Saturday, March 3, 2012

திருச்சி

வயதான தாய் தந்தையர் சித்தூரில் வசித்ததால், அப்பா சித்தூரிலிருந்து 100 மைல் வட்டாரத்திற்குள்ளேயே வேலை பார்த்து வந்தார். நான் இரண்டாவது படிக்கும் போது  சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றலாகியது. ஊருக்குப் புறப்படும் சமயம் எனக்கு கடுமையான ஜுரம். டாக்டருக்குப் படித்துக் கொண்டிருந்த சித்தப்பாவும் எங்களுடன் வந்தார். தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்தில் தி நகரிலிருந்து திருச்சிக்கு இரவில் பயணித்தோம். திருச்சி அப்போது 10 மணி நேரப் பயணம்.

திருச்சி போனதிலிருந்து நான் பள்ளிக்கூடம் சென்ற நாட்களை விரல்விட்டு  எண்ணிவிடலாம். ஜுரம் கடுமையான டைபாட் ஆகி  மூன்று மாதங்கள் படுக்கையில். அடுத்து சின்னம்மை வந்து ஒரு மாதம். இது முடிந்து சில நாட்கள் கழித்து  மஞ்சள் காமாலை. ஊசி வைத்து மந்திரித்தனர். திருச்சியில் இருந்த பத்து மாதமும் நோயுடனும், தாயுடனுமே கழித்தேன்.

தெப்பக்குளத்  தெருவில் வீடு. பெரியண்ணன் சென்னையில் ஆங்கில வழிக் கல்வியில் ஆறாவது படித்து கொண்டிருந்தான். காலாண்டு பரிட்சை சமயம் ஆகிவிட்டபடியால், St. Joseph  பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் பெரிய அண்ணனை சேர்க்க மறுத்துவிட்டனர். அப்போதெல்லாம் ஒரே ஒரு செகஷன் மட்டும் தான் ஆங்கில மொழிக் கல்வியிலிருக்கும். அதற்கு மாதாந்திர பணமும் கட்ட வேண்டும்.திருச்சியில் வேறு ஆங்கில வழிக் கல்வி பள்ளியில்லை என்று அப்பாவின் ஆபிசில் ஒருவர் கூற, தமிழ் மீடியத்தில் உறுமு தனலக்‌ஷ்மி பள்ளியில் எல்லோரும் சேர்ந்தோம்.

தெருவில் போகும் சிறுவர்களையெல்லாம் விசாரித்த சித்தப்பா நேஷனல் ஸ்கூலில் ஆங்கில வழிக் கல்வியிருக்கின்றது என்று கண்டு பிடித்தார். ஸ்கூலில் விண்ணப்பிப்பதற்கு அப்ளிகேஷன் வாங்கி வந்து அப்பாவின் கையெழுத்தை வாங்கிக் கொண்டு போய் ஸ்கூலுக்குப் போனார். ஹெட்மாஸ்டர் அப்பாவிற்கு பையன் படிப்பில் அக்கறை வேண்டாமா? கட்டாயம் அவர் வந்தால் தான் பரிசீலிக்கப்படும் என்று  கூறிவிட்டார். அண்ணா ஏமாந்து வீடு திரும்பினான். வருடா வருடம் அப்போதெல்லாம் தனியார் பள்ளிகளும் கூட பொ ப து (PWD) விடமிருந்து  இன்ஸ்பெக்‌ஷன் சர்டிஃபிகேட் வாங்கவேண்டும். அடுத்த சில நாட்களில் பள்ளிக்கு இன்ஸ்பெக்‌ஷன் சென்ற அப்பா பள்ளியின் எல்லா தவறுகளையும் சுட்டிக் காட்டி, அதை சரி செய்ய மதீப்பீடிட்டு, உடனே அப்ருவலும் வழங்கி விட்டு தலைமையாசிரியரின் அறைக்குச் சென்றார்.. நான் ரொம்ப பிஸியாக இருந்ததால்தான் வரவில்லை. சீட் இருந்தால் என் பையனுக்கு கொடுங்க. இல்லேன்னா பரவாயில்லை. அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம். எனக் கூறி வெளியேரிவிட்டார். அடுத்த நாள் முதல் என் அண்ணன் அந்தப் பள்ளியில் ஆங்கில மொழி வழியில் படிப்பைத் தொடர ஆரம்பித்தான். 

மாலைவேளைகளில் உச்சிப் பிள்ளையார் கோவிலுக்குப் போய் பிள்ளையாரை தரிசிக்க படிகளில் ஒட்டமாக ஒடி செல்வோம். மலைமேல் அடிக்கும் காற்றில், இரவின் ஒளியில் அழகாகத் தெரியும் திருச்சி நகரைப் பார்ப்பது, மனிதர்கள் மற்றும் வாகனங்கள் சின்னதாகத் தெரியும்போது நான் எங்கோ உயரத்தில் பறப்பதை போல உணர்வேன். அங்கேயிருந்துப் பார்த்தால் தெரியும்  ஸ்ரீரங்கம். அரங்கன் கோவில் கோபுரம்.  


இராமர் தன் குல முன்னோர்கள் பூஜித்த வந்த திருவரங்கன் சிலையை, பட்டாபிஷேகத்திற்கு வந்த விபீஷணனிடம் போகும் வழியில் சிலயை எங்கும் கீழே வைக்கக் கூடாது; அப்படி வைத்தால் சிலை அந்த இடத்திலேயே இருந்துவிடும் என்ற ஒரு கண்டிஷனும் போட்டுக் கொடுத்தார்.  காவிரியும் கொள்ளிடமும் சூழ்ந்த ஸ்ரீரங்கத்தை அடைந்த உடன், அதன் அழகில் மயங்கிய விபிஷணன் நீராட விரும்பினான். சிலையை யாரிடத்திலாவது கொடுத்து கீழே வைக்காமலலிருக்க சொல்லிவிட்டு செல்ல எண்ணியவன் கண்ணில் பிள்ளையார் சிறுவன் வடிவத்தில் தென்பட்டார்.  பிள்ளையாரும் சிலையை கையில் வைத்துக் கொள்கின்றேன்,  மூன்று தடவை உன்னைக் கூப்பிடுவேன் வராவிட்டால் சிலையை வைத்து விட்டுப் போய்விடுவேன் என்றாரம். மூன்று முறை கூப்பிட்டும் விபீஷணன் வரவில்லை. பிள்ளையார் சிலையைக் கீழே வைத்துவிட்டார். உடனேயே சிலையும் பிரம்மாண்டமாக வளரத்தொடங்கியது. அதை வீபீஷணனால் அசைக்ககூட முடியவில்லை. கோபமடைந்த விபீஷணன் சிறுவனைத் தேட, பிள்ளையார்  வேகமாக ஓடி மலை உச்சியில் அமர்ந்து கொண்டார்.விபீஷணன் ஓங்கித் அவர் தலையில் குட்டியதாகவும்  உச்சிப் பிள்ளையாருக்குத் அதனால் தலையில் பள்ளம் இருக்கின்றது என்பதும் இக்கோவிலில் கூறப்படும் ஐதீகம்.

விபீஷணன் பேரில் கருணை கொண்ட அரங்கன் அவனுக்குகாகக் தென் திசை நோக்கி, இலங்கையைப் பார்த்தபடி சயனித்திருக்கின்றான். இக்கோவிலில் அர்சனைக்கு கொடுக்கும் தேங்காயை உடைக்க மாட்டார்கள். அழகாகத் துருவி, கல்கண்டு பொடி தூவி பிரசாதமாகத் தருவார்கள். சித்தூர் வீட்டில் வியாழக்கிழமைகளில் நடக்கும் சாயி பஜன் முடிந்தவுடன் பல்லில்லாத தாத்தவிற்கு மட்டும் தேங்காயைச் சர்க்கரைத் தூவி பாட்டி கொடுப்பார்.   

ஆழ்மனதில் பதிந்துள்ள தொண்மையான நிகழ்வுகளை மீட்டெடுக்கும் முயற்ச்சியாக எல்லாக் காப்பியங்களிலும் நம்முடைய பழைய புராணக் கதைகள், நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றதோ எனும் ஐயம் எனக்கு உண்டு,  பகீரதன் தவம், கண்ணனின் லீலைகள், வாமன அவதாரக் கதைகள் அனுமனின் வீரவிளையாட்டுகள்.என்ற நீண்டதொரு வரிசை இதில் அடங்கும்.
 
வேள்விப் படலத்தில் இராமன் விசுவாமித்திரமுனிவனின் வேள்வியை எவ்வாறு காத்து அசுரர்களை அழித்தான் என்று கூறும் படலம். இதில் மீண்டும் ஒரு முறை பகீரதினின் தவமும், வாமன அவதாரமும் சொல்லப்படுகின்ற. அது  மட்டுமில்லாமல் முனிவனின் மூத்த சகோதரி கௌசிக நதியாக மாறிய வரலாறும் கூறப்படுகின்றது.

வை மு கோ இதை வேறு சில பிரதிகளில் கௌசிக நதிப் படலம், வாமனாவதாரப்படலம் வேள்விப் படலம் என்று மூன்றாகக் காணப்படுவதாகக் கூறினாலும், ஒரே படலமாகத்தான் பதிப்பித்துள்ளார்.

கோமதியும், பிரம்மன் மனதின் நடுவில் தோன்றிய சரயுவும் ஆகிய இரு பெரும் நதிகளும் கலப்பதால் உண்டான பேரோசை கேட்டு சிறிது தூரம் நடந்த சென்ற பின்னர், தேவர்களும் தொழத்தக்க தூய நதியைக் கண்ட இராமன் நதியினைப் பற்றி வினவினான்.

அவர்களின் குசநா பற்கே   ஐ-இருபதின்மர் அம் சொல்
துவர் இதழ்த் தெரிவை நல்லார்  தோன்றினர் வளரும் நாளில்
இவர் பொழில் - தலைக்கண் ஆயத்து    எய்துழி. வாயு எய்தி.
கவர் மனத்தினனாய். அந்தக்   கன்னியர் தம்மை நோக்கி.*

அம் சொல்- அழகிய சொறகள்; துவர் இதழ்- பவளம் போன்ற இதழ்கள்

கொடித் தனி மகரம் கொண்டான்    குனிசிலைச் சரத்தால் நொந்தேன்;வடித் தடங் கண்ணீர்! என்னை   மணத்திர்என்று உரைப்ப. ‘’எந்தை
அடித் தலத்து உரைப்ப. நீதோடு    அளித்திடின். அணைதும்’’ என்ன.
ஒடித்தனன் வெரிநை; வீழ்ந்தார்.    ஒளி வளை மகளிர் எல்லாம்.*

வடித் தடங் கண்ணீர் மாம்பிஞ்சின் பிளவு போன்ற கண்கள் தடம் அகன்ற

அவர்கள் அழகில் மயங்கிய வாயு கல்யாமாகாத அப்பெண்களை பார்த்து உடனேயே தன்னைத் திருமம் செய்து கொள்ள வேண்டும் எக் கூற அவர்கள் தம் தந்தை முறைப்படி கன்னிகாதாம் செய்து கொடுத்தால் ணப்போம் எக் கூற வெகுண்ட வாயு அவர்கள் முதுகெலும்பை உடைத்துவிட்டான். அதனால் அவர்கள் தவழ்ந்தே போய் தந்தையிடம் உரைத்_னர். மகள்களின் துயரைக் கேட்ட சூநாபன், நிறைந்த தவத்தையுடைய சூளி என்பவன் மகன் பிரம்மதத்தன் என்பவனுக்கு மணமுடித்தான். அவன் மலர்க் கைகளால் நீ, அவர்கள்  கூன் நிமிர்ந்து, மீண்டும் அழகு வாய்த்தனர்.

என் பெரிய மாமா சென்னை வேப்பேரி கால்நடைக் கல்லூரியில் பேராசியராக இருந்தார். இவருடைய வீடு சென்னை அண்ணாநகரில். 1973வம் வருடம் சொந்த வீடு கட்டிக் கொன்டு அண்ணாநகரில் முதன் முதலில் குடியேறிய ஒருவர்.. இவர் வீட்டுக்கருகில்  கொடகு நாட்டைச் (COORG) சேர்ந்த போஜப்பா என்பவர் வசித்து வந்தார். அவர்களுக்கு குழநதையில்லை. இரண்டு நாய்களை வளர்த்து வந்தனர். மாமாதான் டாக்டர். அதே போல் அவர்கள் தெருவிலிருக்கும் நாய் பூனை முதலியவற்றிற்கும் கருணையின் பால் ஆதரித்து உணவளித்து வந்தனர். மாமா stray dogs பற்றி பல முறை அவர்களிடம் எச்சரித்தும் அவர்கள் மனதில் அது பதியவேயில்லை.

ராபீஸ் (RABIES) வைரஸ்ஸால் தாக்கபட்ட ஒரு நாய் போஜப்பாவின் மனைவியை காலில் கடித்து விட்டது. அதை அவர் மறந்தும் விட்டார்.. பதினைந்து நாளில் அந்த நாய் இறந்து போனபோது கூட, தனனை கடித்ததைச் சொல்லவில்லை. அந்த நாய் இறந்ததிலிருந்து சரியாக இரண்டு மாதம் கழித்து  எங்கள் விட்டீற்கு வந்திருந்த மாமாவிற்கு போஜப்பாவிடமிருந்து போன் வந்தது  அவருடைய மனைவி தண்ணீரைப் பார்த்தால் பயப்படுகின்றாள் என்றார். மாமா அப்படியே இடிந்து போய்விட்டார். ராபீஸ். அட்வான்ஸ்ட் ஸ்டேஜ். ஒன்னுமே பன்ன முடியாது. ஆம்புலன்ஸ் கூப்பிட்டு ஜீ எச்லே அட்மிட் பன்னலாம். எவ்வளவு தடவை தலைக்குத் தலை அடிச்சின்டேன். நாயோ பூனையோ எதாவது கீறி கடிச்சா உடனேயே சொல்லுங்க. ஊசி போட்டுண்டா போதும். ஏனோ போறவேளை வந்தா எதுவுமே மண்டையிலே ஏறாதுன்னு நினைக்கிறேன். என்னையும் அழைத்து கொண்டு போஜப்பா வீட்டிற்கு சென்றார். ஆம்புலன்ஸ் வந்தது. ஆஸ்பத்திரியில் தனியான கூண்டு (அதை அறை என்று சொல்ல மனம் வரவில்லை). மொத்த நரம்பு மண்டலமும் நிதானாமாக பாதிப்புள்ளாகும் கடிப்ப்ட்ட இடத்திலிருந்து மூளைக்கு செல்லும் பாதையைப் பொறுத்து.  வாயஸ் பாக்ஸ் பாதிதிக்கபடுவதால் பேசமுடியாமல் எழும் சத்தம்  அவலத்தின் ஒலமாக தீடிர்தீடிரென்று எழும். அன்றிரவு அவர் அந்த கொடுமையிலிருந்து விடுதலையானார்.

மாமாவின் கூட வேலை செய்யும் இன்னொரு பேராசிரியர் “பாலசுபரமனியம்.  ரும் அண்ணாநகர் “பெயின் ஸ்கூல அருகில வசித்து வந்தார். அவர் மாமாவிடம் கிருஷ்னா! ராபிஸ் வைரஸ் ஏர் போர்ன் ஆகக் கூட இருக்கலாம். ஒரே ரூம்லே வேற இருந்திருக்கிறீங்க. பேசாமா  ஊசி போட்டுகோங்கோ. பெட்டர்எனக் கூற மாமா தினமும் என்னை அழைத்துக் கொண்டு பாலு வீட்டிற்கு செல்ல, தொப்புளைச் சுத்தி 18 ஊசி போட்டுக் கொண்டோம். இது நடந்தது 1983ம் வருடம்.     

2003 ஆம் வருடம் ஹாங்காகில் மார்ச் மாதம் தமிழ்சங்கம் நடத்திய நாடகவிழா. அதில் திருமதி வைதேஹி ஸ்ரீதரன் அவர்கள் இயக்கத்தில் கிரேக்கசோக நாடக கதைகளில் ஒன்றான ஈடிபஸ் என்ற நாடகம் நடந்தது. “ஊரெல்லாம் சாக்காடு. எங்கும் மரனத்தின் ஒலம் என்பதே நாடக்த்தின் ஆரம்ப வரிகள். நாடகவிழா நடந்த போதே சிலர் மாஸ்க்குடன் தான் வந்தர். அப்போதே ஏதோ விஷக்காய்ச்சல் என்று வதந்தியிருந்தது. ஆனால் முறையான அறிவிப்பும் இல்லை. அதன் விளைவும் பயங்கரமும் புரியவில்லை.
 
ப்ரல் முதல் வாரத்தில் நோய் பரவுவதைத் தவிர்க்க பள்ளிகளுக்கெல்லாம் திறக்கும் தேதி அறிவிக்காமல் விடுமுறை அறிவித்தனர். குந்தைகளை வீட்டினுள்லிருந்தாலும் மாஸ்க் அணிய வேண்டும், பொதுவிடங்களில் எதையும் கையால் தொட வேண்டாம், லிப்ட் பொத்தான்களையேக் கூடத் தொடாதீர்கள் என்று ஏகப்பட்ட நிபந்தனைகள். எதை தொட்டாலும் உடனேயே ஆல்கஹால் ஸ்பிரே போட்டுக் கையை கழுவுவது. குந்தைகளை இங்கு வைத்துக் கொண்டிருப்பதை விட ஊருக்கு அனுப்பிவிடலாம் என்று அனுப்பிய பெற்றோர்களில் நானும் ஒருவன். அலுவகத்தில் கூட நாங்கள் அனைவரும் எப்போதும் மாஸ்க் அணிந்து கொண்டிருந்தோம்.  பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் மூச்சுக் காற்றையே நீங்கள் மீண்டும் மீண்டும் சுவாசிப்பதாகத் தோன்றும்.

தினம் தோறும் இவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தனைப் பேர் ஹாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர் இவ்வளவு என ஊரெங்கும் மரத்தின் ஒலம் எண்ணிக்கைகளின் ஊடே கேட்டுக் கொண்டிருந்து. தீடீரென்று சீனாவும் அறிவிப்புக்களை ஆரம்பித்தது. உலகம் முழுவதும் 8422 பேர் பாதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் எக்கை 916. ஹாங்காகில் மட்டும் இறந்தவர்கள் 304 பேர்.

ஒருவருடம் கழித்து நோய் தாக்கிப் பிழைத்தவர்களுக்கு நோய்த்தீர்க்க அளிக்கப்பட்ட மருந்தினால் இடுப்பையும் கால்களையும் இணைக்கும் NECKLACE BONE   காரணமின்று செயலிழந்து போய், 30 சதவீதம் பேரைத்  தவழக்கூட முடியாமல் செய்துவிட்டது.

  
சூநாபன் பிள்ளையில்லாக் குறை நீங்க வேள்வி வளர்க்க அவ்வேள்வியின் பயனாக காதி என்ற மகன் பிறந்தான்.

மன்னவன் காதிக்கு. யானும்.   கவுசிகை என்னும் மாதும்.
முன்னர் வந்து உதிப்ப. என்றான் மாமுனி.

கவுசிகையை பிருகுவின் புத்திரனான இரசிகன் என்பவனுக்கு மெல்லியளாளுக்கு ஈந்தான் காதி. அரிய வேதங்கள் வல்ல அந்த இரசிக முனியும்  சில   காலம்  (அம்மங்கையுடன்  வாழ்ந்து)  -  அற  வாழ்வில்,  பொருளீட்டி  இன்பம் துய்த்து வாழ்ந்து முடித்து, பின் வீடு பேறெய்த விரும்பி,  விரிந்த  தாமரை மலரில் வாழ்கின்ற பிரம்மதேவனிடத்தே சிறந்த  தவம்  செய்து  அங்கு அடைந்தான்.

காதலன் சேணின் நீங்க.    கவுசிகை தரிக்கலாற்றாள்.
மீது உறப் படரலுற்றாள்.     விழு நதி வடிவம் ஆகி.
மாதவர்க்கு அரசு நோக்கி.    ‘’மா நிலத்து உறுகண் நீக்கப்
போதுக நடியாய்என்மா பூமன் உலகு புக்கான்.

கணவன் தவப்பயனாக பிரம்மலோகம் செல்வதைத் தாங்க முடியாத கவுசிகை பெரிய நதியின் வடிவம் எடுத்து மேலேப் புறப்பட்டாள். இரசிகன் : நிலவுலகத்துத் துன்பத்தைப் போக்க நதியாவாய் என் உரைத்து விண்ணுலகம் ஏகினான். அதே போல் எனக்கு முன்னா பிறந்தவள் இந்நதியானாள் என்றார் விசுவாமித்திரர்.

எம் முனாள் நங்கை இந்த
   
இரு நதி ஆயினாள்என்று.
என்று முனியும் கவுசிக நதியின் வரலாறு கூற இருவரும் கேட்டனர்.

அகத்தியர் கமண்டலத்தில் அடக்கிய காவேரியை காகமாக வந்து தட்டி விட்டடார் பிள்ளையார் என்று கேள்விப் பட்டிருக்கின்றேன். அது எந்த பிள்ளையாராக இருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு.அரங்கனை ஸ்ரீரங்கத்தில் கீழே வைத்தது என்பதால் அவர் நிச்சயம் திருச்சி உச்சிப் பிள்ளையாராகத் தான் இருக்கும் என்பது என் அனுமானம். ஆடி பதினெட்டாம் பெருக்கில் காவேரியின் தரிசனம் மறக்கமுடியாத அனுபவம். காவேரி நதிக்கரைதீரங்களில் மிக விசேஷமாக் கொண்டா ப்படும் விழாக்களில் முதன்மையானது.  வித விதமான, கலந்த சாதங்கள் கட்டிக் கொண்டு போய் நதியின் அருகில் அமர்ந்து விளையாடி, நீராடி உண்டு சாயங்காலம் வீடு திரும்பும் போது ரயில்வே பாலத்தில் இருந்து, குதித்தவர்களைப் பற்றிய நினைவுகளில் மூழ்கி என்றேனும் ஒரு நாள் அந்த மாதிரி குதிக்கவேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். எங்கும கலந்த சாத்தின் மணமும் நல்லெண்ணையின் வாசமும் உடனேயே அதை மறக்ககடிக்கச் செய்துவிடும்.

முளைப்பாரியையும் (நவதானியங்களை முளைக்கவைத்து தலையில் சுமந்தபடி வந்து காவிரியில் கரைப்பார்கள். கரைத்தால் விளைச்சல் அமோகமாகவிருக்கும என்பது நம்பிக்கை. இன்றும் நவதானியங்களை கல்யாத்திற்கு முன்பு சுமங்கலிகளைவிட்டு ஊறவைத்து முளை விட செய்யும் வழக்கம் உண்டு.
      
மூவரும் பிறகு மைம் மலி பொழில் (மை- மேகம்; மலி – நிறைந்த; பொழில் - சோலை) கண்டனர். இச்சோலை எத்தகையது என இராம்ன வினவ முனிவன்
தங்கள் நாயகரின் தெய்வம்    தான் பிறிது இலைஎன்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போலத்    தூயது; மற்றும் கேளாய்;எங்கள் நான்மறைக்கும். தேவர்    அறிவிற்கும். பிறர்க்கும். எட்டாச்
செங் கண் மால் இருந்து. மேல்நாள்    செய் தவம் செய்தது அன்றே.

மிகவும் தூய்மையான இந்தச் சோலையில் திருமால்  தங்கி தவம் செய்த இடம் அதுவும்
ஈர்-ஐம்பது ஊழிக்காலம் இருந்தனன்    யோகத்து. இப்பால். என்றான். அவ்வேளையில்
ஆனவன் இங்கு உறைகின்ற அந்நாள்வாய்
ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்.
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்;  திருமால் இங்கு தவமிருக்கையில் ஆதிவராகரோடு ஒப்பிடக்கூடிய வலிமையுடைய மகாபலி எனும் அசுரன் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் கவர்ந்து தனக்குரியதாக்கிக்கொண்டான்.எயிறுஇங்குப் பற்களாகும்.
ஞாலம்  ஒடுங்கும் எயிற்று ஆண் ஏனம்’  உலகத்தைத் தனது ஒற்றைக் கொம்பிலே   தாங்கிய  வராக   மூர்த்தியை  இவ்வாறு  சிறப்பிக்கிறார். ‘’பன்றியால்  படி  எடுத்த பாழியான்’’  என்பர்; அது உன். வென்றியார் உன்னெயிற்றின்  மென்துகள்  போன்று  இருந்ததால்’’  என்ற அஷ்டப் பிரபந்தப் பாடல். மகாபலி செய்யவரும் செயலரிய வேள்வியை முடித்து அந்தணர்களுக்குத் தானமாக பூமியையும் மற்றவற்றையும் தானமளிக்கத் துணிந்தான்.

ஆயது அறிந்தனர் வானவர். அந் நாள்;மாயனை வந்து வணங்கி இரந்தார்;
‘’
தீயவன் வெந் தொழில் தீர்’’ என நின்றார்;நாயகனும். அது செய்ய நயந்தான்.

காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வால் - அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய்.
நீல நிறத்து நெடுந்தகை வந்து. ஓர்
ஆல் அமர் வித்தின் அருங் குறள் ஆனான். ஒரு   பெரிய  ஆல  மரத்தினது  முழு  வளர்ச்சிக்குரிய நுண்ணிய  உறுப்புக்கள் அதன் வித்தினுள் அடங்கியிருப்பது  போலப்
பின்னர்  எடுக்கத் தக்க ஓங்கி உலகளந்ததிருமாலின்  பேருருவத்தை உள்ளடக்கியிருப்பதை உணர்த்தும்.  ‘’ஆல் அமர் வித்தின் அருங்குறள்’’   என்ற  உவமையின்  நயமுணர்க.   குறள்:  இரண்டடி. எனவே. குறளின்குறுகிய வடிவமுடைய வாமன மூர்த்தி என்க
முப்புரிநூலினன். முஞ்சியன். விஞ்சை
கற்பது ஓர் நாவன். அனல் படு கையன்.
அற்புதன். - அற்புதரே அறியும் தன்
சிற்பதம் ஒப்பது ஓர் மெய்க்கொடு - சென்றான். மாகாபலி அவனை விரைந்து வந்து அழைத்து உன்னில் சிறந்த அந்தணர் இல்லை, என்னவேண்டுமோ ஆணையிடுகஎன
அந்தணன். ‘’மூஅடி மண் அருள். உண்டேல்;
வெந் நிறலாய்! இது வேண்டும்’’ எனாமுன்.
‘’
தந்தனென்’’ என்றனன்; வெள்ளி. தடுத்தான்.  அசுரர் குருவாகிய சுக்கிரன் “வந்திருப்பது திருமால். உன்னை அழிக்காமல் விடமாட்டான். ஆகவே தானம் கொடுக்காதே எனத் தடுத்தான்.
‘’நினைக்கிலை; என் கை நிமிர்ந்திட வந்து.
தனக்கு இயலாவகை தாழ்வது. தாழ்வு இல்
கனக் கரியானது கைத்தலம் என்னின்.
எனக்கு இதன்மேல் நலம் யாதுகொல்?’’ என்றான். பலவாறாக தானம் அளிப்பதின் பெருமையையும், (தடுப்பது வெள்ளியாகிய உனக்கு வெள்ளறிவு (வெள்ளி என்பதற்கு அறிவின்மை எனும் பொருளும் உண்டு) எனவே வெள்ளியை ஆதல் விளம்பினை. என நயம் படக் கூறினார்)  எனது கை உயர்ந்திருக்க, யாசிப்பது திருமால் என்றால் என்னை விட பாக்கியசாலி யாரிருக்க முடியும் என்று கூறி, கொடியவன் என்று சுக்கிரன் சொன்னதையும் மனதிலிருத்தாமல்

முடிய இம் மொழி எலாம்    மொழிந்து. மந்திரி.
‘’
கொடியன்’’ என்று உரைத்த சொல்    ஒன்றும் கொண்டிலன்;
‘’
அடி ஒரு மூன்றும். நீ.    அளந்து கொள்க’’ என.
நெடியவன் குறிய கை    நீரில் நீட்டினான்.


கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்.
பயந்தவர்களும் இகழ் குறளன். பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள. விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே.

உலகு எலாம் உள்ளடி    அடக்கி. ஓர் அடிக்கு
அலகு இலாது. அவ் அடிக்கு    அன்பன் மெய்யதாம்.

மூன்றாவது அடிக்கு மகாபலியின் தலையையே அளந்தான் திருமால்.

இப்பேர்பட்ட இச்சோலையில் நான் வேள்வி தொடங்குகின்றேன். நீயும் இளையவனும் காவல் செய்க எனக் கட்டளையிட்டான் விசுவாமித்திரன்.  ஆறு நாட்கள் வேள்வியைக் காத்தல் என்றெண்ணுவதற்கும் அரியதான செயலாகும்.

எண்ணுதற்கு. ஆக்க. அரிது    இரண்டு-மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய    முனிவன் வேள்வியை.
மண்ணினைக் காக்கின்ற    மன்னன் மைந்தர்கள்.
கண்ணினைக் காக்கின்ற    இமையின் காத்தனர்.

அப்பொது இராமன் முனியை நோக்கி
நீ தீத் தொழில் இயற்றுவர்    என்ற தீயவர்.
ஏத்த அருங் குணத்தினாய்! வருவது    என்று?’ என்றான்.  

முனிவன் பேசாமலிருக்க இராமன் வானத்தை நோக்க பருவகால மேகம் போல் அரக்கர் வந்து நிறைத்தனர்.

எய்தனர்;எறிந்தனர்; எரியும். நீருமாய்ப்
பெய்தனர்; பெரு வளர பிடுங்கி வீசினர்;வைதனர்; தெழித்தனர்; மழுக் கொண்டு ஓச்சினர்;செய்தனர். ஒன்று அல தீய மாயமே. எனப் பல மாயங்களையும் செய்தனர் அவ்வரக்கர்.

கருவடை எயிற்றினர்; கடித்த வாயினர்;துவர் நிறப் பங்கியர்; சுழல் கண் தீயினர்;
பவர் சடை அந்தணன் பணித்த தீயவர்
இவர்என. இலக்குவதற்கு இராமன் காட்டினான் 

அரக்கர்கள் மாமிசம் முதலிய அசுத்தங்களை வேள்வித் தலிலிடக்கூடும் என்று முன் ஜாக்கிரதையாகச் சிந்தித்த இராமன் அம்புகளின் கூட்டத்தால் முனியின் இருப்பிடம் மேல் ஓர் கூடாரமைத்தான்.

திருமகள் நாயகன் தெய்வ வாளிதான்.
வெருவரு தாடகை பயந்த வீரர்கள்
இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது; அங்கு
ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே.  
தாடகையின் மைந்தர் இருவரில் மாரீசனைக் கடலில் தள்ளியது இன்னொருவனான சுபாகுவை எமபுரத்தில் சேர்த்தது. ஆனால் இவர்கள் தாடகையின் புதல்வர்கள் என்பது முதல் நூலில் இல்லை.

புராணக் கதைகள் நம்மூரில் மட்டும்தான் என்று இல்லை. எல்லா கலாச்சாரங்களிலும் இருக்கின்றது..

No comments:

Post a Comment