”காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம்; சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல் செய்வீர்; உலகத் தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினால் சாகமலிருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரனம் பொய்யாம்” என்கின்றான் பாரதி.
காதல் இல்லாமல் ஆணோ பெண்ணோ இருக்கமுடியுமா? காதல் என்பது திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா? கண்டவுடன் வருவது காதல் என்றால் அது நிலைத்திருக்குமா? இல்லை வெறும் காமமா?. என்னைப் பொறுத்தவரையில் யாரும் காதலில்லாமல் இருக்கமுடியாது. அதுதான் நாம் வாழ்வின் மேல், வையத்தின் மேல் பிடிப்பு வைத்துக் கொள்ள உதவுகின்றது. முற்றும் துறந்த முனிவர்களும் பரம் பொருளின் மேல் வைத்திருப்பதும் காதலே!
எங்கள் வட ஆற்காடு மாவட்ட பிராமணர்களுக்கிடையே சொந்தத்தில் திருமணம் செய்வது வழக்கமாயிருந்தது. சொத்து வெளியே போகக் கூடாது என்பது ஒரு பெரிய காரணமாகத் தோணவில்லை. ஏனெனில் அவ்வளவு பெருந்தனக்காரார்கள் யாருமில்லை. நாட்டுக் கோட்டையில் நடப்பது போல் தத்துக் கொடுப்பவர்களும் மிக அரிது. குழந்தை பிறந்தவுடனேயே இவள் அவனுக்குத்தான் என்று பேச்சு வந்துவிடும். அதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தால் வடஆற்காடு மாவட்டத்தில் ஆண்களும் சரி பெண்களும் சரி அவ்வளவு அழகாக இருக்கமாட்டார்கள். பொன்னியின் செல்வனில் வந்தியதேவன் சம்புரவரையர் குலமங்கைகளைப் பற்றிக் குறிப்பிடுவது போல் இவர்கள் “கருநிறத்தழகிகள்”. (வட ஆற்காடு மாவட்டத்தின் சிறப்பாகக் கூறப்படும் ஏழு விஷயங்களில் temple without god, river with out water, mountain without a tree, GIRLS WITHOUT BEAUTY என்பதும் ஒன்று.) என் மனைவி “ஆண்கள் மட்டும் அப்படியே மன்மதன்னு நினைப்பு” என்பாள். என்னைப் பொருத்த வரை இருபாலருமே அழகு குறைவுதான். சிகப்பு என்பது ரொம்பவே அரிது. சொந்தத்தில் இல்லையென்றால் அந்த வட்டத்துக்குள்ளேயே தான் பார்ப்பார்கள்.
என் நெருங்கிய நண்பன் ”நீலகண்டன்”. இவனும் என்னைப் போலவே வட ஆற்காடு மாவட்டம். அவன் ” பேசிப் பார்த்தா தெரிஞ்சுடும், எல்லா நார்த் ஆற்காட்டு பிராமினும் ஏதோ ஒரு வகையில் சொந்தமாய்டுவா.”.
ஒரு சமயம் எங்களுக்குத் தீபாவளி பண்டிகையில்லை. தாத்தாவின் முதல் மனைவி இறந்துவிட்டார். நீலகண்டனுக்கும் அந்த வருடம் பண்டிகையில்லை.. நாங்கள் இருவரும் பண்டிகை கொண்டாடும் பாஸ்கரின் வீட்டிற்குச் சென்றோம். இரவு பேசிக் கொண்டிருந்தோம்.
நீலகண்டன் ’ஏன் பண்டிகையில்லை?’
“தாத்தாவோட முதல் மனைவி இரண்டு நாளுக்கு முன்னாடி செத்துப் போயிட்டா”.
’எங்கே?’
”தி நகரில். அத்தை வீட்டில் குடித்தனம் இருந்தார்”
’உங்க தாத்தா குடுமி வைத்திருப்பாரா?’
”இது என்னடா அசட்டுக் கேள்வி? அந்தக் காலத்தில் யார்தான் வச்சிக்கலை? அதனால்தான் தாத்தாவின் முதல் பொண்டாட்டி விவாகரத்து வாங்கிக் கொண்டார்.”
’அவள் வேறு யாருமில்லை. என் ஒண்ணு விட்ட அத்தை. அந்தக் காலத்திலேயே சென்னையில் கான்வெண்டில் படித்தவள். பாட்டியினுடைய செல்லத்தினால் இப்படி கெட்டுப் போய்ட்டா. உன் தி நகர் அத்தையை ரொம்பவே புகழ்ந்து பேசுவா. நான் அப்பவே சொல்லலே வாய வெச்ச இடம் எல்லாம் சொந்தம்னு’.
என் அப்பா தன் சொந்த அத்தையின் பேத்தியையே மணந்தார். என் அடுத்த இரு சித்தப்பாவினரும் தன் அக்கா மகள்களையேத் திருமணம் செய்து கொண்டனர். கடைசி சித்தப்பாவுக்கு மட்டும் சொந்தத்திலில்லை. ஆனால் அதே மாவட்டம். அவர் ஒரே நாளில் பத்துப் பெண்களைப் பார்த்தார் என்ற விஷயம் எனக்கு இந்த வருடம் அக்டோபர் மாதம்தான் தெரியவந்தது. காரணம் வட ஆற்காடு மாவட்டதைச் சேர்ந்த, என் மனைவியின் சொந்தகாரர்களில் ஒருவர் அந்தப் பத்துப் பேரில் ஒருவர்.
என் பெரிய மாமாவின் மகள் ஒரு ஆங்கிலோ இந்தியனைக் காதலிப்பதைக் கேட்ட இரண்டே மாதத்தில், ஆஸ்பத்திரியில் மாரடைப்பில் என் மடியினில் உயிரை விட்டார் அவர் இறந்ததில் நான் நல்ல நண்பனை இழந்தேன். சிஏ பாஸ் பண்ணியதையும் என் வளர்ச்சியையும் பார்க்காமலேயே போய்விட்டார். ஒரு அல்ப விஷயத்துக்காக உயிரை விட்டு விட்டாரோ என்று கூட தோன்றும். மகள் இரண்டே வருடங்களில் மாமியின் ஆசியுடன் வேளாங்கன்னி மாதா கோவிலில் கிருத்துவராக மாறி திருமணம் செய்து கொண்டாள். அதற்கு அடுத்த வருடமே பெரிய மாமி, அவர் அம்மா மற்றும் தம்பி, மாமாவின் ஒரே மகன் இவர்கள் அனைவருமே கிருத்துவர்கள் ஆக மதம் மாறினார்கள். மாமா உயிருடன் இருந்திருந்தால் மகளின் திருமணம் மட்டுமே நடந்திருக்கும் அவள் காதலில் உறுதியுடன் இருந்திருந்தால். கொல்லை புறம் தெரியாமல் கட்டிய மாமாவின் வீடு கைமாறிப் போனது போல், அவர்கள் யாருடனும் தொடர்பேயில்லாமல் போனது.
என் அத்தைகளின் மகன்கள் பெரும்பாலானோர் காதல் திருமணம்தான். அவர்களுக்கு மச்சத்திலே உடம்பு என்றே தான் நினைத்துக் கொள்வேன்.
நான்கு சகோதரர்களுக்கும் அம்மா அப்பா பார்த்த பெண்தான். நான் சீஏ ஆர்டிகிள்ஷிப் பண்ணிய நிறுவனத்தில் எனக்கு ரொம்ப ரொம்ப சீனியர் ”முரளி” (T S முரளிதரன்) . அப்போது நான் என் நெருங்கிய நண்பன் ”ஜெ.வீ (ஜெ. வெங்கடேஷ்) பிராக்டிஸ் தொடங்கி இரு வருடங்களான சமயம். எங்கள் அலுவலகம் கோபாலபுரத்தில். உட்லான்ட்ஸ் டிரைவின்னில் காபி குடித்துக் கொண்டேயிருக்கும் போது முரளி வந்தான். ”ஏன்டா கல்யாணத்துக்கு இடம் பாக்கறாளா?’ என்றவுடன் என்னுடைய பார்ட்னர் ”நல்ல இடம் இருந்தா சொல்லு. இவா நார்த் ஆர்காட்” எனறான். ’நானும் நார்த் ஆர்காடு தான். எங்க சொந்தத்திலே ஒரு பெண் இருக்கா. அவளும் சி ஏ தான் படிக்கிறா. இண்டர் பாஸ் பண்ணிட்டா. இந்த மே மாசம் பைனல் எழுதணும். அவா அப்பா அம்மவை இந்த சனிக்கிழமை வந்து பாக்க சொல்றேன். அட்ரஸ் குடு என்றான். நானும் AI 62 அண்ணாநகர் டெலிபோன் நம்பர் எல்லாம் குடுத்தேன். நானும் எங்க குடும்பத்தில் இதைப் பற்றிக் கூறினேன். அந்த சனிக்கிழமை வழக்கம் போல் நான் வேளச்சேரியிலிருக்கும் நண்பன் பாஸகர் வீட்டிற்கு சென்று விட்டேன். அந்த சனிக்கிழமை யாரும் வரவில்லை.
என் ரெண்டாவது அண்ணன் “எந்த பயத்தினாலோ ஜாதகம் குடுக்கறதுக்கு வரலை. இந்த அழகு சுந்தரத்தை எங்கேயாவது பாத்து தொலைச்சுட்டாளா?” திங்கள் கிழமை வழக்கம் போல் உடலான்ஸ். ஜெ.வீ “வந்தா ளாடா?” “வரலை”. கரெக்டாக முரளி வந்தான். ’ஏண்டா அவா வந்தாளா?’ ”வரலையே” ’இல்லையே கட்டாயம் போறேன்னுதானே எங்கிட்ட சொன்னா. இன்னிக்கி போய் பேசிட்டு உனக்கு நாளைக்கு பண்றேன்” அடுத்த நாள் ”வர சனிக்கிழமை அவா கட்டாயம் வருவா” என்றான்.
வந்த உடன் அவர்கள் கேட்ட கேள்வி ”ஜாதகம் பார்ப்பீங்களா”. அம்மா ”கல்யாணத்துக்கு கட்டாயம் பார்ப்போம்” . ஜாதகம் மாற்றி, ஜாதகம் இரு வீட்டாருக்குமே பொருந்தி, மே மாதம் பரீட்சை முடிந்து 15ஆம் தேதி, திங்கட் கிழமை மாலைப் பெண் பார்த்தேன். வீட்டிற்குப் போய் பிறகு போன் பண்ணுகின்றேன் என அப்பா அவர்களிடம் தெரிவித்தார். அன்று ஒரு இரவு அவகாசம் குடுப்பதாகவும் காலையில் என் முடிவை சொல்ல வேண்டும் என்றார்.

காலையில் ”சரி” என்று சொன்னேன். என பெரியண்ணாவின் மகன் ” என்னை ஏமாத்திட்டியே சித்தப்பா. நம்ம ரெண்டு பேரும் கல்யாணமே பண்ணிக்காம இப்படியே இருக்காலம்னு தானே பேசி வைச்சிந்தோம்”. அப்பா அவர்கள் வீட்டிற்குப் போன் செய்து ”எங்களுக்குப் பிடித்திருக்கின்றது. நீங்கள் உங்க பெண்ணைக் கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்” என்றார். அவர்கள் செவ்வாய்க்கிழமை காலையில் மாங்காடு போய் அப்போதுதான் வீடு திரும்பியிருந்ததாகவும், இந்த மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது சந்தோஷம் என்றும் அவர்களுக்குப் பூரண சம்மதம் என்றும் மேற் கொண்டு “Terms” பேசுவதற்காக அன்று சாயந்திரம் வீட்டுப் பெரியவர்களுடன் at) வருவதாகக் கூறினர். பெரியவர்கள் என் மனைவியின் பெரிய தாத்தாவும் பெரிய பாட்டியும். அப்பா பேசிய ஒரே ஒரு Term ”நிறைய மனுஷா எங்களுக்கு. நல்லா கவனிச்சு, நல்லா சாப்பாடு போடணும்; அவ்வளவுதான்”.
எனக்கும், எனக்கு மூத்தவனுக்கும் வடஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே துணையாக அமைந்தனர். ”கல்யாணம் நிச்சயமாயிருக்கு” என்று சொன்னவுடனேயே நீலகண்டன் ”எந்த ஊர்? எந்த கிராமம்?’ எங்கயிருக்கா?” நானும் ”அவா சென்னைதான். அப்பாவோட சொந்த ஊர் கீழானூர். பெரியவா இருக்கிறது திருவண்ணாமலை. நல்ல குடும்பம்னு அப்பா பீல் பண்றா. ஆதுவுமில்லாம அவா அப்பா அம்மா சைடிலே சம்பூர்ண சாஸ்த்திரியார் உறவாம். உனக்கு தெரியுமா இவாளை?” என்றேன். உடனேயே ”அவா நடிகர் ஜெய்சங்கர் வீட்டு மனைவிக்கு நெருங்கிய உறவு என்று ஜம்பமடிப்பா பார்” என்றான்.
அப்போது அடிக்கவில்லை. ஆனால் சமீபத்தில் விஜய் டீவியில் “நம்ம வீட்டுக் கல்யாணம்” நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் திருமண நிகழ்ச்சி காண்பிக்கும் போது, தான் சிறுமியாக் கல்யாணத்துக்குச் சென்றதையும் தன் பெரிய பாட்டியின் போட்டோவைக் காண்பித்து ரொம்பவே பெருமிதப்பட்டாள்.

சங்க இலக்கியத்தை நோக்கினால் தமிழ் சமூகத்தில் காதல், அதனால் வரும் களவியல் பிறகு இல்வாழ்க்கை மற்றும் கற்பியல் என்றே கூறுகின்றன. கற்பியல் என்பது திருமண வாழ்க்கையில் எப்படி ஒருவருக்கு ஒருவர் வாழவேண்டும் என்பதைக் குறித்ததே.
வால்மீகி இராமாயணத்தில் இராமன் வந்தான் வில்லொடித்தான் அதனால் திருமணம் என்று தான் கூறப்பட்டது. அதில் வில் ஒடிப்பவனுக்கு சீதையை மணமுடித்து வைப்பதாக ஜனகன் அறிவித்தப்படி இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெறுகின்றது.
கம்பன் இங்கு மூல காப்பியத்திலிருந்து விலகி இராமன் ஊருக்குள் நுழையும் போதே அவனும் சீதையும் ஒருவரை ஒருவர் பார்த்து காதல் வசப்பட்டு மாறன் மலர்கனைகள் தாக்க என தன் தமிழ் மரபிற்கு ஏற்றவாறு அற்புதமான சித்திரத்தை வரைந்து காட்டுகின்றான். இது முழுக்க முழுக்க கம்பனின் கற்பனை என்போரும் உளர். ”வான்மீகத்தையே முதனூலாகக் கொண்டாரேனும், வடமொழியிலும் தமிழ்மொழியிலும் அமைந்த இராமாயணங்களின் கதைகளையும் தழுவிக் கொண்டாரென்றாலே ஏற்புடைத்து. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் “ஆள்வினை முடித்த வருந்தவ முனிவன், வேள்வி போற்றிய இராமனவனோடு, மிதிலை மூதூரெய்திய ஞான்றை, மதியுடம்பட்ட மாக்கட் சீதை” என்று சுட்டியொருவர் பெயர்கொண்ட கைகிளைக்கு நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டியச் செய்யுள் கம்பர் காலத்துக்கு முந்தியதென்பதும், இதில் இராம்பிரானுக்கும் பிராட்டிக்கும் நிகழ்ந்த உள்ளப் புணர்ச்சியாகிய மதியுடம்பாடு கூறப்பட்டிருத்தலும் காண்க” என்கின்றார் வை மு கோ. எப்படியிருந்தாலும் மிக அற்புதமான கவிதைகளின் சுவை நமக்கு.
பல இனிய காட்சிகள் கண்டும் கேட்டும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர் சீதையைப் பார்த்தவுடன் மூவரும் நிற்கின்றனர். மூவர் மட்டும் நிற்கவில்லை கவியும் நிற்கின்றான் சீதையின் அழகை வர்ணிப்பதற்காக.

தென் உண் தேனின் தீம் சுவை. செஞ் சொற் கவி இன்பம்-
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே. களி பேடோடு
அன்னம் ஆடும் முன்துறை கண்டு. அங்கு. அயல் நின்றார்.
சீதை வடிவு: பொன்னின் சோதி. பூவின் நறுமணம். தேனின் தீஞ்சுவை. செஞ்சொல் கவியின்பம் ஆகியவை ஒரு வடிவம் எடுத்தாற்போலச் சீதை விளங்குகிறாள். ஐம்பொறிகளால் பெறப்படும் இன்பங்களில் ஒளி. நாற்றம். சுவை. ஓசை என்ற நான்கைக் கூறி ஊற்றின்பத்தை உபலட்சணத்தால்
உணரவைத்தார். கவி என்பது வளம்பெற்ற சொற்களைத் தனது உயிர்நிலையாகக் கொண்டது. ஆதலால் ‘செஞ்சொற்கவி’ எனப்பட்டது. ‘பொலிவே போல்’ என்பதைக் ‘கவியின்பம்’ என்பதனோடு சேர்க்க வேண்டும். மத்திம தீபமாக பொன்னிலே ஒளி பொலிதல் போலவும், மலரில் நறுமணம் பொலிதல் போலவும், தேனிலே இன்சுவை பொலிதல் போலவும், கவிஞர் பாவில் செவ்விய ஓசையின்பம் பொலிதல் போலவும் (ஒளி முதலியவற்றோடு விளங்குபவளாகி) கன்னி மாடத்தின் மேல் அன்னப்பேடு போன்ற தோழியரோடு பெண் அரச அன்னம் போன்ற சீதை விளையாடும் முற்றத்தைக் கண்டு அருகில் நின்றார்கள். தென் - தேன் என்பதன் குறுக்கல் விகாரம்.

உமையாள் ஒக்கும் மங்கையர்` உச்சிக் கரம் வைக்கும்
கமையாள் மேனி கண்டவர். காட்சிக் கரை காணார்.
‘இமையா நாட்டம் பெற்றிலம்’ என்றார்; ‘இரு கண்ணால்
அமையாது’ என்றார் – அந்தர வானத்தவர் எல்லாம்.
கமையாள் மேனி கண்டவர். காட்சிக் கரை காணார்.
‘இமையா நாட்டம் பெற்றிலம்’ என்றார்; ‘இரு கண்ணால்
அமையாது’ என்றார் – அந்தர வானத்தவர் எல்லாம்.
மண்ணவர், விண்ணவர் சீதையைப் பார்த்தவர்கள் அவளது மேனியழகிற்கு எல்லை காண முடியாது வருந்தினார்கள். அவர்களிலே நிலவுலகத்தவர் தேவர்களைப் போலத் தமக்கு இமையா நாட்டம் இல்லையே என்று வருந்தினர். ஆனால் அவ் வானத்தவரோ தமக்கு
இமையா நாட்டம் இருந்தும் அவை இரண்டாக அமைந்தமையால் சீதையின் அழகை முற்றும் ஒருங்கே பார்க்க அவை போதா என்று குறைபட்டனர்.
இமையா நாட்டம் இருந்தும் அவை இரண்டாக அமைந்தமையால் சீதையின் அழகை முற்றும் ஒருங்கே பார்க்க அவை போதா என்று குறைபட்டனர்.
‘பெருந் தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண்ணைத்
தரும் தான்’ என்றால். நான்முகன் இன்னும் தரலாமே?-அருந்தா அந்தத் தேவர் இரந்தால். அமிழ்து என்னும்
மருந்தே அல்லாது. என் இனி நல்கும் மணி’ ஆழி?
தரும் தான்’ என்றால். நான்முகன் இன்னும் தரலாமே?-அருந்தா அந்தத் தேவர் இரந்தால். அமிழ்து என்னும்
மருந்தே அல்லாது. என் இனி நல்கும் மணி’ ஆழி?
அமுதத்தைவிட ஒரு சிறந்த பொருளைக் கடலால் தரமுடியாதது போல், தான் படைத்துப் பழகிய மாந்தரைப் போன்ற மாதரையன்றி, இவளைப் போல் சிறந்த மங்கையை பிரம்மனும் படைக்க இயலாது. இதனால் சீதாப்பிராட்டி பிரமனால் படைக்கத் தக்கவளல்லள்: க்ஷீரசமுத்திரராசனிடத்தினின்றும் தோன்றத் தக்கவளுமல்லள்; அயோநிஜை என்பது குறிப்பிக்கப்பட்டது. நான்முகன் என்பதை பண்புத்தொகையாகக் கருதாமல், வினைத்தொகையாகக் கொண்டு, (தன்னை வந்தடைந்து வேண்டுவரது வேண்டுகோளை முடிக்கும் வல்லமையின்மையினாலுண்டான அவமானத்தால்) நால்- தொங்குதலடைந்த முகன் – முகத்தையுடையவன் என்று தொணிப்) பொருளுரைப்பர். “அருந்தா அந்த தேவர் இரந்தால்” என்பது மத்திம தீபமாக முன் வாக்கியத்தோடும், பின்வாக்கியத்தோடும் இயையும்.
பொன் சேர் மென் கால் கிண்கிணி. ஆரம். புனை ஆரம்.
கொன் சேர் அல்குல் மேகலை. தாங்கும் கொடி அன்னார்
தன் சேர் கோலத்து இன் எழில் காண. சத கோடி
மின் சேவிக்க மின் அரசு என்னும்படி. நின்றாள்.
கொன் சேர் அல்குல் மேகலை. தாங்கும் கொடி அன்னார்
தன் சேர் கோலத்து இன் எழில் காண. சத கோடி
மின் சேவிக்க மின் அரசு என்னும்படி. நின்றாள்.
பெண்களும் விரும்பும் சீதையின் அழகு என்பது ‘கொடியன்னார் தன்சேர் கோலத்து இன்னெழில் காண’ என்னும் அடியால் பெறப்படுகிறது. ”சத கோடி மின் சேவிக்க மின் அரசு” என்ன நளினமான கற்பனை.
கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம்வெல்லும் வெல்லும்’ என்ன மதர்க்கும் விழி கொண்டாள்;சொல்லும் தன்மைத்து அன்று அது; குன்றும். கவரும். திண்
கல்லும். புல்லும். கண்டு உருக. பெண் கனி நின்றாள்.
தாம் இருந்தவிடத்திலிருந்தபடியே காமநோயை உண்டாக்கி ஆடவரை வருத்துதலால், பிறரிருக்குமிடத்துச் சென்று வருத்தும் தன்மையுள்ள வேலும் கூற்றமும் பிராட்டி கண்ணுக்கு உவமையாகா. வெல்லும் வெல்லும் - அடுக்கு. துணிவுப் பொருள் தருவது. ஜடப்பொருளும் கூட சீதையின் அழகைக் கண்டு உருகும் என்றால், இம்மூவரும் அங்கு நின்றதில் வியப்பில்லை.
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி.
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்.
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்.
முற்றும் துறந்த முனிவனே அவளுடைய அழகைப் பார்த்து நின்றான்னெனில் இளையவர் இவர்கள் பார்ப்பதில் தவறொன்றுமில்லை. இவர்கள்தான் மேலேயே பார்த்துக் கொண்டு வருபவர்கள் அதனால் தான் அண்ணலும் நோக்கினான் என முதலில் இராமன் பார்ப்பதைக் கூறினார். யாரோ நம்மை உற்றுப் பார்க்கும் போது உள்ளுணர்வு தூண்ட நாமும் அவரைப் பார்ப்பதும் இயல்பே. அதானால்தான் அடுத்தது அவளும் நோக்கினாள். அண்ணலும்- உம் – உயர்வு
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன;வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே.
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே.
இராமன், சீதை ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் பருகினர். ஓர் ஆவிற்கு இரு கோடுபோல ஒத்த காதல் கொண்டவராயினர். தாக்கணங்கு: பார்க்கின்ற ஆடவர்க்கு வேட்கையை விளைவித்து அதனால் அவர்களைத் தாங்கும் தேவதை.
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து.
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்.
வரி சிலை அண்ணலும் வாள் - கண் நங்கையும்.
இருவரும் மாறிப் புக்கு. இதயம் எய்தினார்.
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்.
வரி சிலை அண்ணலும் வாள் - கண் நங்கையும்.
இருவரும் மாறிப் புக்கு. இதயம் எய்தினார்.
சீதை,. இராமன்: இருவரும் தம் கண் பார்வையால் காதல் கொண்டு ஒருவரது மனத்தில் மற்றொருவர் குடிகொண்டனர். இங்கே இராமனுக்குச் சீதையும் சீதைக்கு இராமனும் உயிராவார்கள் என்பது குறிப்பு. விற்படையும் வாட்படையும்.தலைமகனாகிய இராமனுக்கு விற்படை. ஆதலால் தலைவியான சீதைக்கு வாள்படை கூறியது நயம். இரு தலையிலும் வேறுபாடு தோன்றாதவாறு கூறிவருவதனால், தம்பதிகளது ஒப்புமை பெறப்படும்.
‘தானும் தன்னுடைத் திண்பால் நெஞ்சினைத் திரிதல் ஒன்றின்றி ‘என்னுழை நிறீஇ’ (பெருங்கதை 3:8:96-97)
‘தானும் தன்னுடைத் திண்பால் நெஞ்சினைத் திரிதல் ஒன்றின்றி ‘என்னுழை நிறீஇ’ (பெருங்கதை 3:8:96-97)
‘நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்கும்
குறிப்புரையாகும்’ (தொல். பொருள். 66)
குறிப்புரையாகும்’ (தொல். பொருள். 66)
மருங்கு இலா நங்கையும். வசை இல் ஐயனும்.
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்-
கருங் கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால். பேசல் வேண்டுமோ? இடையில்லாத (நுண்ணிய இடையைக்
கொண்ட) சீதையும்; குற்றம் இல்லாத இராமனும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட மிக்க காதலால்); ஒன்றுபட்ட இரண்டு உடல்களுக்கு; ஓர் உயிர் என்று சொல்லுமாறு ஆனார்கள்; மிகப் பெரிய பாற்கடலில் ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையிலே; (ஒருவரோடு ஒருவர் கலந்திருந்த) கூட்டம் நீங்கி; (தனித்தனியே) பிரிந்து சென்றவர்கள்; மீண்டும் (ஓர் இடத்தில்) சேர்ந்தால் (அவர்களுக்குள் உண்டாகும் காதலைச்) சொல்லவும் வேண்டுமோ? ‘கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள். என்ன பயனும் இல’ - குறள்:. இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் பார்த்த அளவில் இரு உடல்களுக்கு ஓர் உயிர் அமைந்ததுபோல மனம் ஒன்றுபட்டார்கள் என்றார்கள். ‘காகத்து இரு கண்ணிற்கு ஒன்றே மணி கலந்தாங்கு’ (திருக்கோவை) அவ்விருவர் ஆன்மாவும் ஒன்றே என்று
காட்டுகிறார். கரிய கடல் நீலமணி நிறத்தவனான திருமாலின் திருமேனிச் சாயையால் அப்பாற்கடலின் நிறம் மாறியது என்பது குறிப்பு. நயம்: சீதை மருங்கு இலா நங்கை; இராமன்; வசை இல் ஐயன்.

அந்தம் இல் நோக்கு இமை அணைகிலாமையால்.
பைந்தொடி. ஓவியப் பாவை போன்றனள்;சிந்தையும். நிறையும். மெய்ந் நலனும். பின் செல.
மைந்தனும். முனியொடு மறையப் போயினான்.
(செல்லும் இராமனைத் தொடர்ந்து போன) முடிவில்லாத (கண் இமையாது பார்த்துக்பைந்தொடி. ஓவியப் பாவை போன்றனள்;சிந்தையும். நிறையும். மெய்ந் நலனும். பின் செல.
மைந்தனும். முனியொடு மறையப் போயினான்.
கொண்டேயிருப்பதால்) பார்வை உடைய அவளது இமைகள்; பொருந்தாதலால்; பொன்
தொடி அணிந்த சீதையானவள் சித்திரப் பதுமை போல (அசைவற்று) நின்றாள் அவளது மனத்தின் நினைப்பும் உறுதியும்; உடல் அழகும்; (தன்பின்னே) தொடரும்படி இராமனும் விசுவாமித்திர முனிவனோடு; கண் பார்வை மறையுமாறு சென்றான்.
இராமன் முனிவர் பின்னே செல்லும்போது சீதையின் பார்வை அந்த இராமனையே தொடர்ந்து செல்ல அச்சீதையே கண் இமைத்தால் அழகனைக் காண்பது நின்றுவிடுமே எனக் கருதிக் கண்கொட்டாது நின்றாள். அப்படி நின்றநிலை ஓவியப்
பாவை போன்றது என்றார்.
சீதையின் மனம் அவன்பின்னே சென்றதால் பெண்மைக் குணத்தை அவளால் அடக்க இயலவில்லை; ஆதலால் தன் மனக் காதலை வெளிப்படுத்தினாள். இத்தகைய காம விகாரத்தால் அவளது உடலழகும் குறைவுற்றது .
கம்பனின் இராமாயணத்தை கம்ப சித்திரம் என்றும் கம்ப நாடகம் என்று பலவாறாக கூறுகின்றனர். எனக்கு பலவிடங்களில் அவர் ஒரு சிறந்த தேர்ந்த திரைக்கதையாளராக/ இயக்குநராக, ஏன் உண்மையான சகலகலா வல்லவனாகத் தோற்றமளிக்கின்றார். அது போல தோற்றமளிக்கும் பலவிடங்களில் இதுவும் ஒன்று. அதுவும் லாஜிக்கிலிருந்து சிறிதும் விலகாத திரைக் கதையாளராக.
எனக்கு வீடியோ எடுப்பதில் மிக்க ஆர்வமுண்டு. அழகான கேமராகோணம் முதல் ஷாட் வரை, லைட்டிங், எடிட்டிங் இசைக்கும் சேர்த்துக் குறிப்பெழுதிய முழுமையான ஒரு ஸ்கிரிப்டைப் படிப்பது போலத்தான் தோன்றுகின்றது.

No comments:
Post a Comment