிட இடமின்று என்னாது மங்ககரமாக உழுந்து(உளுந்து) இட இடமின்றி எனக் கூறினார்.


பாலகாண்டத்தினை நான்கு தொகுதிகளாகப் பிரிக்கலாம். அதில் கடைசியாக வருவது சந்திரசைலப்படலம், வரைக்காட்சிப் படலம், பூக்கொய்படலம், நீர்விளையாட்டுப்படலம், உண்டாட்டுப் படலம் முதலியவை. இந்த ஐந்துபடலங்களையும் எடுத்துவிட்டாலும் கூட காப்பியத்தில் பெரிதாக ஒன்றும் குறை பாடு வராது. ஆனாலும் இதை கம்பன் இவ்விடத்தில் சேர்த்திருக்கின்றான். காரணம்  தொலகாப்பிய விதியிருந்தாலும் சேர்த்ததனால் ட்டும் இது பெருங்காப்பியமாகிவிடவில்லை.
காப்பியத் தலைவனாகிய இராமன் முதல் ஐந்து படலங்களிலே வருவதேயில்லை. காப்பியத் தலைவன் புனல் விளையாட்டு முதலியவற்றில் ஈடுபட்டான் என சொல்ல முடியாது. பிற்காலத்தில் வரப்போகும் ஒன்றிற்காக(தண்டியலங்காரம் வகுத்த பெருங்காப்பிய இலக்கணம்)  இவற்றை வைத்தான் என்பதில் குறைபாடு வந்துவிடும்.

ஏதோ ஒரு கால ஒட்டத்தில் மக்கள் மனதில் கிளுகிளுப்பு உண்டாவதற்காக இந்த ஐந்து படலங்களியும் வைத்திருக்கின்றான் என்றே எண்ணத் தோன்றுகின்றது. அது மட்டுமில்லாமல் பல்லவராஜ்ஜியத்தில் மற்றது எப்படியிருந்தாலும் மக்கள் இன்ப வாழ்க்கை, இன்பவேட்டையில் இறங்கிவிட்டிருக்கின்றார்கள் என நினைக்கத் தோன்றுகின்றது. அதே நிலைதான் சோழ சாம்ராஜ்ஜியத்திலும் தொடர்கின்றது. தசரதன் பல மனைவியருடன் வாழ்ந்தான் எனக் கூரிய கவி செல்வந்தரில் சிலர் இப்படியும் தமிழகத்தில் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை காட்டவேண்டும் என்பதற்காகவே இப்படலங்களைப் படைத்தான் எனத் தோன்றுகின்றது. இம்மாதிரி குறிக்கோளில்லாமல் மக்கள் வாழந்ததைப் பார்த்த 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அப்பர்   மக்கள் தேனும் பாலும் பெருக்கெடுத்து ஒடுகின்ற வகையில்  சீரும் சிறப்புமாகத்தான் வாழ்கின்றனர். ஆனாலும், என்ன பயன். குறிக்கோள் இல்லாமல் வாழ்கின்றனர்என்பதைத்தான் தன் தேவராத்தில் “ குறிகோளிலாது கெட்டேன் “ என்று பாடுகின்றார். கம்பன் அதனால்தான் நாட்டுப் படலத்தின் முதல் பாடலிலியே ஆசலம் ஐம்பொறி வாளியும் புறம் செலா கோசலம் என்கின்றான்.
 வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிடப்
போகிலாது பிறங்கு முகத்தினான்
தேர்கிலான்; நெறி அந்தரில் சென்று ஒரு
மூரி மா மத யானையை முட்டினான்.
ஒரு மாதின் கச்சையணிந்த தனங்களில் வைத்த கண்களை பேர்ந்து வாங்கிடாது விளங்குகின்ற முகத்தினையுடைய ஒருவன், தான் செல்ல வேண்டிய வழியைக் காமுடியாதவனாகி, குருடர்களைப் போல் ஒரு வலிமையுள் பெரிய மத யானையின் மீது முட்டிக் கொண்டான்.


இன்னொரு இளைஞனோ ஒரு பெண்ணிடம் பேச வேண்டியே
தரங்க வார் குழல் தாமரைச் சீரடிக்
கருங் கண் வாள் உடையாளை ஓர் காளைதான்
நெருங்கு பூண் முலை நீள் வளைத் தோளினீர்
மருங்குல் எங்கு மறைத்து வைத்தீர் என்றான்.
அலைபோலச் சுருண்டு நீண்ட கூந்தலையும் தாமரை மலர் போன்ற சீறிய பாதங்களையும் வாட்போன்ற கருநிறமுள்ள கண்களையும் உடையவளான ஒரு மாதை ஓர் இளையவன் “நெருங்கிய ஆபரமணிந்த தனங்களையும், நீண்ட வளையளையும் அணிந்த தோள்களையும் உடையவரே! நீர் உங்களது இடையை எவ்விடத்து மறந்து வைத்திட்டீர்?என வினவினான்.

1000 வருடங்களுக்கு முன் இராஜராஜ சோழன் காலத்து ஐம்பொன் சிலைகள்தான் இந்தியர்களின் (ஆண்களுக்கும் பெண்களுக்குமான) அழகை அளவெடுத்து நிறுத்தியது. இன்று மிக புகழ் பெற்றிருக்கும் “ 0 சைஸ்க்கும் இதுவே மூலம். முன்பு கொடியிடைப் போல் கல்யாணத்திற்கு முன் இருக்கும் பெண்கள் பலர் கல்யாணம் ஆன பிகு, அதிலும் இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு, வாழ்க்கையே முடிந்துவிட்ட திருப்தியில் உடலை பேணுவதில் கவனமே செலுத்தாமல் இருந்தனர். இன்றோ உடலை மட்டுமே பேணுவதில் மிக கவனம் செலுத்தி வேறு எதைப் பற்றியும் அக்கரையின்றி இருக்கின்றனர் என்பதும் வருத்தப்பட வைக்கின்றது. 

தசரதனின் சேனை சந்திரசைல மலையடிவாரத்தில் தங்கி அடுத்த நாள் காலை சோணையாற்றின் கரையில் உள்ள சோலையை அடைந்தது.
பூ எலாம் கொய்து கொள்ள பொலிவு இல் துவள நோக்கி
“யாவை ஆம் கணவர் கண்ணுக்கு? அழகு இல் இவைஎன்று எண்ணி
கோவையும் வடமும் நாணும் குழைகளும் குழையப்பூட்டி
பாவையர் பனி மொன் கொம்பை நோக்கினர். பரிந்துநிற்பார்.
அங்கு மலர்களையெல்லாம் கொய்துவிட்டதினால் தங்கள் கணவர்கள் கண்ணுக்கு அப்பூங்கொடிகள் அழகில்லாமல் போய்விடுமே என்று வருந்தி தாங்கள் அணிந்திருந்த முத்து, பவம் இரத்தின ஆரத்தையும் பூங்கொடிகளுக்கு அணிவித்து அவற்றைப் பரிவுடன் நோக்கினர். தம் நலங்கருதாத் தகைமையர் அம்மகளிரென்பதும், கணவர் கண்ணுக்கு இனிமையாகத் தோன்றுவதே தமது கடமையென்று கொண்டுள்ளாரென்பதும் இங்கு பெறப்படும்.

மயில் போல் வருவான் மனம் காணிய காதல் மன்ன்
செயிர் தீர் மலர் காவின் ஓர் மாதவி சூழல் சேர
பயில்வாள் இறை பண்டு பிரிந்து அரியாள் பதைத்தாள்
உயிர் நாடி ஒல்கும் உடல் போல் அலமந்து உழந்தாள்.

ஒரு மன்னவன் தான் பிரிந்தால் தன் மனைவி எவ்வாறு வருத்தபடுவாள் என அறியும் பொருட்டு ஒரு மாதவி பந்தலில் மறைந்திருக்க, ஒரு போதும் கணவனை பிரிந்தரியாத அவள், உயிரை நாடித் திரியும் உடம்பு போல கணவனைத் தேடி உழன்றாள் 


செம்மாந்த தெங்குன் இளநீரை ஓர் செம்மல் நோக்கு
அம்மா இவை மங்கையர் கொங்கைகள் ஆகும்என்ன
‘எம்மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன?என்று ஓர் ஏழை
விம்மா வெதும்பா வெயரா முகம் வெய்துயிர்த்தாள்.
ஓங்கி வளர்ந்த தென்னை மரத்திலுள்ள இளநீர்க்காயை ஒரு தலைவன் நோக்கி ஆச்சர்யத்துடன்இவை மகளிரின் தனங்கள் போலத் தோன்றியுள்ளனஎனக் கூற அது கேட்ட பேதமைக் குணமுடைய பெண் ஒருத்தி “மங்கையர் கொங்கைஎன கணவன் பொதுப்பட பன்மையாகக் கூறியதால் வருந்தினாள்.

தைக்கின்ற வேல் நோக்கினள் தன் உயிர் அன்ன மன்னன்
மைக் கொண்ட கண்ணாள் எதிர் மாற்றவள் பேர் விளம்ப
மெய் கொண்ட நாணம் தலைக் கொண்டிட விம்மி மென் பூக்
கைக் கொண்டு மோந்தாள்; உயிர்புண்டு கரிந்து அன்றே!

ஒரு மன்னவன் தன் மனைவியினெதிர் மாற்றவள் பேரைச் சொல்லியழைத்தானாக அது கேட்ட அம்மங்கை பிறமாதர் முன் அவமானமடைந்ததனால் தலையிறக்கம் கொண்டு கண்ணீர் விட்டு, தன் நிலை பிறர்க்குத் தெரியாதிருக்க வேணுமென்ற கருத்தினால் தன் கையில் கொண்ட பூவை மோந்தவண்ணம் குனிந்து நிற், அவளிடைய உள்ளத்து வெதுப்பினால் மோந்த அம்மலர் கரிந்து போய்விட்டது எனக் கூறும் கவி, அம்மாது தன்னுயிரே இவன்என்னுமாறு பேரன்புள்ளவளாக இருக்கையில் அவன் அவ்வாறு இல்லாத காரணத்தால் அத்தலைவிக்கு மிக்க அவமானம் நேர்ந்தது என்று நேரிடையாக சொல்லாமல் புரியவைக்கின்றார்.

அந்த நாட்களில் பெண்கள் அவ்வளவு வெள்ளந்தியாகவா  இருந்திருப்பார்கள் என்ற நினைப்பே இனிக்கின்றது. இன்றைக்கு பெண்களிடம் ஆண்கள் படும் பாடு வடிவேலு பாஷையில் ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்ற ரேஞ்சில் தான் இருக்கின்றது. எனக்கும் என் மனைவிக்கும் வரும் சண்டையில் பெரும்பாலான விஷயங்கள் எங்களுக்கு துளிக் கூட சம்பந்தமில்லாதது. கல்யாணமான புதிதில் இவர்கள் காலனியில் தெலுங்குகாரர்கள் மாடியும் கீழுமாக வீடு கட்டியிருந்தனர். வீடு அழகாகவிருந்தது. என் தந்தை சிவில் எஞ்சினியர். என் அண்ணா அப்போதுதான் சாலிகிராமத்தில் வீடு கட்டியிருந்தான். பொதுவான என் ஈடுபாட்டாலும் வீடு கட்ட எவ்வளவு ஆகும் என்பது குறித்து எனக்கு சரியாகத் தெரியும் என்று நம்பிக்கை. அவர்கள் வீட்டை விட்டு கிளம்பும் போது 50-60 லட்சத்திலே நல்லாவே கட்டியிருக்கான் என்றேன். என் மனைவிக்கோ அவளுடைய அம்மா போய் அவர்கள் வீட்டை பார்த்துவிட்டு வந்து வர்ணித்ததிலிருந்து குறைந்தது ஒன்றறை கோடியாவது அதற்கு செலவழித்திருப்பார்களோ என்று அபிப்ராயம். அண்ணாநகர் போகும் வரைக்கும் போய் மன்னி வீட்டிலும் தொடர்ந்தது எங்கள் வாக்குவாதம்.
உங்களுக்கு என்னத் தெரியும். வீடு முழுக்க மார்பிள் போட்டிருக்கா
மார்பிள் விக்கற ரெட் சன் மார்பிள் என்னுடைய கிளையன்ட். வேணா அவன் கிட்டேக் கூட்டிண்டு போறேன். நீயே கேட்டுப்பார். அவன் கிட்டேயிருக்கிற காஸ்ட்லியான மார்பிள் 1800 சதுரடிக்கு எவ்வளவு ஆகும்னு. சும்மா ஒண்ணும் தெரியாமா பேசவேண்டியது
நானா ஒண்ணும் தெரியாம பேசறேன். உங்களுக்குத் தான் ஒண்ணும் தெரியாது. அவன் வீட்டுலே எல்லா பெட்ரூம்லேயும் பால்ஸ் சீலிங் போட்டு ஏசி போட்டிருக்கா
நான் எல்லாத்தையும் மனசுல  வெச்சிண்டுதான் என்னுடைய காஸ்டிங்கை சொன்னேன்
நீங்கள்ளாம் எப்படியோ ஒண்ணும் தெரியாமலேயே சீ ஏ பாஸ் பண்ணிட்டீங்க வீட்டில்  நுழைந்ததும் இதே ரீதியில் எங்களுடைய வாக்கு வாதம் தொடர்ந்தது. நான் என் அப்பாவைக் கேட்கின்றேன் என்றதற்கு அவருக்கு சென்னை பத்தி ஒண்ணும் தெரியாது என்றாள். எனக்கோ பயங்கர கோபம். பிறகு மன்னி யார் எவ்வளவு செலவழிச்சி கட்டினாலும் உங்களுக்கு என்ன? உங்களுக்காக் கொடுக்க போறான். பேசாம வாயை மூடிண்டு டிபன் சாப்பிடுங்க ஆனாலும் அடுத்த இரண்டு நாளும் எங்கள் வாக்குவாதம் தொடர்ந்தது. எனக்கோ அவள் போய் பார்க்கமலேயே அவள் அம்மா சொல்வதை மட்டும் வைத்து என்னிடம் சண்டையிடுகின்றாளே என்ற வருத்தம். என் அப்பாவைக் கேட்டதற்கோ நான் சொன்னதை விட 5 லக்ஷ்ஷம் கம்மியாகத்தான் சொன்னார்.
யாழ் ஒக்கும் சொல் பொன் அனியாள் ஓர் இகல் மன்னன்
தாழத் தாழாள்; தாழ்ந்த மனத்தாள் தளர்கின்றாள்
ஆழ்ந்து உள்ளும் கள்ளம் நினைப்பாள்; அவன் நிற்கும்
சூழற்கே தன் கிள்ளையை ஏவித் தொடர்வாளும்

கணவன் தன்னை வணங்கி நிற்கவும் ஊடலினால் ஒருத்தி அவனை மதியாதிருந்தாள். முகம் பெறாமையால் அவன் அவ்விடத்தினின்று நீங்கிச் சென்றான். அவள் ஒருகால் வேறொரு மங்கையைத் தன் கணவன் சேர்ந்துவிடுவானோ?என்ற எண்ணத்தையும் கொண்டு “தானே கணவனை நாடிச் செல்வது என்றாள் அது தன் தலைமைக்கு இழுக்காம்என்ற கருத்தினால் முதலில் தன் கிளியை அவனுள்ளவிடத்துக்குப் போக்கி, அக்கிள்ளையைத் தேடிச் செல்பவள்போல அத்தலைவி கணவனை நாடிச் சென்றாள். கணவன் மீது ஐயங்கொண்டனளென்பதை “ஆழ்த்துள்ளுங்கள்ள நினைப்பால்என்றார். பாடபேதமாக “ஆழத்துள்ளும் கள்ளம் நினைப்பாள்என்றும் உள்ளது. அதற்கு வை மு கோ  கணவனை நாடிச் செல்வதென்று தான் கொண்ட கருத்து முகக்குறிப்பு முதலிய எவ்வகையாலும் வெளிப்படாதபடி தன் நெஞ்சிற்குள்ளேயே கிடக்குமாறு நினைப்பவளென்று கருத்து கொள்ளுதலும் உண்டு.
காக துண்ட நறும் கலவை களி
ஆகம் உண்டது அடங்கலும் நீங்கலால்
பாகு அடைந் பனிக் கனி வாய்ச்சியர்
வேகடம் செய் ணி என மின்னினார்
உடம்பிர் பூசிய அகிலோடுக் கூடிய நறுமணமுள்ள சந்தன சேறு யாவும் நீரில் விளையாடிதனால் அழிந்திட்டதனால் பாகின் தன்மையுள்ள இன் சொற்கள் பொருந்திய குளிர்ந்த கோவைப்பழம் போன்ற வாயையுடைய மகளிர் சாணை பிடித்த இரத்தினம் போல விளங்கினர். பாகடர்த்த என்ற பாடத்திற்கு பாகைப்பகைத்த இன் சொல்லுடைய மாதர் என்றும் பாகடர்ந்த என்ற பாடத்திற்கு பாகின் இனிமை மிகுந்த என்றும் பொருள் கூறுவர்.


களித்த கண் மதர்ப்ப ஆங்கு ஓர் கனங் குழை கள்ளின் உள்ளால்
வெளிப்படுகின்ற காட்சி வெண் மதி நிழலை நோக்கி
‘அளித்தனென் அபயம்; வானத்து அரவினை அஞ்சி நீ வந்து
ஒளித்தனை; அஞ்சல்! என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள்.

ஒருத்தி கள்ளுண்ட மயக்கத்தாற் சாடியிளுள்ள கள்ளினுள்ளே பிரதி பிம்பமாகத் தோன்றும் சந்திரனை உண்மை சந்திரனே இராகுவுக்கு அஞ்சி அங்கு ஒளிந்திருப்பதாகக் கொண்டு அபயமளித்து சில உணர்த்தலானாள். உணர்த்துகின்றாளென்ற சொல்லினாற்றலால், பிறருக்கு இன்னாதவற்றை ஒருவன் முற்பகலிர் செய்தால் அவ்வினைப் பயன் பிற்பகலில் தானே தீப்பயனை விளைக்கு மென்பதையும், இன்னா செய்யப்பட்டவரிட்த்துச் சென்று குறையிரக்குங்காலமும் நேர்தல் கூடுமென்பதை உணராமல், யான் கணவனை பிரிந்த காலத்திலும் ஊடிய காலத்திலும் நீ வெவ்விய நிலாவை என் மீது வீசி வருந்தினாயன்றோ! அங்ஙனம் செய்த நீ வானத்து அரவுக்கு அஞ்சி எந்து மதுஜாடியுள்ளே பதுங்கும் காலமும் வந்ததல்லவா? இனியாவது நீ முன்போற் செய்யாது நல்லொழுக்கத்தை மேற் கொள்க என்று அறிவுறுத்தினாள் என்ற கருத்து தோன்றுமென்பார்.

வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி வேந்தன் வந்து
எதிர்த்தலும் தன் மனம் எழுந்து முன் செல,
மதிமுகம் கதுமென வணங்கினாள்; அது
புதுமை ஆதலின் அவற்கு அச்சம் பூத்ததே.

தினம் தின்ம் நடக்காத புதுமையாக மதுவருந்திய காதலி வணங்கவும் அதனால் அந்த வணக்கம் எத்தனை கோபத்தையடக்கியதோ என்று தலைவன் வருந்துவதாக கவி கூறுவது சாலப் பொருத்தமே.

புள் உறை கமல வாவிப் பொரு கயல் வெருவி ஓட
வள் உறை கழித்த வாள்போல் வசி உற வயங்கு கண்ணாள்
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள) ஞ்சை அன்னாள்
“உள் உறை அன்பன் உண்ணான் எஅனஉன்னி நறவை உண்ணாள்

நீர்ப் பறவைகள் வாழ்கின்ற தாமரைத் தடாகத்திலுள்ள ஒன்றோடொன்று மோதுகின்ற கயல்மீன்கள் ஒப்பாகாமல் தாம் நிலைகெட்டு ஓடும்படி, தோலாற்செய்த உறையினின்றும் உருவியெடுத்த வாட்படை போலக் கூர்மைமிக விளங்குகின்ற கண்களையுடையவளும், தேன் தங்கிய மலயணிந்த மெல்லிய கூந்தலையுடையவளுமாகிய ஒருத்தி தனது மனத்தினுள் எப்போதும் தங்குகின்ற தனது காதலன் மதுவை உண்ணானென்ற காரணத்தினால் தானும் மதுப்பருக எண்ணாதவளாயினாள்.
 
கலாசாராக் காவலர்களாக காட்டிக் கொள்ள முயலும் பா மா கா ராம்தாஸ், திருமா வளவன் கர்நாடகாவில் அனுமன் சேனா இவர்ள் எல்லாம் இதைப் படித்தால் என் நினைப்பார்கள். ஆணும் பெண்ணும் ஒன்றாக அமர்ந்து மதுவருந்திகின்றார்கள். கூடி களைக்கின்றார்கள். எல்லாமே ஒரு நிதானத்தில் ஒரு அளவில் இருந்தால் வறில்லை என்பது அன்றைய நிலை. ஏதோ ஐ டி வந்துதான் நம் கலாச்சார சீரழிவு ஏற்பட்டது என்பது எத்துணை அபத்தம். சமுகம் என்பது அசைவில்லாத மாற்றமில்லாத ஒரு விழுமியத்தை உள்ளடக்கியது அல்ல. ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டேயிருப்பது தக்கான புதிய விழுமியத்தை தேடிக் கொண்டேயிருப்பது.

Friday, April 20, 2012

திருமண உறுதியழைப்பிதழ்

நாங்கள் சீஏ பைனல் பரிட்சை எழுதிவிட்டு உட்கார்ந்திருக்கும் போதே எங்கள் நண்பன் இராஜேந்திர குமாருக்கு திருமண நிச்சயமாகிவிட்டது என்றும் நிச்சயதார்த்தம் திருமிழீசையில் என்றும் பத்திரிகையை வீட்டிற்கு அனுப்புவதாகவும் கூறியிருந்தான். இவனுக்கு சொந்த ஊர் குடியாத்தம். நாங்கள் வைத்த பெயர் “குடி. குடியாத்தத்தின் முதல் இரண்டு எழுத்து. செங்குந்தர் முதலியார். நல்ல பணக்காரக் குடும்பம். லயோலா கல்லூரியின் ஹாஸ்டலில் தங்கி சீஏ படித்துக் கொண்டிருந்தான். இவன் தயவால் அவ்வப்போது லயோலா ஹாஸ்டலின் அருமையான ஸ்பெஷல் சாப்பாடு. எம் காம் முதல் வகுப்பில் பாஸ் செய்துவிட்டு சீஏ சேர்ந்தவன். இவன் தம்பி உதயகுமார் பிஸ்ஸி பாட்டனி படித்து சீஏ சேர்ந்து முதல் தடவையிலேயே இண்டர் மற்றும் பைனல் பாஸ் செய்தவன். அவன் பிராக்டிஸ் திநகரில் ஆரம்பித்த போது உடையாரின் நெருங்கிய நண்பர் எத்திராஜ் முதலியார் அவர்கள் வந்திருந்தார்.

“திருமண உறுதியழைப்பிதழ்என்ற மஞ்சள் பத்திரிகையும் வந்தது. நான் நண்பன் ஜெவியிடம் நிச்சயதார்த்தம் என்றுதானே சொல்லியிருந்தான். அது என்ன திருமண உறுதியழைப்பிதழ் என்றதற்கு ஒருவேளை பத்திரிக்கை மாற்றி கொள்வார்களோ என்னவோ. நாளைக்கு காலைலே 6.30 மணிக்கு வரேன். ரெடியாயிரு. போய்ட்டு வந்துவிடலாம்.நானும் குளித்து அவனுடன், அப்போதுதான் அவன் வாங்கியிருந்த இண்ட்ஸுசுகி 100 சிசி மோட்டர் சைக்கிளில் திருமிழீசை நோக்கிப் பயணித்தோம். ஜெ வி சொன்ன மாதிரியே பத்திரிக்கை மாற்றிக் கொண்டனர். பெண்ணைக் கண்ணில் கூட காட்டவில்லை. நல்ல  சுவையான சாப்பாடு. தூங்கி எழுந்து சென்னை பயணம். வண்டி ஓட்டறியா? நான் பின்னாடி உக்காந்துண்டு பார்த்துக்கிறேன். லைசன்ஸ் இல்லை. ஆனாலும் சரி என்று சொல்லிவிட்டு ஒட்ட ஆரம்பித்தேன். அவ்வளவு சிரமமாக இல்லையென்றாலும் கியர் மாற்றும் போது சில சமயம் வண்டி நின்று விட்டது. நேஷனல் ஹைவே வருவதற்குள நன்றாகவே வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டுவிட்டேன். பிறகு இதே வண்டியை, பிராக்டிஸ் ஆரம்பித்த போது வாங்கினேன்.

என்னுடைய நிச்சயதார்த்தம் ஜூன் 12 ஆம் தேதி. பெண்ணையும் அழைத்து வந்திருந்தனர். நாங்கள் அப்போதிருந்த அண்ணாநகர் வீட்டில் நடந்தது. எங்களுடைய நெருங்கிய சொந்தங்கள் அத்தைகள், சித்திகள், சித்தப்பாக்கள், மாமாக்கள் மற்றும் நெருங்கிய நணபர்கள் வந்திருந்தனர். அவர்கள் வீட்டிலிருந்து ஒரு 25 பேர். தாத்தா, பாட்டி, பெரிய தாத்தா பாட்டி, மாமாக்கள் சித்தப்பாக்கள் அத்தைகள் என்று. திடீடிரென்று எங்கள் இருவரையும் அருகருகில் உட்காரச் சொன்னார் சாஸ்திரிகள். திருமணத்திற்கு முன் அப்படி சேர்ந்து உட்காரக்கூடாது என்பதனால் மனைவியின் தாத்தா நடுவில் உட்கார்ந்தார். மனைவியின் சொந்த தம்பி வரமுடியவில்லை.   அவள் சித்தப்பா மகன் எனக்கு தங்க சங்கிலி அணிவித்தான். 

அவர்கள் வீட்டில் பெரியவர்கள் ரொம்ப ஆச்சாரம் பார்ப்பவர்கள் யாரும் ஒட்டலிருந்து வரவழைத்தால் சாப்பிட மாட்டார்கள் என்பதனால் வீட்டிலேயே அனைவருக்கும் டிபன் ஏற்பாடாயிற்று. இட்லி, வடை, பொங்கல் ற்றும் கேசரி என்று. எங்கள் வீட்டில் நாங்கள் யாரும் சாப்பிட உட்காரவில்லை. அவர்கள் சாப்பிட்டு விட்டுப் போன பிறகு பார்த்துக் கொள்ளாலாம். இல்லையென்றால் சூப்பர் ஸ்டார் ஒட்டலிலுருந்து வரவழைத்துக் கொண்டு சாப்பிடலாம் என்று முடிவு செய்திருந்தோம்.

அவர்கள் எல்லாம் சாப்பிட்டு விட்டு கிளம்புவதற்கு முன்பே தங்கவேலுவை (பெரியண்ணாவின் வண்டி ஓட்டுனர்) அனுப்பி இட்லி வடை நிறைய சட்னி சாம்பார் எல்லாம் வாங்கிவரச் சொல்லி அனுப்பிருந்தோம்,. அர்கள் கிளம்பிய பிறகு, தங்கவேலு வாங்கி வந்த டிபனை நாங்கள் சாப்பிட்டோம்.


விசுவாமித்திரன் இராம இலக்குவனனுடன் ஜனகனின் வேள்விச்சாலையை அடைந்தான். அங்கு அப்போதுதான் வேள்வி முடித்து வீற்றிருந்த ஜனகன், முனிவனை நோக்கி யாரிவர்கள்.
இருந்த குலக் குமரர்தமை. இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி.
அருந் தவனை அடி வணங்கி. யாரை இவர்? உரைத்திடுமின். அடிகள்! என்ன.
விருந்தினர்கள்; நின்னுடைய வேள்வி    காணிய வந்தார்; வில்லும் காண்பார்;பெருந் தகைமைத் தயரதன் தன் புதல்வர் என. அவர் தகைமை பேசலுற்றான்;

பொதுவாக கல்யாங்களில் திருமமாகாத பெண்ணையோ மகனையோ உடையவர்கள் வந்திருக்கின்றவர்களை கண்ணாலேயே பார்த்து இவன்(ள்) பொருத்தமாக இருக்குமா என்று பார்ப்பது வழக்கம். பதினைந்து வருடங்களுக்கு முன்  எஙகள் சமூகத்தில் அமெரிக்கா மோகம் தலைவிரித்து ஆடியது. மீதி வெளி நாடுகள் எல்லாம் துச்சம். நான் எப்போதுமே நல்ல வேளை.. இவர்கள் பார்வை மேற்கு நோக்கியே இருக்கட்டும் என்றே நினைத்துக் கொள்வேன். உறவினர் கல்யாம் ஒன்றில் என் மாமனார்அதோ பார் அமெரிக்கா போறதுஎன அமெரிக்காவிலிருந்த வந்திருந்த ஒரு கலயாமாகாத பையனைப் பற்றி கிண்டலாகக் கூறிக் கொண்டிருந்தார்.

ஜனகனும் அரசகுமாரர்கள் இருவரையும் “இரு கண்ணின் முகந்து அழகு பருநோக்கி பார்க்கின்றான் இதில் நோக்கி என்ற வார்த்தை மிகவும் முக்கியமானது. இரானின் அழகு அப்படி பார்ப்பவரை வசீகரப் படுத்துவது என்று வைத்துக் கொண்டால் பார்த்து என்ற சொல்லை உபயோகித்திருக்கலாம். ஜனகனும் பெண்ணை பெற்றவன்தான். ஆனால் சீதையை திருமம் செய்ய வேண்டுமானால் வில் உடைக்கப் பட வேண்டும். குமரன பார்ப்பதற்கு மனம் கவருபவனாகவிருந்தாலும் வில் உடைக்கும் வலிமை அவன் தோள்களுக்கு உண்டா என அறியவே கவி அவன் தோள்களை கண்டதை குறிப்பதற்கே நோக்கி என்ற வார்த்தையைப் பயன் படுத்துகின்றான். விசுவாமித்திரனும் :விருந்தினர் வேள்வி கா வந்தனர். உன் வில்லையும் காண்பார்என்று ஜனகனின் வயிற்றில் பால் வார்ப்பது போல் சொல்லிவிட்டு உடனேயே “ தசரதன் புதல்வர் இவர்: என்கின்றான். இது கேட்ட ஜனகன் மனதில் இவனும் அப்பாவைப் போல் அறுபதினாயிரம் மனைவியருடன் இருப்பானோ,. போயும் போயும் இப்படிப் பட்ட இடத்திலா சம்பந்தம் செய்ய வேண்டும் என்ற சிந்தனைக் கட்டாயம் ஓடியிருக்க வேண்டும். பெண்ணைப் பெற்றவர்கள் அப்படி நினைப்பதில் எந்த தவறுமில்லை. இதை நன்றா உர்ந்த விசுவாமித்திரன் இரகு குப் பெருமையெல்லாம் கூறி

திறையோடும் அரசு இறஞ்சும் செறி கழற் கால் தசரதன் ஆம்.
பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரேகாண்-
உறை ஓடும் நெடு வேலாய்! உபநயன விதி முடித்து.
மறை ஓதுவித்து. இவரை வளர்த்தவன் வசிச்சன் காண். என்கின்றான்.

இவர்கள் தசரதனின் மனைவிகளுக்கு வேள்வியில் வந்த பாயாசத்தினால் பிறந்தவர்கள், இறைவன் அருளால். அதனால் தசரதன் புத்தியிருக்கும் என எண்ண வேண்டாம்.. அது மட்டுமின்றி இவனை வளர்த்தவன் வசிட்டன். ஆகவே கவலைப் படாதே என்று ஜனகனின் வயிற்றில் மீண்டும் ஒரு முறை பாலை வார்க்கின்றான் விசுவாமித்திரன். பிறகு இராமன் வில்லாற்றலையும் வேள்விகாத்த விதத்தையும்  தாடகையையழித்தைப் பற்றி மிக அழகாக அதே சயம் இரத்தின சுருக்கமாகக் கூறுவதிலிலுள் நயம் வியக்கத்தக்கது.

அலை உருவக் கடல் உருவத்து  ஆண்தகைதன் நீண்டு உயர்ந்த
நிலை உருவப் புய வலியை  நீ உருவ நோக்கு ஐயா!
உலை உருவக் கனல் உமிழ் கண்  தாடகைதன் உரம் உருவி.
மலை உருவி. மரம் உருவி. மண் உருவிற்று. ஒரு வாளி!

அதேபோல் மிக திறமையாக இவன் அரக்கர்களை கொன்று என் வேள்வி காத்தான். இவனுக்கு நான் தவத்தினால் பெற்ற அரிய படைக்கலங்களை உவந்து  கொடுத்தேன். அவை இப்போது இவனுக்கு மிக்க அன்புடன் ஏவல் புரிகின்ற. இவனுடைய கால் பாதம் பட்ட மாத்திரத்ரத்திலேயே அகலிகை சாபவிமோசனமடைந்ந்தாள். அப்பேற்பட்ட கீர்த்தி மிக்க வீரன் இவ்வள்ளல் எ ஸ்ரீராமனின் பெருமையைக் கூறினான் முனி.

இவ்வாறு சிறப்பான இராமனின் வரலாற்றைக் கேட்ட ஜனகன் இவன் வில்லை வளைத்தால் என்னை துயர் கடலிலிருந்து காப்பாற்றுவான் என் மகளும் தவப்பேற்றைப் பெற்றவளாவாள்.


மாற்றம் யாது உரைப்பது? மாய விற்கு நான்
தோற்றனென் என மனம் துளங்குகின்றதால்;நோற்றனள் நங்கையும்;    நொய்தின் ஐயன் வில்
ஏற்றுமேல். இடர்க் கடல்  ஏற்றும்என்றனன்.

உடனேயே ஏவலர்களை அழைக்க அவர்களும் ஒடினர்யுத சாலைக்கு.
என்றனன். ஏன்று. தன்    எதிர் நின்றாரை. அக்
குன்று உறழ் வரி சிலை    கொணர்மின். ஈண்டுஎன.
நன்றுஎன வணங்கினர்.    நால்வர் ஓடினர்;பொன் திணி கார்முகச்    சாலை புக்கனர்.
அந்த மாபெரும் வில்லை அறுபதினாயிரம் பேர் இழுத்து வந்தனர்.. அந்த வில்லைக் கண்ட நகர மாந்தர்கள் இம்மன்னவனுக்கு புத்திக் கெட்டுப் போய்விட்டது. இல்லையேல் இப்படியா ஒரு நிபந்தனை விதைப்பான் மகளின் திருமத்திற்கு என்றும் பல்வாறாகவும் கூறுகின்றனர்.
என். இது கொணர்கஎன.    இயம்பினான்?’ என்பார்;
மன்னவர் உளர்கொலோ    மதி கெட்டார்?’ என்பார்;
முன்னை ஊழ் வினையினால்    முடிக்கில் ஆம்என்பார்;கன்னியும் இச் சிலை  காணுமோ?’ என்பார்.
சதானந்த முனிவன் வில்லின் பெருமையையும் சீதை பிறந்து வளர்ந்ததைப் பற்றியும் அவளுடைய அழகையும் குணத்தையும் கூறி, பார்த்த மன்னர்கள் எல்லோருமே காதல் கொண்டவர்களாய் வில்லை எடுத்து நாணேன்ற முடியாத காரணத்தால் ஒன்று சேர்ந்து யுத்தம் செய்ததையும் கூறினான்,

அன்று முதல். இன்று அளவும்.    ஆரும் இந்தச் சிலை அருகு
சென்றும் இலர்; போய் ஒளித்த    தேர் வேந்தர் திரிந்தும் இலர்;
என்றும்இனி மணமும்இலை    என்று இருந்தேம்; இவன் ஏற்றின்.
நன்று; மலர்க் குழல் சீதை    நலம் பழுது ஆகாதுஎன்றான்.இன்றுவரை யாரும் வில்லை நாணேற்றவில்லை. இவ்விராமன் ஏற்றுவானேயாயின் க்க நல்லது. மலர் சூடிய கூந்தலையுடைய சீதையின் கன்னிமை அழகும் வீணாகாது என்றான்.

நினைந்த முனி பகர்ந்த எலாம்    நெறி உன்னி. அறிவனும் தன்
புனைந்த சடை முடி துளக்கி.    போர் ஏற்றின் முகம் பார்த்தான்
வனைந்தனைய திருமேனி    வள்ளலும். அம் மா தவத்தோன்
நினைந்த எலாம் நினைந்து. அந்த    நெடுஞ் சிலையை நோக்கினான்.
நினைந்து முனி பகர்ந்த எலாம் நெறியுன்னி’ என்றது தெய்வ இயல்பு வாய்ந்தவள் ஜனகன் மகள் என்பதனையும் அவளை அடைவதன் அருமைகளையும்இவன் ஏற்றின் நன்றுஎன்று சதானந்தர்  கூறியதையும்  உட்கொண்டு.  வனைந்தனைய வனைந்தது அனைய.   அல்லது   வனைந்தால் அனைய   எனலாம்.  வில்லை நோக்கியது  - இந்த வில்லை எந்த இடத்தில் பற்றி   எடுக்கலாம் என்ற பார்வையில்.

இவ்வில்லோ மிக வலியது. இருவருமே ஒருவருக்கு ஒருவர் என்றே படைக்ப்ட்டது போலிருக்கின்றனர். இவன் வில்லை வளைக்காவிட்டால் இருவருக்குமே வாழ்வில்லையே என்று வருந்திய மாந்தர்
வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால்
கொள்என முன்பு கொடுப்பதை அல்லால.
வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து. இப்
பிள்ளை முன் இட்டது பேதைமைஎன்பார்.
இந்த அரசனின் மதிகெட்டுப் போய்விட்டது. இவனைப் பிடித்திருகிறது என்றால் மகளை திருமம் செய்து கொடுக்கவேண்டும். அதை விடுத்து இந்த வில்லை இவன் முன் எடுத்து வைத்திருக்கின்றான். என்ன பேதமை இது    என பலவாறு புலம்பினர்.

இராமன் பொன் நாகமும். நாகமும். நாண நடந்தான். இராமன்     நடக்கும்போது  அவனது    பெருந்தோற்றம்   கண்டு மேருமலையும்.   இவனைப்  போல  மிடுக்கோடு  நடக்க    முடியாமை பற்றியும் யானையும்  நாணின  என்பது.    நாகம்-  மலை. யானை என இருபொருளில் வரும்.


ஆடக மால் வரை அன்னதுதன்னை.
தேட அரு மா மணி. சீதை எனும் பொன்
சூடக வால் வளை. சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இதுஎன்ன. எடுத்தான்.
சீதைக்கு தான இடப் போகும் மாலை என்பது போல் எவ்வித சிரமமுமில்லாமல் வில்லை கையில் எடுத்தான்.

என்னுடைய நிச்சதார்த்தத்தின் போது திடிரென்று சாஸ்திரிகல் இருவரும் மனையில் உட்காரவேண்டும் என்று சொல்லப் போக, மாலை ஏதும் இல்லாத காரணத்தால் டிரைவர் தங்கவேலுவை அனுப்பி அமைந்தகரையிலிருந்து மாலை வாங்கிவர சொன்னோம். அவனும் ஏதோ மாலை வாங்கி வந்தான். ஒருவருடம் கழித்து என் மனைவி ஏதோ கோபத்தில் “உங்க வீட்டு லக்ஷ்ணம் தான் தெரியுமே. நிச்சயதார்தத்துக்கு அரளி பூ மலை போட்டவதான் நீங்க. எங்க வீட்டிலே சொல்லியிருந்தா அழகா ஜம்முனு ரோஜா மாலை இல்லை மல்லிகை மாலை போட்டிருப்போம். எனக்கு ஆரம்பமே சரில்லை “அரளி மாலைக்கு அப்படி என்ன கேடு? அது செத்தவாளுக்கு போடுற மாலை  நான் எப்படியும் பலி ஆடுகள்தானேன்னு சிம்பாலிக்கா சொல்வதற்காக வாங்கி வந்ததானோ என்னவோ? இதில எல்லாம் என்ன இருக்கு.  ஏன் யாரவது கரெக்டா மல்லி இல்லை ரோஜாப்பூ மாலை வேணும்ணு  சொல்லியிருந்தா கரெக்டாக வாங்கிண்டு வந்திருப்போமே?. ஏன்  யாருமே சொல்லலை?. இதோ விளையாட்டு போல 22 வருடம் ஆகி விட்டது எந்த பிரச்சினையுமில்லாமல்.

தடுத்து இமையாமல் இருந்தவர். தாளில்
மடுத்ததும். நாண் நுதி வைத்ததும். நோக்கார்;கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்.

கண்     இமை   கொட்டினால்    இராமன்     வில்லையெடுத்து
நாணேற்றுவதைக்  காணாமற்போய் விடுவோம்  என்று கண் கொட்டாது
பார்த்தவர்களும் அந்த இராமன் வில்லை எடுத்ததையும்.  அது  முறிந்த
ஓசையையும்  கேட்டனரே  அல்லாமல் அதை   நாணேற்றியதைக் காண
முடியாதவராயினர் என்பது. இற்றது - இறுதலால் தோன்றிய ஒலி 
இற்றதனால் தோன்றிய ஓசை விண்.   மண். பாதலம் என்னும் மூவுலகத்தார்க்கும் அச்சம் விளைத்தது என்பது.

தயரதன் புதல்வன்என்பார்;    ‘தாமரைக் கண்ணன்என்பார்;
புயல் இவன் மேனிஎன்பார்;     ‘பூவையே பொருவும்என்பார்;
மயல் உடைத்து உலகம்என்பார்;    ‘மானிடன் அல்லன்என்பார்;
கயல் பொரு கடலுள் வைகும்    கடவுளே காணும்என்பார். இவன் சாதாரண மனிதனில்லை. அறுபதானாயிரம் பேர் தூக்கிவந்த வில்லை நாணேற்றி இறுப்பதற்கு இவன் கடவுளேயாகும் என்கின்றனர் மக்கள்.

நம்பியைக் காண நங்கைக்கு    ஆயிரம் நயனம் வேண்டும்;கொம்பினைக் காணும்தோறும்.    குரிசிற்கும் அன்னதே ஆம்;தம்பியைக் காண்மின்!என்பார்;    ‘தவம் உடைத்து உலகம்என்பார்;
இம்பர். இந் நகரில் தந்த    முனிவனை இறைஞ்சும்என்பார்.
வில்லினைப் பார்த்த மக்கள் விசுவமித்திர் முனுவனுக்கு அறிவில்லை ; இந்த சிறுவனை போய் வெட்கமில்லாமல் வில்லிற்கு நாணேற்றுக் கூறுகின்றானே எனக் கூறிய மக்களே இப்போது அம்முனிவனை வணங்கவேண்டும் இவனால்தானே சீதைக்கு திருமணம் கழிந்தது எக் கூறுவது மக்களின் இயல்பு எப்படி என்று  எடுத்துக் காட்டுவது.



வில்லீற்ற(ஓசை பாதளா லோகம் வரைக் கேட்டாலும் ஒருத்தி மட்டும் இன்னும் தன் கவலையிலே இருந்தாள். சீதைக்குக் கேட்கவில்லை. அப்போது மண்டபத்தில் இருந்து ஒடி வந்த தோழி ஒருத்தி சிதையை கண்டதும்  வந்து அடி வணங்கிலள்; வழங்கும் ஓதையள்;அந்தம் இல் உவகையள். ஆடிப் பாடினள்;
சிந்தையுள் மகிழ்ச்சியும். புகுந்த செய்தியும்.
சுந்தரி! சொல்என. தொழுது சொல்லுவாள்;

அவள்
இராமன்என்பது பெயர்;    இளைய கோவொடும்.
பராவ அரு முனியொடும்    பதி வந்து எய்தினான்;
வில்  அதனை. ஆண்தகை.நாண் இனிது ஏற்றினான்;
   
நடுங்கிற்று உம்பரே!

தோழி வருகிறாள். மகிழ்ச்சியான செய்தியின்பால்t?) உள்ளம் மகிழ்ந்தவள் சீதையைக் கண்டதும் வங்கவுமில்லை. வாழ்த்துக்களை கூறவுமில்லை. _ சீதையே உன் மனமகிழ்ச்சிக்குக் காரமா செய்தியைச் சொல் என்றபோது அவள் சொல்லும் விதம் சொன்ன சொற்கள் சொல்லிய முறை எல்லாமே மனவியலில் மிக்க தேர்ந்தவர்களால் மட்டுமே முடியக் கூடியவை யாகும். கம்பனின் சிறப்பு சர்வசாதரரணமானவர்களின் வாயிலாக வெளிப்படுமிடங்களில் இதுவும் ஒன்று. சீதை ஏற்கெனவே காதல் வயப்பட்டு காம வேதனையில் வீழ்ந்து வில் முறித்த ஓசைக் கூட கேட்காமல் இருக்கின்றாள். காதலில் வீழத்தியவன் யார் என்பது கூட அவளுக்குத் தெரியாது. வில்லை முறித்த ஆணை அவள் திரும்ணம் செய்ய வேண்டும். தோழியின் வாக்காக கம்பன் முதலில் இராமன் எனபவன் அவன் பெயர். நேற்றுதான் முனிவனோடும், தம்பியோடும் நம் நகர் வந்தான். வில்லை நாணேற்றியதுமில்லாமல் முறித்தே விட்டான் என்று ஒன்றன் பின் ஒன்றாக அழகாக சீதையின் சந்தேகத்தை போக்கும் வழியில் கூறுவது மிகவும் இரசிக்கத் தக்க ஒன்று. கம்பராமாயணத்தில் பலவிடங்களில் உலவியல் ரீதியாகத்தான் விடை கான முடியும் என்று கல்வியிற் பெரியவர் திரு. குருநாதன் கூறியது போன்றவிடங்களில் இதுவும் ஒன்று.
கோமுனியுடன் வரு கொண்டல்என்ற பின்.
தாமரைக் கண்ணினான்என்ற தன்மையால்.
ஆம்; அவனேகொல்என்று. ஐயம் நீங்கினாள்;வாம மேகலையினுள் வளர்ந்தது. அல்குலே!

இல்லையே நுசுப்புஎன்பார்.    ‘உண்டு. உண்டுஎன்னவும்.
மெல்லியல். முலைகளும்.    விம்ம விம்முவாள்;
சொல்லிய குறியின். அத்    தோன்றலே அவன்;அல்லனேல். இறப்பென்என்று.    அகத்துள் உன்னினாள்.

இவள் சொல்வதைப் பார்த்தால் தன் மனதை பறிகொடுத்த வீனைப் போல்தான் இருக்கின்றது அப்படி ஒரு வே இல்லையெனில் நான் உயிரை விட்டுவிடுவேன் என மனதில் தீர்மானித்தாள் சீதை. இராமன் அவ்வாறு நினைத்த மாதிரி கவி சொல்லவில்லை. சதானந்தன் கூறிய வில்லின் பெருமையையும் ஜனகனின் மகள் சீதையின் அழகையும் அவளை அந்த வில்லை நாணேற்றினால் ) மம் முடிக்கலாம் என்பதைமயும் எண்ணித்தான் அவன் வில்லிடம் சென்றான்.

சீதைக்கும் தெரியும் இராமன் அரசகுமாரன்ம் என்பது. அதே போல் இராமனும் அறிவான் சீதை ஒர் அரசிளங்குமரியாகத்தான் இருக்க வேண்டுமென்று. சீதைக்கு ஒரு தெளிவு பிறக்கின்றது தோழி கூறிய முறையினால். இராமனுக்கு தான் மம் புரியப் போவது தான் காதலித்த அதே பெண்தான் என்பது இன்னமும் தெரியாது. ஜனகன் முனிவனை வினவி, தசரதனுக்கு ஒலையனுப்பினான்.

எனக்கு சிறுவயதிலிருந்தே மைனர் செயின் போட்டுக் கொள்ளவேண்டும் என்பது ஆசை. நாங்கள் டெல்லியிலிருந்து சென்னை வந்ததிலிருந்தே என பெரிய மன்னியின் செயினை போட்டுக் கொண்டிருந்தேன். நிச்சயதார்த்ததின் போது எனக்கு அணிவித்த செயின் என் மனைவி ரொம்பகாலாமக கழுத்தில் போட்டுக் கொண்டிருந்த செயின் என்பதும், நான் ஏற்கெனெவே செயின் போட்டுக் கொண்டிருப்பதால், அது தனக்கே மீண்டும் வந்துவிடும் என்று அவள் தானகவே ஒரு கணக்கு போட்டுவைத்திருந்தாள். அதற்கேற்றார் போல் நான் திருமம் வரைக்கும் இரண்டு செயினைமே போட்டுக் கொண்டிருந்தேன். திருமத்திற்கு முதல் நாள் கரெக்டாக மன்னியிடம் திருப்பிக் கொடுத்துவிட்டேன். ஒன்றுக்கு பத்ததாகப் பிறகாலத்தில் செலவழித்திருந்தால் கூட வருத்தமடைய மாட்டேன்.  ஆனால் நூறாக செலவழிக்கும் போது, ஏன் நானே சம்பாதித்து செயின் வாங்கிப் போட்டுக கொள்ளவில்லை என்ற வருத்தம் ஒவ்வொரு முறையும் எழுகின்றது.