Friday, January 27, 2012

பிறப்பு

இங்கு நடந்த ஒரு இலக்கிய வட்ட கூட்டத்தில் பேசிய வெளி நாட்டவரான எனது நண்பர் பிராங் பிஷ்பெக்(Frank Fischbeck) அவருடைய சிறு வயதில் தென் ஆப்பிரிக்கா (அப்போதைய ரொடிஷியா) விலிருந்து ஹாங்காங் வரும் வழியில், இப்போது போல் அக்காலத்தில் நேரடி விமானப் பயணமில்லாத காரணத்தால் பல விமானங்கள் மாறவேண்டியக் கட்டாயமும் இருந்ததால், அவர் பம்பாயில் இறங்கவேண்டியிருந்தது. தென் ஆப்பிரிக்கர்களுக்கு அன்று இந்தியாவில் இறங்குவதற்குத் தடையிருந்தது. அப்படியும் போராடி பம்பாயில் நுழைந்தார். டாக்ஸியில் சென்றபோது டிரைவர் “சாவு ஊர்வலம் பார்க்கணுமா? என்று கேட்க, மிகவுமே அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார்.  பின்னாளில் அவர் சாவையும் சந்தோஷமாகக் கொண்டாடும் மனோபாவத்தையும், இறப்பையும் கொண்டாடும் இந்து மதத்தையும் வியந்தாகக் கூறினார்.

அவர் பார்த்தது “கல்யாண சாவாக இருந்திருக்கவேண்டும். எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு, வாழ்க்கையின் எல்லா சக்கரங்களிலும் சுழன்று, தானே நின்று போன  கடிகார முள்ளாய்தான் இருந்திருக்கவேண்டும். இதுவே கம்பன் கண்ட கோசலம். அத்தேசத்தில் கூற்றமில்லை. அதாவது, அகால மரணமில்லை.

சாவையே கொண்டாடும் இந்த தேசத்தின் கலாச்சாரம், பிறப்பையும் அதைவிட பன் மடங்காக் கொண்டாடும். பிறப்பிலும் சரி, இறப்பிலும் சரி பிரதானமானது சடங்குகள்தான்.
கர்ப்பகாலத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கவேண்டும். ஆசைப்பட்டது அனைத்தையும் வாங்கித் தரவேண்டும். பிரசவம் பெண் வீட்டார் தான் செய்ய வேண்டும். பெரியண்ணா மன்னியின் இரண்டாவது மகள் பிறக்கும் சமயம் நான் சி.ஏ இண்டெர் பரிட்சை எழுதுவதற்காக ஸ்டடி ஹாலிடேஸில் வீட்டிலிருந்தேன். எப்போதும் சி.ஏ பரிட்சை நவம்பர் மற்றும் மே இரண்டாம் தேதி துவங்கும்.

மன்னியும் அம்மாவும் தி நகரில் மதுரை சுங்குடிப் புடவை மற்றும் சீட்டுக் கம்பெனி நட்த்துபவரான "பத்மநாபன் கடைக்குச் சென்றனர். அக்டோபர் 31 ஆம் தேதி 1984    ஆம் ஆண்டு. நான் மதியமெல்லாம் படித்துக் கொண்டிருந்தேன். மூணுமணி வாக்கில் அரக்க பரக்க வீடு வந்து சேர்ந்தனர்  "இந்திரா காந்திய சண்டாளங்க யாரோ கொன்னுட்டாங்களாம். பத்மநாபன் தான் அவனுக்கு தெரிஞ்ச ஆட்டோ வண்டிலே ஏத்தி உடனே வீடு போங்கோன்னான். ஏண்டா நிறை மாசமா இருக்கறவள கூட்டிண்டு போனேனு ஆயிடுத்து.. முதல்ல வெங்கடாசலபதிக்கு ஒரு ரூபா மஞ்ச துணியிலே சுத்தி வெக்கணும் என அம்மா புலம்ப ஆரம்பித்தாள்.

எனக்கோ என் பரிட்சை என்னவாகும் என்ற கேள்வி. நன்றாக பிளான் பண்ணி படித்துக் கொண்டிருக்கும் போது, தீடிர்னு பிரேக் வந்தா ரிசலட் எப்படி வேண்டுமானலும் போகலாம். முதலில் ஒரு வாரம், அதன் பிறகு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தினால் மேலும் ஒரு வாரம், என பரிட்சை ஒத்தி வைக்கப்பட்டது. . நவம்பர் மூன்றாம் வாரம் தான் ஆரம்பித்தது. கடைசிப் பரிட்சை நவம்பர் 25 ஆம்  தேதி. பரிட்சை எழுதி விட்டு அன்று பிறந்த பெரியண்ணா-மன்னியின் மகளைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குச் சென்றிருந்தேன். சிறு குழந்தைகளை தூக்கி வைத்துக் கொள்ள பயம். கழுத்து நன்றாக நின்ற பின்னர்தான் நான் தூக்கி வைத்து கொண்டு கொஞ்சுவது. என்னுடன் ஜாயிண்ட் ஸ்டடிக்கு வரும் நண்பன் தேவநாதன், பிறந்த குழந்தைகளையும் லாவகமாக தூக்கி வைத்துக் கொள்வான். அவள் பிறந்த அவ்வருடம் சி ஏ இன்டெர் பாஸ் செய்து விட்டேன். அதனாலேயே அவள் பேரில் அண்ணாவின் பையனைவிட ஆசை கொஞ்சம் அதிகம்.  

பூதம் கொடுத்த பிண்டத்தை மனைவிகளுள் முதலில் பட்டமகிஷியான கோசலைக்கு சுதைப் பிண்டத்தில் பாதியைக் கொடுத்தான். (50%)

மா முனி அருள் வழி. மன்னர்மன்னவன்.
தூம மென் சுரி குழல் தொண்டைத் தூய வாய்க்
காமரு கோசலை கரத்தில். ஓர் பகிர்.
தாம் உற அளித்தனன். சங்கம் ஆர்த்து எழ.

பின்னர் கேகேயன் மகளான கைகேயிற்கும் மிச்சமாக உள்ளதில் பாதியையளித்தான் (25%) சுமித்திரைக்கு மீதியைக் கொடுத்த தசரதன் தட்டில் சிந்திக்கிடந்த எஞ்சிய சுதையை பின்னும் சுமித்திரைக்கே கொடுத்தான்.
வான்மீகியில் பங்கீடு- தசரதனும் பெரிதும்  மகிழ்ந்தவனாய்   அந்தப்புரம்  அடைந்து,அப்பாயசத்தில்  பாதியைக்   கோசலைக்கும்  மீதியில்   பாதியைச் சுமித்திரைக்கும்  கொடுத்தார்;    மிகுந்து   நின்றதில்  பாதியைக் கைகேயிக்குக்  கொடுத்தார்.  அமுதம்  ஒத்த  அந்தப்  பாயசத்தில்
மேலும் எஞ்சி   நின்றதைச்   சிறிது   நேர யோசனைக்குப்  பிறகு சுமித்திரைக்கு   மட்டும்   கொடுத்தார்.   இவ்வாறு  தசரதன்  தம் மனைவியர்க்கு    அந்தப்   பாயசத்தை   வெவ்வேறு    அளவில் கொடுத்தார்”. (1.16:29, 30,31)

கம்பனோ முறையில் எனும் போதே, ஆர்டரைப் பின்பற்றுவதால் கைகேயி இரண்டாவது ராணியார் என்பது தெரிகின்றது. இல்லை கைகேயிதான் கடைசி என்று கூறும் இராமாயணங்கள், அதற்குக் கூறும் காரணம் உலகியில் பற்றியது. வயதான காலத்தில் இளைய வயதினரை திருமணம் செய்பவர் அவர்களிடத்து மிகவும் பிரியமாயிருப்பதும் போர்க்களமேயாயினும் அழைத்துச் செல்வதும் இயல்பே என்பதாலும் கைகேயி இளையவள் என்று கூறுகின்றன. எனக்குக் கூட இந்த கருத்தில் உடன்பாடே.

யாகம் முடித்து தசரதன் தட்சிணைகள் வழங்கி சரயு நதியில் நீராடி (யாகம் முடிந்து தானம் வழங்கி நீராடுதல் மரபு). அரசவை வந்து குல குருவான வசிட்டனை வணங்கி பிறகு கலைக்கோட்டு முனிவனை வணங்கி அவனும் மகிழ்ந்தே புறப்பட்டான். தேவிகள் மூவரும் கருவுற்றனர்.

தெரிவையர் மூவரும் சிறிது நாள் செலீஇ
ம்ருவிய வயாவொடு வருத்தம் துய்த்தலால்
பொரு அரு திருமுகம் அன்றி. பொற்பு நீடு
உருவமும் மதியமோடு ஒப்பத் தோன்றினார்.

கருவுறுதற்குறிகளில் சேர்ந்த மயற்க்கை (மக்கை) நோயையும் உடல் வெளுத்தலையும் கூறுவது. வயா – கர்ப்பவதிகட்குச் சிற்சில பொருள்கள்மேல் தோன்றும் விருப்பம்.
என்னுடைய அக்கா பிரசவகாலத்தில், வீட்டில் சமையல் வாசனையே அவளுக்கு வருத்தம் தருவிக்க, மூன்று வேளையுமே திருவண்ணாமலையில், அன்று இருந்த மூன்று ஒட்டல்களிலும் சாப்பிடுவாள். வீட்டில் பெரியவர்களோ ஸ்கேனர் இல்லாத குறையைத் தங்கள் கண்களினாலேயே ஈடுசெய்தனர். அவர்களுடைய அன்றைய மூடைப் பொறுத்து “இவ முன்னைவிட ரொம்ப அழகாயிட்டா. அனால கட்டாயம் பொம்பளை பிள்ளைதான்”.  இதுவே அடுத்த மாசம் அழகு கம்மியாகிவிட்டது என பெண்ணாக மாறிவிடும்.

என் மனைவியின் பெற்றோர்கள் மெட்ராசிலேயேயிருந்ததால் வெளியூர் செல்ல வேண்டியத் தொந்தரவு இல்லை. முதல் பிரசவம் என்பதால் ஐந்தாம் மாதம் வளைகாப்பு. பெண் வீட்டில். பழங்காலத்தில் வளையல்காரர்களே வீட்டிற்கு வருவர். வளையல்காரன் வராத குறையை என் மாமியார் தீர்த்து வைத்தார்.  எழாம் மாதம் சீமந்தம்.  சீமந்தத்திற்கு இரு நாட்களுக்கு முன்னால் மனைவியின் தாத்தா இறந்துவிட்டார். என் சொந்தக்காரர்கள் எல்லோரும் வெளியூர்களிலிருந்து ஏற்கெனவே வந்து விட்டனர். நான் சீமந்தத்தைக் கான்ஸல் செய்ய வேண்டும் என்று சொன்னபோது இது பிறக்கும் குழந்தையின் நலனுக்கா மட்டுமே செய்வது. அங்கு உன் பொண்டாட்டியால போகவும் முடியாது. அப்படியும், அவளுக்கு இஷ்டமில்லாவிட்டால் கேன்ஸல் செய்துவிடலாம் என என் தந்தை கூறினார். அண்ணன்மார்கள் மற்றும் மன்னிகளும் என் கட்சி. ஆயினும் குழந்தைக்காக எனும் சென்டிமென்டல் பிளாக் மெயில் இருந்த ஒரே காரணத்தால், மனைவி மேடையில் உட்கார சம்மதித்தாள். சீமந்தமும் நடந்தது.

ஆயிடை. பருவம் வந்து அடைந்த எல்லையின்.
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட.
வேய் புனர்பூசமும். விண்ணுளோர்களும்.
தூய கற்கடகமும். எழுந்து துள்ளவே. 

சித்தரும். இயக்கரும். தெரிவைமார்களும்.
வித்தக முனிவரும். விண்ணுளோர்களும்.
நித்தரும். முறை முறை நெருங்கி ஆர்ப்புற.
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே.

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து.
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை. அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை.
திரு உறப் பயந்தனள் – திறம் கொள் கோசலை.
புணர்பூச நட்சத்திரத்தில் கடகராசியில் மண்மகள் மகிழ கோசலை ஓர் மகனை பெற்றெடுத்தாள். பூச நட்சத்திரத்தில் மீன ராசியில் கைகேயி ஒரு மகனை நல்கினாள். ஆயில்ய நட்சத்திரத்தில் கடக ராசியில் சுமித்திரை இளையவனை பயந்தனள். இளைய மென் கொடி, மக நட்சத்திரத்தில் சிங்க ராசியில் மீண்டும் ஒரு மகனைப் பயந்தனள். வால்மீகத்தில் க்குவன் மற்றும் சத்ருக்கன் இருவருமே ஆயில்ய நட்சத்திரம். ஜோதிட வானியல் சாஸ்திரங்களிலில் மிக்க தேர்ச்சி பெற்று விளங்கியவர்களா தமிழ் மரபில் வந்த கம்பனுக்கு, அவ்வாறு சொல் அவன் ஞாம் இடம் கொடுக்கவில்லை. இருவருமே ஒரே நட்சத்திரம் என்றால் ஒருவன் மட்டும் 14 வருடம் ஏன் காடு புக வேண்டும்? என்ற கேள்வியெழும் என்று கருதியே, இக்குவன் ஆயில்ய நட்சத்திரம் என்றும், சதுருக்கனன் மக நட்சத்திரம் என்றும் கூறுகின்றான். அது ட்டுமின்றி வால்மீகியிலும் வடபுல, தென்புல ற்றும் கீழ்புல என் ல்வேறு வகையான வழக்குறைகள் உள்ளன. இதில் தென் புலவழ்க்கில் மட்டுமே நாள் கோள் நட்சத்திரம் கிரக உச்சநிலை குறிப்பிடப்டுகின்றது. மற்றவற்றில் இல்லை என்பதால் இது எல்லாமே வால்மீகத்தில் இடைச்செருகல்கள் என்றே திண்ணமாகச் சொல்லாம்.

கோசலையின் மகனுக்கு ஐந்து கிரகங்கள் உச்சத்திலிருந்தன. “உள்ளதொரு கிரகமுச்சமேவிற் கிராமணியாம்; உபயமுச்சம் பெறிர் பலவூர் கிராமணியாம், தெள்ளியதோரொருமூன்று கிரகமுச்சமானால் கோன்மன்வனாகிச் சிறிதவனிபுரப்பன்,நள்ளியதோரீரிண்ட்டு கிரகமுச்சமானால் ஒரு மண்டலந்தனக்கு நாயகனாவான், புள்ளி செறியோரைந்து கிரகமுச்சமானால் பூலோகநாயகனாமென பலன்கள் புகல்வார் என்றது சோதிட நூல்.  இங்கு வந்திருந்த ரானி பத்திரிகை ஜோதிடர் திரு பச்சைராஜன் அவர்களுடம் கேட்ட போது கருணாநிதிக்கு ஐந்து கிரகம் உச்சம் என்றும் ஜெயலலிதாவிற்கு மூன்ரு கிரகம் உச்சமென்றும் கூறினார்.

எனக்கு மகன் பிறந்த சமயம் நான் வடபழனி சரவண பவனில் டிபன் சப்பிட்டுக் கொண்டிருந்தேன். முதல் நாள் இராத்திரி பதினொன்றரை மணியளவில் விஜயா ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு இரவெல்லாம் கண் விழித்துக்( கண்மூடவே முடியாது, அங்குள்ள கொசுக்களின் கடியால்) காத்திருந்தால் மதியம் 2.30 மணி வரை ஒன்றும்  தெரியவில்லை. வீட்டுக்குப் போய் அரை மணி தூங்கிவிட்டு  வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தவன் 4 மணிக்குத்தான் எழுந்தேன். குழந்தையை முதன் முதல் பார்த்த போது அழகாக தலை வாரி சீவியிருந்தார்கள், என்னைப் போலவே இருந்ததாக நினைவு. ஆனால் குழந்தையின் நல்ல அழகான அம்சங்கள் எல்லாம் அவர்களுடைய வீட்டு வம்சாவழி என்பது என் மனைவி மற்றும் அவர்தம் குடும்பத்தாரின் அபிப்பிராயம்,. அதே போல் தான் எங்கள் வீட்டிலும். என்னையே உரித்துக் கொண்டு வந்திருக்கின்றான் என்ற எண்ணம்.
குழந்தை பிறந்த 13 ஆம் நாளில் புண்ணியாசனம் எனும் பேர்சூட்டு விழா. என் மகனுக்கு நாமகரணமும் ஜாதககரணமும் அன்றே செய்தனர். இதுவும் பெண் வீட்டில்தான் நடக்கும் என்றாலும் சாப்பாடு செலவு மட்டும் பிள்ளை வீட்டிலிருந்து. அந்த பதிமூன்று நாளும் தாடியுடனிருந்து என் உறவினருடன் பஸ்ஸில் திருப்பதி சென்றேன். சித்தப்பா வீட்டிற்கு போய் சாப்பிட்டு சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு நடந்து மலையேறி, மொட்டை அடித்துக் கொண்டு பிரார்தனையை நிறைவேற்றினேன்.

தசரதன் நதியில் நீராடி, தானம் செய்து குழந்தைகளைப் பார்த்திட்டான்.  
‘‘இறை தவி்ர்ந்திடுக பார். யாண்டு ஓர் ஏர்; நிதி
நிறைதரு சாலை தாள் நீக்கி. யாவையும்
முறை கெட. வறியவர் முகந்து கொள்க’’ எனா.
அறை பறைஎன்றனன் - அரசர் கோமகன்.  நகர மாந்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் மூழ்கி திளைத்திருந்தனர்.

இத்தகை மாநகர். ஈர்-அற நாளும்
சித்தம் உறுஙம் களியோடு சிறந்தே
த்த்தமை ஒன்றும் உணர்ர்ந்திலர்; தாவா
மெய்த தவன் நாமம் விதிப்ப மதித்தான்.

க்ஷத்திரியர்க்குப் பன்னிரண்டுநாள் சூதகாசௌமென்பதும்(பந்துக்களின் பிறப்பு இறப்புகளால் ஏறபடும் தீட்டு) அது கழித்த பதின்மூன்றாம் நாளே நாமகரணம் செய்ய வேண்டும் என்பதும் விதி என்பதற்கேற்ப பதிமூன்றாம் நாளில் பெயர் சூட்ட ஆலோசித்தான் வசிட்டன்.
பதிமூன்றாம் நாளில் வசிட்டன் கோசலையின் பிள்ளைக்கு இராமன் என்றும் கேகேயன் புதல்வி ஈன்ற மகவிற்கு பரதன் என்றும், பூங்கொடி சுமித்திரை ஈன்ற ஈர் செல்வங்களுக்கு இலக்குவன் சத்துருக்கன் என்றே பெயரிட்டான்.
இராமனும் சகோதரர்களும் குடுமி வைப்பதையும், பூணூல் அணிவதையும், எல்லாவகைக் கல்வி கற்பதையும், வித்தைகள் பெறுவதையும் கவி ஒரே பாடலில் கூறுகின்றார்.

எதிவரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா
எது வினை? இடர் இலை? இனிது நும் மனையையும்?
மதி தரு குமரரரும் வலியர்கொல்?எனவே.
இவர்கள் அரச குமாரர்கள். இராமன் மக்களோடு மிக னிமையா பழகி அவர்கள் நலத்தினை முதலில் அவனே விசாரிக்கின்றான். எதிர்வரும் அவர்கள் என்பதற்கு அ ச ஞா வருபவர்கள் சாதார குடிக்கள் நடந்தே வருகின்றார்கள். அவர்களை நிறுத்தி அரசகுமாரன் பேசுகின்றான். அன்றியும் அவர்களை நிறுத்திப் பேசுகின்றான். இவனோ அரச குமாரன். இவன் தேரிலோ குதிரையிலோ சென்றிருக்கமுடியும். ஆனால் இவர்கள் நால்வரும் நடந்தே செகின்றனர் என்பதை மிக நுட்பமாக் காட்டுகின்றான்என்கின்றார்.

அதிகாரத்தில் உள்வர்கள் எப்போதுமே இறங்கி வந்து பேசமாட்டர்கள். இதற்கு விதிவிக்கு பெரும் பதவியில் இருந்தாலும் மற்றவர்ளுக்கு உதாரமாகத்திகழும் அப்துல் கலாம் போன்ற பெரியோர்கள்.

என் தம்பியின் வீடு கே கே நகரில் பதமாசேஷாத்திரி ஸ்கூல் இருக்கும் அதே தெருவில் உள்ளது. என பார்டனர் ஜேவியின் வீடு ஸ்கூலுக்கு எதிரேயே இருந்து. ஸ்கூல் நாட்களில் இவர்கள் காலையில் வெளியே செல்ல காரை எடுக்கவே முடியாது. குழந்தைகளை கொண்டுவிடுவதற்கும் அழைத்துப் போவதற்கும் அவ்வளவு கார்களும் தெருவையே கண்டபடி நிறுத்தப்பட்டிருக்கும். பள்ளி விட்டு குறைந்து இரண்டு மணி நேரமாகும் தெரு மீண்டும் சகஜ நிலைக்கு வருவதற்கு.
என் பெரியண்ணாவீட்டில் கார் டிரைவருடன் இருந்தாலும், குழந்தைகள் இருவரும் ஸ்கூல் பஸ்ஸிலேதான் செல்வர். பஸ் ஸடாப்புக்கு கூட நாங்கள் யாரேனும் நடத்தித்தான் கூட்டிக் கொண்டு போவோம். என்றாவது பஸ்சைத் தவரவிட்டுவிட்டால், மோட்டர் சைக்கிளில் கொண்டுபோய் விடுவோம். அவ்வளவு சந்தோஷம் தெரியும் குழந்தைகள் முகத்தில். என் தம்பி மெயின் ரோடு கிராஸ் பண்ணி 3 நிமிடத்தில் நடந்து போக வேண்டிய ஸ்கூலுக்கு, 9 வது படிக்கும் மகளை மோட்டார் சைக்கிளில்தான் கொண்டு போய்விடுவான். என் பெரிய அண்ணாவின் மகன் ஆறாவது படிக்கும் போதே அவனைவிட உசரமாக இருக்கும் சைக்கிளில் அண்ணா வீட்டிலிருந்து சர்ச் எதிரில் புளுஸ்டார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸை  கிராஸிங்கில் அவ்வளவு பெரிய அவின்யூவை கடந்து, எங்கள் வீட்டிற்கு வந்து, அதுவும் ஒர் சமோசாவை கொண்டுவந்து கொடுப்பதற்கு,  செல்வது மனதில் தோன்றாமலிராது. 
தமிழ்த் திரைப் படங்களில் வருவது போன்றே 4 பாடலில் 16 வயது வாலிபர்களாக ஆவதையும் கூறிவிடுகின்றான். நாட்டையும் நதியையும்  80 பாடல்களுக்கு மேலாகப் பாடிய கவி.
சவுளமொடு உபநயம் விதிமுறை தருகுற்ற.
இ(வ்)அளவதுஎன ஒரு கரை பிறிது இலவா.
உவள் அரு மறையினொடு ஒழிவு அறு கலையும்.
தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே.

இராமனின் பிள்ளைப்  பருவத்தைச்  சில நூறு பாடல்களிலாவது  கம்பன் பாடியிருக்கலாம். என்ன காரணத்தாலோ கவிச்சக்கரவர்த்தி  பாடவில்லை. நான்கைந்து பாடல்களில் தசரத குமாரனைப் பதினாறு வயது இளைஞனாக ஆக்கிவிடுகிறான்.

பல  கதைகள்  கம்பனைப் பற்றி வழங்குகின்றன. அவற்றில் ஒன்று அவனுக்கு  அம்பிகாபதி என்கிற ஒரு  மகன்  இருந்தான் என்றும், அவன்   கம்பன்   காலத்திலேயே   அவன் கண்ணெதிரில் அரச தண்டனை   பெற்று   உயிர்   இழந்தான்  என்றும்  சொல்கிறார்கள்.

ஒருவேளை  அந்தக்  கதை  உண்மையாக  இருக்கக்கூடுமோ  என்று கூடத் தோன்றுகிறது. அப்படியானால் குழந்தைச் செல்வத்தினிடத்திலே  அவன்  மனத்தில்  ஆழமாகத் தோன்றிய வடு
இராமனைக்  குழந்தையாக வைத்துப் பாடுவதற்கு இடந்தரவில்லையோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது.  பெரியாழ்வார் தமிழுலகத்தில்   பிள்ளைத்  தமிழ் தோன்றுவதற்கு  வித்திட்டவர் என்பதை   மறக்க  முடியாது.  கண்ணனைக்  குழந்தையாக்கி  அவர் பாடுகின்ற  பாடல் ஒரு முறை கற்றாரையும் உலுப்பிவிடக்கூடிய அளவு அற்புதமான    உணர்ச்சி நிரம்பியது. அதை நன்கு படித்து மகிழ்ந்திருக்கக்  கூடிய  கம்பன்,  இராகவனுக்குக்  குழந்தைப் பருவப் பாடல்கள் பலவற்றைப்  பாடியிருக்கலாம். பாடாமல் விட்டுவிட்டான் என்பதை அறிய முடிகிறது.பிறந்தான்,     வளர்ந்தான்வசிட்டனிடத்திலே  கல்வி  கற்றான் என்றே முடித்துவிட்டான்.

பிற்பாடு தண்டியலங்காரம் எனும் பாவிலக்கணம் எழுதிய தண்டி கம்பரின் பேரர் என்பர் சிலர். அதற்கு சாட்சியாகக் கூறுவது இந்த ஒரே பாட்டை மட்டுமே.
ஆடக மன்றத்து நாடக நவிற்றும்
வடநூ லுணர்ந்த தமிழ்நூற் புலவன்
பூவிரி தண்பொழிற் காவிரி நாட்டு
வம்பவிழ் தெரியல் அம்பி காபதி
மேவருந் தவத்தினிற் பயந்த
தாவருஞ் சீர்த்தித் தண்டியென் பவனே.'  இதை முதலில் படித்த போது அம்பிகாபதி வீணாக தன் உயிரை விடாமல் கம்பரின் சந்ததி அழியாமல் காப்பார்றிவிட்டன் என்ற நினைப்பில் என கனவு பலூன் மேலேறியது, புதிதாக கண்டுபிடித்ததை போல். என் நண்பர் ஒருவரும் அவ்வாறே நினைத்தார். ஆயினும் தமிழரிஞரிடம் கேட்டு தெளிவுறலாம் என்று திரு நெல்லைக் கண்ணன் அவர்களிடம் கேட்டேன். இதைக் கட்டுக்கதை என்று கூறி பலூனிலிருந்து காற்றைக் இறக்கிவிட்டார்.

                                                                                                                                                                                        தொடரும்

Saturday, January 21, 2012

உபசரிப்பு, முறை

எங்காவது நான் போகின்ற வழியில் உறவினர் யாரேனுமிருந்து, எனக்கும் நேரமிருந்தால் கட்டாயம் அவர்கள் வீட்டிற்குச் சென்று, பார்த்து, பத்து நிமிடங்களாவது பேசிவிட்டுத்தான் வருவேன். கல்யாணமான புதிதில் என் மனைவியின் சொந்தக்காரர்கள் வீடு, வழியிலிருந்தால் அவர்கள் வீடுகளுக்கும் செல்வதையும் வழக்கமாக்கிக் கொண்டேன். என் மனைவிக்கு இதில் அவ்வளவு விருப்பமில்லை. முதலிலேயே சொல்லிட்டுதான் போகணும்.. அவாளுக்கு எவ்வளவோ வேலையிருக்கும். நாம போய் நந்தி மாதிரி ஏன் நிக்கணும்?” நான் உடனேயே அவர்கள் முக்கியமான வேலையிருக்கின்றது என்றால் சொல்லி விட்டுக் கிளம்பி, அவர்கள் வேலையைப் பார்த்துக் கொள்வார்கள்". " நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை. அதனாலே அவா அப்படியெல்லாம் மூஞ்சிலே அடிச்ச மாதிரி சொல்ல மாட்டா" என பதில் உடனேயே வந்தது. அப்பொழுது, எனக்கு யாருடைய வீட்டிற்கும்  சொல்லிக் கொண்டுப் போவதோ வருவதோ பழக்கமில்லாதது. வீடு பூட்டியிருந்தாலும் அதைப் பற்றியோ, வேஸ்டாக ஒரு சுத்து சுத்தி வந்ததைப் பற்றியும் கவலைப் படாதவன். கடைசியாக அவள் எடுத்த அஸ்திரம் "அவா நம்ம வீட்டுக்கு வருவதேயில்லை. நாம் ஏன் அவா வீட்டுக்குப் போகணும்? "  "அவா வருவதும் வராததும் அவா இஷ்டம். நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. நான் இப்படித்தான்என்றேன். சிறு வயதிலேயே என் பெரிய மாமா கூறி, அது மண்டையில் ஆழப்பதிந்திருந்தது. வந்து போயிண்டு இருந்தாதான் உறவு. குற்றம் பார்க்கில் சுற்றமில்லை
திருந்தாத ஜன்மம்; யார் சொல்லியும் கேட்காதது என நினைத்தாளோ என்னவோ என்னை என் வழியே செல்ல விட்டாள். அவளை விட அவள் சுற்றத்தாரிடம் நான் பாப்புலர் என்பது மட்டுமில்லாமல், நெருங்கியவனும் கூட.
முன்னறிவிப்பின்றி அப்பா ஆபிஸிலிருந்து யாரையேனும் (JE அல்லது S O) வீட்டிற்கு திடீரென்று அழைத்து வருவார். அப்படியில்லையென்றால்  ஆபீஸிற்கு சாப்பாடு கேரியரில் போகும். இதற்கென்றே  இரண்டு ஐந்து அடுக்குடன் கேரியர், அதற்கெ இரண்டு பச்சைநிற மூங்கில் கூடைகள் பீங்கான் பிலேட்டுகள் ஸ்பூன் என்று எல்லாம் இருக்கும். நான் சிறுவயதில் பெரியவானவுடன் முதலில் வாங்க வேண்டிய ஒரு முக்கியப் பொருளாக கருதியது இந் காரியர் தான். சி.ஏ படிக்கும் போதும் சரி, முடித்து சென்னை கோபலபுரத்தில் பிராக்டிஸ் செய்யும் போதும் மூன்று அடுக்கு காரியரை வயர்கூடையில் தட்டு(பிசைந் சாம் எனக்குப் பிடிக்காது), ஹார்லிக்ஸ் பாட்டிலில் மோர் சகிதம்தான் செல்வேன்.
அப்பா இறந்த போது வந்த அவரின் நெருங்கிய நண்பர் ஸ்ரீதரன் சார் (அவரும் அப்பாவை எங்கள் வீட்டில் அழைப்பது போலவே சீனா என்றுதான் கூப்பிடுவார்) சொன்னார் “ சீனாவினுடைய ஹாஸ்பிடாலிட்டி யாருக்குமே வராது. உங்க வீட்டிற்கு வந்தோ, இல்லை உங்க வீட்டிலிருந்த வந்த சாப்பாட்டையோ சாப்பிடாத PWD ஆபிஸர்களே கிடையாது. இவன் AEயாயிருக்கும் போதே நேரா CE ஆபிஸ் போவான். எங்க அம்மாவை பார்த்து அது எப்படிம்மா நீங்க அவ்வளவு சீக்கிரம் சமையல் பண்ணி அனுப்பிடுவீங்க? எனக்கு சீனா கேக்கறதைப் பார்த்தா ஏதோ ஒட்டல்லில் ஆர்டர் குடுப்பதைப் போலிருக்கும் அம்மா “அப்படியென்ன பெரிசா கேட்டுட்டார். சாப்பாடுதானே. அவர் குணம் தெரியும் அதனால் எப்படியிருந்தாலும் மேலேயே மூணு நாலுபேர் சாப்பிடுற மாதிரிதான் சமைப்பேன். மிஞ்சி போச்சுன்னா வைக்க வேண்டியது சாதம் மட்டும்தான். உண்மையிலேயே ஆச்சர்யம்தான். ஆள் அம்பு இருந்தாலும் பண்ணுவதற்கு மனதும் வேண்டும். மீந்தால் சேமித்து அடுத்த நாள் சாப்பிடலாம் என்பதற்கு பிரிட்ஜும் கிடையாது.


என்னுடைய நெருங்கிய நண்பரின் தந்தையுடன் ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும் போது “என்னைவிட வயதில் பெரியவர்களை நான் போய்ப் பார்ப்பேன்; என்னைவிட சிறியவர்கள் எனை வந்துப் பார்க்கவேண்டும். அதே போல் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் நான் தான் போய் பார்க்கவேண்டும் என்றார். இதில் எனக்கும்  உடன்பாடே. 
தசரதன் தான் பெரியச் சக்கரவர்த்தியாயிருந்தும் தன் காரியம் ஆக வேண்டுமென்பதால் உரோமபாதன் இருக்கும் அங்க தேசத்தை நோக்கி அமைச்சர் சுமந்திரனுடன் தேரில் சென்றான். தசரதன் வருகின்ற செய்தியை ஒற்றர்கள் மூலம் கேள்வியுற்ற உரோமபதன் தசரதனை எதிர் சென்று வரவேற்கப் புறப்பட்டான். கடந்த 10 வருடங்களில் சென்னைக்குச் சென்று வந்தது நினைவுக்கு வந்தது. ஒரே ஊரில் இருக்கும் சொந்த சகோதர்கள் கூட வாரம் ஒரு நாளில் சந்தித்துக் கொள்வதில்லை. தெரியாமல் வாரநாட்களில் பிரைம் டைமில் சென்று விட்டால் ஏன் இவன் வந்து விட்டான் என்ற பார்வை. அல்லது நாமும் அவர்கள் பார்க்கும் அத்தொடரைப் பார்ப்பவராக இருக்க வேண்டும். சீரியல்கள் இல்லாத வாரக்கடைசியில் போகலாம் என்றால் அவர்கள் வெளியே சாப்பிட, ஷாப்பிங் அல்லது கோவிலுக்கு அல்லது அவர்களின் பண்ணை வீட்டிற்கோ சென்று விடுகின்றனர். அந்த வீட்டிற்கு, தெரிந்தோ, தெரியாமலோ, பணத்தை நேர்வழியிலேயே சம்பாதித்திருந்தாலும் நெருங்கிய சொந்தத்தைக் கூடக் கூப்பிடுவதில்லை. 
இவர்களுக்குப் போன் பண்ணாமல் போக முடிவதில்லை. இதனாலேயே இப்பொழுதெல்லாம் போன் பேசிவிடுவதோடு சரி. இவ்வர்களில் பாதி பேர் நம்மைக் கூப்பிடும் போது கட்டாயம் சொல்லும் வார்த்தை “ Come home some time”. நானும் ஓயாமல் “Tell me the exact time and date and let me know if I am coming for lunch or dinner” என்று கேட்டும் பதில் “எப்ப வேணா வா. அப்படிச் சொன்னதை நம்பி நான் ஏமாறத் தயாராயில்லை.
எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன்-    தனைக் கண்ணுற்று. எழிலி நாண
அதிர்கின்ற பொலந் தேர்நின்று அரசர்பிரான் இழிந்துழி. சென்று அடியில் வீழ.
முதிர்கின்ற பெருங்காதல் தழைத்து ஓங்க. எடுத்து இறுக முயங்கலோடும்.
கதிர் கொண்ட சுடர் வேலான்தனை நோக்கி.  இவை உரைத்தான் - களிப்பின் மிக்கான்;
எதிர் கொள்ள வருகின்றவரைப் பார்த்தவுடன் தான் சக்கரவர்த்தியாயிருந்தாலும் தன்னுடையத் தேரிலிருந்து இறங்குகின்றான் தசரதன். உரோமபாதன் தசரதன் பாதத்தில் வீழ்ந்து வணங்குகின்றான். பேரன்பு கொண்டு தசரதன் அவனை வாரி எடுத்து தழுவுகின்றான். ஒரு நண்பர் தான் கார் வாங்கிவிட்டதை எனக்கு அறிவிக்க, ஒரு நிகழ்ச்சிக்குப் போய்விட்டு வரும் போது  காருக்குள்ளிருந்தே ஹாரன் அடித்து கைக்காட்டி சென்றது தசரதன் தேரிலிருந்து இறங்கினான் என்று படித்தப் போது நினைவியில் ஆடியது. ரோமபதன் காலில் விழும்போதே அவனை வாரி தழுவி நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் தசரதன் எனும் போது : கே கே எஸ் எஸ் ஆர் இராமச்சசந்திரன்குடும்ப சகிதமாக ஜெயாவின் காலில் வீழந்ததைப் புகைப்படும் எடுத்து பத்திரிகைகள்ளில் போட்ட அரசியல் கட்சிகளின் கலாசாரம் மனதிலாடியது.
மிகவும் மகிழ்ந்த உரோமபதன் தசரதனை நோக்கி
யான் செய்த மா தவமோ! இவ் உலகம் செய் தவமோ! யாதோ! இங்ஙன்.
வான் செய்த சுடர் வேலோய்! அடைந்தது?’ என. மனம் மகிழா. மணித் தேர் ஏற்றி.
தேன் செய்த தார் மௌலித் தேர் வேந்தைச் செழு நகரில் கொணர்ந்தான் - தெவ்வர்
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன்   என உரைக்கும் உரவுத் தோளான்.
உபசார வார்த்தைகளை கூறி உரோமபாதன் பெரியவர்களை உபசரிக்கும் போது முறையின் செய் வேண்டியவைகளைச் செய்து விருந்தளித்து 
செவ்வி நறுஞ் சாந்து அளித்து. தேர் வேந்தன்-
 
தனை நோக்கி. இவண் நீ சேர்ந்த
கவ்வை உரைத்து அருள்திஎன. நிகழ்ந்த பரிசு
அரசர்பிரான் கழறலோடும்.
உணவு உணடபின் சந்தனமளித்தல் மரபு. அதனால்தான் இதற்கு முன் கவியில் விருந்தைக் குறிப்பிட்டு  இக்கவியில் சந்தனத்தைக் குறிப்பிடுகின்றார். பெரியவர்களுக்குச் செய்ய வேண்டிய பதினாறு வகையான உபசாரங்களாவன: 1. அர்க்கியம் : கை அலம்ப நீர் அளித்தல்.  2. பாத்யம் : பாதங்களை அலம்புவதற்கு நீர் கொடுத்தல். 3. ஆசமநீயம் : மும்முறை மந்திர நீர் அருந்துவது. 4. ஆசனம் : உட்கார ஆசனம் அளிப்பது. 5. அபிஷேகம் : நீராடுதல். 6. வஸ்திரம் : புதுத் துணி உடுத்துதல். 7. கந்தம் : சந்தனம் போன்ற மணப் பொருட்களை இடுதல். 8. புஷ்பம் : மலர் சூட்டுதல். 9. தூபம் : சாம்பிராணிப் புகை. 10. தீபம் : விளக்குக் காட்டுதல். 11. நைவேத்தியம் : அமுது படைத்தல். 12. கற்பூரம் : கற்பூர ஆரத்தி செய்தல். 13. சாமரம் : கவரி வீசுதல். 14. ஆலவட்டம் : விசிறி சமர்ப்பித்தல். 15. சத்ரம் : குடை எடுத்தல். 16. தர்ப்பணம் : கண்ணாடி காட்டுதல்)
இன்றும் கூட நான் சில திருமண நிகழ்ச்சிகளில் அல்லது ஏதோ வீட்டு விசேஷங்களில் கூட யாரேனும்ம் நெருங்கிய சொந்தங்களே கூட தன்னை சரியாக உபசரிக்கவில்லை என்று சாப்பிடாமல் பாதியிலேயே போய், அழைத்தவரை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்குவதைப் பார்க்கின்றேன். கூட்டம் அதிகமாகயிருக்கும் போது எப்படியும் எல்லோரையும் உபசரிப்பது என்பது எவ்வளவு முயன்றாலும் முடியாமல் போய்விடுகின்றது. ரொம்பவே சகஜமாக இருக்கின்றார்களே என்று கவனிப்பில் சிறு குறைபாடு நேர்ந்தாலும், உடனே மூகமெல்லாம் சிவந்து ஒரு பெரிய முட்டைகோஸ் மாதிரி ஆகி பார்பவர்களுக்கும் வேதனையளிக்கும் என்பதையும் மறந்து விடுகின்றார்கள்.
தசரதன் தான் ருசியசிங்க (கலைக்கோட்டு) முனிவனை அயோத்திக்கு வரவழைத்து யாகம் செய்ய வேண்டும் எனக் கூற 
அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந்தவனைக்
கொணர்ந்து ஆங்கண் விடுப்பென்; ஆன்ற
செவ்வு முடியோய்!எனலும். தேர் ஏறிச்
சேனையொடும் அயோத்தி சேர்ந்தான்.
பொறாமை  முதலிய  தீய  குணங்களை நீக்கிய மனத்தை   உடையவரான கலைக்கோட்டு  முனிவரை அயோத்திக்கு அழைத்து வந்து உன்னிடம் சேர்த்து விடுவேன். உயர்ந்த அழகிய மணிமுடி தரித்த வேந்தே! என உரோமபதன்  கூறியதும் உடனே தயரதன் தேரேறி. சேனையோடு அயோத்தி சென்று சேர்ந்தான்.
மன்னவன் அகன்றதும் உரோமபாதன் ருசியசிங்க முனிவரையடைந்து சாஸ்டாங்கமாக நமஸ்கரித்து தனக்கு ஒரு வரமளிக்க வேண்டும் என அதற்கு முனிவன் யாது அவ்வரம் என வினவ “ தேவரீர் அயோத்தி சென்று யாகம் முடிவித்து மீண்டும் இந்நகர் மீள வேண்டும் என்றான் அவரும் தன் மனைவியான சாந்தையோடு அயோத்தியை அடைந்தார்.
எங்கள் வீடுகளில் ஊருக்குக் கிளம்பும்போதும் சரி, பண்டிகைக் காங்களிலும் சரி கட்டயாம் பரிட்சை எழுதும் போதும் பெரியவர்களுக்கு சாஸ்டாங்கமாக் நம்ஸ்காரம் செய்து விட்டு கிளம்புவது வழக்கம். என் அத்தை பிள்ளைகள் பரிட்சைக்கு போகும் போது நம்ஸ்கரித்தால் 80-85%என்று மார்க்கையும் மறக்காமல் சொல்லி ஆசிர்வதிப்பார் என் அத்திம்பேர். அன்று ஒரு வேளை கணக்குப் பரிட்சையா இருந்தால் அத்தை “ஏண்ணா. இன்னிக்கு கணக்கு பரிட்சை என்றதும் அத்திம்பேர் உடனேயே “ 95-100%என்று மாற்றி சொல்லி ஆசிர்வதிப்பார். என் தந்தையை பொருத்த வரை நன்றாக் கஷ்டப்பட்டு டித்தால் போதும். பாசாவதைப் பற்றியோ பெயிலாவதைப் பற்றியோ வருத்தப்டமாட்டார். என்னுடை இன்னொரு அத்திம்பேர் குடும்த்தில் மனிதர்கள் காலில் விழுவது என்பதை ஒத்துக் கொள்ளாதவர்கள். என் மாமனாருக்கும், நான் நமஸ்காரம் செய்யும் போது என்ன செயவது, சொல்வது என்பது குறித்து எப்போதுமே குழப்பம்தான்.  
தூதர் முனிவன் வருகின்றான் என உரைக்கவும் தசரதன்
எழுந்தனன் பொருக்கென. இரதம் ஏறினன்;
பொழிந்தன மலர் மழை. ஆசி பூத்தன;
மொழிந்தன பல் இயம்; முரசம் ஆர்த்தன;
விழுந்தன தீவினை. வேரினோடுமே. இராமன் பிறந்து அரக்கர் தம் கொலைத்தொழிலை அழிப்பான். ஆகையால் தீவினை வீழ்ந்தன வேரோடு என்கின்றார். இரண்டு மூன்று யோசனை தூரம்(4800 கெஜம் ஒரு யோசனை தூரம். சுமாரக 4.3 கீமி. ஹரே ராம் ஹரே கிருஷ்னா நிறுவனர் சுவாமி பிரபுபாத ஒரு யோசனை என்பதை 8 மைல் என்றே குறிப்பிடுகின்றார்.) சென்ற தசரதன் பிதிர்ந்தது எம் மனத் துயர்ப் பிறங்கல் முதிர்ந்த மா தவமுடை முனியை. கண்களால்.   எதிர்ந்தனன்
தனக்கு    மக்கட் பேறில்லை என்பதைப் பெருந்துயராக மலையை ஒத்த துன்பமாகக் கருதியிருந்தான் என்பதால் ‘‘மனத்துயர்ப்  பிறங்கல்’’ என்றான்.   அத்துயரம்  அடியோடு தீர்ந்தது என்பதால் “பிறங்கல் பிதிர்ந்ததுஎன்றான். எம்என்றதால் தேவியரையும்  நாட்டுமக்களையும்  உட்படுத்திக்  கூறினான்.  என்பது  கருத்து. 
பிறங்குதல்: வளர்தல்.  பிதிர்தல்:  சிதறுண்டு  போதல்.
இழிந்து போய் இரதம். ஆண்டு. இணை கொள் தாள் மலர்
விழுந்தனன். வேந்தர்தம் வேந்தன்;    மெய்ம்மையால்.
மொழிந்தனன் ஆசிகள் - முதிய   நான்மறைக்
கொழுந்து மேல் படர்தரக்  கொழுகொம்பு ஆயினான்.
முனிவனைக் கண்களால் கண்ட உடனேயே வேந்தன், தன்  ரதத்திலிருந்து கீழிறங்குகின்றார்.
அவர்களைத் தக்கபடி உபசரித்து மாநகர் வந்ததும், வசிட்டனும் ருசியசிங்க முனியும் அரச மண்டபம் அடைந்தனர்.
கசட்டுறு வினைத் தொழில் கள்வராய் உழல்
அசட்டர்கள் ஐவரை அறுவர் ஆக்கிய
வசிட்டனும். அரு மறை வடிவு போன்று ஒளிர்
விசிட்டனும். வேத்தவை பொலிய மேவினார்.
ஐவரை   அறுவர்  ஆக்கிய’  ஐம்புலன்களையும் தத்தம் நெறியில் செல்லவிடாது  தடுத்து நிறுத்திய என்பது பொருள். ஐந்து,  ஆறு என்ற எண்ணு  பெயர்களை  அமைத்த நயம் கருதத்தக்கது. வசிட்டன் என்பதற்கு அண்மையில் இருப்பவன் என்றும் ஒரு  பொருளாம்.  அரிய  மறைகளெல்லாம் திரண்டு ஒரு வடிவம் கொண்டதெனத் திகழ்பவன் என்றது கலைக்கோட்டு   முனிவனை. வேந்து+அவை=வேத்தவை.  வேந்தவைக்கு இம்முனிவர்களால் பொலிவுண்டாயிற்று என்பது கருத்து.
’சான்றவர் சான்றவ! தருமம். மா தவம்.
போன்று ஒளிர் புனித! நின் அருளில் பூத்த என்
ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகுமால்;
யான் தவம் உடைமையும். இழப்பு இன்றாம்அரோ.
உன ஆசியால் என் பமையா குலம் ஆட்சியில் நிலைப் பெற்று விளங்கும் என்ற தசரதன் கூற்றுக்கு முனிவன் புகழ் பெற்ற நீண்டதவத்தையுடைய வசிட்டனின் துணையும் குற்றமில்லாத நல்ல செய்கையும் உடையவன் நீ; ஆதலால் உனக்கு ஒப்பாக இவ்வுலகில் யாரிருக் முடியும்எனக் கூறி
என்றன பற்பல இனிமை    கூறி. நல்
குன்று உறழ் வரி சிலைக்    குவவுத் தோளினாய்!
நன்றி கொள் அரி மகம்    நடத்த எண்ணியோ.
இன்று எனை அழைத்தது இங்கு?    இயம்புவாய்!என்றான். “ என்னை இங்கு அழைத்து நன்மை பயக்கும் அரி மகம்( அசுவமேத யாகம்) நடத்த மட்டும் எண்ணியோ?
வினவ தசரதன் உலப்பு இல் பல் ஆண்டு எலாம். உறுகண் இன்றியே.
தலப் பொறை ஆற்றினென்;    தனையர் வந்திலர்;
அலப்பு நீர் உடுத்த பார்    அளிக்கும் மைந்தரை
நலப் புகழ் பெற. இனி     நல்க வேண்டுமால்.
பல ஆண்டு.நாட்டின் தலைமையிலிருந்துவிட்டேன்.  மைந்தர் இன்மையால் எனக்குப் பிறகு இந்த நாட்டை நெறி  நின்று காக்க வல்ல மைந்தரை இனி நீங்கள் தான் கொடுத்தருள வேண்டும்.என்றான் .
சென்னையில் என் சொந்தக்காரர்ளில் ஒருவரை பார்ப்பதற்காக ஞாயிறு மாலை முன் கூட்டியே சொல்லிவிட்டுச் சென்றேன். அவர்கள் 7.00 மணிக்கு கச்சேரிக்குக் கிளம்ப வேண்டும் என்பதால் நான் சரியாக 4.30 மணிக்கே சென்றதால், என்னை நன்கு உபசரித்தனர். எல்லாவற்றையும் பற்றிப் பேசிவிட்டு பேச்சு அவர்களின் இரு ஆண் குழந்தைகளைப் பற்றித் திரும்பியது. அவர்கள் பிள்ளைகளைப்  பார்ப்பதற்காக அமெரிக்காச் சென்று வந்ததைப்,  பற்றி  பேசிக் கொண்டிருந்தர். 
அவர்களுக்குக் கல்யாணம் ஆகி 14 வருடங்கள் குழந்தையில்லாமல் இருந்தவர்கள். வடக்கில் வேலையையாயிருந்தவர்கள், சென்னைக்கு வரும் வழியில் நாக்பூரில் இருக்கும் என் சித்தி வீட்டிற்கு சென்று இரண்டு நாள் இருந்து விட்டு வருவதற்காக, வெள்ளிக்கிழமை போய் இறங்கினார்கள். அன்று மாலையே தேவி உபாசகர் ஸௌந்தர்ய லஹரி கிருஷ்ணன் என்பவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் என் சித்தி. அவரிடம் இவர்கள் தங்களுக்குக் குழந்தையில்லை என்றனர். அவரும் இவர்களை சௌந்தர்ய லஹரியில் ஒரு சுலோகத்தை குறிப்பிட்டு 48 நாட்களுக்கு தினமும் 108 முறை மேடையில் பாலா திரிபுரசுந்தரியின் படத்தை வைத்து, குளித்து ஈரத்துணியுடன் பிரதட்சினம் செய்து ஓவ்வொரு தடவை சொல்லி முடித்தப் பின்னும் நமஸ்கரிக்கச் சொன்னார். அவர்களும் ஆழ்ந்த சிரத்தையுடன் செய்தனர். ஒரு வருடத்திலேயே அவர்களுக்கு அழகான ஒரு ஆண் பிள்ளை பிறந்தான். அடுத்த வருடத்திலேயே இன்னொரு ஆண் மகன். நானும் நாக்பூரில் பின்னொரு முறை என் கல்யாணத்திற்கு முன், திரு. கிருஷ்ணனை சந்தித்திருக்கின்றேன்.
முனிவனும் அரச! நீ இரங்கல்; இவ் உலகு
ஒன்றுமோ? உலகம் ஈர்-ஏழும் ஒம்பிடும்
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்
இன்று நீ இயற்றுதற்கு எழுக. ஈண்டு!என்றான்.
ஆயதற்கு உரியன கலப்பை யாவையும்
ஏயெனக் கொணர்ந்தனர்: நிருபர்க்கு ஏந்தலும்.
தூய நல் புனல் படீஇ. சுருதி நூல் முறை
சாய்வு அறத் திருத்திய சாலை புக்கனன்.
கலப்பை- உபகரணம். வேள்விச்சாலை அமைத்தற்கு நிலம் உழுதற் பொருட்டு உழுபடை வேண்டுவதால் “ கலப்பை யாவையும் என்பதற்கு உழுபடை முதலிய எல்லாக் கருவிகளையும் என்றும் உரைக்கலாம்.
ஒருவருட காலம் நடந்த அசுவமேத யாகத்தில் ருசியசிங்கன் புத்திர காமேஷ்டி யாகம் நடத்த
ஆயிடை. கனலின்நின்று. அம் பொன் தட்டம் மீத்
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று. - சூழ்
தீ எரிப் பங்கியும். சிவந்த கண்ணும் ஆய்.
ஏயென. பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே.
அப்போது  அந்த  வேள்வித் தீயிலிருந்து;  தீ எரிவது போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக ஒரு   பூதமானது அழகிய  ஒரு பொன் தட்டத்தின் மேலே  தூய்மையான அமுதத்தை  ஒத்த  ஒரு  பிண்டத்தை தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது.  ஏய்  எனச் சொல்வதற்குள்  (ஒரு  அளவைக் குறிப்பு) கம்பர் இச்சொல்லைப்  பல இடங்களில் எடுத்தாண்டுள்ளார்.
 பூதம் வைத்து விட்டுச் சென்றதும் ருசியசிங்க முனிவனும்
உய்த்த நல் அமிர்தினை; உரிய மாதர்கட்கு.
அத் தகு மரபினால். அளித்தியால்என்றான்.
உனக்குரிய பட்டத்து அரசியர்களுக்கு மூத்தவள். இளையவள் என்ற
முறைப்படியே கொடுப்பாயாக. கொடுத்தால் உலகம் உய்க்கும் மக்ள் பிறப்பார்கள் என்று கூறினான்.


அன்று எல்லாவற்றிலுமே ஒரு முறையிருந்தது. அம்முறை அறத்தைடிப்படயாகக் கொண்டிருந்தது. தமிழில் பிள்ளைத்தமிழ் உருவாதற்கு காரணமாகவிருந்தவர் குழந்தை செல்வம் இல்லாத பெரியாழ்வார். கம்பனோ பிரபந்தத்தில் துளையாமாடியவன்(நீரில் மூழ்கியும் நீந்தியும் நெடுநேரம் விளையாடுதல்). ஆனால் இராமனின் குழந்தைப் பருவத்தைப் பற்றியோ அவனின் சிறுவயது விளையாடல்களையோப் பாடவேயில்லை.  

                                                                                தொடரும்