நம் எல்லோருக்குமே நம் ஊரின் மீது பாசமிருக்கும். அந்த மண்ணின் மணம், தண்ணீரின் சுவை, அவ்வூர் கோவிலின் சிறப்பு, அங்கு கிடைக்கும் பொருளின் உயர்வு, சமையலின் விசேடன பரிமாணம் என்று. ஒவ்வொன்றுமே ஒவ்வோரு வகையில் மனதில் நிலைத்திருக்கும்,அம்மாவின் சாப்பாடு போல. பெரு நகரங்கள் இந்த அடையாளங்களைத் தொடர்ந்து அழிக்க முயன்றாலும், இன்றைய வரை தோற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

அது திருட்டு என்றோ தவறு என்றோத் தோன்றவில்லை. அடுத்த நாள், கிடைத்த மூணு ரூபாயை வைத்துக் கொண்டு வாணிமஹால் பக்கத்தில் தள்ளு வண்டியில் விற்கப்படும் பட்டாணி சுண்டல், மசால் வடை மற்றும் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அங்கு எப்பவுமே கூட்டம் அலைமோதும். வாணலியிலேந்து எடுத்தவுடனேயே மசால் வடையும் மிளகாய் பஜ்ஜியும் காணாமல் போய்விடும். சாப்பிட்டுக் கொண்டிருந்த சுவாரஸ்யத்தில் என் சித்தப்பா வந்ததை கவனிக்கவில்லை. அவரும் நான் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையாக இருந்துவிட்டு, வீட்டிற்கு போகும் வழியில்” ஏம்பா, அவன் எந்த எண்ணையிலே பண்றானோ சுத்தமாயிருக்கா? இல்ல. வீட்டிலேயே சாப்பிடலாமே. நான் இந்த வாரம் சித்தியை பண்ணித் தரச் சொல்றேன். சரி இன்னிக்கு எங்கிட்டெ காசு வாங்கிண்டு போகலை. பின்னே ஏது காசு?” சாந்தா பவன் விஷயத்தை சொன்னதும் “ உங்க அப்பா வேணும்னா அத்தை வீட்லேயே உன்னை விட்டுருக்கலாமே, ஏன் என் வீட்டிலே உடனும்?. சாந்தா பவன்காரன் போலிஸ்காரன் கிட்டே கம்பிளைண்ட் கொடுத்தா உங்க அப்பாவோட மானம்தானே போகும். அவனோட இனிமேல சேராதே. மீதி காசையும் அவன் கிட்டயே குடுத்துடு. பிராயசித்தமா இன்னிக்கு சாயங்காலம் சந்தி பண்ணும் போது, இனிமே இந்த மாதிரி செய்ய மாட்டேன்னு வேண்டிண்டு 108 காயத்ரி ஜபம் பண்ணு”. நான் அங்கிருந்த வரை சாந்தாபவன் பக்கம் அதற்குப்பிறகு எட்டிப் பார்க்கவேயில்லை..
![]() |
சி ஏ முடித்து, கோபாலபுரத்தில் தொழில் செய்யும் நேரம், மீதி ஆடிட்டர்களைப் போல் தவறாமல் மூன்று வேளை அட்டன்டென்ஸ் மார்க் பண்ணுமிடம் உட்லான்ட்ஸ் டிரைவின். அங்கு வெளியில் கீளீனராக இருக்கும் அரைக்கால் நிஜார் அணிந்த மணி மற்றும் பல சர்வர்கள், (எவ்வளவோ நாட்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு பில் குடுக்காமல் அடுத்த நாள் கொடுத்ததுண்டு). எல்லா நாட்களிலும் பார்க்கக்கூடிய, பி பி ஸ் தினம் பார்த்தாலும் நெருங்கிப் போய் பேசியதில்லை. பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அண்ணாநகரில் வசித்ததால், மெட்ராஸ் சொந்த ஊராக மாறியது.
அதிகப் படியான மக்கள் கூடி வாழும் பெருநகரம், பல்வேறு குழுக்கள், பல்வேறு சமயத்திதினர், அதனில் இயல்பாகத் தோன்றும் போட்டிச் சமுதாயம்(Competitive Society), என்பவற்றால் விளையும் ஊறுகளைப் பற்றி பல்லவர்கள் காலத்தையடுத்து வந்த கம்பன் நன்கு அறிந்தவன்.
மேலை நாடுகளில் குறிப்பாக வாஷிங்டன், லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற பெருநகரங்களில் குற்றம் மிகுதியாவதற்குக் காரணம் ஆராய்ந்த உளவியல் வல்லுனர்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பொழுது போக்குவதற்கும், விளையாடுவதற்கும், அறிவு வளர்க்கும் கல்வியைப் பெருக்குவதற்கு வாய்ப்பும் வசதியும் இல்லாதக் காரணங்களாலேயே சண்டையிடுதல் மற்றும் சிறுசிறு குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்று கண்டு கூறியுள்ளனர்.
ஆகவே நகர அமைப்பில் சிறார்கள், குழந்தைகள், மகளிர், இளைஞர்கள் – வாழ்வை வளர்த்துக்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள நேரம் போக-எஞ்சிய நேரங்களில் சிறந்த முறையில் பொழுது போக்க விளையாட அரங்கங்கள் முதலியன அமைதல் வேண்டும் என்றும் தற்கால சமூகவியளாலர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூற்றை அன்றைக்கே கம்பன்
பந்தினை யிளையவர் பயிலிட மயிலூர்
கந்தஅனி யனையவர் கலைதெரி கழகம்
சந்தன வன மல் சண்பக வனமாம்
நந்தன வனமல நறைவிரி புறவம்.
மகளிர்கள் பந்தடிக்குமிடல் சந்தன சோலைகளே ஆயினும் மகளிரின் மேனிமணத்தால் செண்பகச் சோலையை ஒத்திருக்க, ஆடவர் வில்வித்தைப் பயிலுமிடம் நந்தவனங்களே ஆயினும் அவர்களது மேனிமணத்தால் முல்லை வனம் போலும்.
பொருந்திய மகளி ரோடு வதுவையிற் பொருந்து வாரும்
பருந்தொடு நிழல்சென் றென்ன இயலிசைப் பயன்றுய்ப் பாரும்
மருந்தினு மினிய கேள்வி செவியுறு மாந்து வாரும்
விருந்தினர் முகங்கண் டன்ன விழாவணி விரும்பு வாரும்
எல்லா வகைப் பொருத்தங்களும் உள்ள பெண்களுடன் இல்லற வாழ்கையில் பொருந்தியிருப்பவர்களும் (பிறப்பே. குடிமை. ஆண்மை. ஆண்டொடு. உருவு. நிறுத்த காம வாயில். நிறையே. அருளே. உணர்வொடு. திரு என முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே என்பது தொல்காப்பிய விதி. இவ்வாறு கொள்ளாமல் தினம், கணம், மேந்திரம், ஸ்திரீ தீர்ககம், யோனி, ராசி, ராசியதுபடி, வசியம், ரச்சி, வேதை எனச் சோதிட நூலார் கூறுவனவற்றைக் கொள்வாரும் உளர்); பருந்தோடு அதன் நிழலும் தொடர்ந்து செல்வது போல இயல் இசைத்த இசைப்பாடலை அனுபவிப்பவர்களும்; அமுதத்தை விட இனிமை மிக்க கேட்டறியும் நூலறிவினைச் செவியிற் பொருந்த உண்டு அனுபவிப்பவர்களும்; விருந்தினரின் முகத்தைப் பார்த்து உண்ணும் சோறு வழங்கும் விழாவின் சிறப்பை விரும்புவாரும் மக்கள் பொழுதைக் கழித்தனர். பருந்தும் நிழலும் போலப் பாட்டும் (சாகித்தியம்) இசையும் (சங்கீதம்) பொருந்திச் செல்ல வேண்டும்; இலக்கணம் (இயல்) அமைந்த இசையை நுகர்வோர் அவ்விசையொடு கலந்து அனுபவிப்பதற்குப் பருந்தும் நிழலும் உவமையாகக் கொள்ளலும் பொருத்தமே. மருந்து: அமிர்தம். ‘கற்றில னாயினும் கேட்க’ என்றும் ‘கற்றலிற் கேட்டலே நன்று’ என்றும் கேள்விச் செல்வம் சிறப்பிக்கப்படுதலின்‘இனிய கேள்வி’ என்றார்
கருப்புறு மனமும். கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி.
உறுப்புறு படையின் தாக்கி; உறு பகை இன்றிச் சீறி.
வெறுப்பு இல. களிப்பின் வெம் போர் மதுகைய. வீர வாழ்க்கை
மறுப்பட ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும்;
உறுப்புறு படையின் தாக்கி; உறு பகை இன்றிச் சீறி.
வெறுப்பு இல. களிப்பின் வெம் போர் மதுகைய. வீர வாழ்க்கை
மறுப்பட ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும்;
சிலர் கோழிப் போரினால் பொழுதுபோக்குவதை கூறுவது. கோபத்தின் அடையாளமாக கண் சிவப்பதை “கண்ணிற் சிவப்புறு” என்றார். கோழியைப் போர்க்கு விடுபவர் அதன்காலில் கத்தியைக் கட்டிவிடுதல் இயல்பு. ஆதலால் “உறுப்புறு படையில் தாக்கி” என்றார். புறத்திணையில் “கோழிவென்றி” என்ற ஒரு துறையுண்டு.
எருமை நாகு ஈன்ற செங் கண் ஏற்றையேடு ஏற்றை. ‘சீற்றத்து
உரும் இவை’ எனாந்த் தாக்கி. ஊழுற நெருக்கி. ஒன்றாய்
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன; அதனை நோக்கி.
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப. மஞ்சுகிற ஆர்கின்றாரும்;
எங்கும் பரவியுள்ள இருள் இரண்டு கூறாகப் பிரிந்து தம்முள் மோதுவது போல எருமைக் கடாக்கள் காணப்படுகின்றன. ஒரே நிறம். ஒரே தரம்; உருவம் மட்டுமே இரண்டு. அவை மோதிப் பொருவதைப் பார்த்து வீரர்கள் மகிழ்ந்து ஆர்ப்பரிக்கின்றனர். எருமையில் பெண் நாகு என வழங்கும். ‘எருமையும் மரையும் பெற்றமும் நாகே’ (தொல் பொருள். மரபு 63). எருமை நாகு; இருபெயரொட்டுப் பண்புத் தொகை.
மக்கள் பயனுள்ள வகையில் பொழுதைப் போக்கும் கோசல நாட்டில் கல்வியிலும், ஈகையிலும் விருந்தோம்பலிலும் சிறப்புற்ற மகளிர் பந்தாடும் போது அதிர்ச்சியால் முத்துக்கள் சிந்த, ஏவல் மகளிரால் குப்பைகளாக் குவிக்கப்பட்ட அம்முத்துக்கள் சந்திரனுடைய ஒளியை விட வெள்ளொலி சிந்தும் என்றும், நடனசாலையில் நடிக்கின்ற மகளிரின் நோக்கு, தமக்கு இலக்காகிய ஆடவரின் மனத்தை தம்முட் கொள்ள, அதனால் அவ்வாடவர் ஆவிமெலிவாராயினர் என்றும் கூறும் கவி திரு அவதாரப் படலத்தில், சினிமாத் துறை ஆரம்பிக்க பல நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே, இன்றைக்கும் உபயோக்கின்ற உத்தியை கம்பன் கையாளுவதைப் பார்ப்போம்.
தொடரும்
No comments:
Post a Comment