என அம்மாவிற்கு மிகவும் பிடித்த ஊர் திருவண்ணாமலை. “திருவாருரில் பிறந்தாதான் முக்தி. அதே போல் காசியில் இறந்தாதான் முக்தி. அண்ணாமலையானை நினைச்சாலே முக்தி” என்பார். அப்படி யாருக்கு முக்தி கொடுத்தார் அண்ணாம்லையார் என்று நான் கேட்டதற்கு ”பிருங்கி முனிவர் கிரிவலத்திலிருக்கும் அடியண்ணாமலைக் கோவிலருகில் தவம் செய்து வந்தார். இவர் சிவனை மட்டுமே வணங்குவார். பார்வதி தேவியை வணங்க மாட்டார். பார்வதி தேவி சிவனிடம் கேட்டாள் ’ஏன் நம்மிருவரையும் வணங்க மறுக்கின்றான் இம்முனிவன்?’ ”இந்தப் பிறவியிலும் அடுத்து வரப்போகின்ற பிறவிகளிலும் சங்கடங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பவர்கள் நம்மிருவரையும் வணங்குவர். மறுபிறவியே இருக்கக்கூடாது என்பவர்கள் என்னை மட்டுமே வணங்குவர்” என்றாறாம். ’அம்மாதிரி இனியிருக்கவேக் கூடாது” எனப் பார்வதி தேவி வேண்ட, வலப்பக்கத்தை உமையவளுக்கு கொடுத்து சிவன் அர்த்தநாரீஸ்வரர் ஆனார். கார்த்திகை தீபத்திருவிழாவின் போது, பரணி தீபத்தன்று ஒரு நாள் மட்டும் ஸ்வாமி அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளிப்பார்.
அப்படியும் பிருங்கி முனிவர் ஒரு வண்டின் ரூபமெடுத்து துளைத்துக் கொண்டு சிவனை மட்டும் தினம் வழிபட்டுவந்தார். அவருக்கு மோட்சம் கொடுக்க சிவன் கிளம்பிப் போகும் போது உண்ணாமலையம்மன் அதை தடுத்தாள். இவர்கள் இருவரும் ஆடியாடி ஊடல் கொள்ளுமிடம்தான் திருவூடல் தெரு. இத்திருவிழா மாட்டுப் பொங்கலன்று நடக்கும். சிவன் கிரிவலம் சென்றுவிட அம்மன் போய் கோவிலினும் போய் கதவை சாத்திக்கிறா. பிறகு திருஞானசம்பந்தர் போன்றவர்கள் சமாதானப்படுத்த ’நானே தடுத்தாலும் பக்தன் தான் முக்கியம் என எண்ணும் சிவனின் உள்ளத்தை உலகிற்கு உணர்த்தவே நாடகம் ஆடினோம்’ எனக் கூறி கோவில் கதவைத் திறந்தா . அதனால்தான் ஸ்மரனேஷு அருணாச்சலம்.”
இதே கோவிலை பற்றிய இன்னொரு புராணம். சிவனின் அடியும் முடியம் காண முடியாத பிரம்மா சிவனின் முடியிலிருந்த உதிர்ந்த தாழம்புவை பொய்ச்சாட்சியாக்கி தான் சிவனின் முடியைப் பார்த்து விட்டதாகக் கூறினார்., பொய் சாட்சியானதால் தாழம்பூ சிவனின் பூஜையில் இருக்கக் கூடாது என்றும் பொய் சொன்னதால் ஒரு முகத்தையுமிழந்தான் பிரம்மன். பிரம்மனுக்கு தனியாக கோவிலுமிருக்காது என்றும் சபிக்கபட்டான்.
”உலகம் சுற்றும் வாலிபன்” எனும் எம்ஜியார் படத்தில் பாங்காக்கில் அவர் தங்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலின் பெயர் ”தூசித் தானி” அந்த ஓட்டல் கட்டும் போது ஏகப்பட்ட தடங்கல்கள். அடித்தளமே பூமிக்குள் புதைந்து போனது. ஒட்டல் கட்டுமானத்திற்காக பொருட்கள் கொண்டுவரப்பட கப்பல் பாங்காக் அருகில் கடலில் மூழ்கியது. ஒரு முறை வெள்ளம் வந்து கட்டுமானம் முழுவதையும் தகர்த்தது. அவர்கள் என்ன செயவதென்று தெரியாமல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி ஆனால் இன்று தாய் மக்களாகவே ஆகிவிட்ட நம்மூர் பூசாரிகளைக் கேட்க, அவர்கள் ஓட்டல் முன்பு பிரம்மா சிலை நிறுவச்சொன்னார்களாம். அதன் பிறகு எந்த ஒரு தடங்கலுமில்லாமல் ஒட்டல் கட்டி முடிக்கப்பட்டது. அன்றிலிருந்து தாய்லாந்தில் எல்லா ஓட்டல்களின் முகப்புகளிலும் பிரம்மாவின் சிலை கட்டாயமிருக்கும்.
அறிவில் பெரிய நம் முன்னோர் அனுபவ ரீதியாக உணர்ந்து மரங்களையும் அவ்வாறே மக்களின் தினப் படி வாழ்வோடு பின்னி பிணைந்து அவற்றைப் பாதுகாப்பது சுற்றுச் சூழலுக்கு இன்றியமையாது என்பதை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சீர்காழி சட்டநாதர் கோவிலில் ஸ்தல விருட்சம் மூங்கில். இரண்டாவது தளத்தில் சிவனும் அம்பாளும் அருகருகே அமர்ந்திருக்கும் வகையில் பெரிய சிலையிருப்பதும் தனித் தன்மை வாய்ந்தது. மூன்றாவது அடுக்கில் இருக்கும் தோனியப்பரின் கதை பைபிளில் வரும் நோவாவின் ஆர்க்கை ஞாபகப்படுத்தும். இக்கோவிலில்தான் உமை ஞானசம்பந்தருக்கு பால் கொடுத்ததாள் என்பது ஐதீகம். வெளியே வரும் போது பிரசாதம் பால். அக்கோவிலில் விபூதியும் பால் வண்ணத்தில் இருக்கும். நவதிருப்பதியில் “தூங்கா புளிய மரம்” தலவிருட்சம். 1000 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கின்றது. இரவில் மூடாத இலைகளைக் கொண்டது அம்மரம்.

இளவரசனான பான்டுங் போன்டோவோஸோ, லோரா ஜொங்ராங் என்ற இளவரசியைக் காதலித்தான். அவள் அதனை மறுதலித்தாள். காரணம் அவளுடைய தந்தை போகோவைக் கொன்றவன் அவன். ஆனாலும் அவன் இவளைத்தான் திருமணம் செய்து கொள்வது என்பதில் உறுதியாகவும், மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதாலும் லோரா ஜோங்ராங் வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாள் ஒரு நிபந்தனைக்கு உட்பட்டு. நிபந்தனை பான்டுங் ஒரிரவில் அவளுக்காக ஆயிரம் கோவில்களைக் கட்டவேண்டும். அவனும் ஒத்துக் கொன்டு தியானத்தில் ஆழ்ந்து பூதங்களின் துணையுடன் கோவில்கள் கட்ட ஆரம்பித்தான்.
999 கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரமாவது கோவில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இளவரசி தன் தோழியரை அழைத்து ஊராரைக் காலை நிமித்தங்களை உடனே செய்யும்படி ஆணையிட அவர்களும் அரிசியை இடிக்க ஆரம்பித்தனர். கோவிலின் கிழக்குப் பகுதிகளில் தீபமேற்றினர். சேவலும் கூட கூவ அரம்பித்தது. இதைக் கேட்டவுடன் பூதங்கள் கடைசிக் கோவிலை முடிக்காமல் ஓடிவிட, இளவரசன் தான் ஏமாற்றப்பட்ட்தை அறிந்து லோரா ஜொங்ராங் கற்சிலையாகப் போகும் படி சபித்தான். அந்த சிலைதான் மகிஷாசுரமர்த்தினியின் கோவிலில் இருக்கும் சிலை என்றும் பரம்பனான் பகுதியில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களுக்கும் அவளே காரணம் என்றும் உள்ளூர் புராணம் கூறுகின்றது.
தகப்பனை கொன்றவன் என்பதால் காதலை உதறிய ஒருத்தி கல்லானாள்.
கம்பனின் இராமாயணத்திலோ பெருமிதத்தின் பயனாக அகலிகை கல்லானாள். புகழ்ச்சியும் பெருமிதமும் எந்த அளவுக்கு ஒருவனை கீழே இழுத்துச் செல்ல முடியும் என்பதற்கு வாழும் உதாரணம் திரு மு க.
விசுவாமித்திரனின் வேள்வியும் செம்மையாக முடிந்தது. வேள்வியை செம்மையாக முடித்த முனி
‘அரிய யான் சொலின். ஐய! நிற்கு அரியது ஒன்று இல்லை;
பெரிய காரியம் உள; அவை முடிப்பது பின்னர்;விரியும் வார் புனல் மருதம் சூழ் மிதிலையர் கோமான்
புரியும் வேள்வியும். காண்டும் நாம்; எழுக! என்று. போனார்.
புரியும் வேள்வியும். காண்டும் நாம்; எழுக! என்று. போனார்.
கங்கை நதியியைக் கடந்து மிதிலை நகர் கண்டனர். மிதிலை நகரின் வளத்தை
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க.
அரும்பு நாள்மலர் அசோகங்கள் அலர் விளக்கு எடுப்ப.
நரம்பின் நான்ற தேன் தாரைக் கொள் நறு மலர் யாழின்.
சுரும்பு. பாண் செய. தோகை நின்று ஆடுவ - சோலை. என்கின்றார் கவி.
அரும்பு நாள்மலர் அசோகங்கள் அலர் விளக்கு எடுப்ப.
நரம்பின் நான்ற தேன் தாரைக் கொள் நறு மலர் யாழின்.
சுரும்பு. பாண் செய. தோகை நின்று ஆடுவ - சோலை. என்கின்றார் கவி.
இழைக்கும் நுண் இடை இடைதர முகடு உயர் கொங்கை.
மழைக் கண். மங்கையர் அரங்கினில். வயிரியர் முழவம்
முழக்கும் இன் இசை வெருவிய மோட்டு இள மூரி
உழக்க. வாளைகள் பாளையில் குதிப்பன - ஓடை.
மழைக் கண். மங்கையர் அரங்கினில். வயிரியர் முழவம்
முழக்கும் இன் இசை வெருவிய மோட்டு இள மூரி
உழக்க. வாளைகள் பாளையில் குதிப்பன - ஓடை.
இழைக்கும் நுண் இடை -(பஞ்சின்) நூலைக் காட்டிலும் நுட்பமான இடையானது;
மழைக்கண் - மழைத்துளிபோல் குளிர்ந்த கண்பார்வையையும் உடைய மங்கையர் நடன அரங்கில் மங்கையர் ஆடும்போது வயிரியர் மத்தளம் கொட்டு்கிறார்கள்; அதைக் கேட்டு அஞ்சிய எருமைகள் ஓடிச்சென்று ஓடைகளில் பாய்ந்து நீரைக் கலக்குகின்றன. அதனால் அங்குள்ள வாளைகள் பாளைகளில் பாய்கின்றன. வயிரியர்: மத்தளம்
கொட்டுபவர்.

இப்படிப் பட்ட அருமையான காட்சிகளைக் கண்டுவருகையில் அங்கு ஒரு கருங்கல் மேட்டைக் காணுகின்றனர்.
இனைய நாட்டினில் இனிது சென்று. இஞ்சி சூழ் மிதிலை
புனையும் நீள் கொடிப் புரிசையின் புறத்து வந்து இறுத்தார்;மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி
கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடைக் கண்டார். இராமனின் கால்கள் மேலேபட பழைய வண்ணத்துடன் அகலிகை வெளிப்பட்டாள்;

கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல் - துகள் கதுவ.-
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு. உருவம்
கொண்டு. மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப.-
பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்; அகலிகை நல்லுருவம் பெறல்: திருமாலின்திருவடி சேர்பவர் தம் கருமம் ஒழிந்து இப் புண்மையான உடம்பை ஒழித்து ஒளிமிக்க உருவத்தை அடைவதுபோல. இராமனது திருவடிப்பொடி சேர்ந்த அளவில் இவளது சாபம் நீங்கியது. தனது கல்லுருவம் மாறி முன்னைய நல்லுருவத்தைப் பெற்றாள். பேதைமை மயக்கு: அவிச்சை (அஞ்ஞான) யின் தொடர்ச்சி. மெய்யுணர்தல்: பிறப்பு இறப் பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்கள் நீங்கி
உண்மையாக அறிதல். முக்தி பெறுவார்நிலை. நிலம் முதலான ஐம்பூதங்களாலான இந்தக் கரும வினையுடலை நீக்கி ஒளிமிக்க தெய்வீக உடம்பைப் பெறுதல். வான்மீகம் - மிதிலைக்கு அருகில் செல்லும் போது ஆச்சிரமம் ஒன்று பாழடைந்து கிடப்பது குறித்து
இராமன் விசுவாமித்திரனைக் கேட்டான். அப்பொழுது அம் முனிவன் அகலிகையின் வரலாறு கூறி, அந்த ஆசிரமம் செல்லுமாறு வேண்டுகிறான். இராமனும் சாப விமோசனம் உண்டாகுமென்று கருதி அங்கே சென்றான்.

தீவினை நயந்து செய்த தேவர்கோன்தனக்குச் செங் கண்
ஆயிரம் அளித்தோன். பன்னி; அகலிகை ஆகும்’ என்றான்.
ஆயிரம் அளித்தோன். பன்னி; அகலிகை ஆகும்’ என்றான்.
”தீவினை விரும்பிச் செய்த இந்திரனுக்கு சிவந்த ஆயிரம் கண்கள் உண்டாகுமாறு சாபமளித்த கெளதம முனிவன் பத்தினி அகலிகை இவள்” என் முனியும் கூற
பொன்னை ஏர் சடையான் கூறக் கேட்டலும். பூமி கேள்வன்.
‘என்னையே! என்னையே! இவ் உலகு இயல் இருந்த வண்ணம்!
முன்னை ஊழ் வினையினாலோ! நடு ஒன்று முடிந்தது உண்டோ?அன்னையே அனையாட்கு இவ்வாறு அடுத்தவாறு அருளுக!’ என்றான். “அகலிகை தாய்போலக் குற்றம் அற்றவளாக விளங்குகின்றாள். இத்தகைய தன்மையுடையவளுக்கும் கல்லாக மாறும் நிலை ஏற்படுமா? அத்தகைய பரிதாபநிலை ஏற்படுமென்றால் இந்த உலக இயல்பை என்னவென்று சொல்வது? இவ்வாறு இவள் உருவம் மாறுபட்டதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? முந்தின பிறப்பில் அமைந்த விதியா? அதுவல்லாமல் இப் பிறப்பில் ஏதேனும் நேர்ந்தது உண்டோ? இக் காரணத்தை அறியுமாறு கூற வேண்டும்” என்று விசுவாமித்திரனைக் கேட்டான் இராமன். என்னையே! என்னையே! வியப்பைக் குறிக்கும் அடுக்கு.

அவ் உரை இராமன் கூற. அறிவனும். அவனை நோக்கி.
‘செவ்வியோய்! கேட்டி; மேல் நாள் செறி சுடர்க் குலிசத்து அண்ணல்
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி.
‘செவ்வியோய்! கேட்டி; மேல் நாள் செறி சுடர்க் குலிசத்து அண்ணல்
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி.
நவ்விபோல் விழியினாள் தன் வன முலை நணுகலுற்றான் மிகுந்த ஒளியுள்ள வச்சிரப்படை ஏந்திய பெருமை மிக்க இந்திரன், பொறாமை முதலான தீய குணங்களை நீக்கிய மனம் படைத்த கௌதம முனிவர் (ஆசிரமத்தில்) இல்லாத சமயம் பார்த்து (அங்கே சென்று); மான் விழியாளான அகலிகையின் அழகிய தனங்களைச் சேர விரும்பினான். நவ்வி- மான்
அகலிகை: படைப்புக்கடவுளான பிரம்மன் முன்பு படைத்த மக்களின் உடம்பிலுள்ள உறுப்பு அழகைச் சிறிது சிறிதாக எடுத்து அழகான ஒரு பெண்ணைப் படைத்தான். அவளுக்கு அகல்யா என்னும் பெயரிட்டான். ஹலம். ஹல்யம் -அழகின்மை. அஹல்யா - அழகின்மை இல்லாதவள். இந்திரன் இத்தகைய அழகிய பெண்ணுக்குத் தக்க கணவன் தானே என்று செருக்குக்கொண்டு அவளைத் தன் தாரமாக்கக் கருதினான். ஆனால் பிரம்மன் அவனது எண்ணத்தோடு மாறுபாடு கொண்டான். அதனால் அவளைக்
கௌதமனிடம் தந்து. ‘இவளை நீதான் பாதுகாக்கவேண்டும்’ எனக் கூறி ஒப்படைத்தான். முனிவனும் அவளைப் பலகாலம் காத்துப் பிரம்மனிடம் சேர்த்தான். பிரம்மனோ அம்முனிவனின் சபலமின்மையையும். உயர்ந்த தவத்தையும் அறிந்து அவளை
அம்முனிவனுக்கே மணம் புரிவித்தான். அதனால் பொறாமை கொண்ட இந்திரன் வேற்று வடிவத்திலே அவளைச் சேரமுற்பட்டான்

ஒரு நாள் உற்ற மையலாம் அறிவு நீங்கி.
மா முனிக்கு அற்றம் செய்து. பொய் இலா உள்ளத்தான்தன்
உருவமே கொண்டு புக்கான்.
‘புக்கு அவளோடும். காமப் புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு இருத்லோடும். உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்.
‘தக்கது அன்று’ என்ன ஓராள்; தாழ்ந்தனள் இருப்ப. தாழா
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும். முடுகி வந்தான். இந்திரன் முனிவனை ஏமாற்றி வெளியே அனுப்பிவிட்டு ஆசிரமத்திற்குள் முனிவனின உருவத்திலேயே நுழைந்தான். வந்திருப்பது தன் கணவன் என்றேயெண்ணி அகலிகை காமத்தில் ஈடுபட்டிருந்த போது வந்தது கணவன் இல்லை, இந்திரன் என்று உணர்ந்தாள். ஆனாலும் இது தனக்குத் தகாது என்று உணராமல், செயலுக்குத் தானும் மனம்பொருந்தியவளாக இருக்க, முனிவன் தான் ஏமாற்றப்பட்டதையறிந்து விரைந்து வந்தான்.
அகலிகை. இந்திரன் செயல்கள்: தன் கணவன் திரும்பி வந்ததை அறிந்த அகலிகை தன் செயலுக்கு வருந்தி அம் முனிவன்முன் நடுங்கி நின்றாள். இந்திரனோ. ஒரு பூனையின் வடிவைத் தாங்கி வெளியே செல்லத் தொடங்கினான். நெடும்பழி பூண்டாள்: தன் அறியாமையால் பிற ஆடவனோடு கூடியதால் முழுமையாகவே இவள் மேல் பழி
சுமத்த இயலாது. ஆனால் தன்னைச் சேர்ந்துள்ளவன் இந்திரனே என்று தெரிந்தும் அத் தீய செயலை விலக்க வேண்டுமென்ற அறிவுத் தெளிவு இவளிடம் உண்டாகாததே இவள் மேல் உள்ள குறையாகும்.
சுமத்த இயலாது. ஆனால் தன்னைச் சேர்ந்துள்ளவன் இந்திரனே என்று தெரிந்தும் அத் தீய செயலை விலக்க வேண்டுமென்ற அறிவுத் தெளிவு இவளிடம் உண்டாகாததே இவள் மேல் உள்ள குறையாகும்.
‘’ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக’’ என்று
ஏயினன்;” இந்திரனை சபித்த முனி அகலிகை நோக்கி
ஏயினன்;” இந்திரனை சபித்த முனி அகலிகை நோக்கி
மெல்லியலாளை நோக்கி. ‘’விலைமகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி’’ என்றான்; கருங்கல் ஆய். மருங்கு வீழ்வாள். விலைமகள் அனையவள்: உண்மையில் அகலிகை நெஞ்சறியக் கற்பிழந்தவள் ஆகாள். இருந்தும் கௌதமன் சினத்தால் உண்மையை. ஆராய்ந்து பாராமல் ‘விலைமகள் போன்றவள்’ அகலிகை என்று கூறுகிறான்.

முறைகேடான திருமணத்தைத் தவிர்க்க விரும்பியவளால் படகை கவிழ்த்துப் போட்டார் போல் ஒரு மலை உண்டாயிற்று. இதைக் கேட்ட போது முதலில் ஞாபகத்திற்கு வந்தது ஹ்காங்காகில் நடந்த ஈடிபஸ் நாடகம்தான். இதே போன்ற தாய் மகன் உறவினால் விளையும் சோகத்தைச் சொல்லும் நாடகம்.
முறை கேடான உறவைத் தவிர்க்கத் தெரியாமல் வந்தது இந்திரனே என்ற பெருமிதத்தால் அகலிகை கல்லானாள்.
இந்திரன் வேண்டிக் கொள்ள ,மாதற்கு உள்ள அறிகுறி அயிரம் கண்களாயிற்று.
அகலிகைக்கு ‘’தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரதராமன் என்பான்
கழல்-துகள் கதுவ. இந்தக் கல் உருத் தவிர்தி’’ என்றான்.
கழல்-துகள் கதுவ. இந்தக் கல் உருத் தவிர்தி’’ என்றான்.
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?மை வண்ணத்து அரக்கி போரில். மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்.’ மழை வண்ணத்து அண்ணல்: கண்டாரின் மனக் கொதிப்பை நீக்கும் குளிர்ந்த தன்மையுடையவன்; கருநிறம் பொருந்தியவன்; கைம்மாறு கருதாது கருணையை மழையாகப் பொழிபவன் இராமன். மைவண்ணத்து அரக்கி: பொய். கொலை. வஞ்சனை முதலான தீய பண்புகளுக்கு உறைவிடமானவள் தாடகை- இருவரின் கரு நிறத்துக்கும் வேறுபாடு காட்டப்பெற்றுள்ளது. கை வண்ணமும் கால் வண்ணமும்: முறையே தீயவர்களை அழித்தலும் நல்லவர்களைக் காத்தலும் ஆகிய இருவகைத் திறன்கள்.

தீது இலா உதவிசெய்த சேவடிக் கரிய செம்மல்
‘கோது இலாக் குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு.
மாதவன் அருள் உண்டாக வழிபடு:படர் உறாதே.
போது நீ. அன்னை!’’ என்ன. பொன் அடி வணங்கிப் போனாள்.
அகலிகையுடன் மூவரும் ஆசிரமத்திற்குள் நுழைய வந்த விருந்தினரை
உபசரிப்பதற்கு உதவியாக உள்ள தன் மனைவியைப் பிரிந்த நாள் முதல் எந்த விருந்தினரையும் தன் பக்கம் வரக் காணாத கௌதம முனிவன் வியந்து, வந்த அரிய விருந்தினரை உபசரித்தான் என்றும் அவனைப் பாத்து விசுவாமித்திரன்
உபசரிப்பதற்கு உதவியாக உள்ள தன் மனைவியைப் பிரிந்த நாள் முதல் எந்த விருந்தினரையும் தன் பக்கம் வரக் காணாத கௌதம முனிவன் வியந்து, வந்த அரிய விருந்தினரை உபசரித்தான் என்றும் அவனைப் பாத்து விசுவாமித்திரன்
அஞ்சன வண்ணத்தான்தன் அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகிநின்றாள்;நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும். கருத்துள் கொண்டான்.* என்றும் பிறகு இராமனும் இலக்குவனும் கெளதம முனியின் பாதங்கள் வணங்கி விடைப் பெற்று மிதிலையின் வெளிப்புற மதிலை அடைந்தனர். இவர்கள் அகலிகையை கெளதம முனிவனிடம் ஒப்படைத்துச் சென்றனர் என்பது போலவும் மூன்று பாடல்கள் உள்ளன. வான்மீகி இராமயணத்தில் சாபம் கொடுத்தவுடன் கெளதம முனி இமயமலைக்கு தவம் செய்யப் புறப்பட்டான் என்றும், அகலிகைக்கு சாப விமோசனம் வருவதைத் தன் ஞானக் கண்ணால் உணர்ந்த அவன், ஆசிரமத்தையடைந்து இவர்களை உபசரித்தான் என்றும் உள்ளது

இப்பாடல்களைப் புத்தகத்திலேயே பதித்திருந்தாலும் வை மு கோவும் இது ”வெளிப் பாடல்” என்றே குறிப்பிடுகின்றார். வான்மீகியில் அகலிகை தம் மேல் காமமுற்று வந்திருப்பவன் தேவர்கரசனான இந்திரனே, என்று பெருமிதம் கொண்டு, தெரிந்தே தவறு செய்தவள். அதனால் அவள் சபிக்கப்பட்டதில் எந்த தவறுமில்லை. கம்பனுக்கு அகலிகையை அவ்வாறு சித்தரிக்க மனமில்லை. ஆகவே அவள் வந்திருப்பது இந்திரன் எனத் தெரியாமல், உறவினில் ஈடுபட்டாள்.ஆனால் பாதியில் தெரிந்தபோது தடுக்க முயலாமையே அவளின் குற்றம் எனும் வகையில் கதையை மாற்றியமைக்கின்றார்.
”நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!”: என கம்பன் கூறியிருப்பானா? ”தக்கது அன்று என்று ஓராள்; தாழ்ந்தனள்” என் முன் கவிதையில் கூறிவிட்டு ”நெஞ்சினால் பிழைப்பு இலாளை” எனக் கூற காரணமேயில்லை. மேற்கவியில் ”தீது இலா உதவி போல----பொன் அடி வணங்கிப் போனாள்” என்பதுடன் அந்தக் காட்சி முடிவடைந்தது. இவ்வாறான பல காரணத்தினால் இதையெல்லாம் மிகைப் பாடலகவே கருதுகின்றனர்.
”இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்” என்பது ”அஞ்சன வண்ணத்தான்தன் அடித் துகள் கதுவாமுன்னம்” இரண்டு பாடல்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பாட பேதம் பிரதி பேதம் போதாதென்று இடைச் செருகல்கள் பல. தெரியாமலா சொன்னார்கள் ” படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்” என்று.
No comments:
Post a Comment