Friday, December 2, 2011

நாடு


நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரும் நாடு
என்கின்றான் வள்ளுவன். நாட்டைப் பற்றிக் கூறும் போது.  நாடாமலேயே வளந்தருவது தான் நாடாகும், நாட வளந்தரும் நாடு நாடல்ல என்று உரை  ஆசிரியர்கள் பொருள் கூறினாலும்,  நாடா வளத்தன என்பதற்கு, மேலும் ஆழமான பொருள் உண்டோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.
நாடு  என்ற  அதிகாரத்தின்  முதற்  பாடலில் தள்ளா விளையுள் பற்றிக்  கூறிய வள்ளுவர், அடுத்துத் தக்கார் என்று  கூறுவதன் மூலம்இக்கருத்தை வலியுறுத்துகின்றார்.
விளைச்சல் முதலியவற்றை 1,2,6,8 ஆகிய குறட்பாக்களில் (இயற்கை வளம்)   பேசிய வள்ளுவர்  ஏனைய   பாக்களில்  மக்கள்  (மன) வளத்தையே பேசுகிறார்.
சிறந்த     நாடு மண் வளத்தால் தள்ளா விளையுள் பெற்றிருப்பது போல   மக்கள்   மன   வளம்  இயல்பாகப்  பெற்றிருக்கவேண்டும். அதனைத்தான்  நாடா  வளம்  என்று  சொல்லுகின்றாரோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது என்கின்றார் அ. ச ஞ
1966 -1967 ஆம் ஆண்டு உலகின் பல பகுதிகளில், கொள்கையின் அடிப்படையில் பெரும் கலவரங்கள் வெடித்தன. உலகத்திற்கே அந்த வருடங்கள்  சபிக்கப் பட்ட வருடங்களாகும். ஹாங்காங்கிலும் கூட பல பகுதிகள் நாட்கணக்கில் பற்றியெறிந்தன.
இந்தியாவில் இந்திரா பிரதமராக பதவியேற்றார். தமிழகத்தில் முதல் முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியது தி. மு.க.
குட்டித் தீவான சிங்கப்பூர், மலேசியத் தீபகற்பத்திலிருந்து வெளியேறி சுதந்திர நாடாக உருவானபோது இயற்கை வளம் ஏதுமில்லை. தண்ணீருக்குக் கூட மலேசியாவிடமிருந்த்து கையேந்தும் நிலை. எந்த விதமான இயற்கை வளமோ, வாய்ப்புகளோ, பண வசதிகளோ கிடையாது.


ஆனால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பல வருடங்களாக உலகின் நம்பர் ஒன் ஏர்லைன்ஸ். சிங்கப்பூரில் உலகிலேயே மிகப் பெரிய கச்சா எண்ணை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. உலகின் மிகப் பெரிய கப்பல் மற்றும் எண்ணை உற்பத்தியில் கடல்மிதவை RIG கட்டும் இடமாக மாறியுள்ளது. உலகில் மிகவுமே முக்கியமான கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்தில் முக்கிய மையமாக மாறியுள்ளது. அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்குமிடமாகவும் உள்ளது. உலகச் பொருளாதாரச் சந்தைகளில் மிக முக்கியமான ஒன்றாகத் திகழ்கின்றது.
அந்நாடு, அதன் மக்கள் மிகப் பெரிய வளர்ச்சியடைந்திருக்கின்றனர். இரு பெரும் நாடான சீனா மற்றும் இந்தியாவைவிட , அங்கு மக்களின் வாழ்வாதாரம் அதிகரித்திருக்கிறது.  மலேசியா தட்டுத் தடுமாறி முன்னேற முடியாமலிருப்பதற்கான காரணம், சிங்கப்பூரில் தகுதி மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது. இனம் கணக்கிலிடப்படவில்லை. அதன் பலதலைமுறைகளைப் பற்றி கவலைப் பட்ட  தலைவன்.  லீக் வான் யூ.  அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி.

நம் நாட்டிலுள்ள ஜனநாயக முறை அன்று முதலமைச்சாராக திரு. ஓமந்தூரார், இராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் மற்றும் அண்ணாதுரை போன்ற சாதாரணவர்கள் காசில்லாமல் இறந்தவர்கள், (காசு என்றால் குற்றம் என்ற ஒரு பொருளும் உண்டு),  தன்னலமற்ற ஒப்பற்ற ஆட்சியை தர, இன்றோ ஜெயலலிதா, மாயாவதி, லாலு பிரசாத் மற்றும் வறுமையில் வாடிய கருணாநிதி மற்றும் அவர்கள் குடும்பத்தினரும் சேர்ந்தே, நம்மை கொள்ளையடிப்பதையும் அனுமதிக்கின்றது. காரணம், எனக்கு சமூக விஷயத்தில் நாட்டமில்லை. என்னை என் குடும்பத்தை, என் வீட்டில் கல் விழாதாவரை, நான் டீ வி சினிமா பார்த்து, பொழுது போக்குக் களியாட்டங்களில் ஈடுபடுவேனே தவிர, அடுத்த தலைமுறையைப் பற்றியோ சமூகத்தைப் பற்றியோ சிந்திக்கவும் மாட்டேன். எனக்கு என் சுயநலம்தான் முக்கியம். எப்படி? ஏன் இந்த மாற்றம்? நானறியாமலே?
ஹாங்காங்கில் 1974 வரை ஊழல் நம்மூரைப் போலவே தலைவிரித்து ஆடியது என்பதையும் ICAC(Independent Commission against Corruption) அமைத்து அதற்கு அதிகாரத்தையும் கொடுத்து 20 வருடங்களில் ஊழலை முழுமையாக ஒழித்துவிட்டனர். சாதாரணன் எதற்கும் யாருக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை.
கைது செய்யவும் அதிகாரமுள்ள,காவல்துறையும் உள்ளடக்கிய லோக்பால் மசோதா கேட்டால் மன்மோகன்சிங், சிதம்பரம், பிரணாப் முகர்ஜி மற்றும் கபில் சிபில், ஒரு சோதா மசோதாவை சமர்ப்பித்தால், இந்த நாட்டில் என்று ஊழல் ஒழியும்?
நிலம் பொழுது இரண்டையும் முதற் பொருள் என்று தொல்காப்பியர் கூறியிருந்தாலும், நாடு எனும்போது ஏனையோரைப் போல் தமிழர்கள் நிலம் இயற்கை என்பனவற்றை முதன்மையாகக் கொள்ளவில்லை.

நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்.
அவ்வழி நல்லை வாழிய நிலனேஎன்று நாட்டின் சிறப்பு அங்குள்ள மக்களை/அரசனைப் பொறுத்தது, என்கின்றார் அவ்வையார் புறநானூற்றுப் பாடலிலே.
.
சாலி நெல்லின் சிரைகொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆகக்
காவிரி புரக்கும் நாடு கிழவோனே’ (பொருநர். 246-8)
இவ்வடிகள்  இவ்வாறு  நினைக்கத்  தூண்டும்.  ‘ஆக’  என்ற வினை எச்சம்  புரக்கும்  என்ற பெயரெச்சத்தோடு இயைவதைப்  பார்த்தால், இந்த  விளைச்சலுக்குக்  காரணம்  சோழனுடைய  ஆட்சிச்  சிறப்பே என்று ஆசிரியர் பெற வைக்கிறார் என்பது தெரிகிறது.
கோசலத்தை ஆளும் தசரத மன்னனைப் பற்றி கம்பன்
முறை அறிந்து, அவாவை நீக்கி, முனிவுழி முனிந்து வெஃகும்
இறை அறிந்து உயிர்க்கு நல்கும். இசை கெழு வேந்தன் காக்கப்
பொறை தவிர்த்து உயிர்க்கும் தெய்வப் பூதலம்தன்னில் பொன்னின்
நிறை பரம் சொரிந்து வங்க நெடு முதுகு ஆற்றும் நெய்தல்.
மனுநீதி தர்மத்தை முழுமையாக் அறிந்து, மக்களிடமிருந்து அவர்கள் பணத்தைப் பறிக்க வேண்டுமென்ற ஆசையை நீக்கி , கோபப்படவேண்டிய இடத்தில் கோபித்து, தண்டித்து, வேண்டியதைப் பெற்று, தன் கீழ் இருக்கும் பிராணிகளிடத்தும் பரிவு காட்டும் அரசனால் ஆளப்படும் பூதலத்தில், நிலமகள் தானே நயந்து ஈட்டும் மிகுதியான விளைச்சலை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், பாவங்கள் தொலைந்து அவள் இளைப்பாறுவது போலவே, மிகுந்த பாரம் சுமந்த தம் முதுகை ஆற்றும் என்கின்றார். இன்னொரு பாடலிலோ 
தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால். அறிவு ஒக்கும்;- எவர்க்கும் அன்னான்.
தாயன்பு  சிறந்தது. தாயினும் சாலப்பரிந்துஎன. இறையன்புக்கே தாயன்பை உவமையாகக் கூறினர் மேலோர். தனது  குடிமக்களிடம்  தாய் போல்   அன்புடையவன்.   நன்மை  புரிவதில்   தவம்   போன்றவன்; நற்கதியடையச்  செய்வதில்  சேய்  போன்றவன்;   நோயுறும்  காலை,
அதைப்   போக்கும்  மருந்து  போன்றவன்;  ஆராய்ச்சிக்கு   உதவும் அறிவு    போன்றவன்  என்றெல்லாம்    தயரதனுடைய   பண்பைச் சிறப்பித்துக்     கூறுகிறார். இப்படிப்பட்ட அரசனால்  கோசல நாட்டில் இயற்கை வளங்கள் மிகுதியாக இருந்தன.
வரம்பு எலாம் முத்தம்; தத்தும் மடை எலாம் பணிலம்; மா நீர்க்
குரம்பு எலாம் செம் பொன்; மேதிக் குழி எலாம் கழுநீர் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப் பரப்பய் எலாம் அன்னம்; பாங்கர்க்
கரும்பு எலாம் செந்தேன்; சந்தக் கா எலாம் களி வண்டு ஈட்டம்
(வயல்) வரப்புகளிலெல்லம் முத்துக்கள்; தண்ணீர் பாயும் மடைகளிலெல்லாம்
சங்குகள்; மிகுந்த  நீர்ப் பெருக்குடைய  செய்கரைகளிலெல்லாம்  செம்பொன்; எருமைகள் படிகின்ற பள்ளங்களிலெல்லாம் செங்கழுநீர்  மலர்கள்; பரம் படித்த இடங்களிலெல்லாம் பவளங்கள்; நெற்பயிர் நிறைந்த   பரப்புகளிலெல்லாம்    அன்னங்கள்;  அவற்றின் பக்கங்களில்  இருக்கின்ற;  சாகுபடி செய்யப்படாத  நிலங்களிலெல்லாம்  செந்தேன்; அழகிய சோலைகளிலெல்லாம் மதுவுண்டு மகிழும் வண்டுகளின் கூட்டம்;(ஆக இவ்வாறு வளங்கள் அங்கே பெருகியுள்ளன). பயிர்த்தொழிலுக்கு ஏற்பப் பண்படுத்தாத கரம்பிலும் செந்தேன் பெருக்கு இருந்தது என்பதொன்றே கோசலத்தின் வளத்தைப் புலப்படுத்தப்  போதுமானது.
அந்த பசுமையான வயல்களில்
சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செங் கால் அன்னம்
மால் உண்ட நளினப் பள்ளி, வளர்த்திய மழலைப் பிள்ளை;
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளி கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு, துயில, பச்சை தேரைத் தாலாட்டும்- பண்ணை 

அன்னத்தின்   நடையே   பொதுவாக மகளிர் நடைக்கு உவமை கூறப்படும்; இங்கே எதிர்நிலை  உவமையாக மகளிர் போல் நடை பயிலும் அன்னம்    என  வந்தது.  அன்னம்  தன்  குஞ்சைத் தாமரை மலர்ப் படுக்கையிலே கிடத்துகிறது. அன்னக்குஞ்சு பால் அருந்துத் துயில்கிறது.   அதற்குக் கிடைத்த பால் எருமை மடியில் இயல்பாகச் சுரந்தது;    சுரந்தமைக்குக்   காரணம் தன் கன்றை எருமை நினைந்தது. கசிந்த  மேதி  கனைத்தது;   கனைத்த ஒலி காரணமாகப் பால் சுரந்தது. பால்  அருந்தி அன்னக் குஞ்சு   துயிலத் தேரை தாலாட்டுப் பாடுகிறது!
என்ன் ஒரு நளினமான கற்பனை. 
ஈர நீர்படித்து இந்நிலத்தே சில
கார்கள் என்ன வரும் கரு மேதிகள்
ஊரில் நின்ற கண்று உள்ளிட மென் முலை
தாரைக் கொள்ள, தழைப்பன சாலியே.

எருமைகள் ஊரில் நின்ற கன்றை நினைத்துத் தானே பாலைச் சுரந்து பெருக்க, அந்த பால் ஒரு வெள்ளம் போல் பாய்வதனால் நெற்பயிர்கள் தழைத்து வளரும்.
பல்லாயிரம் சிறு வணிகர்களோ அல்லது சிறு நூறு பெருவணிகர்களோ வாணீபம் செய்வது, தம் மக்களுக்குச் செல்வத்தை சேர்க்கவேண்டியேயன்று, பிறருக்காக அல்ல. ஆயினும் அது பல மக்களுக்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ பயனளிக்ககூடியதே.  
அரசன் நல்லவன். நிலமகள் மமுவந்து விளைச்சலைத் ருகின்றாள். அங்கு யாவரும் நலம் என்று மட்டும் நாட்டைப் பற்றி மட்டும் கூறாமல் இந்த இரண்டு பாடல்களிலுமே கம்பன் suggestive ஆக உடையவர்கள் இல்லாதவர்களுக்கு அளித்து வாழ வைக்கவேண்டும் என்பவன் மக்களின் வளத்தைப் பற்றிக் கூறுவதைப் பார்ப்போம்.
 தொடரும்

No comments:

Post a Comment