அன்புடையீர்,
பெயர் பிரசாத் ஸ்ரீனிவாசன். வசிப்பது ஹாங்காங்கில்.மனைவி மகனுடன். 25 வருடம் தினமும் எழுந்து ஓடி ஓடி எதற்கு என்றே தெரியாமல் வருடங்கள் உருண்டோடின. வாசிப்பனுபவமுள்ள நல்ல நண்பர்களின் தயவால் தமிழ் இலக்கியத்தில் சிறிது பயிற்சி. நல்ல கருத்துக்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்த இலக்கிய வட்டத்திற்கு நன்றி.
50 வயதிலும் ஆசை வருவது சகஜம் தான் என்றாலும் எனக்கு வந்தது பேராசை. ஆசை வெட்கமறியாது. எதனாலோ எனக்கு கம்பன் மீது ஆசை. அவன் எழுதிய இராமயணத்தைப் படித்து என் வாழ்வியல் அனுபவத்தோடு எழுத வேண்டுமென்ற பேராசைதான் அது.அவன் அருளாலே அவன் தாள் வணங்குவது போல், அவன் வார்த்தைகளையே துணையாகக் கொண்டு இந்த பெரும் முயற்சியில் ஈடுபடுகின்றேன்.
அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடின். தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி.
முறையின் நூல் உணர்ந்தாரும். முனிவரோ?

என அவன் வார்த்தைகளையே உங்களிடம் கூறி , உங்கள் சீரிய கூரிய தீம் சொல் கருத்துக்களை எதிர்பார்க்கும்
என்றென்றும் அன்புடன்
ஸ்ரீ. பிரசாத்
என்றென்றும் அன்புடன்
ஸ்ரீ. பிரசாத்
No comments:
Post a Comment