கல்வி வளம் பெருகி அறிவு வளர்ந்துஅறியாமை அகலவேண்டும். அப்போதுதான் மக்கள், தாங்கள் அரசியல்வாதிகளால் அவர்களது தேவைகளுக்காக ஜாதி வாரியாக, மத ரீதியாக, மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டுக் கொள்ளையடிக்கப்படுவதை உணரமுடியும்.
தாய் மொழியில் சிறார்கள் கற்பதை சுமையாக கருதாமல் சுவையாக கருதும் வகையிலான கட்டணமில்லாத ஆரம்பக் கல்வியும், மாணவர்களின்/பொருளாதார வளர்ச்சியின் தேவைக்கேற்ப உயர்கல்வி தரமானதாகவும் சீரானதாகவும் இருக்க வேண்டும். வேறு மொழிகளைக் கற்பதில் தவறில்லை, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உட்பட. தமிழகத்தில் “தமிழ் தெரியாது” என்பது பெருமைக்குரிய விஷயமாக மாறிவிட்டிருப்பது வேதனையான விஷயம். சிற்றூர்களில் கூட மக்கள் நர்ஸரி பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகள் “ டாடி மம்மி ஆன்டி” என்று அழைப்பதையே விரும்புகின்றனர். வளர்ந்த பிறகும் இவர்களால் ஆங்கிலமும் சரியாகப் பேச முடியவில்லை என்பது எந்த டீ வீ நிகழ்ச்சியினைப் பார்த்தாலும் புரியும். கார்ப்பரேஷன் மற்றும் நகராட்சிப் பள்ளிகள் வெறும் வசதியற்றவனுக்கு மட்டுமே. மந்திரியின் மகனுக்கோ அல்லது அதிகாரிகளின் மகளுக்கோ அல்ல (சேர்த்த பத்தாவது நாளில் மாற்றம் வந்தால் அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியாது,). தமிழ் தமிழ் என்று கத்தி பதவிக்கு வந்த தி மு கவின் அடுத்த வாரிசாக சுட்டிக் காட்டப்படும்(அழகிரி விட்டால்!!!) ஸ்டாலின் மருமகள் நடத்துவது சிபிஎஸ்இ பள்ளி. தமிழுக்கு அங்கு இடமில்லை. தமிழத்தில் மட்டும் தான் ஒருவன் உயர்கல்வி வரையில் தமிழைப் படிக்காமலேயே கல்வி பெற முடியும். காசிருப்பவனுக்குத்தான் தரமான கல்வி. இன்று கல்வி,அறிவில்லாத, முட்டாள்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி சீரழிந்து விட்டது. நன்றாக கவனிக்கவும, படிக்காத மேதை காமராசரால் பள்ளிக்கு வருவதற்காகத் தொலை நோக்குடன் தொடங்கப்பட்ட மதிய உணவு திட்டத்தின் பலனை அனுபவித்த இந்த தமிழகத்தில், இன்று ஆங்கில மோகம் கொண்டு அலைந்து, நர்ஸரி பள்ளியில் தன் மழலையைச் சேர்க்கமுடியவில்லை என்று தாய் தீ குளித்து இறந்ததையும் பார்க்கின்றோம்.
இந்தியாவிலேயே முன்பு கர்நாடகா மாநிலத்தில் மட்டும் தான் தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. தமிழகத்தில் அரசின் பல்கலையின் கீழ் இயங்கும் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் மட்டும்தான். ஐஐடி மற்றும் ஆர் இ சி மத்திய அரசின் கீழ் இயங்கியது. இருந்த ஒரே ஒரு தனியார் பல்கலை கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மட்டும் தான். அப்போதும் தனியார் அறக்கட்டளைகள் மூலம் பொறியியல் கல்லூரிகளை நடத்தினாலும் அவையனைத்தும் அரசு பலைகலையின் கீழ், வழிகாட்டுதளில் நடந்தது. அறக்கட்டளை உருப்பினர்களுக்கு சில் சலுகைகள் இருந்தன..ஆனாலும் நன்கொடை மற்றும் கட்டன்க் கொள்ளைக்கு வாய்பளிக்கப் ப்டவில்லி. எனது பெரிய அண்ணனுக்கு 70 களில் விண்ணப்பித்த போது, தேசிய உதவி சம்பளம் வழங்கப்பட்ட நிலையிலும், அரசு பொறியியல் கல்லூரியில் அவன் கேட்ட ரசாயனத்துறை அளிக்கப்படவில்லை. காரணம் ஜாதி. நேர்முகத் தேர்வில் அவனிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி” “நீ ஐயரா இல்லை ஐய்யங்காரா’. பெயரில் வந்த குழப்பம். அப்பா பேர் ஸ்ரீனிவாசன். இவன் பெயர் ராகவன்.
பெரியண்ணன், அண்ணாமலை பல்கலையில் முதல் வருடம் படிக்கும் போதுதான், நிர்வாகம் அன்றைய முதலமைச்சரான கருணாநிதிக்கு, டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்தது. அப்போது பெரும் எதிர்ப்பு கிளம்பியது. படித்து ஆராய்ச்சி செய்து வாங்க முடியாத பட்டத்தை, போலிஸ் படையின் உதவியுடன், உதயகுமார் என்ற மாணவனைக் கொன்று பெற்றார் திரு. கருணாநிதி. அதைவிடக் கொடுமை இறந்த அந்த மாணவனின் தந்தையை வைத்தே, அந்த உடல் தன்னுடைய மகனுடையது அல்ல என்று சொல்ல வைத்தது.
இதற்கெல்லாம் மேலாக மதுவின் வாசனையறியா தமிழகத்தில் மதுவிலக்கு ரத்து செய்து அதில் தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கித் தொலையச் செய்தது. தனிநபரின் குடி அளவில் கேரளாவை மிஞ்சி இன்று தமிழகம் நம்பர் ஒன். தீபாவளியன்று மதுக் கடைகளில் 300 கோடிக்கு மேல் ஒரே நாளில் விற்பனை. இதுவா சாதனை? இதையெல்லாம் மீறி தமிழகம் முன்னேறியிருக்கின்றது என்றால் அந்த ஆண்டவன் தான் காரணம்(மு.க, ஜெஜெ அல்ல)
இன்று தமிழகத்தில் 242 பொறியியல் கல்லூரிகள், 43 க்கும் மேல் மருத்துவக் கல்லூரிகள் பாதிக்கு மேல் எந்தக் கட்டுமான வசதிகளும் இல்லாதவை,. எல்லா கட்சிகளை சார்ந்த மந்திரிகளுக்கும். சில சாமியார்களுக்கும் கல்லூரிகள். திருவண்ணாமலையில் நான் பள்ளியில் படிக்கும்போது தான், ரமணாஸ்ரமம் தாண்டி அப்பாவின் மேற்பார்வையில் உருவானது அரசு கலைக் கல்லூரி. இன்றோ அதைத் தவிர்த்து 5 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 5 பொறியியல் கல்லூரிகள். இதில் நடத்தப்ப்டும் மோசடிகள். போதாதற்கு, வங்கிகளின் கட்டாய கல்விக் கடன். . அப்போதுதான் இந்தக் கல்லூரிகள் தொடர்ந்து கொள்ளையடிக்க முடியும். மாணவர்களும் வேலைக்குப் போன பின்பும், கடனைக் கட்டுவதில்லை. காரணம் ஏதாவது காட்டிக் கடன் தொகையை ரத்து செய்துவிடுவார்இந்த திட்டத்தைக் கொண்டு வந்த ப சிதமபரம் என்ற நம்பிக்கை.
அன்று மாபெரும் தலவரான காந்தி இந்த தேசத்து ம்க்க்ளையுமே தன் மாதிரி மாற்றியவர். அதனால்தானே, விநோபா பாபா, லால் பஹதூர் ஸாஸ்த்ரி, ஜெயபிரகாஷ் நாரயானன், ராஜாஜி, காமராஜர், பிரகாசம் என்று நீண்டகொன்டேப் போகக்கூடிய தேசத்தலைவர்கள் தோன்றினார்கள். காந்தியைப் பார்க்ர்காதவர்கள் எல்லாம் தங்கள் பஞ்சாயத்து, முனிசிபல் தலைவர்களிடத்தில் காந்ந்தியைக் க்ண்டனர்.
இன்றோ காந்தியின் காங்கிரஸ், சோனியாவின் தலைமையில். மோசடி பண்ணுவதையே கலையாகக் கொண்ட இந்த அரசியல்வாதிகள் தங்களைப் போலவே மக்களையும் மாற்றுகின்றனர். அதனாலேதான் கருணாநிதி தன்னைப் போலவே உருவாக்கி வைத்த வாரிசுகளின், பரிசு தமிழகத்த்திற்கு ‘திருமங்களம் பார்முலா”.
ஒரு காலத்தில் அமைதி பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தில் இன்று ஜாதிக்கு ஒரு கட்சி, ஜாதியில்லா மதங்களிலும் கூட தங்கள் முன்னோர்களின் ஜாதி வைத்துக் கூட்டணிகள், போராட்டங்கள், துப்பாக்கி சூடுகள். மக்களின் உணர்ச்சியைத் தூண்டிப் பேசி, தீக்குளிக்க வைப்பவர்கள், தன் சொந்த மகனோ, மகளோ தீக்குளிக்க அனுமதிப்பார்களா? மாட்டார்கள். எந்த போராட்டத்திலும் நஷ்டப்படுவது நாம் தான். அரசு பஸ்கள் தீ வைக்கப்பட்டால் அதற்குறிய காசை எந்தக் கட்சி போராட்டத்தை அறிவித்ததோ அந்தக் கட்சியிடமிருந்த்து வாங்கவேண்டும். பாதிக்கப்படுவது நாம் தான் என்ற நினைப்பையும் மறந்து காலை டாஸ்மாக் எப்போது திறக்கும் என்று தூங்காமல் காத்திருக்கின்றான் தமிழன்.
எல்லாவற்றிர்க்கிடையேயும் அமைதியாக உறங்குவதன் வழியாக கம்பன் கோசல தேசத்தில் நிலவிய அமைதியை
நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி;
தாரிடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை; துறையிடை உறங்கும் இப்பி;
போரிடை உறங்கும் அன்னம்; பொழிலிடை உறங்கும் தோகை.
பிறர் இடையூரின்றி நிம்மதியாக யாவும் தூங்குகின்றன. கவலையின்றி, அச்சமின்றி, நிலை மாற்றமின்றித் தூங்குகின்றன. மலர் மாலை அணிந்தோர் நடமாடிக் கொண்டிருந்தாலும் அம் மாலைகளிலே வண்டுகள் உறங்குகின்றனவாம்; பலர் நீராடும் நீர்த் துறைகளிலே முத்துச் சிப்பிகள் உறங்குகின்றன - இவையெல்லாம் எவ்வகை இடையீடும் இல்லாமல் பெறுகின்ற நிம்மதியையும் அச்சமின்மையையும் குறித்தன. ‘திரு வீற்றிருந்த தீது தீர் நியமம்’ என்று நக்கீரர் வருணித்த மாமதுரைக் கடைவீதி இங்கு நினைவில் எழும்.
தரமான கல்வி, ஆணுக்கும் பெண்ணுக்கும், சீராகக் கிடைத்தால் அங்கு செல்வம் இருப்பது பகிர்வதற்கே என்ற சிந்தை எழும் என்கிறான் கம்பன்.
பெருந் தடங் கண் பிறை நுதலார்க்கு
எலாம்பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும், அன்றி, விளைவன யாவையே?
பெருந் தட கண்- மிகப்பெரிய கண்களையுடைய; பிறை நுதலார்க்கு எலாம்- பிறைச்சந்திரன் போன்ற நெற்றியைக் கொண்ட மகளிர்கட்கெல்லாம்-
குறிப்பறிந்து விருந்தினரை உபசரித்தல், ஈகை என்ற இச்செயல்கட்கு இன்றியமையாதன கல்வியும் செல்வமும், அந்நாட்டு மகளிர்க்கு நிரம்பியிருந்ததால் என்னும் கவிக் கூற்றின் மூலம் கம்பன் காலத்தில் பெண்கல்வி பரவியிருந்ததென்பது தெரியவருகிறது.
கண்ணும் நுதலும் பெண்டிர்தம் அழகைச் சுட்டின; ஈதலும் விருந்தோம்பலும் செயலைச் சுட்டின. பூத்தல் என்பது முன்னைய அரும்பு நிலையையும் பின்னைய கனிவு நிலையையும் உட்கொண்டு நிறைநிலை சுட்டிற்று. செல்வத்துப் பயனே ஈதல் என்பதை உணர்ந்தவரிடம் சேர்ந்ததால் பொருந்து செல்வம் என்றார். ஐயா திரு. "நெல்லைக் கண்ணன்" அவர்கள் “பூத்தால் தான் காய்க்கும்; காய்த்தால் தான் கனியும்; கனிந்தால் தான் உதவும்” என்று அழகாக குறிப்பிடுகின்றார். பொருந்து செல்வம் என்பது நேர் வழியில் வந்த செல்வம்.
இன்று போல் பலரும் பல இடங்களில் வசிக்காமல் ஒரே கிராமத்தில் வசித்த காலம் முன்பு இங்கிருந்தது. கிராமத்தில் இருப்பவர் அனைவருமே பங்காளிகாளாக இருந்தனர். கம்பனுடைய காலத்திலும் அப்படித்தான் போலும்!வயலில் விளைந்ததை முறையாகப் பகிர்ந்து விருந்துடன் உண்ண அவர்கள் எடுத்துச் செல்வதை
இன்று போல் பலரும் பல இடங்களில் வசிக்காமல் ஒரே கிராமத்தில் வசித்த காலம் முன்பு இங்கிருந்தது. கிராமத்தில் இருப்பவர் அனைவருமே பங்காளிகாளாக இருந்தனர். கம்பனுடைய காலத்திலும் அப்படித்தான் போலும்!வயலில் விளைந்ததை முறையாகப் பகிர்ந்து விருந்துடன் உண்ண அவர்கள் எடுத்துச் செல்வதை
எறி தரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள்
குறிகளும் போற்றிக் கொள்வார்; கொன்ற நெல் குவைகள் செய்வார்;
வறியவர்க்கு உதவி, மிக்கம் விருந்து உண மனையின்ன உய்ப்பார்,
நெறிகளும் புதைய, பண்டி நிறைத்து, மண் நெளிய ஊர்வார்.
உழவர்கள் நெற்கதிர்களை அறுத்து கடாக்களைக் கொண்டு துவைத்து நெல்மணிகளாக் குவித்துக் களப்பிச்சை முதலியவற்றையீந்திட்டு, தமக்குறிய பங்கை வண்டிகளில் மிகுதியாக ஏற்றியதனால் பூமகள், பாரத்தின் சுமை தாங்காமல் நெளிய, தனது மனையில் விருந்துண்ண சேர்த்தனர்.
கல்வியும், அமைதியும் ஒழுக்கத்தோடு கைக் கோர்த்தால் விளைவதை
கலம் சுரக்கும். நிதியம்; கணக்கு இலா.
நிலம் சுரக்கும். நிறை வளம்; நல் மணி
பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும். ஒழுக்கம்-குடிக்கு எலாம்.
நிலம் சுரக்கும். நிறை வளம்; நல் மணி
பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும். ஒழுக்கம்-குடிக்கு எலாம்.
கப்பல்கள் வளம் கொடுத்ததைக் கொண்டு கோசல நாட்டுக் கடல் வாணிபத்தை உணரலாம்; ஏற்றுமதி இறக்குமதி உண்டென்பதால் உள்நாட்டு வணிகம் சொல்லாமலே பெறப்பட்டது. எல்லாச் செழிப்புக்கும் அடிப்படை வளம் வேளாண்மையே; அதனால் கணக்கிலா வளம் சுரக்கும் நிலம் என்றார். நிறை வளம்- வினைத் தொகை என வெற்று இலக்கணக் குறிப்பாக மட்டும் கொள்ளாமல். வினைத் தொகை முக்காலத்துக்கும் ஆகும் என்பதை உணர்க. எனவே. எக்காலத்திலும் கோசலத்தின் நிலவளம் நிறைவளம் என உணர்த்துகிறார். கவிஞர். நீர் வழியாலும் நில வழியாலும் மட்டுமன்றிக் குடைந்துள்ள சுரங்க வழியாலும் மணிச் செல்வம் வாய்க்கப் பெற்றது கோசலம். இவ்வாறு பல வகையாலும் செல்வச் செழிப்பு மிக்க நாடு. கோசலம். ஆனால். இவ் வளங்களெல்லாம் வாழ்க்கைக்குத் துணை என்ற அளவே மதிப்புடையன; உயிர் வாழ்வு உயர் வாழ்வாய் விழுப்பம் பெறுவது ஒழுக்கத்தால்தான். ஒழுக்கம் விழுப்பம் தரும். கோசல நாட்டுக் குலம் என்றாலே ஒழுக்கத்தின் மறுபெயர் என்று
உணர வைக்கிறார் கம்பர்.
உணர வைக்கிறார் கம்பர்.
சுரக்கும் என்ற சொல் நுட்பம் காண்க. இடையறாது தருவதே சுரத்தல்
இப்படிப் பட்ட வளநாட்டில் எதுதான் விளையாது? அவர்களின் செல்வ செழிப்பிற்கு ஈடாக எதைதான் சொல்ல முடியும். ஆயினும் கமபன் மிக் அழகாக விளைச்சளை
கதிர் படு வயலின் உள்ள. கடி கமழ் புனலின் உள்ள.
முதிர் பயன் மரத்தின் உள்ள. முதிரைகள் புறவின் உள்ள.
படுபதி கொடியின் உள்ள. படி வளர் குழியின் உள்ள.-
மதுவளம் மலரில் கொள்ளும் வண்டு என- மள்ளர். கொள்வார்.
கதிர்களில் விளையும் வயல்களில் உள்ள நெல் முதலியவைகளையும்; மணம் வீசு
நீரில் உள்ள தாமரை மலர் முதலியவைகளையும்; முதிர்ந்த பயன் தரத்தக்க மரங்களில் உள்ள காய். கனி முதலியவைகளையும் முதிரைகள் புறவின் உள்ள- முல்லை நிலத்து விளையும் பருப்பு முதலியவைகளையும்; நிலத்தில் பதிக்கப்பட்டுள்ள கொடிகளில் விளையும் மலர். கனி முதலியவைகளையும்; நிலத்தில் உண்டான குழிகளில் விளையும் கிழங்கு முதலியவைகளையும்; தேனாகிய வளத்தைப் பல மலர்களிலிருந்து சேகரிக்கும் வண்டுகள் போல; உழவர்கள் பலவகை விளைச்சல் வளத்தைக் கொள்வார்கள்.
கவி அவரகள் செல்வத்தையும் அதனால் விளையும் செழிப்பையும்
பகலினொடு இகலுவ. படர் மணி; மடவார்
நகிலினொடு இகலுவ. நளி வளர் இளநீர்;
துகிலினொடு இகலுவ. சுதை புரை நுரை;
கார் முகலினொடு இகலுவ. கடி மண முரசம் என்கின்றார்.
அந்நகர மாதர் அணியும் அணிகலன்களில் பதித்துள்ள இரத்தினங்கள் சூரியன் ஒளியை விட மிக்கு விளங்குவன. அவர் தம் முலைகள் செவ்விளநீர்களை விட வடிவத்தால் திரட்சியால் சிறந்து விளங்குவன. அவர்கள் அணியும் நூலாடைகள் பால் நுரையை விட மெல்லியனவாக நொய்யனவாக விளங்குவன. மணமுரசு ஒலியோ மழை மேகத்தின் குமுறு குரலினும் மிக்கு விளங்குவது. மாறுபடல்- போட்டியிட்டும் தோல்வி காணுதல். நளி-பெருமை. செறிவு.
அன்று சிறு குழந்தைகளை” சாப்பிடலேனா நாலு கண்ணன் வந்துவிடுவான். பூதம் வந்துவிடும்” என பயமுறுத்தி சாதம் ஊட்டுவர். பிறகாலத்தில் வரும் விளைவைப் பரற்றி சிறிதும் யோசியாமல், இன்று டிவிடியில் படம் போட்டு, டீவி எதிரில் சாப்பபாடு. மிக்க செலவ செழிப்புடன் இருந்த மக்கள் சிறு குழந்தைகளுக்கு பால் சோறு ஊட்டுவதை கவித்துவமாக
தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங் கை. பங்கயம்
வாய் நிலா உறக் குவிவ மானுமே கூறுமிடமிது.
ஐம்படைத் தாலி அணி செய்யும் மார்பிலே, சொள்ளு நீர் வழியும் தம் குழந்தைகளுக்குத் தாய்மார்கள் பால் கலந்த சோறு ஊட்டுகிறார்கள். அப்போது குவிந்திருக்கும் அவர்களின் செந்நிறக் கைகள் நிலா வந்தததும் குவியும் தாமாரை என்கின்றார்.
காத்தற் கடவுளான திருமாலின், சங்கம், சக்கரம், தண்டு, வில் வாள் என்னும் பஞ்சாயுதங்களின் வடிவமாகப் பொன் கொண்டு அமைப்பது. இதனின், பிள்ளைகளுக்கு திருஷ்டி நேராமலிருத்தல் பொருட்டு ஐந்தாவது மாதத்தில் அணிவித்தல் மரபு. இது தாலி என்றும், தாலியைம்படையென்றும், ஐம்படை என்றும் வழங்கும். இருபாற் குழந்தைக்கும் பொருந்தும்.. பாலன்னத்தை ஊட்டும் கை குவிதல் இயல்பு. அதை இங்ஙன் வருணித்தார்.
மக்கள் பல்வேறு செல்வங்களைப் பெற்றிருந்தாலும் கவியின், கனவுச் சமுதாயத்தைப் பார்ப்போம்.
தொடரும்
No comments:
Post a Comment