இங்கு நடந்த ஒரு இலக்கிய வட்ட கூட்டத்தில் பேசிய வெளி நாட்டவரான எனது நண்பர் பிராங் பிஷ்பெக்(Frank Fischbeck) அவருடைய சிறு வயதில் தென் ஆப்பிரிக்கா (அப்போதைய ரொடிஷியா) விலிருந்து ஹாங்காங் வரும் வழியில், இப்போது போல் அக்காலத்தில் நேரடி விமானப் பயணமில்லாத காரணத்தால் பல விமானங்கள் மாறவேண்டியக் கட்டாயமும் இருந்ததால், அவர் பம்பாயில் இறங்கவேண்டியிருந்தது. தென் ஆப்பிரிக்கர்களுக்கு அன்று இந்தியாவில் இறங்குவதற்குத் தடையிருந்தது. அப்படியும் போராடி பம்பாயில் நுழைந்தார். டாக்ஸியில் சென்றபோது டிரைவர் “சாவு ஊர்வலம் பார்க்கணுமா?” என்று கேட்க, மிகவுமே அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார். பின்னாளில் அவர் சாவையும் சந்தோஷமாகக் கொண்டாடும் மனோபாவத்தையும், இறப்பையும் கொண்டாடும் இந்து மதத்தையும் வியந்தாகக் கூறினார்.
அவர் பார்த்தது “கல்யாண சாவாக” இருந்திருக்கவேண்டும். எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு, வாழ்க்கையின் எல்லா சக்கரங்களிலும் சுழன்று, தானே நின்று போன கடிகார முள்ளாய்தான் இருந்திருக்கவேண்டும். இதுவே கம்பன் கண்ட கோசலம். அத்தேசத்தில் ”கூற்றமில்லை.” அதாவது, அகால மரணமில்லை.
சாவையே கொண்டாடும் இந்த தேசத்தின் கலாச்சாரம், பிறப்பையும் அதைவிட பன் மடங்காகக் கொண்டாடும். பிறப்பிலும் சரி, இறப்பிலும் சரி பிரதானமானது சடங்குகள்தான்.
கர்ப்பகாலத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கவேண்டும். ஆசைப்பட்டது அனைத்தையும் வாங்கித் தரவேண்டும். பிரசவம் பெண் வீட்டார் தான் செய்ய வேண்டும். பெரியண்ணா மன்னியின் இரண்டாவது மகள் பிறக்கும் சமயம் நான் சி.ஏ இண்டெர் பரிட்சை எழுதுவதற்காக ஸ்டடி ஹாலிடேஸில் வீட்டிலிருந்தேன். எப்போதும் சி.ஏ பரிட்சை நவம்பர் மற்றும் மே இரண்டாம் தேதி துவங்கும்.

எனக்கோ என் பரிட்சை என்னவாகும் என்ற கேள்வி. நன்றாக பிளான் பண்ணி படித்துக் கொண்டிருக்கும் போது, தீடிர்னு பிரேக் வந்தா ரிசலட் எப்படி வேண்டுமானலும் போகலாம். முதலில் ஒரு வாரம், அதன் பிறகு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தினால் மேலும் ஒரு வாரம், என பரிட்சை ஒத்தி வைக்கப்பட்டது. . நவம்பர் மூன்றாம் வாரம் தான் ஆரம்பித்தது. கடைசிப் பரிட்சை நவம்பர் 25 ஆம் தேதி. பரிட்சை எழுதி விட்டு அன்று பிறந்த பெரியண்ணா-மன்னியின் மகளைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குச் சென்றிருந்தேன். சிறு குழந்தைகளை தூக்கி வைத்துக் கொள்ள பயம். கழுத்து நன்றாக நின்ற பின்னர்தான் நான் தூக்கி வைத்து கொண்டு கொஞ்சுவது. என்னுடன் ஜாயிண்ட் ஸ்டடிக்கு வரும் நண்பன் தேவநாதன், பிறந்த குழந்தைகளையும் லாவகமாக தூக்கி வைத்துக் கொள்வான். அவள் பிறந்த அவ்வருடம் சி ஏ இன்டெர் பாஸ் செய்து விட்டேன். அதனாலேயே அவள் பேரில் அண்ணாவின் பையனைவிட ஆசை கொஞ்சம் அதிகம்.
பூதம் கொடுத்த பிண்டத்தை மனைவிகளுள் முதலில் பட்டமகிஷியான கோசலைக்கு சுதைப் பிண்டத்தில் பாதியைக் கொடுத்தான். (50%)
மா முனி அருள் வழி. மன்னர்மன்னவன்.
தூம மென் சுரி குழல் தொண்டைத் தூய வாய்க்
காமரு கோசலை கரத்தில். ஓர் பகிர்.
தாம் உற அளித்தனன். சங்கம் ஆர்த்து எழ.
தூம மென் சுரி குழல் தொண்டைத் தூய வாய்க்
காமரு கோசலை கரத்தில். ஓர் பகிர்.
தாம் உற அளித்தனன். சங்கம் ஆர்த்து எழ.
பின்னர் கேகேயன் மகளான கைகேயிற்கும் மிச்சமாக உள்ளதில் பாதியையளித்தான் (25%) சுமித்திரைக்கு மீதியைக் கொடுத்த தசரதன் தட்டில் சிந்திக்கிடந்த எஞ்சிய சுதையை பின்னும் சுமித்திரைக்கே கொடுத்தான்.
வான்மீகியில் பங்கீடு- தசரதனும் பெரிதும் மகிழ்ந்தவனாய் அந்தப்புரம் அடைந்து,அப்பாயசத்தில் பாதியைக் கோசலைக்கும் மீதியில் பாதியைச் சுமித்திரைக்கும் கொடுத்தார்; மிகுந்து நின்றதில் பாதியைக் கைகேயிக்குக் கொடுத்தார். அமுதம் ஒத்த அந்தப் பாயசத்தில்
மேலும் எஞ்சி நின்றதைச் சிறிது நேர யோசனைக்குப் பிறகு சுமித்திரைக்கு மட்டும் கொடுத்தார். இவ்வாறு தசரதன் தம் மனைவியர்க்கு அந்தப் பாயசத்தை வெவ்வேறு அளவில் கொடுத்தார்”. (1.16:29, 30,31)
மேலும் எஞ்சி நின்றதைச் சிறிது நேர யோசனைக்குப் பிறகு சுமித்திரைக்கு மட்டும் கொடுத்தார். இவ்வாறு தசரதன் தம் மனைவியர்க்கு அந்தப் பாயசத்தை வெவ்வேறு அளவில் கொடுத்தார்”. (1.16:29, 30,31)
கம்பனோ முறையில் எனும் போதே, ஆர்டரைப் பின்பற்றுவதால் கைகேயி இரண்டாவது ராணியார் என்பது தெரிகின்றது. இல்லை கைகேயிதான் கடைசி என்று கூறும் இராமாயணங்கள், அதற்குக் கூறும் காரணம் உலகியில் பற்றியது. வயதான காலத்தில் இளைய வயதினரை திருமணம் செய்பவர் அவர்களிடத்து மிகவும் பிரியமாயிருப்பதும் போர்க்களமேயாயினும் அழைத்துச் செல்வதும் இயல்பே என்பதாலும் கைகேயி இளையவள் என்று கூறுகின்றன. எனக்குக் கூட இந்த கருத்தில் உடன்பாடே.
யாகம் முடித்து தசரதன் தட்சிணைகள் வழங்கி சரயு நதியில் நீராடி (யாகம் முடிந்து தானம் வழங்கி நீராடுதல் மரபு). அரசவை வந்து குல குருவான வசிட்டனை வணங்கி பிறகு கலைக்கோட்டு முனிவனை வணங்கி அவனும் மகிழ்ந்தே புறப்பட்டான். தேவிகள் மூவரும் கருவுற்றனர்.
தெரிவையர் மூவரும் சிறிது நாள் செலீஇ
ம்ருவிய வயாவொடு வருத்தம் துய்த்தலால்
பொரு அரு திருமுகம் அன்றி. பொற்பு நீடு
உருவமும் மதியமோடு ஒப்பத் தோன்றினார்.
கருவுறுதற்குறிகளில் சேர்ந்த மயற்க்கை (மசக்கை) நோயையும் உடல் வெளுத்தலையும் கூறுவது. வயா – கர்ப்பவதிகட்குச் சிற்சில பொருள்கள்மேல் தோன்றும் விருப்பம்.
என்னுடைய அக்கா பிரசவகாலத்தில், வீட்டில் சமையல் வாசனையே அவளுக்கு வருத்தம் தருவிக்க, மூன்று வேளையுமே திருவண்ணாமலையில், அன்று இருந்த மூன்று ஒட்டல்களிலும் சாப்பிடுவாள். வீட்டில் பெரியவர்களோ ஸ்கேனர் இல்லாத குறையைத் தங்கள் கண்களினாலேயே ஈடுசெய்தனர். அவர்களுடைய அன்றைய மூடைப் பொறுத்து “இவ முன்னைவிட ரொம்ப அழகாயிட்டா. அதனால கட்டாயம் பொம்பளை பிள்ளைதான்”. இதுவே அடுத்த மாசம் அழகு கம்மியாகிவிட்டது என பெண்ணாக மாறிவிடும்.
என் மனைவியின் பெற்றோர்கள் மெட்ராசிலேயேயிருந்ததால் வெளியூர் செல்ல வேண்டியத் தொந்தரவு இல்லை. முதல் பிரசவம் என்பதால் ஐந்தாம் மாதம் வளைகாப்பு. பெண் வீட்டில். பழங்காலத்தில் வளையல்காரர்களே வீட்டிற்கு வருவர். வளையல்காரன் வராத குறையை என் மாமியார் தீர்த்து வைத்தார். எழாம் மாதம் சீமந்தம். சீமந்தத்திற்கு இரு நாட்களுக்கு முன்னால் மனைவியின் தாத்தா இறந்துவிட்டார். என் சொந்தக்காரர்கள் எல்லோரும் வெளியூர்களிலிருந்து ஏற்கெனவே வந்து விட்டனர். நான் சீமந்தத்தைக் கான்ஸல் செய்ய வேண்டும் என்று சொன்னபோது ” இது பிறக்கும் குழந்தையின் நலனுக்காக மட்டுமே செய்வது. அங்கு உன் பொண்டாட்டியால போகவும் முடியாது. அப்படியும், அவளுக்கு இஷ்டமில்லாவிட்டால் கேன்ஸல் செய்துவிடலாம்” என என் தந்தை கூறினார். அண்ணன்மார்கள் மற்றும் மன்னிகளும் என் கட்சி. ஆயினும் குழந்தைக்காக எனும் சென்டிமென்டல் பிளாக் மெயில் இருந்த ஒரே காரணத்தால், மனைவி மேடையில் உட்கார சம்மதித்தாள். சீமந்தமும் நடந்தது.
ஆயிடை. பருவம் வந்து அடைந்த எல்லையின்.
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட.
வேய் புனர்பூசமும். விண்ணுளோர்களும்.
தூய கற்கடகமும். எழுந்து துள்ளவே.
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட.
வேய் புனர்பூசமும். விண்ணுளோர்களும்.
தூய கற்கடகமும். எழுந்து துள்ளவே.
சித்தரும். இயக்கரும். தெரிவைமார்களும்.
வித்தக முனிவரும். விண்ணுளோர்களும்.
நித்தரும். முறை முறை நெருங்கி ஆர்ப்புற.
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே.
வித்தக முனிவரும். விண்ணுளோர்களும்.
நித்தரும். முறை முறை நெருங்கி ஆர்ப்புற.
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே.
ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து.
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை. அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை.
திரு உறப் பயந்தனள் – திறம் கொள் கோசலை.
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை. அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை.
திரு உறப் பயந்தனள் – திறம் கொள் கோசலை.
புணர்பூச நட்சத்திரத்தில் கடகராசியில் மண்மகள் மகிழ கோசலை ஓர் மகனை பெற்றெடுத்தாள். பூச நட்சத்திரத்தில் மீன ராசியில் கைகேயி ஒரு மகனை நல்கினாள். ஆயில்ய நட்சத்திரத்தில் கடக ராசியில் சுமித்திரை இளையவனை பயந்தனள். இளைய மென் கொடி, மக நட்சத்திரத்தில் சிங்க ராசியில் மீண்டும் ஒரு மகனைப் பயந்தனள். வால்மீகத்தில் இலக்குவன் மற்றும் சத்ருக்கன் இருவருமே ஆயில்ய நட்சத்திரம். ஜோதிட வானியல் சாஸ்திரங்களிலில் மிக்க தேர்ச்சி பெற்று விளங்கியவர்களான தமிழ் மரபில் வந்த கம்பனுக்கு, அவ்வாறு சொல்ல அவன் ஞானம் இடம் கொடுக்கவில்லை. இருவருமே ஒரே நட்சத்திரம் என்றால் ”ஒருவன் மட்டும் 14 வருடம் ஏன் காடு புக வேண்டும்?” என்ற கேள்வியெழும் என்று கருதியே, இலக்குவன் ஆயில்ய நட்சத்திரம் என்றும், சதுருக்கனன் மக நட்சத்திரம் என்றும் கூறுகின்றான். அது மட்டுமின்றி வால்மீகியிலும் வடபுல, தென்புல மற்றும் கீழ்புல என் பல்வேறு வகையான வழக்குறைகள் உள்ளன. இதில் தென் புலவழ்க்கில் மட்டுமே நாள் கோள் நட்சத்திரம் கிரக உச்சநிலை குறிப்பிடப்படுகின்றது. மற்றவற்றில் இல்லை என்பதால் இது எல்லாமே வால்மீகத்தில் இடைச்செருகல்கள் என்றே திண்ணமாகச் சொல்லலாம்.
கோசலையின் மகனுக்கு ஐந்து கிரகங்கள் உச்சத்திலிருந்தன. “உள்ளதொரு கிரகமுச்சமேவிற் கிராமணியாம்; உபயமுச்சம் பெறிர் பலவூர் கிராமணியாம், தெள்ளியதோரொருமூன்று கிரகமுச்சமானால் கோன்மன்வனாகிச் சிறிதவனிபுரப்பன்,நள்ளியதோரீரிண்ட்டு கிரகமுச்சமானால் ஒரு மண்டலந்தனக்கு நாயகனாவான், புள்ளி செறியோரைந்து கிரகமுச்சமானால் பூலோகநாயகனாமென பலன்கள் புகல்வார்” என்றது சோதிட நூல். இங்கு வந்திருந்த ரானி பத்திரிகை ஜோதிடர் திரு பச்சைராஜன் அவர்களுடம் கேட்ட போது கருணாநிதிக்கு ஐந்து கிரகம் உச்சம் என்றும் ஜெயலலிதாவிற்கு மூன்ரு கிரகம் உச்சமென்றும் கூறினார்.
எனக்கு மகன் பிறந்த சமயம் நான் வடபழனி சரவண பவனில் டிபன் சப்பிட்டுக் கொண்டிருந்தேன். முதல் நாள் இராத்திரி பதினொன்றரை மணியளவில் விஜயா ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு இரவெல்லாம் கண் விழித்துக்( கண்மூடவே முடியாது, அங்குள்ள கொசுக்களின் கடியால்) காத்திருந்தால் மதியம் 2.30 மணி வரை ஒன்றும் தெரியவில்லை. வீட்டுக்குப் போய் அரை மணி தூங்கிவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தவன் 4 மணிக்குத்தான் எழுந்தேன். குழந்தையை முதன் முதல் பார்த்த போது அழகாக தலை வாரி சீவியிருந்தார்கள், என்னைப் போலவே இருந்ததாக நினைவு. ஆனால் குழந்தையின் நல்ல அழகான அம்சங்கள் எல்லாம் அவர்களுடைய வீட்டு வம்சாவழி என்பது என் மனைவி மற்றும் அவர்தம் குடும்பத்தாரின் அபிப்பிராயம்,. அதே போல் தான் எங்கள் வீட்டிலும். என்னையே உரித்துக் கொண்டு வந்திருக்கின்றான் என்ற எண்ணம்.
குழந்தை பிறந்த 13 ஆம் நாளில் புண்ணியாசனம் எனும் பேர்சூட்டு விழா. என் மகனுக்கு நாமகரணமும் ஜாதககரணமும் அன்றே செய்தனர். இதுவும் பெண் வீட்டில்தான் நடக்கும் என்றாலும் சாப்பாடு செலவு மட்டும் பிள்ளை வீட்டிலிருந்து. அந்த பதிமூன்று நாளும் தாடியுடனிருந்து என் உறவினருடன் பஸ்ஸில் திருப்பதி சென்றேன். சித்தப்பா வீட்டிற்கு போய் சாப்பிட்டு சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு நடந்து மலையேறி, மொட்டை அடித்துக் கொண்டு பிரார்தனையை நிறைவேற்றினேன்.
தசரதன் நதியில் நீராடி, தானம் செய்து குழந்தைகளைப் பார்த்திட்டான்.
‘‘இறை தவி்ர்ந்திடுக பார். யாண்டு ஓர் ஏர்; நிதி
நிறைதரு சாலை தாள் நீக்கி. யாவையும்
முறை கெட. வறியவர் முகந்து கொள்க’’ எனா.
அறை பறை’ என்றனன் - அரசர் கோமகன். நகர மாந்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் மூழ்கி திளைத்திருந்தனர்.
நிறைதரு சாலை தாள் நீக்கி. யாவையும்
முறை கெட. வறியவர் முகந்து கொள்க’’ எனா.
அறை பறை’ என்றனன் - அரசர் கோமகன். நகர மாந்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் மூழ்கி திளைத்திருந்தனர்.
இத்தகை மாநகர். ஈர்-அற நாளும்
சித்தம் உறுஙம் களியோடு சிறந்தே
த்த்தமை ஒன்றும் உணர்ர்ந்திலர்; தாவா
மெய்த தவன் நாமம் விதிப்ப மதித்தான்.
க்ஷத்திரியர்க்குப் பன்னிரண்டுநாள் சூதகாசௌமென்பதும்(பந்துக்களின் பிறப்பு இறப்புகளால் ஏறபடும் தீட்டு) அது கழித்த பதின்மூன்றாம் நாளே நாமகரணம் செய்ய வேண்டும் என்பதும் விதி என்பதற்கேற்ப பதிமூன்றாம் நாளில் பெயர் சூட்ட ஆலோசித்தான் வசிட்டன்.
பதிமூன்றாம் நாளில் வசிட்டன் கோசலையின் பிள்ளைக்கு இராமன் என்றும் கேகேயன் புதல்வி ஈன்ற மகவிற்கு பரதன் என்றும், பூங்கொடி சுமித்திரை ஈன்ற ஈர் செல்வங்களுக்கு இலக்குவன் சத்துருக்கன் என்றே பெயரிட்டான்.
இராமனும் சகோதரர்களும் குடுமி வைப்பதையும், பூணூல் அணிவதையும், எல்லாவகைக் கல்வி கற்பதையும், வித்தைகள் பெறுவதையும் கவி ஒரே பாடலில் கூறுகின்றார்.
எதிவரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா
”எது வினை? இடர் இலை? இனிது நும் மனையையும்?
மதி தரு குமரரரும் வலியர்கொல்?’ எனவே.
இவர்கள் அரச குமாரர்கள். இராமன் மக்களோடு மிக இனிமையாக பழகி அவர்கள் நலத்தினை முதலில் அவனே விசாரிக்கின்றான். ”எதிர்வரும் அவர்கள் ” என்பதற்கு அ ச ஞா ”வருபவர்கள் சாதாரண குடிமக்கள் நடந்தே வருகின்றார்கள். அவர்களை நிறுத்தி அரசகுமாரன் பேசுகின்றான். அன்றியும் அவர்களை நிறுத்திப் பேசுகின்றான். இவனோ அரச குமாரன். இவன் தேரிலோ குதிரையிலோ சென்றிருக்கமுடியும். ஆனால் இவர்கள் நால்வரும் நடந்தே செகின்றனர் என்பதை மிக நுட்பமாகக் காட்டுகின்றான்” என்கின்றார்.
அதிகாரத்தில் உள்ளவர்கள் எப்போதுமே இறங்கி வந்து பேசமாட்டர்கள். இதற்கு விதிவிலக்கு பெரும் பதவியில் இருந்தாலும் மற்றவர்களுக்கு உதாரணமாகத்திகழும் அப்துல் கலாம் போன்ற பெரியோர்கள்.
என் தம்பியின் வீடு கே கே நகரில் பதமாசேஷாத்திரி ஸ்கூல் இருக்கும் அதே தெருவில் உள்ளது. என பார்டனர் ஜேவியின் வீடு ஸ்கூலுக்கு எதிரேயே இருந்தது. ஸ்கூல் நாட்களில் இவர்கள் காலையில் வெளியே செல்ல காரை எடுக்கவே முடியாது. குழந்தைகளை கொண்டுவிடுவதற்கும் அழைத்துப் போவதற்கும் அவ்வளவு கார்களும் தெருவையே கண்டபடி நிறுத்தப்பட்டிருக்கும். பள்ளி விட்டு குறைந்தது இரண்டு மணி நேரமாகும் தெரு மீண்டும் சகஜ நிலைக்கு வருவதற்கு.
என் பெரியண்ணாவீட்டில் கார் டிரைவருடன் இருந்தாலும், குழந்தைகள் இருவரும் ஸ்கூல் பஸ்ஸிலேதான் செல்வர். பஸ் ஸடாப்புக்கு கூட நாங்கள் யாரேனும் நடத்தித்தான் கூட்டிக் கொண்டு போவோம். என்றாவது பஸ்சைத் தவரவிட்டுவிட்டால், மோட்டர் சைக்கிளில் கொண்டுபோய் விடுவோம். அவ்வளவு சந்தோஷம் தெரியும் குழந்தைகள் முகத்தில். என் தம்பி மெயின் ரோடு கிராஸ் பண்ணி 3 நிமிடத்தில் நடந்து போக வேண்டிய ஸ்கூலுக்கு, 9 வது படிக்கும் மகளை மோட்டார் சைக்கிளில்தான் கொண்டு போய்விடுவான். என் பெரிய அண்ணாவின் மகன் ஆறாவது படிக்கும் போதே அவனைவிட உசரமாக இருக்கும் சைக்கிளில் அண்ணா வீட்டிலிருந்து சர்ச் எதிரில் புளுஸ்டார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸை கிராஸிங்கில் அவ்வளவு பெரிய அவின்யூவை கடந்து, எங்கள் வீட்டிற்கு வந்து, அதுவும் ஒர் சமோசாவை கொண்டுவந்து கொடுப்பதற்கு, செல்வது மனதில் தோன்றாமலிராது.
தமிழ்த் திரைப் படங்களில் வருவது போன்றே 4 பாடலில் 16 வயது வாலிபர்களாக ஆவதையும் கூறிவிடுகின்றான். நாட்டையும் நதியையும் 80 பாடல்களுக்கு மேலாகப் பாடிய கவி.
சவுளமொடு உபநயம் விதிமுறை தருகுற்ற.
‘இ(வ்)அளவது’ என ஒரு கரை பிறிது இலவா.
உவள் அரு மறையினொடு ஒழிவு அறு கலையும்.
தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே.
‘இ(வ்)அளவது’ என ஒரு கரை பிறிது இலவா.
உவள் அரு மறையினொடு ஒழிவு அறு கலையும்.
தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே.
இராமனின் பிள்ளைப் பருவத்தைச் சில நூறு பாடல்களிலாவது கம்பன் பாடியிருக்கலாம். என்ன காரணத்தாலோ கவிச்சக்கரவர்த்தி பாடவில்லை. நான்கைந்து பாடல்களில் தசரத குமாரனைப் பதினாறு வயது இளைஞனாக ஆக்கிவிடுகிறான்.
பல கதைகள் கம்பனைப் பற்றி வழங்குகின்றன. அவற்றில் ஒன்று அவனுக்கு அம்பிகாபதி என்கிற ஒரு மகன் இருந்தான் என்றும், அவன் கம்பன் காலத்திலேயே அவன் கண்ணெதிரில் அரச தண்டனை பெற்று உயிர் இழந்தான் என்றும் சொல்கிறார்கள்.
ஒருவேளை அந்தக் கதை உண்மையாக இருக்கக்கூடுமோ என்று கூடத் தோன்றுகிறது. அப்படியானால் குழந்தைச் செல்வத்தினிடத்திலே அவன் மனத்தில் ஆழமாகத் தோன்றிய வடு
இராமனைக் குழந்தையாக வைத்துப் பாடுவதற்கு இடந்தரவில்லையோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. பெரியாழ்வார் தமிழுலகத்தில் பிள்ளைத் தமிழ் தோன்றுவதற்கு வித்திட்டவர் என்பதை மறக்க முடியாது. கண்ணனைக் குழந்தையாக்கி அவர் பாடுகின்ற பாடல் ஒரு முறை கற்றாரையும் உலுப்பிவிடக்கூடிய அளவு அற்புதமான உணர்ச்சி நிரம்பியது. அதை நன்கு படித்து மகிழ்ந்திருக்கக் கூடிய கம்பன், இராகவனுக்குக் குழந்தைப் பருவப் பாடல்கள் பலவற்றைப் பாடியிருக்கலாம். பாடாமல் விட்டுவிட்டான் என்பதை அறிய முடிகிறது.பிறந்தான், வளர்ந்தான், வசிட்டனிடத்திலே கல்வி கற்றான் என்றே முடித்துவிட்டான்.
இராமனைக் குழந்தையாக வைத்துப் பாடுவதற்கு இடந்தரவில்லையோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. பெரியாழ்வார் தமிழுலகத்தில் பிள்ளைத் தமிழ் தோன்றுவதற்கு வித்திட்டவர் என்பதை மறக்க முடியாது. கண்ணனைக் குழந்தையாக்கி அவர் பாடுகின்ற பாடல் ஒரு முறை கற்றாரையும் உலுப்பிவிடக்கூடிய அளவு அற்புதமான உணர்ச்சி நிரம்பியது. அதை நன்கு படித்து மகிழ்ந்திருக்கக் கூடிய கம்பன், இராகவனுக்குக் குழந்தைப் பருவப் பாடல்கள் பலவற்றைப் பாடியிருக்கலாம். பாடாமல் விட்டுவிட்டான் என்பதை அறிய முடிகிறது.பிறந்தான், வளர்ந்தான், வசிட்டனிடத்திலே கல்வி கற்றான் என்றே முடித்துவிட்டான்.
பிற்பாடு தண்டியலங்காரம் எனும் பாவிலக்கணம் எழுதிய தண்டி கம்பரின் பேரர் என்பர் சிலர். அதற்கு சாட்சியாகக் கூறுவது இந்த ஒரே பாட்டை மட்டுமே.
ஆடக மன்றத்து நாடக நவிற்றும்
வடநூ லுணர்ந்த தமிழ்நூற் புலவன்
பூவிரி தண்பொழிற் காவிரி நாட்டு
வம்பவிழ் தெரியல் அம்பி காபதி
மேவருந் தவத்தினிற் பயந்த
தாவருஞ் சீர்த்தித் தண்டியென் பவனே.' இதை முதலில் படித்த போது அம்பிகாபதி வீணாக தன் உயிரை விடாமல் கம்பரின் சந்ததி அழியாமல் காப்பார்றிவிட்டன் என்ற நினைப்பில் என கனவு பலூன் மேலேறியது, புதிதாக கண்டுபிடித்ததை போல். என் நண்பர் ஒருவரும் அவ்வாறே நினைத்தார். ஆயினும் தமிழரிஞரிடம் கேட்டு தெளிவுறலாம் என்று திரு நெல்லைக் கண்ணன் அவர்களிடம் கேட்டேன். இதைக் கட்டுக்கதை என்று கூறி பலூனிலிருந்து காற்றைக் இறக்கிவிட்டார்.
வடநூ லுணர்ந்த தமிழ்நூற் புலவன்
பூவிரி தண்பொழிற் காவிரி நாட்டு
வம்பவிழ் தெரியல் அம்பி காபதி
மேவருந் தவத்தினிற் பயந்த
தாவருஞ் சீர்த்தித் தண்டியென் பவனே.' இதை முதலில் படித்த போது அம்பிகாபதி வீணாக தன் உயிரை விடாமல் கம்பரின் சந்ததி அழியாமல் காப்பார்றிவிட்டன் என்ற நினைப்பில் என கனவு பலூன் மேலேறியது, புதிதாக கண்டுபிடித்ததை போல். என் நண்பர் ஒருவரும் அவ்வாறே நினைத்தார். ஆயினும் தமிழரிஞரிடம் கேட்டு தெளிவுறலாம் என்று திரு நெல்லைக் கண்ணன் அவர்களிடம் கேட்டேன். இதைக் கட்டுக்கதை என்று கூறி பலூனிலிருந்து காற்றைக் இறக்கிவிட்டார்.
தொடரும்
No comments:
Post a Comment