தொல்காப்பியம் –களவியலில் ஆண்களுக்கும்/பெண்களுக்கும் காதலில் ஏற்படும் அவஸ்தைகளை (உணர்வை விட இது மேலான் வார்த்தி என்பதால் இளம்பூரணர் அவஸ்தி என்பதையே அவர் உரையில் குறிப்பிடுகின்றார். 2000 வருடங்களுக்கும் மேலாக இன்றைக்கும் காதலர்களின் நிலை இதேதான். வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல், நாணு வரை இறத்தல்
நோக்குவதெல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இச்
சிறப்புடை மரபிணை களவு என மொழிப
ஒரு பெண்ணை/ ஆடவனை பார்க்க பார்க்க விருப்பம் எழுதல் பேசலாமா, வேண்டாமா என்று ஒருதலையாக மனதுக்குள் யோசித்தல் என்னடா, எப்படி ஆரம்பிக்குறது என்று யோசித்து வருந்தி(உனவு சரியாக சாப்பிடாமல்) மெலிதல், தன் மனதுக்குள் இது சரியா வரும் என்று நமக்கு நாமே ஊக்கம் செய்தல், சொல்லும் வரை இறப்பது போல் துன்பம் அடைதல், பார்க்கும் இடம் எல்லாம் அவன்/ அவள் பெயர், உருவம் தெரிதல், வழக்கமாக செய்யும் வேலையை மறத்தல் (அவன்/அவள் நினைவாக இருத்தல்), எதிலும் கவனம் இல்லாமல் ஒரு மயக்கத்தில் இருத்தல், இப்படி இருப்பதற்கு செத்து போயிடலாமோ என்று யோசித்தல்.......இப்படி எல்லாம் இருப்பது ஒருவர் காதலில் வீழ்ந்து விட்டார் என்பதற்கு உள்ள அறிகுறிகள். கண்ணதாசனின் அருமையான வரிகள் “பாலிருக்கும் ... பழமிருக்கும்...” எனும் பாவமன்னிப்புப் பாடல்தான் தோன்றுகின்றது.
முன்னிலை ஆக்கல் சொல்வழிப்படுத்தல்
நல் நயம் உரைத்தல் நகை நனி உறா அ
அந்நிலை அறிதல் மெலிவு விளக்குறுத்தல்
தன் நிலை உரைத்தல் தெளிவு அகப்படுத்தல் என்று
இன்னவை நிகழும் என்மனார் புலவர்
.........மெய்தொட்டுப் பயிரல் பொய் பாராட்டல்
இடம் பெற்றுத் தழா அல் இடையூறு கிளத்தல்
நீடு நினைந்து இரங்கல் கூடுதல் உறுதல் ......
பெண் (ஆண்) முன்னால் வலிய சென்று அவள் (அவன்) கவனத்தை ஈர்த்தல்
பேசி பேசியே தன் வசப்படுத்த முயற்சி செய்தல் நல்லபடியாக (நைசாக ) பேசுதல், சிரிக்கும் படி வேடிக்கை செய்தல் அவர்களின் மனநிலையை அறிந்து சந்தர்ப்பம் பார்த்து மெல்ல எடுத்து தன்னை பற்றி எடுத்து உரைத்தல், தெளிவு ஏற்படுத்துதல் (கேட்பதற்கு முன்னரே தான் யார், எதிர்கால திட்டம் என்ன, நல்லவன் வல்லவன் என்று கூறுதல்)... சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் தொட்டு பேசுதல், முடிந்தால் தழுவி கொள்ளுதல்... நீ தேவதை, ராஜா குமரி, நீதான் உலக அழகி என்று பொய்யாகப் பாராட்டுதல், அவளை நினைத்து ஏங்குதல் , கூடுதல் , ஊடல் கொள்ளுதல்..........
இப்படி எல்லாம் காதல் வரும் போதும், வந்த பின்னும் நிகழும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
காதலில் ஆணோ பெண்ணோ சொல்வதற்கு முன்னரே இருவருக்கும் ஒத்த மன உணர்வு வந்து விடுகிறது, இப்படி வந்த பிறகு தான் நாம் தைரியத்தை வரவழைத்து காதலை சொல்கிறோம். ஆணோ பெண்ணோ இப்படி சிக்னல் வராமல் பெரும்பாலும் யாரும் காதலை வெளிப்படுத்துவதில்லை.
ஆக்கம் செப்பல், நாணு வரை இறத்தல்
நோக்குவதெல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இச்
சிறப்புடை மரபிணை களவு என மொழிப
ஒரு பெண்ணை/ ஆடவனை பார்க்க பார்க்க விருப்பம் எழுதல் பேசலாமா, வேண்டாமா என்று ஒருதலையாக மனதுக்குள் யோசித்தல் என்னடா, எப்படி ஆரம்பிக்குறது என்று யோசித்து வருந்தி(உனவு சரியாக சாப்பிடாமல்) மெலிதல், தன் மனதுக்குள் இது சரியா வரும் என்று நமக்கு நாமே ஊக்கம் செய்தல், சொல்லும் வரை இறப்பது போல் துன்பம் அடைதல், பார்க்கும் இடம் எல்லாம் அவன்/ அவள் பெயர், உருவம் தெரிதல், வழக்கமாக செய்யும் வேலையை மறத்தல் (அவன்/அவள் நினைவாக இருத்தல்), எதிலும் கவனம் இல்லாமல் ஒரு மயக்கத்தில் இருத்தல், இப்படி இருப்பதற்கு செத்து போயிடலாமோ என்று யோசித்தல்.......இப்படி எல்லாம் இருப்பது ஒருவர் காதலில் வீழ்ந்து விட்டார் என்பதற்கு உள்ள அறிகுறிகள். கண்ணதாசனின் அருமையான வரிகள் “பாலிருக்கும் ... பழமிருக்கும்...” எனும் பாவமன்னிப்புப் பாடல்தான் தோன்றுகின்றது.
முன்னிலை ஆக்கல் சொல்வழிப்படுத்தல்
நல் நயம் உரைத்தல் நகை நனி உறா அ
அந்நிலை அறிதல் மெலிவு விளக்குறுத்தல்
தன் நிலை உரைத்தல் தெளிவு அகப்படுத்தல் என்று
இன்னவை நிகழும் என்மனார் புலவர்
.........மெய்தொட்டுப் பயிரல் பொய் பாராட்டல்
இடம் பெற்றுத் தழா அல் இடையூறு கிளத்தல்
நீடு நினைந்து இரங்கல் கூடுதல் உறுதல் ......
பெண் (ஆண்) முன்னால் வலிய சென்று அவள் (அவன்) கவனத்தை ஈர்த்தல்
பேசி பேசியே தன் வசப்படுத்த முயற்சி செய்தல் நல்லபடியாக (நைசாக ) பேசுதல், சிரிக்கும் படி வேடிக்கை செய்தல் அவர்களின் மனநிலையை அறிந்து சந்தர்ப்பம் பார்த்து மெல்ல எடுத்து தன்னை பற்றி எடுத்து உரைத்தல், தெளிவு ஏற்படுத்துதல் (கேட்பதற்கு முன்னரே தான் யார், எதிர்கால திட்டம் என்ன, நல்லவன் வல்லவன் என்று கூறுதல்)... சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் தொட்டு பேசுதல், முடிந்தால் தழுவி கொள்ளுதல்... நீ தேவதை, ராஜா குமரி, நீதான் உலக அழகி என்று பொய்யாகப் பாராட்டுதல், அவளை நினைத்து ஏங்குதல் , கூடுதல் , ஊடல் கொள்ளுதல்..........
இப்படி எல்லாம் காதல் வரும் போதும், வந்த பின்னும் நிகழும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
காதலில் ஆணோ பெண்ணோ சொல்வதற்கு முன்னரே இருவருக்கும் ஒத்த மன உணர்வு வந்து விடுகிறது, இப்படி வந்த பிறகு தான் நாம் தைரியத்தை வரவழைத்து காதலை சொல்கிறோம். ஆணோ பெண்ணோ இப்படி சிக்னல் வராமல் பெரும்பாலும் யாரும் காதலை வெளிப்படுத்துவதில்லை.
இது வில்லியம் ஷேக்ஸ்பியர்
WHEN I SAW YOU I FELL IN LOVE AND YOU SMILED BECAUSE YOU KNEW – என்கின்றார்.
WHEN I SAW YOU I FELL IN LOVE AND YOU SMILED BECAUSE YOU KNEW – என்கின்றார்.
என் பெரிய அண்ணன் பெண் பார்க்க சென்றபோது மன்னியுடன் பத்து நிமிடங்கள் தனியாகப் பேசினான். அதுதான் நான் முதல் தடவையாக கேள்விப்பட்டது. ரோஜா திரைப்படத்தில் ஆச்சர்யப்படும் சிறுமியின் நிலைதான் என்னுடையது. மன்னி பெங்களூர்; அண்ணா பாம்பே. இரண்டாவது அண்ணன் நெல்லூர் மன்னி டில்லி.
என் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இரண்டு வீட்டிலும் தொலைபேசி இருந்தும் நாங்கள் பேசிக் கொண்டதில்லை. பெண் பார்க்க போனபோதும் நான் தனியாக பேசவில்லை. பத்து நிமிடம் பேசி என்னால் பெரிதாகத் தெரிந்து கொண்டுவிட முடியாது என்ற என் நினைப்பே அதற்குக் காரணம். என்னுடன் வந்திருந்த என் இரண்டாவது அண்ணந்தான் நிறைய பேசினான்
என் இரண்டாவது அண்ணன் அவனுடைய திருமணத்தின் போது என்னுடைய சிஏ நண்பர்களிடத்து ”ரவா உப்புமாவைக் கிளறிண்டேயிருக்கின்றமாதிரி என்னமோ எல்லாரும் சிஏ படிக்கிரீங்க. யாரவது முடிச்சீங்களா? என கிண்டல் அடித்தான். என் சிஏ நண்பர்கள் அனைவரும் காலேஜ் முடித்து இல்லை எண்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுத படித்துக் கொண்டிருந்தவர்கள். நான் ஒருவன் மட்டும் தான் 24 வயதில் சேர்ந்தவன். ஜெவியும் நானும் ஒரே வயது. அவன் எனக்கு அறிமாகும் போதே அவன் மூன்று வருட ஆர்டிகள்ஷிப் முடித்தவன். பள்ளி படிப்பு சாந்தோம் செயின் பீட்ஸ்ல், பீகாம் லயோலாவில். இவனும் நானும் தான் சேர்ந்து பிராக்டீஸ் ஆரம்பிதோம். கோபலபுரத்தில் ஆபிஸ்.
ஜெவியின் மனைவி உஷாவும் சிஏ இண்டர் பாஸ் பண்ணவள்தான். என் திருமணம் நிச்ச்யமானவுடன் “ஏண்டா. இதே பொண்ணோட ஜாதகம் பத்தி என் அம்மா பேசும் போது மாமி இண்டர் பாஸ் பண்ணவ என்னைக்கு பைனல் பாஸ் பண்றதுன்னு கேட்ட. இப்ப மட்டும் எப்படி ஒத்துண்ட?” “அவாளும் நார்த் ஆற்காட். அப்பாவுக்கும் அம்மாவிற்கும் பிடிச்சுப் போச்சு” ”சரி சரி. பொண்ணைப் போய் பார்த்தியா” இல்லைடா. அம்மா கட்டாயம் நிச்சதார்த்தம் முடிவதற்கு பின்னால தான் போய் பார்க்கணும் அது கூட ஜாஸ்தி போய் வழிய வேணான்னா” ” அட போடா லூசு. எனக்கோ அவ ஊட்டியிலே இருந்தா. என்னாலே போகமுடியலை. உனக்கு இங்க வடபழனியிலேயேயிருக்கா. அண்ணாநகர்லேந்து 100 பீட் ரோடிலே வந்தா 10 நிமிஷம். போய் பார்த்து சினிமா ஓட்டல்னு போய் பேசி பழகிண்டா நல்லது” என அறிவுரை வழங்கினான்.
ஆனாலும் நிச்சயதார்த்தம் முடியும் வரை என் அம்மாவின் கட்டளைக்கு மதிப்பளித்து அவர்கள் வீட்டிற்குச் செல்லவில்லை. நிச்சயதார்த்தம் ஜுன் 12ஆம் தேதி. 13 ஆம் தேதி சாயந்திரம் ஸ்கூட்டரில் (ஹீரோ ஹோண்டா TSE 8241) வடபழனியிலிருக்கும் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன். மனைவியோ வாசலிலிருக்கும் கைபம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தாள். அவசர அவசரமாக் முகம் கழுவி வந்தமர்ந்தாள். என்னுடைய மாமியார்தான் அதிகம் பேசினார். நான் மனைவியை வெளியே அழைத்துக் கொண்டு போகலாமா என்ற கேள்விக்கு அவரைக் கேட்டுவிட்டு சொல்கின்றேன் என்றார். அடுத்த நாள் அவர்கள் வீட்டிற்கு போய் மனைவியையும் அழைத்துக் கொண்டு லாங் டைரவ்வாக வேளச்சேரியிலிருக்கும் நண்பன் பாஸ்கர் வீட்டிற்குச் சென்றேன்.
ஆகஸ்ட் 27 திருமணம். அது வரையில் தினமும் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவளும் நானும் பெரும்பாலும் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருப்போம். ஐந்து திரைப்படங்களுக்குச் சென்றோம். பல்வேறு ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டோம். கல்யாணத்திற்கு முன் மனைவியின் தம்பிக்கு பெங்கலூரில் பூனூல் கல்யாணம். என்னையும் வருமாறு அழைத்தனர். போனால் அத்தை வீட்டில்தான் தங்க வேண்டும். அப்போதெல்லாம் ஒட்டலில் தங்கலாம் என்ற நினைப்பே எழுந்ததில்லை. அவ்வளவு பணமும் கையில் கிடையாது என்பது தான் உண்மை. வீட்டில் என்ன சொல்லிவிட்டு போவது என்ற காரணத்தால் போகவில்லை. அவர்கள் பெங்களூர் மெயிலில் போவதற்காக ஆட்டோ வரவழைத்திருந்தனர். மாமானார் மகளைப் பார்த்து ”ஏறிக்கொள்” என்றதற்கு மாமியார் “ இல்லைம்மா. அவ அவரோட ஸ்கூட்டர்ல வரா” என்றதும் “ஒஹோ”. அந்த ஒஹோவின் அர்த்தம் அப்போது எனக்கு விளங்கவில்லை. தன் கட்டுபாட்டிலிருந்து விலகி மகள் இந்த ஒரு அப்பாவியை அடக்கி ஆளப் போகின்றாளே என்ற ஆச்சர்யத்தினால் உண்டான ஒரு நக்கல் கலந்த ஓசையாகத் தான் இன்று என் காதில் ஒலிக்க்கின்றது.
அவர்கள் வீட்டிற்கு வரும் அத்தனை சொந்தக்காரர்களையும் நன்றாக அறிந்து கொண்டேன். தாத்தா, பாட்டி மாமா மாமி என அனைவரிடமும் நன்றாக பேசி பழகி கொள்ள முடிந்தது. அதே போல் மனைவியும் நானும் பேசும் போது எங்கள் குடும்பத்தைப் பற்றியும் சொந்தக்காரர்களைப் பற்றியும் எங்களைப் பற்றியும் பேசிக் கொள்வோம். பார்க்காத சொந்தகாரர்களும் பழகாதவர்களாகத் தோன்றாத அளவுக்கு பேசிக் கொள்வோம்.
தம்பிகளுடன் எவ்வளவுதான் நெருக்கமாயிருந்தாலும் எல்லாவற்றையும் அவர்களுடன் சொல்ல முடியாது. ராஜீவ் காந்தி புண்ணியத்தில் மத்திய அரசு பணியாளர்களுக்கு வாரம் ஐந்து நாள் மட்டுமே வேலை. சனி ஞாயிறு விடுமுறை. வார நாட்களில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை அவர்கள் வீட்டிற்கு செல்வதற்கு. ஆனால் சனி ஞாயிறு அதுவும் யாரவது உறவினர்கள் வந்தால் ஏதேதோ சாக்குச் சொல்லிவிட்டுதான் போவேன். ஒரே ஒரு நிரந்தர சாக்கு, கிளையண்ட் ஒருத்தனைப் பார்க்கப் போக வேண்டும் என்பதுதான்.
முனிவனுடன் மிதிலை வந்து சீதையிடம் காதல் வசப்பட்ட இராமனுக்கும் அதை யாரிடமும் கூற முடியாத நிலை. விசுவாமித்திரன் வந்ததையறிந்த ஜனக மஹாராஜன் வந்து அழைத்துப் போய் அவர்களை ஒரு மாளிகையில் தங்கவைத்தான்.
அங்கு சதானந்த முனிவன் வருகின்றான். இவன் ஜனக குல புரோகிதன். கௌதம முனிவருக்கு அகலிகையிடம் தோன்றியவன். வந்தவனை வீரர்கள் இருவரும் வணங்கி வாழ்த்தினர். சதானந்த முனிவனும் இவர்களை வாழ்த்தினான். விசுவாமித்திரன் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.



”இவ்வளவு அளப்பரிய தவத்தின் பயனுடைய விசுவாமித்திரன் அருளைப் பெற்றுள்ளீர்கள். உங்களுக்கு ஆற்றமுடியாத காரியம் யாதுமில்லை” என அவர்களை வாழ்த்தி விட்டு தன்னிருப்பிடம் போய் சேர்ந்தான்.
விசுவாமித்திரன் வரலாறை கூறுவதற்கு, முன்பே எவ்வளவோ இடமிருந்த போதும் இவ்விடத்தில் ஏன் கூறினான் என்பது சற்றே சிந்திக்க வைக்கின்றது.
அகத்தியனுடைய வரலாற்றை விசுவாமித்திரனே தாடகை வதத்தின் போது கூறுகின்றான். வனவாசத்தில் இராமன் அகத்தியன் ஆசிரமித்திற்குச் சென்று அவனை வணங்கி, ஆசியும் அவன் பூஜித்து வந்த வில்லையும் அம்பையும் பெற்றுக் கொண்டு இராவணனுடன் யுத்தம் செய்தான். விசுவாமித்திரனே இராமனிடம்
‘அரிய யான் சொலின். ஐய! நிற்கு அரியது ஒன்று இல்லை;
பெரிய காரியம் உள; அவை முடிப்பது பின்னர்; என்று முன்னர் சொன்னதும் யோசிக்கப்படவேண்டும். அதனால்தான் சதானந்தன் “இராமா. நீ கவலைப் படாதே. இவன் உங்களை வெறும் வேள்வி காண்பதற்காக மட்டும் அழைத்து வரவில்லை. நீ கன்னி மாடத்தில் பார்த்து காதலில் விழுந்த பிராட்டியையும் உனக்கு மணமுடிப்பதற்காகத்தான்” என சொல்வது போல தான் எனத் தோன்றுகின்றது.
முனியும் தம்பியும் போய் முறையால் தமக்கு
இனிய பள்ளிகள் எய்தபின். இருட்
கனியும் போல்வன். கங்குலும். திங்களும்.
த்னியும் தானும் அத் தையலும் ஆயினான்.
விசுவாமித்திரனும் தம்பியும் படுக்கப் போன்பின் இருள்கனி போன்றவனானான் இராமன் இரவில் உருவெளிப்பாட்டில் தோன்றிய சீதையே துணையாக இருக்க தூங்காதிருந்தான்.
’விண்ணின் நீன்கிய மின் உரு இம் முறை
பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டே கொலோ?’
எண்ணின் ஈது அலது என்று அறியேன்; இரு
கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால்.
”மின்னல் தோன்றி உடனே மறைவது; அன்றியும், கண், கை, கால் முதலிய அவயங்களை கொண்டிராது. என கண்களுக்கு புலப்படும் உருவோ, மின்னல் போன்ற பளபளப்புடன் கண் கை கால் முதலிய அவயங்களைப் பெற்றுள்ளது. ஆகவே மின்னல் பெண்ணுருவம் பெற்று வந்துள்ளது என்று இவ்வாறாக அவ்வுருவத்தைச் சொல்வதன்றி வேறுவகையாகச் சொல்ல வழியில்லை என்ன புதுமை இது” என்று இராமன் நினைத்தான்.
நிச்சயதார்தத்திற்கு பிறகு தினமும் வரப்போகும் மனைவியை பார்ப்பதற்கு அவர்கள் வீட்டிற்கு சென்றதனால், வீடு திரும்ப நேராமாகிவிடும். அவர்கள் வீட்டிலோ, இல்லை ஓட்டலிலோ சாப்பிட்டுவிடுவதால் பசி வேறு எடுக்காது. எங்கள் வீட்டில் பொதுவாக இரவு ஒன்பதரைக்குத்தான் இரவு சாப்பாடு. நான் சரியாக சாப்பிடாததை கவனித்த அண்ணாவின் மகன்” சித்தப்பா எங்கேயா வெளியிலே சாப்பிட்டு வரா. இல்லேன்னா ஏன் இவ்வளவு கம்மியா சாபட்றா” என்றான். ”இல்லைடா ஆபிஸ்லே நிறைய காபி குடிக்கிறேன். அதுவுமில்லாம வீட்டுக்கு வந்த உடனேயும் காபியா!. முதல்ல இந்த காபி குடிப்பதை நிறுத்த வேண்டும்.” என்று ஒருவாறு சமாளிப்பேன்.
ஏதோ ஞாபகத்தில் அன்று பார்த்த சினிமா பாடலை பாடித் தொலைத்துவிடுவேன். என் தம்பியோ ”எப்ப படம் பார்த்த” இல்லைடா பாஸ்கர் பாடினான்” . ஏற்கெனவே பார்த்துவிட்ட படத்தினை இவர்களுடன் மறுபடியும் பார்க்க வேண்டும். ஆன வரைக்கும் வாயிலே கோலிட்டுப் பார்ப்பார்கள். முதல் தடவை பார்ப்பது போல் நடிக்கவேண்டும். அண்ணவின் மகள் எங்களுடன் தான் தூங்குவாள். காதின் மடலைத் திருகி கொண்டேதான் தூங்குவாள். காதைத் திருகி ரொம்ப வலியெடுத்துவிடவே அவள் கையை விலக்க “ நானும் பாத்துண்டுதான் இருக்கேன். நீ ரொம்ப மாறிப் போய்ட்ட. உன் பேச்சு கா. நான் இனிமே தாத்தாவோடத்தான் படுத்துப்பேன்” அடுத்த நாள் அவளுக்கு களஞ்சியம் ஸ்டோர்லேர்ந்து சாக்லெட் வாங்கி கொடுத்து சமாதானம் செய்யவேண்டும்.
’அருள் இலால் எனினும் மனத்து ஆசியால்
வெருளும் நோய் விடக் கண்ணின் விழுந்ங்கலால்
தெருள் இலா உலகின் சென்று நின்று வாழ்
பொருள் எலாம். அவள் பொன் உரு ஆயவே
காம நோயைத் தருகின்ற விடம் போன்ற தன் கண்களால் சீதை விழுங்குவதால் இராமனுக்கு பார்த்தவிடத்திலெல்லாம் அச்சீதையின் வடிவமே தோன்றியது.
எல்லாப் பொருளையும் சீதையாக காணும் தெள்ளறிவில்லாமையை உலகத்தின் மேலேற்றி “தெருள் இலா உலகு” என்கின்றான் இராமன்.
வண்ண மேகலைத் தேர் ஒன்று வாள் நெடுங்
கண் இரண்டு. கதிர் முலைதாம் இரண்டு.
உள் நிவந்த நகையும் என்று ஒன்று உண்டால்;
என்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ?
”தேர் தட்டு போன்ற அல்குலொன்றும், வாளாயுதம் போன்ற நீண்ட கண்களிரண்டும், இறுமாந்தது போன்ற தனங்களிரண்டும் வாயினுள்ளே அடங்கிச் சிறந்த புன்சிரிப்பு என்ற ஒன்றும் உண்டு; இத்தானிக் கருவிகளும் வேண்டுமோ அந்த யமனுக்கு என்னைக் கொல்வதற்கு” என்று சிந்தித்தான் இராமன்.
ஆகும் நல்வழி; அல்வழி என மனம்
ஆகுமோ? இதற்கு ஆகிய காரணம்
பாகுபோல் மொழிப் பைந்தொடி கண்னியே.
ஆகும் வேறு இதற்கு ஐயுறவு இல்லையே!
தன்மனது மனம் சீதையிடம் சென்றதனால், அவள் கலியாணமாகாத அரச கன்னிகையாகயிருக்க வேண்டுமென்று நினைத்தான் இராமன். “என் மனம் நல்வழி ஆகும். அல் வழி ஆகுமோ” என்று இயைந்து உரைப்பதும் உண்டு. ஸ்ரீராமனுக்கு அன்றிரவு தூங்காமலேயே கழிந்தது. இரவு தூங்காமலிருந்தால் அடுத்த நாள் எந்த வேலையுமே சரியாக செய்யமுடியாது. முதல் பரிட்சைக்கு முந்திய இரவு எனக்கு தூக்கம் வராது. பரிட்சை ஹாலில் அமர்ந்து கேள்விதாள் வரும் வரையில் தூக்கம் கண்ணைச் சுற்றும். எப்படி பரிட்சை எழுதப் போகின்றோம் என்று மலைப்பாக இருக்கும். ஆணால் கேள்வித்தாள் வந்தவுடன் புத்தங்களின் பக்கங்களே மனத்திரையில் தோண்றி மளமள வென்று எழுதி முடித்து விடுவேன். பின்வரும் பரிட்சைகளில் என்றைக்குமே பிரச்சினையில்லை.
No comments:
Post a Comment